DigitisingThoughts » நகைச்சுவை

கூடா நட்பின் முடிவு
Tweet

கூடா நட்பு குடியை கெடுக்கும் என்பது பழமொழி.  கூடா நட்பின் கேட்டை தன் பிறந்ததின செய்தியாக தொண்டர்களுக்கு கலைஞர் கொடுத்திருக்கிறார்.

கூடா நட்பு என்று அவர் சொன்னது தொண்டர்களுக்கு மட்டுமா? தன் குடும்பத்தினருக்கா?  கூடா நட்பு என்று அவர் கருதியது காங்கிரசுடனான உறவையா?

தற்பொழுது உள்ள நிலைமையில், கூடா என்பதற்கு ”அதிகமாகாத” என்று பொழிப்புரைதான் கொள்ள வேண்டும்.

எலக்‌ஷனில் சீட் கூடாத, மத்திய அமைச்சரவையில் அதிகாரம் கூடாத, பொதுமக்களிடம் மதிப்பு கூடாத,  காங்கிரஸ் தலைமையிடம் செல்வாக்கு கூடாத நட்பு கூடாது என்கிறார் என்று கொள்ளலாமா?

இப்படி எதுவும் கூடாத நட்பை யார் முறிக்க வேண்டும்? தொண்டர்களா?  இது பாசி பிடித்த தரையை விட வழவழப்பாக இருக்கிறது.

அக்‌ஷய் தலையில் அவன் பிடிவாதம் பிடித்து பாண்டி பஜாரில் வாங்கிய கார்

எதையும் தலைல தூக்கி வெச்சுண்டு ஆடக்கூடாது! விழுந்துடும்!

Tweet

Most Commented Posts

Satyam fraud, unravelling the mystery (85)

Ravi my favorite to win Super Singer 2008 (39)

தமிழகத்தை குவைத் ஆக்கும் திமுக (28)

Jai Ho – Wishes to Mozart of Madras (25)

தமிழக தேர்தல் எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள்
Tweet

தமிழக தேர்தல் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு முன்பே முடிந்து விட்டாலும், வங்காளத்தில் தேர்தல் மே பத்து வரை நீண்டதால் தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமில்லாமல், நமக்கும் சஸ்பென்ஸ் தாங்கமுடியவில்லை.

அட கருத்துக் கணிப்பாவது படித்து கொஞ்சம் சூடு தணித்துக் கொள்ளலாம் என்று பார்த்தால் அதையும் எல்லா தேர்தல்களும் ”முடியும் வரை காத்திரு” என்று விட்டது தேர்தல் ஆணையம்.  அதிமுக, தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி இன்ன பிற கட்சிகளின் பெயரில் இருக்கும் அகில இந்தியத்தையும், தேசியத்தையும் தே.ஆ.  உண்மையாகவே நம்பியது ஒரு காரணமாக இருக்கலாம்.

எனக்கு இத்தனை பொறுமை இல்லை.  கடந்த கிட்டத்தட்ட முப்பது நாட்களில், இணையத்தில் தேடி ஜோசியர்கள் என்ன சொல்கிறார்கள், இட்லி வடை உள்பட ப்ளாகர்கள் என்ன சொல்கிறார்கள், கழுகு, பருந்து, காக்கை போன்றவர்களின் ரகசிய கணிப்பு என்ன, தலைநகரை மாற்றியது முதலே எதையாவது மாற்றிக் கொண்டேயிருக்கவேண்டும் என்று அன்றும், இன்றும், என்றும் நினைக்கும் துக்ளக் பத்திரிகை குழுவின் ஒருமித்த கருத்தான சோ-வின் கருத்து என்ன என்று எதையாவது தெரிந்து கொள்ளாவிட்டால் கத்திரி வெயில் இல்லாமலே மண்டை காய்ந்து விடும் போல இருந்தது.

நேற்றைய முன்தினம் CNNIBN க.க. நிகழ்ச்சிக்கு ஐபிஎல்லின் முக்கியத்துவத்துவையும் துறந்து பார்த்தேன்.  அவர்களும் நான் பார்ப்பதை தெரிந்து கொண்டு, ஒரு மணி நேர நிகழ்ச்சியில் அன்றுதான் முடிந்த மே.வ. தேர்தல் கணிப்பை கூட முதலில் தந்துவிட்டு கட்ட கடைசியில்தான் தமிழகத்தின் தலையெழுத்தாகக்கூடியதை காட்டினார்கள்.

அதிமுகவுக்கும், திமுகவுக்கும் ஆதரவாகவும், எதிராகவும், வேறு சில கணிப்புகளையும் நேற்றைய (புதன்கிழமை) ஆன்லைனில் படித்து தெரிந்து கொண்டேன்.

நாளை இந்நேரம் முடிவுகள் தெரிந்துவிடலாம் என்பதால், ரொம்ப பின்தங்கினால் என் வருங்கால சந்ததிகளுக்கு சுலபமாக காலேஜ் சீட் கிடைத்து பெரிய அரசியல் காண்ட்ரோவர்சியாகலாம் என்பதால், நானும் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினேன். நான் இன்று வீட்டைவிட்டு அலுவலகத்துக்கு எக்சிட் ஆகும் பொழுது என்னிடமும், என் மனைவியிடமும், என் ஏழு வயது மகன் அக்‌ஷயிடமும் கருத்து கேட்டு எடுக்கப்பட்ட எக்சிட் போல் போல் இருக்கும் போல் இது.  இந்த கருத்துக்கணிப்பு விஞ்ஞான பூர்வமாக மேற்கொள்ளப்பட்டது.  (என் மகனுக்கு என் வீட்டில் ஓட்டுரிமை உண்டு.  கடை கண்ணிக்கு செல்லும் பொழுது அழுகையை நிறுத்துவதற்காக வீட்டோ உரிமை கூட உண்டு)

இந்த எக்சிட் போலில் கலந்து கொண்டவர்களை பற்றிய புள்ளிவிவரம் முதலில்:

ஆண் 66%, பெண் 33%

வயதாகி கொண்டிருப்பவர்கள் 66%

இளைஞர் 33%

தொலைக்காட்சி பார்ப்பவர்கள் 100%

கணினி உபயோகிப்பவர்கள் 100%

தேர்தலில் ஓட்டு (இருந்தும்) போடாதவர் 66%

அதிமுகவை சேர்ந்தவர்கள் 33%

அதிமுகவை எதிர்ப்பவர்கள் 33%

அய்யா-அம்மா என்று கட்சிபேதம் பார்க்காதவர்கள் 33%

கல்லூரி படிப்புக்குமேல் படித்தவர்கள் 33%

கல்லூரி படிப்புவரை படித்தவர்கள் 33%

நன்றாக எழுதப்படிக்க தெரிந்தவர்கள் 66%

ஓரளவு எழுதப்படிக்க தெரிந்தவர்கள் 33%

வேலையில் இருப்பவர்கள் 33%

வேலையில் இருந்தவர்கள் 33%

எந்தவேலையிலும் இல்லாதவர்கள் 33%

விளையாட்டு வீரர்கள் 33%

வீடு செய்பவர்கள் (ஹோம் மேக்கர்ஸ்) 33%

வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் 33%

ஏதாவது வாங்கிக்கொண்டு எக்சிட் போலில் ஓட்டியவர்கள் 33%

நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் 33%

வயதை சொல்ல விரும்பாதவர்கள் 33%

வயதை பற்றி கவலைப்படாதவர்கள் 33%

நல்ல சம்பளம் வாங்குபவர்கள் 33%

செம்மையாக செலவு செய்பவர்கள் 66%

வேலைக்காரி வைத்திருப்பவர்கள் 33%

வேலைக்காரியை வைத்திருப்பவர்கள் 0%

தமிழகத்தில் வாழ்பவர்கள் 66%

வெளிநாட்டில் வாழ்பவர்கள் 33%

இப்போது கருத்துக்கணிப்பு முடிவு:

Tweet

Readers also liked

போடுங்கம்மா ஓட்டு… (1)

நல்லவேளை ரஜினி தேர்தல் பிரசாரத்துக்கு போகல… (6)

பாரதியார் (1)

அடுத்த முறை கண்டிப்பாக… (0)

லெவன் காஜஸ்
Tweet

முப்பது வயதை தாண்டி கொஞ்சம் குடும்பப் பொறுப்பு வந்து விட்டாலே, பழைய கதைகளை அசை போடுவது வாழ்க்கையின் தின நியதிகளில் ஒன்றாகிவிடுகிறது.

