DigitisingThoughts » கதைகள்

இறுதிச்சுற்று
Tweet

தட்! தட்! தட்!

கொஞ்சம் இடைவெளி.

மீண்டும் தட்! தட்! தட்!

தட்!டப்பட்டது கதவு.

அவள் திறக்க பிரயத்தனப்படவில்லை.

கொஞ்சம் அமைதி.

மீண்டும் தட் தட் தட்.  வால் பிடித்தது போல கால்களின் ஓசைகள். கதவு திறக்கப்படாததின் பொறுமையின்மை காலடி ஓசைகளின் சத்தத்தில் தெரிந்தது.  அரை டஜன் கால் ஜோடிகளாவது இருக்க வேண்டும், மூடிய கதவை தாண்டி சத்தம் உள்ளே வர.  காலடிகளின் பொறுமையின்மையும், கதவின் தட்-டும் அவளை பாதிக்கவில்லை.

அவள் கட்டிலிலிருந்து எழுந்து அறையின் ஓரத்தில் இருந்த ஒரே ஜன்னலுக்கருகில் இருந்த ஒரே நாற்காலியில், அதில் இருந்த தூசைத் தட்டாமல் போய் உட்கார்ந்து கொண்டாள்.  நாற்காலிக்கருகே பலமுறை அணிந்து ஆடிய நடனத்துக்கு உபயோகிக்கும் காலணி இருந்தது.  வெளியே தெரிந்த அமைதிக்கும், பொறுமைக்கும் சம்பந்தமில்லாமல் அவள் மனதில் அடித்துக்கொண்டிருந்த நினைவலைகளினுடே அதிகம் பிரயத்தனப்படாமல் காலணிகளை அணிந்து கொண்டாள்.  வெளியில் இருக்கும் அவசரத்திற்கு நேர் எதிராக கடிகாரம் ஒரு வினாடியை ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டு கடப்பது போல் மெதுவாக இயங்கினாள்.  முதலில் வலது கால், பின் இடது கால்.

மின் விசிறியை நிறுத்தியிருந்ததால் அறையில் வெப்பம் கொஞ்சம் அதிகமாகி, அந்த மெதுவான இயக்கத்திலும் அவளுக்கு வியர்க்கத் தொடங்கியிருந்தது.  பொறுமையிழந்தபடி இன்னும் தொடர்ந்து கொண்டிருந்த கதவு தட்டலையும், காலடி சத்தங்களையும் தவிர அங்கே வேறு சத்தமில்லை.  கதவுக்கும் அவளுக்கும் பத்தடி தூரம் கூட இருக்காது.  ஆனால் அவளுக்கு அந்த சத்தம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

காலணிகளை அணிந்ததும், நாற்காலியிலிருந்து எழுந்தாள். அவளுடைய இதயத் துடிப்பு கொஞ்சம் அதிகரித்து அறை முழுவதும் எதிரொலித்தது.  ரத்த ஓட்டம் சரேலென்று அதிகமானது. அவளுக்கு கொஞ்சம் நிலை தடுமாறியது.  நாற்காலியின் கையை இறுக பிடித்துக் கொண்டாள்.

எப்போதோ, எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

மூச்சை இழு!

வெளி விடு!

திரும்பவும் செய்!

செய்தாள்…

கொஞ்சம் சரியானது.  ஒரு முடிவுக்கு வந்தவள் போல நிமிர்ந்தாள்.  நேராக அறையின் இன்னொரு ஓரத்தில் இருந்த ஒப்பனை மேஜைக்கு சென்றாள். ஒருமுறை கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டாள். மேஜை மேல் இருந்த கைப்பையை எடுத்து அதிலிருந்த பல கசங்கிய காகிதங்களுக்கிடையேயிருந்து கைக்குட்டையை பிரித்து எடுத்தாள். முகத்தில் துளிர்த்திருந்த வியர்வையை துடைத்து கைக்குட்டையை மடிக்காமல் அப்படியே கைப்பைக்குள் எறிந்தாள்.

கண்ணாடியில் மீண்டும் தன்னை பார்த்துக் கொண்டாள்.  எந்த பாவத்தையும் காட்டாத அவளுடைய வெற்று முகம் அவளை கண்ணாடியிலிருந்து பார்த்தது.  எல்லா எண்ணங்களும் இப்போது அழிந்துவிட்ட அவள் மனம் கண்ணாடியில் தெரியவில்லை. ஒரு வேளை முகத்தில் தெரிவது அகத்தின் அழகோ?

