Articles in the Memories Category
Chennai, Headline, Memories, Tamil-தமிழ் »
ஹோட்டலுக்கு போய் டிஃபன் காஃபி சாப்பிடுவது என்பது பெரும்பாலோர் வருடத்துக்கு ஒரு முறையாவது செய்வதுதான்.
கணவனும், மனைவியும் பணி செய்யும் இந்த விலைவாசி நாட்களில் வீட்டு சாப்பாட்டை விட ஹோட்டல் சாப்பாடுதான் பலருக்கும். நவயுக மாந்தர்கள் பீட்ஸா, பர்கர், சிக்கன் நட்கட் என்று மோட்டார் பைக்கில் வீட்டுக்கு வரவழைத்து ஒரு கையில் கோக், பெப்சியும், இன்னொரு கையில் டி.வி. ரிமோட்டுமாக சாப்பிடுவதே அதிகம். இப்போதெல்லாம் தோசை, இட்லி கூட ஹோட்டல் படி தாண்டி பத்தினியின் ஆர்டரில் வீட்டுப்படிக்கு டெலிவரியாகிவிடுகின்றன.