இந்த அசைபோடல் எந்த சமயத்திலும் நிகழ்கிறது.  பேப்பர் படிக்கும் பொழுதோ, காலை காஃபி குடிக்கும் பொழுதோ, குடும்பத்தினருடம் பேசும் பொழுதோ, கார் ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுதோ, விளையாடும் பொழுதோ திடீர் திடீர் என மூளை பழைய நினைவுகளை வெளிக்கொணர்ந்து அசை போட வைத்துவிடுகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் குவைத்தில் என் ஃப்ளாட் வாசலில் பக்கத்து ஃப்ளாட்டு பையன்கள் கிரிக்கெட் விளையாடினார்கள்.  வேடிக்கை பார்த்த என்னையும் ”வாங்க அங்கிள்” என்று சேர்த்துக் கொண்டார்கள்.  அவர்களோடு கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடியதில் என் சின்ன வயதில் விளையாடிய கிரிக்கெட்டும், குறிப்பாக லெவன் காஜஸும் நினைவுக்கு வந்தது.

எழுபது, எண்பதுகளில் சென்னை கிரிக்கெட் விளையாடிய எவருக்கும் “காஜி” என்கிற வார்த்தை ரொம்ப பழக்கமான ஒன்றாக இருக்கும்.  காஜி இன்னும் பழக்கத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.  ஆனால் எழுபதுகளில் எங்கள் தினசரி பேச்சில் காஜி வராமல் இருக்காது.

எந்த மொழியில் இருந்து சென்னை தமிழுக்கு வந்தது என்று அடுத்த செம்மொழி மாநாட்டில் கலைஞர் தலைமையில் வெளிநாட்டு அறிஞர் யாராவது ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்க தகுதியான பதம் இது. விக்கிபீடியாவில் சென்னைத் தமிழுக்கென ஒரு பக்கம் இருக்கிறது.  பல சென்னை பதங்களை அறிவிக்கும் இந்த பக்கத்தில் காஜி இல்லை.  மற்ற வார்த்தைகள் இருந்தாலும் காஜி இல்லாமல் இருப்பது விவேக்குக்கு கொடுத்தாலும் நாகேஷுக்கு கொடுக்காமல் விட்டுவிட்ட ”பத்மஸ்ரீ” பட்டத்துக்கு ஒப்பானது.

காஜி என்பது என்ன?

தெரு, பீச் கிரிக்கெட்டில் பேட்டிங் ஆடுவதே காஜி.  ரொம்ப நேரம் அவுட்டாகாமல் பேட்டிங் ஆடியவன் ஆடி முடித்ததும் கக்க வியர்வையுடன் “செம்ம காஜி” என்பான்.  அவன் அதிக நேரம் ஆடினான் என்ற செய்தியை மற்ற நண்பர்கள் மூலம் அறிந்தவன் அவனை பார்த்ததும் முதலில் கேட்கும் கேள்வி “என்ன மச்சி, இன்னிக்கு செம்ம காஜியா?” என்பதே.

நாங்கள் பீச், தெரு கிரிக்கெட் என்று விளையாடும் காலங்களில், எங்கள் வட்டத்தில் இருந்து அடுத்த பெரிய வட்டமான லீக் கிரிக்கெட், பள்ளி கிரிக்கெட் என்று தாவியவர்கள் எங்களுக்கு பிரபலங்கள்.  அப்படிப்பட்ட பிரபலங்கள் எஸ்.ஆர். சம்பத் (அவனுக்க்கு இப்போது ஐம்பது வயசாகியிருக்கும் என்று யோசிக்கவே முடியவில்லை), அவனுடைய அண்ணன் எஸ்.ஆர். சீனிவாசன், டெக்னிக்கலாக விளையாடுவதில் சுனீல் காவஸ்கருக்கு அருகே எங்களால் வைக்கப்பட்ட சி.பி. ஸ்ரீதர் ஆகியோர் காஜியடிக்க சும்மாவே நாங்களெல்லாம் வியர்க்க விறுவிறுக்க பந்து வீசுவோம்.

“இன்னிக்கு ரெண்டு பந்து எஸ்.ஆர். சம்பத் வெல் போல் சொன்னாண்டா” என்பது மேன் ஆஃப் த மேட்ச்சுக்கு ஒப்பானது.  அந்த பாராட்டுக்காக திருவல்லிக்கேணி குளத்தங்கரையில் அவனுக்கு நாள் முழுக்க பந்து வீசுவோம்.  எங்கள் நண்பர்களில் கொஞ்சம் சாமர்த்தியமானவர்கள் சம்பத் ரொம்ப நேரம் காஜிக்காகவே அடிக்கடி அப்படி சொல்வான் என்று சொல்வதுண்டு.  ஆனால் மேன் ஆஃப் த மேட்ச் குறிக்கோளில் இருந்த என் போன்றவர்கள் அதை சட்டை செய்யமாட்டோம்.  பல மணி நேரங்கள் ஆளுக்கு ஒரு பந்து என்று கையில் வைத்துக்கொண்டு சம்பத்துக்கும், சீனிவாசனுக்கும் காஜி கொடுப்போம்.

பீச் கிரிக்கெட்டில் ஐபிஎல் போல பிரபலமானது கோடை விடுமுறைகளில் நடக்கும் “ட்ராஃபி”.  ட்ராபி என்பதை பெரும்பாலும் நடத்தியது அப்போது திருவல்லிக்கேணி பகுதியில் தாதாவான எங்கள் பள்ளி சூப்பர் சீனியர் மாணவர் (மறைந்த) தமிழ்மணி.  ட்ராபியை நடத்தினாலும், அப்போதே லலித்மோடி போல தனக்கெனவும் தமிழ்மணி ஒரு டீம் வைத்திருந்தார்.  அந்த டீமின் முக்கிய பௌலர் இந்த பதிவின் கெஸ்ட் பதிவாளர் திருவாளர் ஆனந்த்.  ட்ராபிக்களில் விளையாடிய இன்னொரு நண்பர் மஸ்கட்டில் என்னுடன் பணிபுரிந்த லஷ்மண். இவர் நல்லதம்பி தெரு டீமுக்கு விளையாடியிருக்கிறார்.   நான் விளையாடியது குளத்தங்கரை, ஹனுமந்தராயன் கோவில் தெரு, வெங்கட்ரங்கம் பிள்ளை தெரு ஆகியவை.

விளம்பரமே இல்லாமல், வாய்மொழியாகவே தமிழ்மணி ட்ராபி தொடங்குவது எங்களுக்கு தெரியவரும்.  உடனே நாங்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு ட்ராபி எண்ட்ரி கப்பம் கட்டுவோம். வீட்டில் பணம் கொடுக்க மாட்டார்கள்; அதற்கு நாங்கள் கையாண்ட உத்தி ஹிந்து பேப்பரின் வெள்ளி, ஞாயிறு சப்ளிமெண்டுகளை உருவிவைத்து அதை மட்டுமே பழைய பேப்பர் கடையில் போட்டு சேகரிக்கும் பணம்.  அப்போதெல்லாம் பேப்பர் கனமாகவே இருக்கும், ஞாயிறு சப்ளிமெண்ட் மற்ற நாளின் முழு பேப்பர் அளவுக்கு கனம் இருக்கும்.  ஒரு மாத சப்ளிமெண்ட் நான்கைந்து நண்பர்கள் சேகரித்தால் கணிசமான பணம் கிடைக்கும்.

பணம் சேகரித்து டீமை சேர்ப்பதற்கு முன் டீமுக்கு பெயர் விவாதிப்போம்.  குளத்தங்கரை, வெ.ர.பி. தெரு டீம்களுக்கு வைத்த பெயர்கள் நினைவில் இல்லை.  ஆனால் ஹ.ரா. கோவில் தெரு டீமுக்கு புல்லட் சி.சி. என்று பெயர் வைத்தது நினைவில் இருக்கிறது.