அவள் மீண்டும் தன் கைப்பையை இழுத்தாள்.  இழுத்த வேகத்தில் மேஜை மேலிருந்த விலையுயர்ந்த செண்ட் பாட்டில்கள் கீழே விழுந்து உடைந்ததை பொருட்படுத்தவில்லை.  உடைந்த பாட்டில்களில் இருந்து பல வாசனைகளும் வெளிக்கிளம்பியதில் எல்லாம் கலந்த ஒரு மகா வாசனை அவள் நாசி வழியே மூளையை துளைத்தது.

சலனமில்லாமல் தரையில் சிதறியிருந்த பாட்டில் துண்டுகளை பார்த்தாள்.  அறையின் மின்விளக்கு நூறு துண்டுகளாக அவளை பார்த்தது.  மீண்டும் இதயத்துடிப்பு அதிகரித்தது.  உடல் முழுதும் மீண்டும் ரத்தவெள்ளம்.

மூச்சை இழு!  வெளி விடு! திரும்பவும் செய்!

இழுத்து, வெளிவிட்டு, இழுத்து, வெளிவிட்டு வெள்ளத்தை அடக்கினாள்.

கைகள் மீண்டும் கைப்பையை இழுத்தன.  பையை கிளறி அந்த கசங்கிய காகிதத்தை தேடி எடுத்து மேஜை மேல் வைத்து இரண்டு கைகளாலும் சுருக்கம் போக அழுத்தித் தேய்த்தாள்.

காகித சுருக்கம் நீங்கியது.  அதில் சுலபமாக படிப்பது போல் ஒன்றும் இல்லை.  காஃபியோ, விஸ்கியோ எதுவோ பட்டு அவசரத்தில் துடைத்ததில் மங்கலாக ஏதோ இருந்தது.   முதன்முதலில் படித்த பொழுது அதிர்ந்ததில் குடித்தது கொட்டியது அவள் மறக்கவில்லை.

என்ன குடித்தாள் நினைவில்லை. என்ன படித்தாள் நினைவிருக்கிறது.  மற்றெல்லாம் மறந்துபோய் சில நொடிகளுக்கு எண்ண ஓட்டம், அவளது வாழ்க்கையை புரட்டிப்போட்ட அந்த கசங்கிய காகிதத்தின் வார்த்தைகளை மட்டும் சுற்றி வந்தது.  சிறிது நாட்களுக்கு முந்தைய அந்த நினைவுகளின் சில அடுக்குகள் மட்டும் மரித்துப்போய் அதில் நிரம்பியிருந்த முகங்களும் உடன்கட்டை ஏறியிருந்தன.  ஆனால் அந்த மிக முக்கிய சம்பவம் மட்டும் அவள் மனதை விட்டு அகலாது அந்த காகிதத்தில் கறையை போலவே ஒட்டிக்கொண்டிருந்தது.

இனிமேலும் இதை நினைத்து பயனில்லை போல ஒரு நீண்ட மூச்சுடன் மீதமிருந்த நினைவுகளை தீர்மானமாக பிய்த்தெறிந்தாள்.  அந்த காகிதத்திற்கு இனிமேல் அவசியம் இருக்கவில்லை.  கைப்பைக்குள் மீண்டும் துழாவி எதையோ எடுத்து தன் வலது கையில் அடக்கியபடி அழுத்தமாக நடந்து கதவை திறந்தாள்.

இத்தனை நேரம் தட்டியதில் திறவாத கதவு திடீரென திறந்ததில் வெளியே சந்தடி அடங்கி ஒரு அசாதாரண நிசப்தம் அந்த இடத்தை கவ்வியது.  பல தலைகளுக்கிடையே, வியர்த்து கசங்கிய உடையில் காதை அலைபேசியால் அழுத்தியபடி யாருடனோ அவசரமாக பேசிக்கொண்டிருந்தவனை கண்டுபிடிப்பதில் அவளுக்கு சிரமம் இல்லை.

அவனை பார்த்து போகலாம் என்பது போல் தலையை ஆட்டினாள்.  அவன் அந்த தலை ஆட்டலிலேயே அவனுடைய நெருக்கடி நீங்கி பெருமூச்சு விட்டபடி, இன்னும் பலமாக அலைபேசியபடி கூட்டத்தை விலக்கி அவளுக்கு வழி ஏற்படுத்திக் கொண்டே பாதையின் கடைசியில் இருந்த ஒரு கதவை திறந்து காணாமல் போனான்.

