DigitisingThoughts » Movies

சுறா – ஒரு சதி
Tweet

விஜய் இருக்கும் (நடித்த என்று எழுதினால், சும்மாச்சி எழுதாதே என்று உம்மாச்சி கோச்சுப்பார்) சுறா வெளி வந்து வெற்றிகரமான சில நாட்கள் ஆகின்றன. வெற்றிகரமான! என்று ஆச்சரியக்குறி தலைக்கு மேல் போட்டுக்கொண்டு கேட்பவர்களுக்கு: ”நான் படத்தின் வெற்றியை பற்றி சொல்லவில்லை, படம் பார்க்காமல் சில நாட்கள் கழிந்ததையே வெற்றிகரம் என்கிறேன்.

வழக்கம்போல நெட் நெடுக சுறாவை கிழித்து கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள்.

ஓரளவு திறமையும், நிறைய வாய்ப்பும், ஏராளமான ரசிகர் கூட்டமும் இருக்கும் விஜய் ஏன்  அலுப்புத்தட்டும் படியாக ஒரே மாதிரியான படங்களில் நடிக்கிறார் என்பது எனக்கும், இன்னும் பல தமிழ் சினிமா பார்வலர்களுக்கும் புரியாத புதிர்.

அவரது ஆரம்ப காலங்களில், விஜய் ஓரளவு நல்ல கதை கொண்ட படங்களிலேயே நடித்தார்.  காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, ஃப்ரெண்ட்ஸ் போன்ற படங்கள் விஜயின் சினிமா வாழ்க்கையின் மைல் கற்கள்.  அவையே அவருக்கு இத்தனை நாட்கள் சினிமா உலகில் நிலைத்து நிற்பதற்கான பலமான அஸ்திவாரத்தை போட்டவை.

திரையில் கொஞ்சமாவது வெற்றி பெற்ற கதாநாயகர்கள் எவரும், ஏ ப்ள்ஸ் பி ஹோல் ஸ்கையர் ஈக்வல்ஸ் டு ஏ ஸ்கொயர் ப்ளஸ் ப்ளஸ் டூ ஏபி ப்ளஸ் பி ஸ்கொயர் என்று ஒரே ஃபார்முலாவை வைத்துக்கொண்டு  நடித்ததில்லை.  பசு நேசன், கேப்டன் போன்றவர்கள் கூட, குறைந்தபட்சம் ஏ,பிக்கு பதிலாக எக்ஸ், ஒய் என்று மாற்றி நடித்தார்கள்.  அது அவர்களுக்கு தொடர்ச்சியான தோல்வி வராமல் தவிர்க்க உதவியது.

ஒரு பத்து படங்களுக்கு முன், சில விஜய் படங்கள் தொடர்ந்து விழுந்தன.  அவ்வளவுதான், விஜய் க்ளோஸ் என்பது போன்ற நிலையில் வெளிவந்த படம் திருமலை.  திருமலை பெற்ற வெற்றி யாரும் எதிர்பாராதது என்பது என் கணிப்பு.  அதுவரை சண்டை, காதல், நகைச்சுவை என்று மாறி மாறி நடித்துவந்த விஜயை ரஜினி நடைக்கு மாற்றியது திருமலை.  அவர் முதன் முதலில் காமிராவை பார்த்து பஞ்சடிக்க ஆரம்பித்தது திருமலையில்தான் (”யார்ரா தல இங்க?”).

திருமலைக்கு பின் வந்த படங்களில் விறுவிறுப்பான கதை சொல்லலால் கில்லி வென்றது.  அதிரடி பாடல், பா. காட்சியமைப்பால் (என்னை பொறுத்தவரை) திருப்பாச்சி வென்றது.

இந்த வெற்றிகளால் கிடைத்த உயரத்தை வைத்துக்கொண்டு விஜய் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேடி தன்னை இன்னும் உயர்த்திக் கொண்டிருக்கலாம்.  ஆனால்,  புலியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனை போல, தன்னை சின்ன ரஜினியாக நினைத்துக் கொண்டு கேமிராவை பார்த்து சொல்லும் வசனங்கள், தற்புகழ்ச்சிப் பாடல்கள், போடா, வாடா என்று மரியாதையில்லாத வார்த்தைகளுடன் ஊருக்கு உபதேச வேகநடை பாடல்கள் என்று ஒரு மசாலா நெடியனாக்கிக் கொண்டார்.