பல மாட்சுகள் விளையாடினாலும், தமிழ்மணி டீமுக்கு எதிராக மற்ற வலிமை குறைந்த டீம்கள் விளையாடிய மாட்ச்களுக்கு என்று ஒரு தனி விதி உண்டு.  அதில் டாஸ் கிடையாது.  ஒரு உடன்படிக்கை போல முதலிலேயே “டேய் நாங்கதான் பேட்டிங், நாங்க ஒரு இன்னிங்ஸ் ஆடிவிட்டு நீங்க ரெண்டு இன்னிங்ஸ் காஜடிச்சுக்கோங்க” என்று விடுவார்கள்.  அவர்களிடம் வேறு ரூல்ஸ் பேச முடியாததால், முதல் இன்னிங்ஸ் தமிழ்மணி டீம் விளையாடி போலிங் சிறுவர்களுக்கு தண்ணி காட்டுவார்கள். மூன்று நாள் இரண்டு இன்னிங்ஸ் என்ற கணக்கில் விளையாடிய இந்த மாட்சுகளில் ஒரு நாள் முழுக்க தமிழ்மணி டீம் விளையாடி ஒரு இன்னிங்ஸ்லேயே நல்ல காஜி அடிப்பார்கள்.  பின்னர் ஒரு முக்கால் மணி நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் போல புயல் வேக பந்து வீசி, ஷார்ட் லெக், ஸ்லிப் எல்லாம் வைத்து எங்களை இரண்டு இன்னிங்ஸும் சுருட்டுவார்கள் ஒன்றரை நாளுக்கும் குறைவாகவே மாட்ச் முடிந்துவிடும்.

இது போன்ற மாட்சுகளில் அதிகம் காஜி கிடைக்காது என்பதால், நன்றாக காஜடிக்க என்று நானும் என் தம்பி முரளியும் வடிவமைத்த கிரிக்கெட்தான் “லெவன் காஜஸ்”.  இந்த லெவன் காஜஸ் நானும் அவனும் மட்டுமே விளையாடுவோம்.

ஆட்டக்களம் எங்கள் வீட்டின் நடை.  மிக நீளமாக இருந்த வீட்டுக்கு இரண்டு நுழைவாயில்கள் இருந்தன.  அதன் சவுகரியத்தால் நாங்கள் ஒரு நுழைவாயிலை முழுவதும் அடைத்து சாக்பீஸ் கொண்டு கதவில் ”போல்டு” வரைந்து விளையாடுவோம்.  பேட்ஸ்மனுக்கு அருகில் சுவரின் மூலையில் ஒரு ஸ்டுல் வைத்து அதில் ஸ்கோர் புத்தகம்.

லெவன் காஜஸ் இரண்டு டீம்களுக்கு இடையே நடக்கும். நான் ஒரு டீமும் என் தம்பி ஒரு டீமும் எடுத்துக்கொள்வோம். இதில் ரஞ்சி டீம்கள், டெஸ்ட் டீம்கள் தவிர போர்ட் ப்ரெசிடண்ட் லெவன் என்று எது வேண்டுமானாலும் இருக்கும்.  தமிழ்நாடு – கர்நாடகா, வெஸ்ட் இன்டீஸ் – இந்தியா, இங்கிலாந்து – இந்தியா, வட மண்டலம் – தென் மண்டலம் என்று சீசனுக்கு தகுந்த மாதிரி ஆடுவோம்.

இருவரும் டீம் செலக்ட் செய்யும் போது தற்போதைய ஆட்டக்காரர்கள் – டீம் என்று பார்க்காமல் பிடித்த ஆட்டக்காரர்கள் என்று தேர்வு செய்வோம்.  அதிலும் இந்திய டீம் செலக்ட் செய்யும்போது தாய் மண் பாசத்தால், செலக்‌ஷன் கமிட்டி அதிகம் பாராமுகம் காட்டிய தமிழ்நாடு வீரர்களை தேர்வு செய்து விடுவோம்.  ஸ்ரீகாந்த், வெங்கட்ராகவன், பரத் ரெட்டி, எஸ்.வாசுதேவன், எம். செந்தில்நாதன் போன்ற தமிழக வீரர்கள் எங்கள் இந்திய அணியில் எப்போதும் இருப்பார்கள்.

மாட்சுக்கு டாஸ் போட்டு பேட்டிங் ஆடும் பொழுது எங்களுக்கென்றே பிரத்யேகமான் ரூல்களும் போட்டுக்கொள்ளுவோம்.  பவுலிங் திருவல்லிக்கேணியில் மிகவும் பிரபலமான “அண்டர் ஆர்ம்ஸ்”.  லெவன் காஜஸ் பற்றி மேலே தொடர்வதற்கு முன்னால் இந்த அண்டர் ஆர்ம்ஸ் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.

எந்த இடத்திலும் சுலபமாக ஆடவே “அண்டர் ஆர்ம்ஸ்” கண்டுபிடிக்கப்பட்டது.  வாசல்கால் இடிக்கும், குதித்து போடவேண்டும் போன்ற சிரமங்கள் இல்லாத பவுலிங் முறை அண்டர் ஆர்ம்ஸ்.

போடும் பந்து முட்டிக்கு மேல் எழ வாய்ப்பு குறைவு என்பதால் எத்தனை சிறிய இடத்திலும் அண்டர் ஆர்ம்ஸ் போட்டு விளையாட முடியும்.  ஓடி வந்து போட வேண்டிய அவசியம் இல்லை என்பதும் ஒரு சிறப்பு.  இருந்த இடத்தில் இருந்தே கையையும், விரல்களையும் மட்டுமே உபயோகித்து வேகப்பந்து, பம்பர், லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின், கூக்ளி எல்லாம் போட்டுவிடலாம்.   எங்கள் அனுபவத்தில் நாலடி நீளமே இருந்த இருந்த இடத்தில் ஒரு பக்கெட்டை போல்டாக வைத்து நானும் என் தம்பி முரளியும் விளையாடியிருக்கிறோம்.

இந்த அண்டர் ஆர்ம்ஸ் பந்து வீச்சில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் திருவல்லிக்கேணியில் இருந்தார்கள்.  இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர் எங்கள் குழுவின் நிரந்தர உறுப்பினர் TAS என்று செல்லமாக அறியப்படும் டி.ஏ. சத்தியநாராயணன். என்னுடைய ஏறக்குறைய பதினைந்து வருட அண்டர் ஆர்ம்ஸ் கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு கொஞ்சம் கூட பிடிபடாத பவுலர் TAS. வருவது லெக் ஸ்பின்னா, ஆஃப் ஸ்பின்னா, ஸ்ட்ரைட் பாலா என்று கொஞ்சம்கூட கண்டுபிடிக்க முடியாதபடி கிட்டத்தட்ட இப்போதைய அஜந்தா மெண்டிஸ் போல பந்து வீசுவார். இருந்த இடத்திலேயே நடனமாடுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.  பலமுறை அவருடைய உத்திகளை கற்றுக்கொள்ள அவரிடம் கேட்டும் “ஈசிடா” என்று சொல்வாரே தவிர சொல்லித்தர மாட்டார். (இன்றுவரை அவருடைய பவுலிங் டெக்னிக் மர்மமே! இதை படித்த பிறகாவது நான் விடுமுறைக்கு சென்னை சென்றால் சொல்லித்தருவாரா என்கிற எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது)

மீண்டும் லெவன் காஜஸ்.