ஒரு சில நொடிகளில் ஒலி பெருக்கிகள் உயிர் பெற்று காணாமல் போன மேனேஜரின் கரகரப்பான குரலை பிரதியெடுத்து அரங்கம் அதிர நடனப்போட்டியின் இறுதிச்சுற்று துவங்க இருப்பதை அறிவித்தது.  பார்வையாளர்களின் சலசலப்பு இன்னும் அதிகமாகி மேடையில் ஒளிவெள்ளம் பாய, சற்றுமுன் அவள் அறையில் இருந்த மௌனத்திற்கு நேர் எதிராக ஒரு சேர டிரம்ஸ்களும், கிதார்களும் இன்னும் என்னென்னவோக்களும் சேர்ந்து திரைப்பட கடைசி காட்சி போல சத்தம் கூட்ட இவள் ஒளி வெள்ளத்தின் நடுவே கத்தி போல மேடையில் தன்னை செருகிக்கொண்டாள்.

ஒரே சத்தமாக இசைக்கருவிகளும், கரவொலிகளும் பல்லாயிரம் வாணங்கள் ஒரு சேர வெடித்ததுபோல் உச்சிக்குப்போய் சட்டென்று சுவிட்ச் போட்டது போல் எல்லாம் நின்றன. கனத்த மௌனம். ஒரு மெல்லிய புல்லாங்குழல், பின் ஒரு வயலின், பின் மற்ற கருவிகள் சேர, பல நாள் ஒத்திகை பார்த்து பார்த்து அவள் அங்கத்தில் ஒன்றாகிவிட்ட இசைக்கு அவள் ஆடினாள். சற்றும் பிசிறில்லாத, ஒவ்வொரு அசைவும் வெண்ணெயில் செய்தது போல, அவள் பாதங்களுக்கடியில் இருப்பது தரையா இல்லை மேகப்பொதியா என்று பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வரும்படி சுழன்றாள்.

ஆடிய ஆட்டத்தின் வேகத்தில் அவள் இதயத்துடிப்பு பேரதிகமாக ஆடி நின்ற அவள் கால்கள் துவண்டன. ஒரு வினாடி அவள் மனதில் அந்த கசங்கிய கடிதத்தின் வாக்கியங்கள் மீண்டும் தோன்ற சற்றே கால் மடிய அவள் நமஸ்கரிப்பது போல் மேடையில் குனிந்து சரிய அதுவும் நடனத்தின் அசைவாகி எப்போது இசை நின்றது, எப்போது அவள் நிறுத்தினாள் என்று தெரியாமலே அவள் உடல் நிற்க மீண்டும் ஒரு மௌனம் அரங்கத்தை சூழ்ந்தது.

ஒரு சில நொடிகள்தான்.

பார்வையாளர்கள் முதலில் ஒவ்வொருவராக பின்னர் கொத்து கொத்தாக சொர்க்கத்திலிருந்து நிஜ உலகுக்கு மீண்டு வர, கரவொலி மெலிதாக துவங்கி பின்னர் கனமாகி, இன்னும் கனமாகி ஒரு உச்சியை எட்டி சன்னமாகி இன்னும் சன்னமாகி ஒரு தீவிர சொர்க்கரின் தனித்த கையொலி தூரத்தில் கேட்க அவள் கண்கள் செருக வலக்கையில் அவள் இன்னும் பற்றியிருந்த குப்பி உருண்டோடியது.

பின் குறிப்பு: இந்த கதையை எத்திராஜ் கல்லூரியில் கொடுக்கப்பட்ட ஒரு தலைப்புக்கு ஆங்கிலத்தில் எழுதியது என்னுடைய முதல் மகன் நிரஞ்சன். கதையை நிரஞ்சன் எழுதியபடி ஆங்கிலத்தில் படிக்க இங்கே செல்லுங்கள். நிரஞ்சன் எழுதிய வேறு இரண்டு கதைகள் இங்கேயும், இங்கேயும்.