எண்டர்டெயினிங் ஹீரோ என்பதற்கும் மசாலா ஹீரோ என்பதற்கும் வித்தியாசம் என்ன என்பதை ரஜினியிடமிருந்து கற்கவில்லை என்பது உ.கை.நெ.க.

நம் போன்ற பார்வையாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும் தெரிந்தது, இதையே தொழிலாக கொண்ட விஜய் போன்றவர்களுக்கு தெரியாமலா இருக்கும்? கண்டிப்பாக தெரி்ந்திருக்கும்.

இருந்தும், மீண்டும் மீண்டும் குருவி, வேட்டைக்காரன், சுறா என்று விஜய் குப்பை போடுவதில் ஏதோ சதி இருப்பதாக தோன்றுகிறது.

கொஞ்ச காலமாக விஜய் அரசியலுக்கு வருவது போன்ற ஒரு பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறார். விஜய் அரசியலுக்கு வருவதை – ஒரு தளபதியால் இன்னொரு தளபதியின் எதிர்காலத்துக்கு பாதிப்பு என்பதால்- திமுக விரும்பவில்லை என்று கொள்ளலாம்.

ஆக விஜய் தொடர்ந்து படங்களில் குப்பை கொட்டுவது, அவர் அரசியலில் குப்பை கொட்டுவதைவிட நல்லது என்று திமுக நினைக்கலாம்.  விஜய்யை தொடர்ந்து குப்பை படங்களில் நடிக்க வைத்தால் அவருடைய ஆதரவு வங்கியையும் குறைக்க முடியும் என்பது கூடுதல் நன்மை.

விஜய் அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிக்காவிட்டாலும், தமிழகம் முழுக்க பார்த்தால் ஒரு 10 லட்சம் வாக்குகளாவது வாங்க முடியும் என்று தோன்றுகிறது. இப்போது ஓட்டு விற்கும் விலையில், இந்த பத்து லட்சம் வாக்குகளை வாங்க ஒரு தேர்தலுக்கு குறைந்த பட்சம் ரூ.250 கோடி செலவாகக்கூடும். அதற்கு மேலாக அவர் எதிர்கட்சிகளோடு கூட்டு சேர்ந்து குடியை கெடுக்கும் வாய்ப்பும் உண்டு.

இந்த சேதத்தை லாபகரமாக தவிர்க்கும் வழி இவருடைய படங்களை ஏகபோகமாக தயாரித்தோ வெளியிட்டோ அவர் மேலும் மேலும் இது போன்ற படங்களையே நம்ப வைப்பது. ஒரு படம் தயாரிக்க பத்து முதல்  பதினைந்து கோடி வரை செலவு ஆகலாம்  என்று வைத்துக் கொள்ளலாம்.  விஜய்யின் அரசியல் வருகையின் ஆபத்தை தவிர்க்க  நினைப்பவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமே இல்லை.  பத்து படம் எடுத்து வெளியிட ஒரு படத்துக்கு ஆறு மாதம் என்று கொண்டாலும் ஆறு வருடங்கள் ஆகும்.  பட விற்பனையால் கொஞ்சம் பணமும் திரும்ப கிடைக்கும்.  ஒரே சமயத்தில் 250 கோடி ரூபாயை ஓட்டு வாங்க கொட்டுவதைவிட விஜயை தொடர்ந்து  கேவலமான படங்களில் நடிக்க வைப்பது “காஸ்ட் எஃபெக்டிவ்” என்று மீடியாவின் பலத்தை நன்றாக தெரிந்து வைத்திருக்கும் திமுகவின் திட்டமாக இருக்கக்கூடும் என்று நம்புகிறேன்.

ஆகவே ஜனங்களே, சுறாவுக்காக விஜயை குற்றம் சொல்ல வேண்டாம். இது ஒரு சதி என்பதே என் எண்ணம்.