ஆட்டக்காரர்கள் தேர்வு சொன்னேன் இல்லையா? டாஸ் போட்டு மேட்ச் துவங்கியபின் நாங்கள் அமைத்த ரூல் படி, முதல் எட்டு ஓவர்கள் வேக பந்து வீச்சு அனுமதி உண்டு. அதற்கு பிறகு ஸ்பின் பவுலிங் மட்டுமே.  பவுலிங் யார் போடுகிறார்கள் என்று முன்னமே சொல்லிவிட வேண்டும்.  ஆறு பந்துகளுக்கு பிறகு வேறு பவுலர்.  யார் போடுகிறார்கள் என்று சொல்லுகிறோமோ அவருடைய திறமைக்கேற்றபடி பவுலிங் செய்யவேண்டும்.  உதாரணத்துக்கு பிஷன் சிங் பேடி பவுலிங் செய்கிறார் என்றால் மெதுவான இடதுகை சுழல் பந்த வேண்டும்.  ரோஜர் பின்னி என்றால் மித வேகம்.  அதேபோல், பேட்டிங் செய்பவர் ரன்னுக்கேற்றபடி ஆள் மாற வேண்டும்.  கிரினீட்ஜ் விளையாடி ஒரு ரன் எடுத்தபின் பந்தை எதிர்நோக்க லாயிட் வந்தால் இடதுகை ஆட்டக்காரராக ஆட வேண்டும்.

ஆட்டக்காரர் திறமைக்கேற்பவும் விளையாட்டு நுட்பத்தை மாற்ற வேண்டும்.  கபில்தேவ், ஸ்ரீகாந்த் என்றால் ஒட்டி (டிஃபென்ஸ்) ஆடக்கூடாது. காவஸ்கர் ஆடலாம்.  நீளமான நடையில் போல்டு செய்த கதவு தவிர இன்னும் இரண்டு வாயில் கதவுகள் இருந்தன.  ஒவ்வொன்றை தாண்டினாலும் ஒரு ரன் கணக்கு.  அதை தாண்டி ஒரு மாடிப்படி இருக்கும். அதன் கைப்பிடியை தாண்டினால் நான்கு.  முழுதாக தாண்டினால் ஆறு.  ஆனால் நாலும், ஆறும் முதலில் பவுலரை பந்து தாண்டினாலே சாத்தியம் ஆகும். ஆறு அடிக்க பவுலரின் தலைக்கு அடிக்காவிட்டால் பவுலரிடமே கேட்ச் அவுட் ஆகிவிட வேண்டியதுதான்.  ஒவ்வொரு ரன்னுக்கு பிறகும் பேட்ஸ்மேனே திரும்பி ஸ்டுல் மேல் வைக்கப்பட்ட ஸ்கோர் புத்தகத்தில் ரன்னை பதிவு செய்ய வேண்டும்.

எந்த மேட்சுக்கும் நேரமோ, ஓவரோ வரையரை கிடையாது.  மேட்ச் முடியும்வரை விளையாடுவோம்.  சில மாட்சுகள் வார இறுதியில் மட்டும் விளையாடி, விட்ட இடத்தில் துவக்கி ஒரு மாதம் கூட விளையாடியிருக்கிறோம்.  சில மாட்சுகள் இடையில் அபாண்ட சண்டை வந்து அபாண்டன் ஆகியிருக்கின்றன.  சில அபாண்டன் ஆன மேட்சுகளை சமாதான உடன்படிக்கைக்கு பின் திரும்பவும் தொடர்ந்து ஆடியிருக்கிறோம்.

இந்த மாட்சுகளில், எங்களுக்கு பிடித்த ஆட்டக்காரர்கள் ஆடுகையில் தனிக் கவனம் கொண்டு விக்கெட் கொடுக்காமல் ஆடி ரன் குவித்திருக்கிறோம். இப்படி ஆடியதில் வெங்கட், ஸ்ரீகாந்த், கபில்தேவ் போன்றவர்களை சென்சுரி, டபிள் சென்சுரியும் அடிக்க வைத்திருக்கிறோம்.

சில சமயம் நாங்கள் அடித்த ஃபோர்களும், சிக்சர்களும், சண்டை நேரங்களில் பேட்டாக பயன்பெற்ற பரீட்சை அட்டைகளும் குடித்தனக்காரர்களை தாக்கியிருக்கின்றன.  ஆனாலும், நட்பு, சகஜ பாவத்தால் அவர்கள் அதை பெரிதாக்கியதில்லை.

இப்பொதைய ஃப்ளாட் கல்சரில், அசோசியேஷன் கட்டுப்பாடுகளில் வீட்டுக்குள் கிரிக்கெட் வழக்கொழிந்து விட்டது.  தெருக்களிலும், பீச்சிலும், பெரிய க்ரவுண்டில் இரண்டு பக்கம் விக்கெட், பாதுகாப்பு கவசங்களுடன் வெள்ளை சீருடை அணிந்து பல மேட்சுகள் ஆடியிருந்தாலும் இந்த லெவன் காஜஸ் கொடுத்த சந்தோஷத்துக்கு இணையில்லை.

Headline photo courtesy http://chennaidailyfoto.wordpress.com – please do check out the original photo post

Tweet

Readers also liked

கிடைக்காத நூறு (4)

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் (2)

ஹையா…என் பொண்டாட்டி வலையில விழுந்துட்டா… (1)

புதிய பாதை போடும் சாதனை நாயகன் (9)

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்
Tweet

தொப்பிகள் பலவிதம் உண்டு.  அடுத்தவரை பேச்சில் மயக்கி நமக்கு சாதகமான வேலைகளை செய்யவைப்பதையோ, பொய்யை உண்மையென நம்ப வைப்பதையும் கூட தொப்பி போடுவது என்று வழக்கில் சொல்லுவதுண்டு.  இவை அறிவிப்பில்லாமல், அணிவிக்கப்படுவது தெரியாமல் அணிவித்துக் கொள்ளும் தொப்பிகள்.  இந்த தொப்பிகளை “குல்லாய்கள்” என்றும் சொல்வதுண்டு.

ஆனால், இந்த வலையில் நான் அணிவிக்க இருப்பது அணியும் குல்லாய்களை மட்டுமே.

வடநாடுகளில் பிரபலமானது காந்தி குல்லாய்.  இந்த குல்லாயை அணிந்த காந்தி  புகைப்படத்தை பார்த்த ஞாபகம் எனக்கு இல்லை. நேருதான் இந்த  குல்லாயை அணிவார்.   இந்திரா முதல் (வடேராவை திருமணம் செய்துகொண்டாலும்)  பிரியங்கா, ராகுல் வரை காந்தியாகி மக்கள் தலையில் காந்தி குல்லாய் போட  ஆதிக் காரணம் நேரு, காந்தி குல்லாய் போட்டுக்கொண்டதுதானோ என்று  தோன்றுகிறது.

பல வட இந்திய அரசியல்வாதிகளும், கட்சி வித்தியாசம் பாராமல்,  காந்தி குல்லாய் அணிகிறார்கள். அவர்களெல்லாம் காந்தியவாதிகள் என்று சொன்னால், அவர்களே ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.  காந்தி குல்லாய் போட்டு கொஞ்ச மாதங்களுக்கு முன் கொஞ்சியதில் மிஞ்சியதால் வெளிச்சத்துக்கு வந்த மிகப்பெரிய  அகாந்தியர் என்.டி.திவாரி.

வடநாட்டில், குறிப்பாக பீகார், உ.பி.யில் சாதாரண மக்களும் கா.கு. போட்டுக் கொள்கிறார்கள்.   பம்பாயின் டப்பாவாலாக்களின் யுனிஃபார்மில் காந்தி குல்லாய் உண்டு.   வித்தியாசம், அவர்கள் குல்லாய் போட்டுக் கொள்கிறார்கள் யாருக்கும்  போடுவதில்லை.

பழங்காலங்களில் நாட்டை ஆண்ட மன்னர்களும், தளபதிகளும் அணிந்த கிரீடங்களும் தொப்பி வகையை சார்ந்தவையே.  அப்படி பார்த்தால், நம் கடவுள்களும் தொப்பி அணிந்து கொண்டவர்களே.  மக்களுக்கு குல்லாய் போட்டு ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் பல அரசியல்வாதிகள், ஆண்டவனுக்கே போடும் குல்லாய்கள் இந்த கிரீடங்கள் என்று சொல்லலாம்.