முக்கிய குறிப்பு: இந்த கதை பிடித்திருந்தால் தமிழிஸ் தளத்தில் ஓட்டளிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Tweet

Readers also liked

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் (2)

தனிமையின் கடுமை – அது ஒரு கொடுமை (4)

இனிமை பொங்க வாழ்த்துக்கள் (7)

எழுத்துக்கு லீவு (10)

விசா கிடைச்சாச்சு
Tweet

”உடனே கிளம்பணுமா’

“ஆமாம்.  ரொம்ப சமயம் கிடையாது.  இதுவே லேட்”

”இவ்வளவு சீக்கிரம் எப்படி? இன்னும் கொஞ்சம் நாளாகும்னு நெனச்சேன்”

“எங்களுக்குக் கூட தெரியாது.  தகவல் வந்தது.  உடனே உங்கள பார்க்க வந்துவிட்டேன்”.  “பெரியவருக்கு எல்லாம் பக்காவா நடக்கணும்.  கொஞ்சம் லேட்டானாலும் பிடிக்காது”

“அப்போ இதுவரைக்கும் ஒரு முறைகூட தவறினதில்லயா?”

“ம்ஹூம்.  கிடையாது.  அதுதான் சொன்னேனே பெரியவருக்கு பிடிக்காதுன்னு”.  “விசா கிடைக்கறதுக்கு மட்டும்தான் வெயிட் பண்ணலாம்”.

“விசாவுக்கு அதிக கூட்டமோ?”

“முன்னல்லாம் அதிகம் இல்ல.  இந்தியாவும், சீனாவும் தலையெடுக்க ஆரம்ப்பிச்ச பிற்கு ரொம்ப கூட்டம்”.  “சில சமயம் தமிழ்நாட்டுக்காக மட்டும் 25,000 அப்ளிக்கேஷன் வரும்.  ஒரு விசேஷம் என்னன்னா யாருக்கும் விசா ரிஜக்ட் பண்றதில்ல. எந்த ஊர்க்காரன்னு பாக்கறதில்ல”

”ஓ! விசா கிடைச்சதும் ஒடனே கூப்பிட்டுடுவாங்களா.  டைம் கொடுக்க மாட்டாங்களா?”

“அதிக டைம் கிடைக்காது.  விசா கிடைச்சாச்சுன்னா, பெரியவர் கூப்பிட சொல்லிடுவார்”  “ஆனா ஹெல்த் க்ளியரன்ஸ் கிடைக்கணும்”

”கொஞ்சம் பேருக்கு ரொம்ப சுலபமா கிளியர் ஆயிடும்.  அதிகம் தொந்தரவு இருக்காது.  சிலது ரொம்ப இழுத்தடிச்சு, மருந்து, மாத்திரை, ஊசின்னு போயி க்ளியரன்ஸ் எப்படான்னு ஆயிடும்” “விசா எக்ஸ்பைரிக்கு முன்னால இதோ அதோன்னு இழுத்து, கடைசியில பெரியவர்கிட்ட கொண்டு போய் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்க வேண்டியதாகிடும்”

“இவ்வளவு சீக்கிரம் கிளம்ப சொல்றீங்களே.  பையன காலேஜ் சேக்கணும், பொண்ணு கல்யாணத்துக்கு பாத்துண்டு இருக்கோம்.  விசா வரதுக்குள்ள இதல்லாம் பிக்ஸ் பண்ணிடலாம்னு நெனச்சேன்.  லீவாவது கொடுப்பாளா?”

“மாசா மாசம் கூட வரலாம்.  அலவ் பண்றா.  ஆனா செலவு ஜாஸ்தி ஆகும்.  ஏன்னா இதுக்குன்னு ஒரு நாள்தான் தருவா.  சில சமயம் சேந்தாப்ல ஒண்ணு ரெண்டு நாள் வர முடியும்.  பெரும்பாலும் எல்லாருக்கும் வருஷத்துக்கு ஒரு வாட்டிதான் லீவு கிடைக்கும்”  “ஆனா இப்பல்லாம் வருஷத்துக்கு ஒருதரம் வரதுக்குக் கூட அவசியம் இல்லாம போயிண்டு இருக்கு”.

”நம்ம ஊர்க்காரா நெறய இருக்காளா?”

“நம்ம ஊர்க்காரான்னு கேட்கவே வேண்டாம்.  பல பேர் அங்க தலைமுறையா இருக்கா.  சில பேர் குடும்பத்துலதான் ஒண்ணு ரெண்டு பேர் இன்னும் பொறந்த நாட்டுலயே இருக்கா.  அவாளாலதான் கொஞ்சம் பேரு வருஷத்துக்கு ஒருதரம் வரது.  இவாளும் அங்க வந்துட்டா வருஷா வருஷம் செலவு மிஞ்சும்”.

