நான் அறுபதுகளில் பிறந்தவன்.
அறுபதில் பிறந்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று சொல்லவேண்டும். திரைப்படப்பாடல்கள் கேட்பது எனக்கு மிகவும் பிடித்தது. நல்ல இசை – செந்தமிழோ, சுந்தர தெலுங்கோ, தேசிய மொழியாகத் துடித்துக் கொண்டிருக்கும் ஹிந்தியோ – எல்லா மொழிப்பாடல்களும் கேட்பேன்.