கிரிக்கெட் வீரர்கள் முதன் முதலில் டெஸ்ட் மேட்ச், ஒருநாள் கிரிக்கெட்டில் கன்னி கழியும் போது குல்லாய் வென்றதாக சொல்வதுண்டு.  குழு தேர்வு பிடிக்காத ரசிகர்கள், குழுவில் தங்களுக்கு பிடிக்காத வீரர்கள் குல்லாய் வெல்லாமல் வாங்கிவிட்டதாக பேசுவதுண்டு.  இப்படிப்பட்ட வீரர்கள் வாங்கும் குல்லாய், ”போட்டு, வாங்கும்” முறையில் பெற்றவை என்று நானும் தெருமுனையில் நின்று பேசியிருக்கிறேன்.  இப்படி போ.-வா. வீரர்கள் சரக்கு குறைவால் ஓரிரு குல்லாய்களுக்கு மேல் பெறாமல் டிவி திரையிலிருந்து மறைந்து விடுவார்கள்.

உண்மையிலேயே தகுதியில் குல்லாய் வென்ற பல வீரர்கள் பின்னாளில் புகழ் பெற்று, அவர்களின் குல்லாய்களை அதிக விலை கொடுத்து வாங்கும் ஆர்வலப் புரவலர் உலகெங்கும் உண்டு. டான் பிராட்மெனின் குல்லாய்கள் இதில் ரொம்ப பிரபலம். (தலை வியர்வை நாற்றம் போக துவைத்திருப்பார்களா தெரியவில்லை).

அனில் கும்ப்ளே பத்துக்கு பத்து எடுத்தபோது போட்ட குல்லாயை கடைசி வரை கழட்டாமல் அதிர்ஷ்ட நம்பிக்கையில் கடைசி டெஸ்ட் இன்னிங்ஸ் வரை அணிந்து கொண்டிருந்தார்.

கிரிக்கெட் வீரர்களில் பனாமா குல்லாய் என்கிற ஹாட் ரக குல்லாய் பிரபலம். ஆஸ்திரேலிய வீரர்கள் இதை அதிகம் அணிவதில்லை.  இந்திய வீரர்களில் இந்த ரக குல்லாய் அதிகம் அணிந்தவர்கள் சுனீல் காவஸ்கரும், வழுக்கை முழுக்க மறைக்க கிர்மானியும்.  இதில் காவஸ்கர் கொஞ்சநாள் வெள்ளை மட்டுமில்லாமல் பிரவுன் குல்லாயும் அணிந்திருக்கிறார். இது போன்ற பிரவுன் குல்லாய் அணிந்த இன்னொரு வீரர் மேற்கிந்திய துவக்க ஆட்டக்காரர் டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ். இந்த குல்லாயில் எனக்கு மிகவும் பிடித்த வீரர்கள் தென்னாப்பிரிக்காவின் ஷான் பொல்லாக், ஆலன் டொனால்ட், இங்கிலாந்தின் டேவிட் கோவர் ஆகியோர்.

டென்னிஸ் வீரர்கள் வென்ற சுதியில் குல்லாய்களை ரசிகர்கள் பக்கம் தூக்கி வீசுவது உண்டு.  கால்ஃப் வீரர்கள் அணியும் குல்லாய்கள் தமிழ் கதாநாயகர்களிடம் பிரபலம்.  கால்ஃப் குல்லாய், கருப்பு கண்ணாடியுடன் அணிந்து கமலஹாசன் பே என்று காலை விரித்தபடி கண்ணாடிக்கு பின்னாடியிருந்து காமப்பார்வை பார்க்கும் சிகப்பு ரோஜாக்கள் பட விளம்பரத்தட்டியை அண்ணா கை காட்டியதால் மவுண்ட்ரோட்டில் பார்த்திருக்கிறேன். அதற்கு பிறகு தமிழக இளைஞர் பட்டாளமே நாய் காலர் சட்டையும், கால் மூடிய பெல்சிராயும், சி.ரோ. குல்லாயும் அணிந்து நடந்ததை பஸ்ஸிலிருந்து பார்த்திருக்கிறேன்.  இந்த படம் வந்து ரொம்ப நாளானாலும், படத்தில் உபயோகித்த குல்லாயை பாரதிராஜா பத்திரமாக வைத்திருந்து, சில வருடம் முன்பு கண்களால் கைது செய்யிலும் “கமல் அணிந்த குல்லாய்” என்று சொல்லி வசீகரனை உபயோகிக்க வைத்தார்.

தமிழ்நாட்டுக்காரர்களுக்கு ரொம்ப பிரபலமாக தெரிந்த ஒரு குல்லாய் வெள்ளை ஃபர் குல்லாய்.   எம்.ஜி.ஆர். அணிந்தது. குல்லாய் இல்லாத எம்.ஜி.ஆரை நினைக்கவும் முடியாது.  தமிழக / சென்னை வெயிலில் அதை எப்படி அவர் 24 மணி நேரமும் அணிந்து கொண்டிருந்தார் என்பது ஆச்சரியமான ஒன்று. என்னதான் பொன்மனச்செம்மலாக இருந்தாலும் வியர்த்திருக்காதா? (”முள் முடியும் சிலுவையும், என்னதான் ஏசுவாய் இருந்தாலும் வலிக்காமலா இருந்திருக்கும்” என்கிற அற்புத கவிதை நினைவுக்கு வருகிறது).

தொப்பியால் அடையாளம் அமைத்துக்கொண்ட இன்னொருவர் ஆங்கிலம் சிறிதும் கலக்காத எளிமையான கல்கண்டு தமிழில் துப்பறியும் கதைகளை எழுதிய தமிழ்வாணன். அவருடைய கதைகளில் வெளிநாட்டவர்களும் அழகுத் தமிழிலேயே பேசுவார்கள்.  தமிழில் எழுத விரும்புகிறவர்கள் அவசியம் தமிழ்வாணனை படிக்கவேண்டும். சுஜாதாவின் கணேஷ் – வசந்த் போல சாகாவரம் பெற்ற கதாபாத்திரம், தமிழ்வாணனின் சங்கர்லால்.  தமிழ்வாணனின் வருணனைகளை கொண்டு சங்கர்லாலை உருவகபடுத்தி பார்த்தால் அன்பே வா எம்.ஜி.ஆர் நினைவுக்கு வருவார். தமிழ்வாணனின் அடையாளமே குல்லாய், கருப்புக்கண்ணாடி, ஸ்கார்ஃப்.  தமிழ்நாட்டின் மற்றொரு கழட்டா குல்லாய் மனிதர் பாலு மகேந்திரா.

இஸ்லாமியர்களின் உடை கோட்பாடுகளில், குல்லாய் ஒரு முக்கியமான அங்கம்.  அதிலும் பலவகைகள் இருக்கிறது.  ஓமனில் இருந்தபோதுதான் அதில் இருக்கும் நுண்ணிய வேலைப்பாடுகளும், அதன் மலைக்க வைக்கும் விலையும் தெரியவந்தது.

பாங்காக்கில் சீக்கியர் நடத்திய நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அவர்கள் நேரத்தை மிச்சப்படுத்த ரெடிமேடு டர்பன்களை குல்லாய் போல் அணிவதைப் பார்த்திருக்கிறேன். சீக்கிய நண்பர்களுடன் ஆடிட்டுக்கும் அகமதாபாத் சென்று ஒரே அறையில் இருந்தபோது அவர்கள் உண்மையான டர்பனை பிரித்து அணிவதைப் பார்த்து “இத்தனை நீளமா?” என்று மலைத்து இருக்கிறேன்.  அந்த சிறிய அறைக்குள் ஒருவர் பிடித்துக்கொள்ள இன்னொருவர் அதை லாவகமாக மடித்து அணிந்தது இன்னும் கண்ணிலேயே இருக்கிறது.  இத்தனை நீள துணியை தலையில் வைத்துக்கொண்டு இவர்களுக்கு எப்படி தலைவலி வராமல் இருக்கிறது என்று ஆடிட் தலைவலி போக அமிர்தாஞ்சன் தடவிக்கொண்டே யோசித்திருக்கிறேன்.

திருப்பதி, பழனி திவ்விய தேசங்களில் மொட்டை போட்டவர்கள், மொட்டை போட்ட கையோடு குல்லாய் தேடுவார்கள்.  நாம் எல்லோருமே எப்போதாவது ஒருமுறை மொட்டை போட்டிருப்பதால் வீட்டுக்கு ஒரு தொப்பியாவது வாங்கியிருப்போம் என்று நினைக்கிறேன்.  யோசித்துப் பார்த்தால், குல்லாய் வியாபாரம் ஒரு ஆல் சீசன் வியாபாரம் என்று தோன்றுகிறது.