“சரிதான்.  ரொம்ப பெரிய ஊருதான் போலயிருக்கு!” “கேக்க மறந்துட்டேன். வேல பளு ரொம்ப அதிகமா? நான் பேசிப்பாத்ததுல ரொம்ப பேர் ரொம்ப கஷ்டப்படறான்னு கேள்விப்பட்டேன்.  இன்ஃபாக்ட் நரகம்னே சொல்றா”

“அப்படி சொல்ல முடியாது.  எல்லாம் இங்க உங்களோட அனுபவம் பொறுத்தது.  ரொம்ப சில பேர் இங்கருந்து நல்ல அனுபவத்தோட வந்து அங்க சொர்க்கத்த அனுபவிக்கறா.  மத்தவங்களுக்கெல்லாம் இங்க அனுபவம் எப்படின்னு பாத்து அங்க வேல கொடுப்பா.  கொஞ்ச நாள் வாட்டி எடுத்துடுவாங்கறது உண்மைதான். இங்கந்து அனுபவம் இல்லாட்டி கூட சர்டிபிகேட் எடுத்துண்டு வந்துட்டா கொஞ்சம் தப்பிக்கலாம்”.

“அப்போ என்னன்ன சர்டிபிகேட்டுன்னு சொல்லுங்கோ, ஏற்பாடு பண்ணிடறேன்”

“அதுக்கல்லாம் நேரம் இல்ல.  இப்போ கடைசி நேரத்துல இதல்லாம் பண்ண முடியாது. உங்க கன்சல்டண்ட் யாரு? வெங்கடேசன் தானே? அவர் எல்லாத்தயும் உங்க ஆத்துல விவரமா சொல்லி ஏற்பாடு பண்ணுவார்.  அவா அதெல்லாம் சரியா பண்ணினா போதும்”

“பெரியவர் ரொம்ப பவர்ஃபுல்னு சொன்னீங்களே. அவருக்கு இந்த ”ஏற்பாடு பண்ண” சர்டிபிக்கேட் பத்தி தெரியாதா?”

”ஹா! ஹா! அவருக்கு தெரியாமயா? கண்டிப்பா தெரியும்.  ஆனா அவர் இந்த முயற்சிக்காக மன்னிச்சுடறார். நெறய பேர் இந்த முயற்சி கூட எடுக்கறதில்ல”

“அங்கந்து யாரும் திரும்பி வரதில்லையா?”

“ஓ! நிறைய பேர் அனுபவம் குறைவா வந்து, ட்ரைனிங்குக்கு அப்புறம் இங்க வரா.  ஆனா போஸ்டிங் பெரியவர் கம்பெனிலதான்.  எங்க போடுவார்னு தெரியாது.  அதுவும் அனுபவம் வச்சுத்தான்.  சில பேர் திரும்ப வந்து நாய் படாத பாடு படறா.  புழு, பூச்சி மாதிரி அனுபவம் கிடைக்கும்.  அதுக்குத்தான் நல்ல சர்டி்ஃபிகேட் வாங்கறது.  அது இருந்தா இங்க மறுபடி வர தொந்தரவு இல்ல”

”ஓகே, அப்ப இருங்கோ பேக்கிங் பண்ணிண்டு ஆத்துல சொல்லிட்டு வந்துடறேன்”

“பேக்கிங்கா? அதுக்கெல்லாம் நேரம் இல்ல சார்.  ஏற்கனவே ரொம்ப நேரமா பேசிண்டு இருந்தாச்சு. விமானம் வேற வந்துடும்.  எல்லாம் அங்க கிடைக்கிறது.  கிடைக்காத வஸ்து இல்ல.”

என்ன சார் இது. இப்படி அவசர படுத்தறளே. கட்டின வேஷ்டியோட வர சொல்லுவேள் போல இருக்கே!”

“அது கூட வேணாம்”

“சரி.  இப்போ என்ன பண்ணணும் சொல்லுங்கோ”

“ஒண்ணும் வேணாம்! ஜஸ்ட் கண்ண மூடுங்கோ. போதும்”

அவன் கண்ணை மூடிக் கொண்டான்.

டாக்டர் வந்து பல்ஸ் பார்த்து, கண்ணில் டார்ச் அடித்து பார்த்து “சாரி மேடம்! காப்பாத்த முடியல” என்றார்.

அவளும், மகனும், மகளும் அழத் தொடங்கினார்கள்.