Tweet

Readers also liked

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் (2)

புதிய பாதை போடும் சாதனை நாயகன் (9)

கணினியில் இந்திய ரூபாய் எழுத்துரு உபயோகிக்க… (5)

இனிமை பொங்க வாழ்த்துக்கள் (7)

புதிய பாதை போடும் சாதனை நாயகன்
Tweet

கமலுக்கு இன்று பிறந்தநாள்.

அவர் என் குடும்ப உறுப்பினர் இல்லையாதலால் இன்று காலை காப்பி குடித்தபடி என்.டி.டி.வி. பார்க்கும் போது கீழே ஓடிய ஸ்க்ரோல் மெசேஜ் மூலமாகத்தான் இன்று ஐம்பத்தைந்து வயதை புரட்டுகிறார் என்று தெரிந்து் கொண்டேன்.  ஐம்பத்தைந்தா என்று நம்பமுடியாத இளமையில் ஜொலிக்கும் கமலுடைய பல்லாயிரம் கமல் ரசிகர்களில் நானும் ஒருவன்.

”அம்மாவும் நீயே , அப்பாவும் நீயே” என்று தமிழ் கடவுள் முருகனை நோக்கி பாடி தன் திரைப்பட வாழ்க்கையை துவங்கிய கமல் இன்று ”கடவுள் இல்லைன்னு சொல்லல, கடவுள் இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லறேன்” என்று சிந்தனையை தூண்டும் வசனங்களை எழுதும் தூரத்துக்கு வளர்ந்து விட்டார். அவர் திரைவாழ்க்கை ஐம்பதை தாண்டிவிட்டது என்று எல்லோருக்கும் தெரியும்.

எனக்கு நினைவு தெரிந்து, கமல் என்று தெரிந்து நான் அவரை பார்க்க ஆரம்பித்து ஒரு 35 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

திருவல்லிக்கேணி ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் அவர் படித்திருக்கிறார் என்பதால் என்னைப்போல அதே பள்ளியில் படித்தவர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும்  ”எங்க ஸ்கூல்லதான் படிச்சான்” என்ற ஒரு சின்ன மார்பு உயர்த்தல், இறுமாப்பு எப்போதும் உண்டு.

1975லிருந்து 1980 வரை கமல் என்றால் எங்கள் தெருவில் இருந்த இளம்பெண்கள் நினைவுக்கு வருகிறார்கள்.  அப்போது அவர்களுக்கு இப்போதைய சாக்லேட் பாய்களான மாதவன், ஹ்ருதிக் ரோஷன் போன்றவர் கமல்.  கமல் பாடல்கள், படங்கள் தொலைக்காட்சியிலும், பட ஸ்டில்கள் பத்திரிகைகளிலும் பார்க்கும் போது அவர்கள் ஒரு மிதப்பான காதல் பார்வையில் கண்சிமிட்டினால் கமல் காணாமல் போய்விடுவோரோ என்று பார்த்துக் கொண்டிருந்தது நினைவில் நிற்கிறது. திருமணம் என்றால் கமலுடன் மட்டுமே என்று சூட்டிய மாலையுடன் காத்திருந்த திருப்பாவைகள் எங்கள் தெரு முழுக்க இருந்தார்கள்.

அவர்கள் பார்க்கும் பத்திரிகை படங்களில் (பெரும்பாலும் தினத்தந்தி வெள்ளித்திரை அல்லது ஜெமினி சினிமா) கமல் பட்டை பெல்டும், கால் பாதம் தாண்டி தரையை தேய்க்கும் பெல் பாட்டம் பேண்டும், நாய் காலர் சட்டையும் அணிந்தபடி சீனாக்கார தொங்கு மீசையும், படிக்கட்டிங் தலையுமாக ஒரு கையில் ஸ்ரீதேவியும், இன்னொரு கையில் சிகரெட் அல்லது கோப்பையுடன் காதல் பார்வை பார்த்துக் கொண்டிருப்பார்.