என்னுடைய அப்பாவும் ஒரு குல்லாய் வைத்திருந்தார்.  எத்தனை சொன்னாலும் கேட்காமல் ஆட்டோ பிடிக்காமல், பிடிவாதமாக அந்த குல்லாயை அணிந்து கொண்டு சென்னை வெயிலில் எத்தனை தூர பஸ் ஸ்டாண்டுக்கும் நடந்து போயிருக்கிறார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் குல்லாய்கள் உலக பிரபலம்.  அவரை போல அழகாகவும், விதவிதமாகவும் ஹாட் அணியும் பெண்கள் உலகிலேயே இல்லை என்று சொல்கிறார்கள்.

ஹாட் ரக குல்லாய்கள் ஹாலிவுட் படங்களில் அதிகம் பார்க்கக்கிடைக்கின்றன.  மிகவும் பிரபலமான ஹாட் ஹாரிசன் ஃபோர்ட் இந்தியானா ஜோன்ஸ் கதாபாத்திரத்துக்கு அணிந்தது.  சவுக்கும், ஹாட்டும் இந்தியானா ஜோன்ஸின் அடையாளம்.  ரொம்ப நாளைக்கு பிறகு வந்த ”Indiana Jones and the Kingdom of Crystal Skull” படத்தில் ஹாட்டுக் காட்டிதான் ஹாரிசன் ஃபோர்டுக்கு கட்டியம் சொன்னார்கள்.

வெஸ்டர்ன் கௌபாய் கதாபாத்திரங்கள் ஹாட்டும், சுருட்டும் இல்லாமல் முழுமை பெறாது. மால்பரோ சிகரெட் மனிதன் அறியப்படுவதும் கௌபாய் ஹாட்டு போட்டே.  நம்ம ஊரில் ஜாக்கி ஷராஃப் கௌபாய் ஹாட் அணிந்து பெண்களை (சிகரெட் விளம்பரத்தில்) ஹாட்டாக்கியிருக்கிறார்.

ரொம்ப நாளைக்கு முன்னால் தமிழ்நாட்டில் வெள்ளம் வந்து வெள்ள நிவாரணம் என்று பல நாடுகளிலிருந்து உடைகள் வந்து குவிந்தன. அப்போது நான் எட்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்தேன். கொடுத்து முடிந்தும் வடியாத நிவாரணத் துணிகளை சமூகசேவை நிதிக்கென விற்பனைக்கு போட்டிருந்தார்கள்.  அப்பா அழைத்து போயிருந்தார். எத்தனையோ சட்டைகள், ஸ்வெட்டர்கள், க்ளவுஸ்கள் என்று இருந்ததில் என் உள்ளத்தை உடனே கவர்ந்தது ஒரு பிரவுன் நிற ஹாட் ரக உல்லன் குல்லாய். மனதுக்குள்ளேயே அதை தலையில் அணிந்து பார்த்து அதை போட்டுக்கொண்டு பீச்சில் ஸ்டைலாக கிரிக்கெட் விளையாடுவதாக உருவகப்படுத்தி பார்த்து, பிடிவாதமாக அதை வாங்கினேன்.

ஒரு பத்து நாள் அதை பீச் கிரிக்கெட்டில் அணிந்து ஸ்டைல் காட்டியவனுக்கு விதி இன்னொரு கிரிக்கெட் மாட்ச் மூலமாக விளையாடியது.  இப்போது புது சட்டமன்ற கட்டிடம் இருக்கும் அரசு விருந்தினர் தோட்டத்தில் முன்பெல்லாம் கிரிக்கெட் விளையாடுவோம்.  என் வகுப்பு நண்பர்கள் அதில் ஒரு மாட்ச் போட்டு “வா மச்சி” என்று கூப்பிட்டார்கள்.  பீரோவில் பாதுகாப்பாக வைத்திருந்த குல்லாயை போட்டுக்கொண்டு மாட்சுக்கு போனேன்.  என் டீம் காப்டனான பல வருஷம் எட்டாவது பெயிலான குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) “தொப்பி நல்லாயிருக்கே, குடு” என்று டாஸ் போடுவதற்கு வாங்கிப்போனான்.  மாட்ச் முடியும் வரையும் முடிந்த பின்னாலும் கொடுக்கவில்லை.  கேட்டேன், மாட்ச் தோல்வி கோபமும் சேர்ந்து ஃபெயில் பையனின் முரட்டுத்தனத்துடன் “த்தா ப்போடா” என்றான்.  அப்பாவிடம் சொல்லி அவர் கேட்டு அவரையும் அடித்துவிடுவானோ என்று பயந்து அப்பாவிடம் சொல்லாமலும், அவனிடம் அதற்கு பிறகு கேட்காமலும் விட்டுவிட்டேன்.  இன்று வரை குமார் பறித்துக் கொண்ட தொப்பியின் ஏமாற்றத்தை இன்றுவரை என் உள்ளத்தில் அணிந்திருக்கிறேன். குறிப்பு: குமாரின் உண்மையான பெயரை எழுதாதன் காரணம் அடிக்கு பயந்தல்ல; உண்மையான பெயர் மறந்துவிட்டது

ஒரு மாதம் முன்பு குடும்பத்துடன் அரபு இந்தியர்களின் வார இறுதி பொழுதுபோக்கான லூலூ ஷாப்பிங் செண்டர் சென்றிருந்தேன்.  உடைகள் வாங்கிக்கொண்டிருந்தவனின் கண்ணில் பட்டது ஒரு வெஸ்டர்ன் ரக தொப்பி.  இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படத்தின் ஸ்டில்களை பார்த்து பழைய தொப்பி நினைவுகள் வர, உடனே வாங்கிவிட்டேன்.

இ.கோ.மு.சி.க்கு பின் இது மாதிரி தொப்பிகளும், உடையும் ஃபேஷனுக்கு வரலாம் என்ற கணிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன் எங்கள் வீட்டு அறை வரலாற்றிலேயே முதன் முதலாக என் கடைசி மகன் அக்‌ஷையை மாடலாக்கி சில படங்களை எடுத்தேன்.  என் பாலுமகேந்திரா கனவுகளை மதித்து அக்‌ஷையும் எனக்காக விளையாட்டை ஓரம் கட்டிவிட்டு போஸ் கொடுத்தான்.  நான் எடுத்த படங்கள் கீழே.  எப்படி? இரும்புக்கோட்டை முரட்டு சிங்கக்குட்டி போல இருக்கிறானா?

Tweet

Readers also liked

இனிமை பொங்க வாழ்த்துக்கள் (7)

புதிய பாதை போடும் சாதனை நாயகன் (9)

சுறா – ஒரு சதி (13)

ஹையா…என் பொண்டாட்டி வலையில விழுந்துட்டா… (1)

லாபகரமான பங்கு சந்தை அனுபவம்
Tweet

நான் பங்கு சந்தையில் ஈடுபாடு கொள்ள தொடங்கியது இருபது வருடங்களுக்கு முன்பு, 1989-ல். அக்கவுண்டன்ஸி படித்ததில் பங்குகள் என்றால் என்ன என்பதும், பொது நிறுவனங்கள் (Public Limited Companies) என்றால் என்ன என்பதும் எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும், பங்கு சந்தை என்பதை பற்றி சுமாரான செயல் ரீதி அறிமுகம் கிடைத்தது 1989-ஆம் ஆண்டில்தான்.

என்னுடன் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த நண்பர் ஒருவர் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.  அது தவிர நிறுவன முதலாளியும்.  அவர்களின் செயல்பாடுகளை பார்த்து எனக்கும் பொது நிறுவன பங்குகளை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.

நண்பரிடம் “எனக்கும் பங்கு வாங்க வேண்டும்” என்றேன்.

எக்கனாமிக் டைம்சை பிரித்துக்காட்டி “எந்த கம்பெனி?”, ”தில்லியிலா?, இல்லை மும்பையிலா?” என்று  கேள்விமாலை தொடுத்தார்.