Tweet

Readers also liked

ஹங்கேரியில் ஒரு அக்ரஹாரம் (8)

ஒரு சாமானிய பிரபலம் (5)

விஜய் டிவியின் சூப்பர் சுயவிளம்பரம் (0)

கோலங்களுக்கு போடுங்க 49 ஓ (0)

ஹங்கேரியில் ஒரு அக்ரஹாரம்
Tweet

அழகான மணல் மேட்டில் அமைந்த ஒரு தெரு அதில் மிக அழகான ஓட்டு வீடுகள் எனக்கு பெரிய ஆச்சர்யம் நாம் ஐரோப்பாவில் இருக்கிறோமா அல்லது தமிழ் நாட்டில் இருக்கிறோமா?

2008 ல் என் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நான் ஐரோப்பா சுற்றுபயணம் செய்தேன்.  நாங்கள் Paris, London, Manchester, Barcelona, Rome, Venice, Lucern என்று பல மேற்கு ஐரோப்பிய நகரங்களை சுற்றி பார்த்தோம்.

இந்த வருடம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லலாம் என்று எனக்கு ஒரு ஆசை.

நாங்கள் வந்திருப்பது ஹங்கேரி நாட்டின் தலை நகரம் புடபெஸ்ட்.   Map இன் உதவி இருந்தாலும் வழி தேடி சென்றுகொண்டிருந்த நாங்கள் நால்வரும் எங்களையும் அறியாமல் இந்த மணல் மேட்டிற்கு வந்து இந்த அழகான தெருவில் நிற்கின்றோம்.

எல்லா வீடுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி அமைந்துள்ள ஓட்டு வீடுகள். வாசலிலே பெரிய திண்ணை ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அழகான மாக்கோலம்.

எங்கும் நம் மக்கள்.

புடவை உடுத்திய அழகான (ஹ்ம்ம்ம்ம்) மாமிகள். வேஷ்டி உடுத்தி நெற்றியிலே பட்டை நாமம் போட்ட கட்டழகு மாமாக்கள்.

திண்ணையிலும், வீதியிலும் குஷியாகத் தாவி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள்.

நாங்கள் நால்வரும் ஆச்சர்யத்துடன் நடந்து செல்ல நான் என் பாட்டியை பார்க்கிறேன்.  என் அம்மாவின் அம்மா இந்த பாட்டி.

தி.பா. ஆனந்த்

நான் ஹங்கேரியில் எப்படி நம் பாட்டி என்ற ஆச்சரியத்தை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு “என்ன பாட்டி எப்படி இருக்கே”  என்றேன்.

“நான் நன்னா இருக்கேன் நீங்கள் எல்லாரும் சௌகியம்தானே”

“நாங்க நன்னா இருக்கோம் நீ எப்போ இந்த ஊருக்கு வந்தே”

பதில் சொல்லாமல், என் பாட்டி யாரையோ தேடினாள்.  பிறகு என்னை பார்த்து “செல்லப்பா, ராமு எல்லாரும் ஒண்ணா பொரப்டு வந்தோம்.  இந்த ஊர் பெருமாள் கோவில் உத்சவம் கொடி ஏறி மூணு நாள் ஆறது”  என்று சொல்லிக்கொண்டே வலது பக்கம் திரும்பி “டேய் செல்லப்பா செத்த இங்க  வா நம்ப ஆனந்து, ஹேமா, பசங்கல்லாம் வந்திருக்கா பாரு”.

நான் அசந்து போனேன்.  என் இரண்டு மாமாக்கள், என் பாட்டி எல்லோரும் இங்கே ஹங்கேரி நாட்டில் ஒரு அக்ரஹாரத்தில் என் முன்னே – இது என்ன கனவா?

“பாட்டி மெட்ராஸ் லேந்து எப்டி வந்திங்கோ எல்லாரும்”

“இதென்ன அசட்டு கேள்வி நாங்க எல்லாரும் பறக்கற வண்டில தான் வந்தோம்.  மெட்ராஸ்லேர்ந்து பொரப்டு டில்லி வந்தோம். அங்க வேற வண்டியில ஏறி எதோ ஒரு ஊர் வழியா இந்த ஊருக்கு வந்தோம்”

நான் இருபது வருடங்களாக பறந்த அனுபவத் திமிருடன் என் பாட்டியிடம் “டில்லிலேந்து நேரா இங்க வந்தியா இல்ல வேற ஊர் வழியாவா?”