“என்னடி மீனாட்சி, சொன்னது என்னாச்சி” என்று அவர் தன்னைப்பார்த்துதான் கேட்கிறார் என்று எண்ணிய மீனாட்சிகள் கண்டிப்பாக தமிழகம் முழுக்க அந்த நாட்களில் இருந்திருக்கிறார்கள்.  கமல் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டபோது மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள சில இளம் பெண்கள் முயன்றதாக தினத்தந்தியில் செய்தி படித்திருக்கிறேன்.

அந்த திருமணத்துக்கு முன்பு எங்கள் திருவல்லிக்கேணி என்.கே.டி. பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவி ஒருவர் கமலுக்கு காதல் கடிதம் எழுதினார் என்றும் அதை படித்து கமல் அந்த பெண்ணை கூப்பிட்டு அறிவுரை கொடுத்தார் என்றும் உண்மையா வதந்தியா என்று தெரியாத ஒரு செய்தி கேள்விப்பட்டிருக்கிறேன்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கமல் ஸ்டைல்தான் பெண்களை தம்பக்கம் திரும்ப வைக்கும் உத்தரவாதம்.

ரஜினிக்கு முன்பே வந்துவிட்டாலும், ரஜினி விடு விடுவென்று வேகமாக தன் தனி விரைப்பு ஸ்டைலால் பெரும்பகுதி இளைஞர்களை கவர்ந்து விட்டாலும், பெண்கள் ஓட்டு கமலுக்குதான் அப்போது.  எங்களுக்கு வகுப்புகள் இல்லாத போது  முடிவில்லாமல் தொடர்ந்த நடுவர் இல்லா பட்டிமன்றம் கமலா, ரஜினியா என்பதுதான்.

அபூர்வ ராகங்கள் படம் காண்பித்த தினத்தில் அவர் நடிப்பை பார்க்க நாங்கள் ஐம்பது பைசா டிக்கெட் வாங்கி தீவுத்திடலில் கூவம், மூத்திர வாசனைகளை பொருட்படுத்தாமல் திறந்த திரையரங்கில் புழுதியில் அமர்ந்து படம் பார்க்க சென்றிருக்கிறோம்.  அதேபோல் நிழல் நிஜமாகிறது, நினைத்தாலே இனிக்கும் (இசை, நடனம், நகைச்சுவை, இவற்றுக்கு மேலாக ரஜினி மற்றும் சுஜாதா).

கமல் பாடிய பாடல்கள் அவருடைய இன்னொரு பரிமாணம்.  இப்போதும் நான் கேட்க நினைக்கும் பாடல்கள் கமல் தன் இளமையான குரலில் பாடிய “ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்”, “பன்னீர் புஷ்பங்களே” ஆகியவை.

ஒரு காலத்தில் வருடத்துக்கும் நான்கு ஐந்து படங்கள் கூட நடித்துக்கொண்டிருந்த கமல், காதல் இளவரசனாகவே காலம் தள்ளுவதற்கு பதிலாக தன் பாதையை மாற்றி இலக்கை இலக்கங்களிலிருந்து மாற்றிக் கொண்டது நாயகன் படத்துக்கு பின்னரே.

அப்படி அவர் மாற்றிக்கொண்டது தமிழ் சினிமாவுக்கு நல்லகாலம் என்று சொல்லவேண்டும்.  தன் பாதையை மாற்றிக் கொண்டதால், புதிது புதிதாக ரசிகர்களுக்கு கொடுக்க அவருடைய தேடல் தொடங்கியது.  அந்த தேடலின் விளைவால் தமிழ் சினிமாவுக்கு புதிய கதை சொல்லும் உத்திகளும், புதிய தொழில் நுட்பங்களுக்கு அறிமுகமும் கிடைத்தன என்பது மறுக்க முடியாத உண்மை.