எப்படி ஒரு பங்கை தேர்ந்தெடுப்பது என்பது போன்ற நெளிவு சுளிவுகள் அதிகம் தெரியாததால், “எப்படி தேர்ந்தெடுப்பது” என்று கேட்டேன்.

நண்பர் நிபுணர். கஷ்க்கத்தில் வெள்ளை நிற எக்கனாமிக் டைம்ஸும், அட்டையில் சின்ன, பெரிய சில்லரை காசு கோபுரங்களும், ரூபாய் நோட்டு அடுக்குகளும் போட்ட கேபிடல் மார்க்கெட் ஏடுகளும் கொண்டு பீடு நடை போடுபவர்.

உட்கார வைத்து, பால பாடமாக, ஈபிஎஸ், பி.ஈ. மல்டிபிள் என்று அனா, ஆவன்னாவித்தார். கொஞ்சம் புரிந்தது.  எப்படியாவது பங்கு சந்தையில் பணம் போட்டு பாஸாகி, என் பாஸ் போல நானும் பாஸாகி அக்கவுண்ட்டண்ட் கட்டி ஆளவேண்டும் என்ற ஆவல் வந்தது. ஆவலுக்கு அவல் போல வங்கியில் ஒரு ரூ.3000 எடு, எடு, எடுத்துப்போட சொன்னது.

இப்போது ரூ 3000 இருந்தால், உடனே வலையேறி, விலைபார்த்து ”இந்தாப்பா, ஒரு இன்ஃபொசிஸ் கொடு” என்று வாங்கிவிடலாம்.  ஆனால், அப்போது? ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்க வேண்டுமானால், மார்க்கெட் லாட் என்று ஒரு குறைந்த பட்ச எண்ணிக்கை கழுத்தறுப்பு இருந்தது. பத்து ரூபாய் பங்குகளுக்கு மார்க்கெட் லாட் என்பது நூறு பங்குகள்.  ரூ. 3000 போட வேண்டுமானால், கமிஷன் உள்ளிட்டு ரூ.30க்கு விலைமிகாத பங்குகளை மட்டுமே வாங்க முடியும்.

கிட்டத்தட்ட ஆறாயிரத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் நான் ஆள காத்தி்ருந்தாலும், நான் பானை பிடிக்க பாக்கியசாலியாக விலை ரூ.30க்குள் பங்குகளை தேடவேண்டிய கட்டாயம்.

நண்பரிடம் கேபிடல் மார்க்கெட்டும், எகானமிக் டைம்ஸும் வாங்கிக்கொண்டு, வீட்டுக்குப் போய், சி.ஏ. படித்த நாட்களுக்கு பிறகு முதல் முறையாக இரவு கண்விழித்து கம்பெனிகளின் விற்பனை, லாபம், ஈபிஎஸ், பி.ஈ. ஆகியவற்றின் பட்டியலில் ஆழ்ந்து, என்னால் அப்போது பங்கில் போடமுடியும் என்று நினைத்த ரூ.3000க்கு என்ன மாட்டும் என்று ஆராய்ந்தேன்.

இந்தோ நிசான் ஆக்சோ கெமிகல்ஸ் என்ற பெயர் என்னைக் கவர்ந்து இழுத்தது. ஜப்பானுடன் கூட்டுறவில் இருக்கிறார்கள் போல நினைத்தேன். வெளிநாட்டு கூட்டுறவு நல்ல விலைபோகும் சரக்கு என்று பாலபாடத்தில் நண்பர் சொன்னது நினைவுக்கு வந்தது. விலையும் சல்லிசாக ரூ.14 என்று எகனாமிக் டைம்ஸ் சொன்னது. எப்போது விடியும் என்று காத்திருந்து, விடியலுக்கு முன்பே எழுந்து காப்பி குடித்து ஆபீஸ் போய் நண்பரிடம் “இந்தோ நிஸான் இருநூறு வேணும்” என்றேன்.

உனக்கு நல்லா வேணும் என்ற பார்வையுடன் “வாங்கிட்டா போச்சு” என்று ”ப்ரோக்கர் அக்கவுண்ட்டெல்லாம் ஓபன் பண்ணணுமே” என்றார்.  “எப்படி?” என்று கேட்டேன்.

மார்வாடிகள் வியாபாரம் வெளியே போகவிடமாட்டார்கள். ”அக்கவுண்ட் இல்லாம அவசரமா வாங்கணும்னா, என் மச்சினன் சப்-ப்ரோக்கரா இருக்கான், அவங்கிட்ட அறிமுகப்படுத்தறேன்” என்று ஜோஷி சாப்புக்கு உடனே போன் ஏற்றினாலும் அவர் “நான் பிசியா இருக்கேன், சாயந்தரமா வரேன்” என்று என் முதல் பங்கு முதல் அவசரம் தெரியாமல் சொன்னார்.

சாயந்தரம் அவர் வந்து “அமவுண்டெல்லாம், சரியா செட்டில் பண்ணிடுவாரா?” என்று நண்பரிடம் உத்தரவாதம் வாங்கிக்கொண்டு “என்ன ஷேர்?’ என்றார். “இந்தோ நிசான் ஆக்ஸோ” என்றேன். அவர் நடமாடும் பங்கு நூலகம் போல ‘அது பம்பாய்ல தானே கிடைக்கும், உங்களுக்கு தில்லில எதுவும் அகப்படலியா, ஏசிசி, டிஸ்கோ இங்கயே வாங்கலாமே” என்றார்.

நண்பர் நமட்டு சிரிப்புடன் “தீன் ஹசார் ரக்கா ஹை” என்றார். மச்சினர் கேவலத்துக்கும் கேவலமாக பார்த்தபடி “கேவல் தீன் ஹசார் ஹை?” என்றார்.

நான் கேவலம் புரியாமல் “ஹை, ஹை! ஒங்க கைராசி நல்லா வரட்டும்” என்று தென்னிந்திய அசடு வழிந்தேன்.

“சரி, நாளைக்கு ஆர்டர் அனுப்பறேன், கிடைத்துவிட்டால் ஃபோன் பண்ணி சொல்றேன், ஷேர் கொடுக்கும்போது செட்டில் பண்ணிடணும்” என்றார் கொடுப்பானா என்கிற அவநம்பிக்கை மேலிட.

அப்போதெல்லாம், இப்போது இருப்பதுபோல் கிடையாது.  பம்பாயோ, எம்பாயோ, பங்கு வாங்க நாம் ஒருவரிடம் சொல்லி, அவர் சாம் பிட்ரோடவுக்கு முந்தையகால கருப்பு போனில் ரட்டட்ட ரட்டட்ட என்று எண் சுழற்றி, கடவுள் ப்ரோக்கரிடம் வேலை செய்யும் உபதேவரிடம் சொல்லி, அவர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்குள் இருக்கும் ரிங் எனப்படும் பலான இடத்துக்கு ஆர்டர் எடுத்துப்போய், இந்தோ நிசான் ஷேர் டீல் செய்யும் வேறோரு ப்ரோக்கர் கடவுளின் உபதேவரிடம் (கிடைத்தால்) வாங்கி, போன் சுழற்றி மீண்டும் நம் சப்-ப்ரோக்கர் நண்பர் வழியாக நமக்கு தகவல் வரும்.  அதற்கு அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டும். கிடைக்காவிட்டால் மீண்டும் ரட்டட்ட, ரட்டட்ட.

காத்திருந்தேன். மறுநாள் அவர் ஃபோன் வந்தது. “நீங்கள் அதிருஷ்டக்காரார், ஆனால் 200 கிடைக்கவில்லை, 150தான் கிடைத்தது, ரூ 16-ல்” என்றார்.

“பேப்பர்ல ரூ 14 தானே போட்டிருந்தான்” என்றேன்.

“அது அன்னைக்கு, உங்களுக்கு ரூ 16-ல் கிடைத்ததே பெரிசு, அன்னைக்கு 18 வரை போச்சாம்” என்றார். ஏதோ எனக்காக மன்றாடி விலைபேசி வாங்கியது போல.