என் பாட்டி என் இரண்டாவது மாமாவை பார்த்து “ஏன்டா ராமு நம்போ டில்லிலேந்து அந்த மசக்க ஊர் வழியாதானே வந்தோம்”

என் மாமா உடனே “அம்மா அது மசக்க இல்ல அந்த ஊர் பேரு மொஸ்கொவ்” என்றான்.

”இருடா காபி போட்டுண்டு வரேன்”  “ராமு பால் வாய்ண்டு வா” என்று அவர்கள் சற்று நகர்ந்து செல்ல, நான் கொஞ்சம் காலாற நடக்கலாம் என்று நகர்ந்தேன்.

நான் என் மனைவியை பார்த்து “மெட்ராஸ் டு புடபெஸ்ட் அட்லீஸ்ட் ஒரு 40,000 rupees இருக்குமா Airfare”  என்றேன்.

As usual “நமக்கு ஏன் அந்த கவலை” என்றாள்.

நான் யோசித்தேன் – இவர்கள் அத்தனை பேரும் சென்னயில் இருந்து எவ்வளவு தூரம் பயணம் செய்து இங்கே வந்திருகிறார்கள்.  என்ன ஆச்சர்யம்.

கிட்டத்தட்ட நூறு குடும்பங்கள் வாழும் ஒரு அழகான அக்ரஹாரம், மணல் மேடு, மண் வாசனை, கோலங்களுடன் வாசல், திண்ணைவுள்ள ஓட்டு வீடுகள், தெருக் கோடியில் பெரிய கோவில் அங்கிருந்து ஒரு சிறு தொலைவில் நவீனமான மக்கள் புழங்கும் ஐரோப்பா நகரம்.

நாங்கள் கோவிலுக்கு சென்றோம். மிக நல்ல தரிசனம்.  கோவில் வாசலை அடைந்தால் இன்னும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

என் இரண்டாம் சகோதரன் அசோக்தான் அங்கே நிற்கிறான்.

அவன் என்னை பார்த்து “வாடா ஆனந்த் எப்பிடி இருக்கே”

கிட்டத்தட்ட அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் “நீ எப்போ வந்தே” என்றேன்.

என் சகோதரன் “நான், விஜி, அனிருத் மூவரும் வந்து மூணு நாள் ஆகறது.  இந்த கோவில் உத்சவம் பார்க்க வந்தோம் நல்ல வேளை பார்த்தசாரதி கோவில் உத்சவம் முடிஞ்சதுக்கு அப்புறம் இந்த கோவில் உத்சவம் வந்தது சவுரியமா போச்சு, பாட்டியாத்துல தான் தங்கியிருக்கோம்” என்றான்.

”இப்போதாண்டா பாத்தேன்; காபி போட்டுத் தரேன்னு சொன்னா.  ராமு பால் வாங்கப் போயிருக்கான், அதுக்குள்ள பெருமாள் சேவிக்க வந்தேன்”

நாங்கள் நால்வரும் அந்த தெருவில் ஒரு வீட்டிற்கு சென்றோம் – யாரோ தெரியவில்லை அனால் நல்ல மனிதர்கள் எங்களுக்கு சாப்பாடு போட்டு இளைப்பாற இடமும் கொடுத்தார்கள்.   என் பிள்ளைகள் இருவரும் அந்த வீட்டு பிள்ளைகளுடன் விளையாட சென்றனர்.  நான் உண்ட களைப்பில் சற்று கண் மூடி ரெஸ்ட் எடுத்தேன்.

தூங்கி எழுந்தால் தெருவில் ஒரே கூச்சல் கும்மாளம் நல்ல மாலை பொழுது அமைதியான அக்ரகாரத்தில் மகிழ்ச்சி பொங்கும் சூழல் மிகவும் ரம்யமாக இருந்தது.

நான் சற்று காலார நடந்து செல்ல ஒரு வீட்டு வாசலில் எனக்கு மிகவும் பரிச்சயம் ஆன மாமா ஒருத்தர்.  மெதுவாக அவரை அணுகி “நீங்களும் வந்திருக்கேளா. உங்கள  முன்னால ட்ரிப்ளிகேன்ல பாத்தாப்ல இருக்கு”.

“நான் இந்த ஊருக்கு வந்து பத்து வருஷம் ஆறது” என்றார்.

எனக்கு தெரிந்த இவ்வளவு பேர் இங்க எப்படி ஒரு சேர இந்த ஹங்கேரி அக்ரஹாரத்தில்.