* DTS அறிமுகமானது கமலுடைய பாசவலை படத்துக்கு பின்னரே

* தமிழ் படங்களில் க்ராபிக்ஸ் உபயோகப் படுத்தப்பட்டது விக்ரம் படத்தில்

* லைவ் சவுண்ட் எனப்படும் டப்பிங் இல்லாமல் ஒலி உபயோகித்தது ஹேராம் படத்தில்

* ஒப்பனையில் புதிய உத்திகள் “இந்தியன்”, “அவ்வை சண்முகி”

* க்ராபிக்ஸில் புதிய உத்திகள், தொழில் நுட்பம் ஆளவந்தான்

* இசையில் வெளிநாட்டு சிம்பனி கலைஞர்களை உபயோகித்தது ஹேராம்

* எல்லோரும் ஆச்சரியப்படும் வண்ணம் ஒப்பனையை நாடாமல் புத்திசாலித்தனமான உத்திகளை மட்டுமே கையாண்டு நான்கு வேடங்களை போட்டுக்காட்டியது “மைக்கேல் மதன் காமராஜன்” (ஒரு காட்சியில் மதனும், ராஜுவும் பேசிக்கொண்டிருக்க அலமாரியின் கண்ணாடியிலும் இவர்களின் இரு உருவமும் தெரியும்)

* இன்று கூட பலரையும் எப்படி என்று யோசிக்கவைக்கும் “அபூர்வ சகோதரர்கள்” குள்ள கமல் வேடம்.  இதற்கான வெள்ளோட்டம் நடந்தது புன்னகை மன்னன் படத்தில் (சூப்பர் மார்க்கெட்டில் ஒரு குழந்தையின் அழுகை நிறுத்த சூட்கேசுகளிடையே உயரமான சாப்ளின் கமல் நடந்து குள்ளமாகிக்கொண்டே போவார்).

* எந்த ஹீரோவும் செய்யத்துணியாத கதாநாயகன் கடைசிவரை தோற்கும் மகாநதி

* விருமாண்டியில் இருவர் கோணத்தில் ஒரு கதை

* மும்பை எக்ஸ்ப்ரஸ் இந்தியாவின் முதல் முழு டிஜிடல் வீடியோ கேமிராவில் எடுக்கப்பட்ட படம்

* உன்னைப்போல் ஒருவன் – முழுப்படமும் மும்பை எக்ஸ்ப்ரஸில் உபயோகிக்கப்பட்டதைவிட தேர்ந்த ரெட் ஒன் டிஜிடல் கேமிரா – தொழில் நுட்பம் முதன் முதலில் இந்தியாவில் அறிமுகம் உ.போ.ஒ.வில்.

எனக்கு தெரிந்து, நான் கேள்விப்பட்டவரை தான் சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே அதிக பட்சம் முதலீடு செய்யும் தமிழ் நடிகர்கள் கமல், பிரகாஷ் ராஜ், பார்த்திபன் ஆகியோர் மட்டுமே.

எல்லோரும் போகும் பாதையை தேர்ந்தெடுக்காமல் புதிய பாதையை போட நிறைய ஆர்வமும், தோல்வியைக் கண்டு துவளாத எக்கச்சக்கமான மன உறுதியும் வேண்டும்.  அது கமலிடம் நிறையவே இருக்கிறது.

கமல் இன்னும் சாதிக்க வேண்டியவை பல இருக்கின்றன.  அவருடைய பிறந்த நாளில் அவர் நம்பாத, நான் நம்பும் இறைவனிடம் அவருக்கு நீண்ட ஆயுளையும், மேலும் மேலும் வெற்றியையும் தர பிரார்த்திக்கிறேன்.

பதிவு பி்டித்திருந்தால் இங்கே க்ளிக்கி தமிழிஸ் தளத்தில் பிரபலமாக்குங்கள்

Tweet

Readers also liked

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் (2)

ராஜாவா, ரஹ்மானா? ராஜாவை வென்ற ரஹ்மான் (1)

சுறா – ஒரு சதி (13)

தனிமையின் கடுமை – அது ஒரு கொடுமை (4)

Review of Unnaipol Oruvan
Tweet

When I was in Chennai recently, this movie (Unnaipol Oruvan) was released; but the date of release kind of hanged in balance for quite some time due to the court case filed by Pyramid Saimeera for recovering money invested by them in Kamal Haasan’s Marmayogi.