”சரி, நாளைக்கு ஷேர் கொண்டு வந்து கொடுக்கறீங்களா? உடனே செக் கொடுத்து விடுகிறேன்” என்றேன்.

“ஷேர் வரதுக்கு ஒரு ரெண்டு வாரம் ஆகும், பம்பாயிலருந்து வரணும், வந்ததும் வரேன்” என்றார்.

இரண்டு வாரம் தினமும் காலையில் எகனாமிக் டைம்ஸ் கடன் வாங்கி பூச்சி பூச்சியாக போட்டிருந்த பங்கு பட்டியலில் என் இந்தோ நிசான் விலை பார்த்தபடி இருந்தேன்,  ஐம்பது பைசா விலை ஏறினாலும் 150 இண்டு 0.50 பைசா என்று லாபக்கணக்கு போட்டபடி.

இரண்டு வாரம் போய் மூன்றாவது வாரம் மாலை அலுவலகம் முடியும் நேரம் அவர் வந்தார். “உங்கள் ஷேர் வந்தாச்சு” என்று கால்குலேட்டர் வாங்கி எண் அழுத்தி ரூ.2450 கொடுக்க சொன்னார்.

”கணக்கு சரியா பாருங்க சார், 150 இண்டு 16, இரண்டாயிரத்து நானூறு தானே ஆகிறது” என்றேன்.

“சார், 16 வாங்கிய விலை, 2% கமிஷன் சேர்த்து 2,450” என்றார்,  பதினைந்து நாளில் நான் சம்பாதித்த ஐம்பது பைசா லாபத்தில் 32 பைசா உருவியபடி.

“அப்போ விக்கும் போதும் அதே 2% தரணுமா?” என்றேன் காற்று இறங்கிய குரலில்.

நான் செக் எழுதுவதை பார்த்தபடி “ஆமாம்” என்றார்.

”இப்பவே விக்கலேன்னா ட்ரான்ஸ்பர் பண்ணி ஒங்க பேர்ல வச்சுக்கங்க” என்று பங்கு பத்திரத்துடன் பல ஸ்டேப்ளர் அடிக்கப்பட்டு இணைக்கப்பட்டிருந்த பச்சை நிற ஷேர் ட்ரான்ஸ்பர் பார்மை சுட்டிக்காட்டி.

அதை நிரப்பவே எனக்கு என் பங்குருநாதர் உதவி தேவைப்பட்டது.  ’ஏன் ட்ரான்ஸ்பர் பண்ணிக்கறே, அப்படியே ப்ளான்கா வித்துடலாமே” என்று என் குருநாதர் கேட்டது எனக்கு சரியாக புரியவில்லை.

நிரப்பிய ட்ரான்ஸ்பர் படிவத்தையும் பங்கு பத்திரத்தையும் பதிவு தபாலில் அனுப்பிவிட்டு அது என் பெயரில் மாற்றி வர வழிமேல் விழி வைத்து காத்திருந்தேன்.  அப்போதேல்லாம் பங்கு மாற்றம் என்றால் அதற்கென்று ஒரு கமிட்டி எல்லா நிறுவனத்திலும் இருக்கும்.  அவர்கள் மாதத்தில் ஒரு நாள் கூடி என்னைப்போல ட்ரான்ஸ்பருக்கு அனுப்பிய எல்லா பங்குகளின் ட்ரான்ஸ்பரையும் அப்ரூவ் செய்து, நிறுவனத்தின் பங்குதாரர் ஏட்டில் புதிய பங்குதாரராக பெயரை எழுதிக்கொண்டு பின்னர் திருப்பி அனுப்புவார்கள்.

பங்கு எத்தனை நாளில் நம் பெயரில் மாறி திரும்ப வருகின்றது என்பது இவர்கள் கூட்டம் எத்தனை நாளைக்கு ஒருமுறை கூடுகிறது என்பதை பொறுத்து மாறுபடும். 60 நாட்களுக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஒரு விதி இருந்தது என்று நியாபகம், ஆனால் சிறிய கம்பெனிகள் இந்த விதிமுறையை பின்பற்றாததால் பெரும்பாலும் தாமதமாகும்.

நல்லவேளையாக, நான் அனுப்பிய சமயம் அந்த நிறுவனத்தின் கமிட்டி கூடி சீக்கிரம் என் பெயரில் மாற்றி நாற்பந்தைந்து நாள் கவலையிலேயே எனக்கு என் பங்குகள் வந்துவிட்டன.

பங்கு வந்து விட்டதில் இன்னும் ஆர்வம் அதிகமாகி தினமும் எகானமிக் டைம்ஸ் காண்பது என் முக்கிய வேலையானது. அப்போதெல்லாம் பங்கு விலை என்ன ஆனது என்பது தெரிய அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டும்.

தினம் பார்த்துக் கொண்டே வந்ததில் ஒரு நாள் என் பங்கு ரூ 22 என்று உயர்ந்திருந்தது.  குருவின் மைத்துனரை தொடர்பு கொண்டு, விற்க வேண்டும் என்றேன்.

”சரி விற்றுவிடலாம், நாளைக்கு என்ன விலைக்கு விற்க வேண்டும்” என்றார்.

“ரூ 22 போட்டிருக்கு பேப்பரில், அதே விலைக்கு” என்றேன்.

“அது கிடைக்குமான்னு தெரியாது, முயற்சி பண்ணலாம், ரூ 21க்கு மேல் என்று சொல்லவா” என்றார்.

மனதுக்குள் லாபத்தை ரூ 900த்திலிருந்து ரூ 750க்கு குறைத்தபடியே “சரி” என்றேன்.

அடுத்த நாள் மாலை அவர் தொலைபேசியில் “வித்துப்போச்சு சார், ரூ.21 கிடைச்சது, கொஞ்ச நேரத்துல வரேன், ஷேர் எடுத்து வைங்க, டெலிவரி அனுப்பணும்” என்றார்.

”அப்போ இன்னிக்கே பணமும் குடுத்துடுவீங்களா” என்றேன்.

”என்ன சார், விவரம் புரியாம பேசறீங்க, டெலிவரி அனுப்பி பணம் வர மூணு வாரம் ஆகும்” என்று கொஞ்சம் முரட்டுத்தனம் சேர்ந்த குரலில் சொன்னார்.

நான் பயந்தபடி “இல்ல சார், தெரியாம சொல்லிட்டேன், ஷேர் எடுத்து வைக்கிறேன், வாங்க” என்றேன்.

பதினைந்து நிமிடத்துக்கும் பஜாஜ் ஸ்கூட்டரில் வந்து இறங்கி என்னிடம் இருந்து ஷேர் கொத்திக்கொண்டு பணம் தரும் தேதி குறிப்பிடாமல் பறந்து போனார்.  விற்ற பங்குக்கு எனக்கு பணம் வர கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது.

இது நடந்து “ஒன்றும் தெரியாத போதே கிட்டத்தட்ட 38% சதவீதம் லாபமா” என்று யோசித்து, இன்னும், இன்னும் என்று தெரிந்து கொண்டு, ஓடி ஓடி சம்பாதித்து சேமிப்பு, கடன் என்று தேடி பங்கு சந்தையில் போட்டு, என்னுடனேயே இந்த இருபது வருடத்தில் பங்கு சந்தையும் உருமாறி ஆன்லைன் ட்ரேடிங், அடுத்த நாள் செட்டில்மெண்ட், உடனுக்குடன் ஃபாரம் பாரம் இல்லாமல் டிமேட்டில் பங்கு வருகை என்று ஆனாலும்…

அந்த முதல் லாபத்தோடு பங்கு மார்க்கெட் பழக்கத்தை நான் விட்டிருந்தால், என் பங்கு சந்தை அனுபவம் லாபகரமாகவே இருந்திருக்கும்.

இங்கு செலவிட்ட நேரம் சுகமாக இருந்ததா? இங்கே க்ளிக் செய்து ஒரு ஓ போடுங்க

Tweet

Readers also liked

கணினியில் இந்திய ரூபாய் எழுத்துரு உபயோகிக்க… (5)

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் (2)

சந்தோஷம் பிறந்த நாள் (11)

சுறா – ஒரு சதி (13)