Satyam Cinema’s had advertised in the papers that the bookings would be open on 12th or so.  My second son wanted to see the movie with me while I was in Chennai.  So he kept trying Satyam for advance booking the tickets the moment it opened.

As bad luck would have it, the court case came up and with that the booking didn’t open as advertised.  When it did open we had given up calling the theater for booking the ticket.  I had to return back to Kuwait without watching the movie

Having seen A Wednesday, I really wanted to see the Kamal’s version of the movie.  I especially was anxious to watch it since the impact of terror attacks in South India, especially in Tamilnadu was that much less.  To create the same impact that A Wednesday created, I thought Kamal would have to stretch himself a bit.

Though I returned back to Kuwait without watching the movie, I had placed my bets on seeing this movie during my upcoming visit to Chennai for Deepavali (hoping that the movie would still be on the screens till then).

But my second son Anand Surya never gave up.  He went ahead to book the ticket and watched the movie with my family today.

He liked the movie and sure it has created an impact on him, so much so that he has gone ahead and written a short and sweet blog post (review) on the movie.  There are no spoilers in his movie review post.  Hence, if you have not seen the movie, without much worry you can read it here.

Tweet

Readers also liked

My new hobby (0)

A question of options… (7)

Have to write about Indian Cricket (2)

Ram Vs Raavan (0)

சிவாஜி தூக்கிப் போட்ட சிகரெட்
Tweet

ஃபேமிலி்யுடன் இல்லாமல் தனியே தன்னந்தனியே இருப்பதில் சில சௌகரியங்களும், சுதந்திரங்களும் உண்டு.

அலுவலகத்தில் முக்கியமான வேலை இருந்தால் (ஹி ஹி எப்பவாவது வேலை கூட செய்வேன்) இருந்து முடித்துவிட்டு, போன் மேல் போன் போட்டு டெலிபோன் மணி போல் சிணுங்கும் மனையாள் கவலையில்லாமல் வீட்டுக்கு(ம்) தாமதமாக வரலாம்.  “ம்” போட்டது ஏன் என்றால், வழக்கமா ஆபிசுக்கு தானே தாமதமாக போக சம்மதம்.

விரும்பின ஹோட்டலில் சாப்பிடலாம் (நிஜ சாப்பாடு; ஹோட்டல் என்றதும் கற்பனை குதிரையை தட்டிவிடாம கடிவாளம் போடுங்க).

எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கம்ப்யூட்டர் மவுஸ் பிடித்து வலையில் அலையலாம், சாட்டாடலாம். எத்தனை ப்ளாக் வேண்டுமானாலும் பாதி எழுதி மீதி முடிக்காம ட்ராப்ட்ல போட்டு வைக்கலாம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மகாராஜனைப் போல் டிவியை ரிமோட்டால் ஆளலாம்.  ஃபேமிலி இருந்தால் கண்டிப்பாக மனைவி பார்க்கும் சீரியலையோ, மகவுகள் பார்க்கும் கார்ட்டூனையோதான் நீயா, நானான்னு கேக்காம பாக்க வேணும்.

இது தவிர, ஆட்டோக்காரர் வந்து விட்டார், ஸ்கூல் டீச்சர் வெஞ்சுவிட்டாள் என்பதெல்லாம் காதில் விழாமல் கட்டங்காலையிலும் பாட்டுக் கேக்கலாம், பாக்கலாம்.  பாட்டு பார்த்தபடியே ஃபேமிலி கூட இல்லாத ஆழ் வலியை ஆனுவல் லீவுவரை அமுக்கி வைக்கலாம்.

இப்படியெல்லாம் இந்த பதிவில் எழுதலாம் என்று யோசித்துக் கொண்டே ரொம்ப நாளைக்கப்புறம் இன்று கலைஞர் டிவியை காலையில் திறந்து என் வீட்டு வரவேற்பறையில் (ஹாலில்) “தேனும், பாலும்” கலந்தேன்.

தேனும் பாலும் நிகழ்ச்சியின் பாடல்களை கேட்டுக்கொண்டே அலுவலகம் கிளம்புகையில், சின்ன வயதில் பள்ளி / அலுவலகத்துக்கு கிளம்பும் அவசரத்தில் விவித்பாரதியின் வர்த்தக ஒளிபரப்பு – உங்கள் விருப்பம் – பாடல் பல்லவியை எங்கள் வீட்டிலும், சரணத்தை நடுரோட்டிலும், பாடும் டிரான்சிஸ்டர் கையோடு ரோடு எண்டு செட்டியார் கடைக்கு நடக்கும் ஹிண்டு மாமா தோளிலும் கேட்டது நினைவுக்கு வரும்.

இன்று அப்படி ஒரு அரிதான பாடலாக ஒளிபரப்பானது, எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றான “நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே”.

மிகவும் அருமையான, தேனாக, பாலாக வழியும் பாடல்.  பாடல் படமெடுத்த சூழலும் அருமை.  கிட்டத்தட்ட “மாலைப் பொழுதின் மயக்கத்திலே” பாடலைப் போலவே தென்றல் வீசும் வீட்டு மொட்டை மாடியில் சிவாஜியும், சௌகாரும் அவர்களின் இரட்டை குழந்தைகளின் தொட்டிலுக்கு அருகில் ஒரு தாலாட்டாக பாடுவது போன்ற பாடல் காட்சி.  (நிற்க!   ஜெயா டிவியி்ல் இந்த வாரம் சவுகாருடைய திரும்பிப்பார்-க்கிறீர்களா? Truly majestic lady 78 வயதாகிறதாம் – திருஷ்டி சுற்றி போட வேண்டும்).

பாடலுக்கு திரும்பலாம்.  சிவாஜியும், சவுகாரும் கருப்பு வெள்ளையில் ”பார் மகளே பார்” படத்தில் பாடும் பாடல் இது்.  கவியரசு, மெல்லிசை மன்னர்கள், கணீர் குரல் டி.எம்.எஸ்., பி.சுசீலா என்கிற வெற்றிக் கூட்டணியின் மற்றொரு மகா ஹிட் பாடல் இது.

கவியரசரின் சொல்லாட்சியை சிலாகிப்பதா, மெல்லிசை மன்னர்களின் தேனாற்று இசையை சிலாகிப்பதா, அந்த தேனாற்றில் முங்கி எழுந்த பின் பாடவந்தது போல் ஒலிக்கும் பூங்குயில் சுசீலாவின் குரலை சிலாகிப்பதா, உணர்ச்சிகளை நாதத்தில் குழைத்தொலிப்பது போல் ரீங்காரீக்கும் டி.எம்.எஸ்ஸின் பாவங்களை சிலாகிப்பதா என்று திக்கு முக்காடவைக்கும் பாடல்.  இதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:

”நீரோடும் வைகையில் நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில், பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே
தென்னாடன் குலமகளே”

தொடர்ந்து - தாலாட்டு பாடலுக்குள்ளே, கணவன் மனைவியின் காதலை சாண்ட்விச் செய்த கவியரசு வரிகள்:

சிவாஜி: நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே
சௌகார்: அந்த கவிதைக்கும் நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே”

இப்படி அமுதாக ஓடிய பாடலை கேட்டுக் கொண்டிருந்த என்னை கொஞ்சம் ஆச்சரியப்பட வைத்த காட்சி பாடலுக்கும் கொஞ்சமும் பொருந்தாது.

வழக்கமாக தன் கதாபாத்திரத்திலும், காட்சி அமைப்பிலும் மிகவும் கவனம் செலுத்தும் சிவாஜி எப்படி இப்படி நடித்தார், இயக்குநர் எப்படி கவனிக்காமல் விட்டார்?  என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

அப்படி என்னை கேட்க வைத்தது சிவாஜியின் கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்.

சிவாஜியும், சௌகாரும் பாடிக்கொண்டிருந்தது தாலாட்டுப் பாடல்.  சிவாஜியின் உடையையும், தோரணையையும் பார்க்கும் போது படித்தவராக, பண்புள்ளவராக, சீமானாக தெரிகிறது. படத்தின் கதைப்படி தன் குழந்தை(கள்?) மேல் மிகவும் அன்பு செலுத்துபவர்.

அப்படிப் பட்டவர், எப்படி தன் தொட்டில் குழந்தைக்கு அருகே நின்று புகை பிடிப்பார்? இது போதாதென்று, பாடல் இன்னும் இரண்டு வரி கடந்த பிறகு தொட்டிலை விட்டு நகர்ந்து சௌகாருக்கு அருகே போகும் சிவாஜி புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டை கேரம் போர்டில் காயை சுண்டி அடிப்பது போல் பின்புறமாக சுண்டி அடிப்பார்.

புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டை அணைக்காமல் அப்படியே போடுவது தவறான காட்சியமைப்பு இல்லையா? அது குழந்தை மேல் விழுந்துவிடுமே என்கிற அக்கறை அந்த கதாபாத்திரத்துக்கு இருக்காதா? சரி மொட்டை மாடியில் இருந்து ரோட்டுக்கு சுண்டுகிறார் என்று வைத்துக் கொண்டாலும், யார் தலைமீதாவது விழுமே என்கிற அக்கறை இல்லாதவரா?

இந்த தமாஷான தவறை யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு எழுந்த இன்னொரு கேள்வி, நம் சினிமா வில்லன்கள், கதாநாயகர்கள் ஹோட்டல், மார்க்கெட் போன்ற இடங்களில் போடும் சண்டை பற்றி எழுந்தது. இவர்கள் பாட்டுக்கு சண்டைக்கு நடுவில் கடை சாமான்களை நொறுக்குகிறார்கள், காய்கறி-பழங்களை இறைக்கிறார்கள், பானைகளை உடைக்கிறார்கள்.

சண்டை முடிந்த பிறகு சாவதானமாக “என் வழி தனி வழி” என்று போய்க் கொண்டே இருக்கிறார்கள். அதுபோன்ற கடைக்காரர்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள்? அந்தக் கடைக்காரர்கள் எல்லாம் இன்ஷூரன்ஸ் வைத்திருக்கிறார்களா?

போனமாதம் என் ஐந்து வயது மகனுடன் நடைபாதை கடையில் பொம்மை வாங்கும்போது என் மகன் உடைத்த ரூ.5 மதிப்புள்ள பொம்மைக்கு காசு கொடுக்காமல் நகரக்கூடாது என்று மல்லுக்கட்டிய கடைக்காரர் நினைவுக்கு வருகிறார்.

Tweet

Readers also liked

அறுபதுகளின் அனுகூலம் (7)

வீடு வரை உறவு – ரீமிக்ஸ் கலாட்டா (7)

குன்னக்குடி போட்ட ஆங்கிலப் பாட்டு (8)

Chinna Chinna Aasai to BAFTA (4)

A proud double from A R Rahman
Tweet

A R Rahman,

What a proud moment for all of us Indians.

You took us to Oscar and you have got us two in one stroke.

What a moment.  We will cherish this for a long time to come.

Is there space in your show case?  Enlarge it please.  There might be more to follow!

And thanks for your Tamil at the Oscars.  That makes the award even more special for us Tamils.

A R Rahman and the competitors for the award and conquered he did!

Watch the Video of the proudest moment in recent times

<object width="425" height="344" data="http://www.youtube.com/v/Kc0iX5rWcLM&hl=en&fs=1" type="application/x-shockwave-flash"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/Kc0iX5rWcLM&hl=en&fs=1" /><param name="allowfullscreen" value="true" /></object>

The second OSCAR

<object width="425" height="344" data="http://www.youtube.com/v/K2BPRhxfRcw&hl=en&fs=1" type="application/x-shockwave-flash"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/K2BPRhxfRcw&hl=en&fs=1" /><param name="allowfullscreen" value="true" /></object>

Tweet

Readers also liked

Congress wants to say Jai Ho! (2)

Jai Ho – Wishes to Mozart of Madras (25)

Vivek Interviews A R Rahman (6)

ரஹ்மானின் விருதும் கலைஞரின் தப்புத் தாளமும் (3)