அந்த குழந்தைகள் அக்ரஹார வாழ்கையை, ஐரோப்பா கலாச்சாரத்தில் கலக்காமல் எப்படி சமாளிக்கிறார்கள் என்று புரியாமல் தவித்தேன்.

அந்த தவிப்பின் நடுவே என் செல்ஃபோன் அலாரம் ஒலித்தது.

எழுந்து பார்த்தால் மணி ஏழு.  ஆபிஸுக்கு இன்று சீக்கிரம் போகணும் முக்கியமான மீட்டிங்.

ஆனால் கனவில் நினைவு போல் வந்த ஹங்கேரி அக்ரஹாரம் என்னை முழுக்க வியாபித்திருந்தது.  நான் இருப்பது துபாய்.  என் கனவில் ஒரு அக்ரஹாரம் அதுவும் ஐரோப்பா நகரமான புடபெஸ்ட்டில்.

நான் இதுவரை கண்டிராத ஒரு நாடு ஹங்கேரி. அந்த நாட்டில் ஒரு அழகிய அக்ரஹாரம் அமைத்த என் கனவு என்னை நெகிழ வைத்தது.  என் கனவில் வந்த என் பாட்டி இந்த உலகை விட்டு பிரிந்து பதினைந்து வருடங்கள் ஆகின்றன.

உண்மையிலேயே வாழ்க்கையில் இது போல் எத்தனை புதையல்கள்.

Life is a treasure!

(உண்மைக் கனவை கண்டதும், விண்டதும்: தி.பா. ஆனந்த்)

Indian Premier League Season 2

Tweet

Readers also liked

விசா கிடைச்சாச்சு (9)

ஒரு சாமானிய பிரபலம் (5)

The case of three Sris – AirTel Super Singer Junior (10)

My Air travel experience (9)

கல்லூரிக்குக் கட்டடித்த போது
Tweet

நான் கல்லூரியில் படித்தது 1981-84 வருடங்களில். பன்னிரெண்டாம் வகுப்பில் எடுத்த மதிப்பில்லாத எண்களால் எனக்கு இடம் கிடைத்தது மாலை நேரக் கல்லூரியில்தான்.

என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாட்கள் அவை.  மாலை நேரக் கல்லூரி என்பதால், எழுவது, குளிப்பது, சாப்பிடுவது என்று எல்லாமே மெகா சீரியல் போல மெதுவாகத்தான்.  காலை எட்டரை முதல் ஒன்பதரை மணி வரை, வானொலியில், விவித்பாரதி் தமிழ் பாடல்கள், ஒன்பதரைக்கு 300 Mhz திருப்பினால் இடை விடாமல் ஐந்து மணிவரை இலங்கை வானொலி தமிழ்ச் சேவை.

உண்மையாகவே, புத்தகம் கையிலே, புத்தியோ பாட்டிலே.  ஐந்து மணிக்கு சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு உடை மாற்றிக் கொண்டு கல்லூரிப் பயணம்.

கல்லூரி நேரம் மாலை 6 முதல் 8.30 வரை.  ஐம்பது நிமிடத்துக்கு ஒரு வகுப்பு என்று தினமும் மொத்தம் மூன்று வகுப்புகள்.  (இதில் வெள்ளிக் கிழமைகளில் கடைசி இரண்டு வகுப்புகள் கட்டடித்து “ஒலியும், ஒளியும்” பார்க்க ஓடியது பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்).

வகுப்பு முடிந்து கல்லூரிக்கு வெளியே வர பத்து நிமிடங்கள் பிடிக்கும்.  பிறகு பேருந்து பிடித்து திருவல்லிக்கேணி வந்து சேர இன்னொரு நாற்பத்தைந்து நிமி.  திருவல்லிக்கேணியில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீடு வந்து சேர ஐந்து நிமி.  ஆக, கல்லூரியில் அனைத்து வகுப்புகளிலும் அமர்ந்தால், இரவு 9.30 மணிக்கு வீடு வந்து சேர்ந்துவிடுவது வழக்கம்.

கட்டடிக்கும் நாட்களின் கதையே வேறு.  கட்டடித்து வீட்டுக்கு திரும்பினால், 9.30க்கு முன்னரே வீடு வந்து சேர்ந்துவிடுவேன்.  (உ-ம்: வெள்ளிக்கிழமை ஒலியும், ஒளியும் பார்க்க அடிக்கும் கட்).

மாலைக்காட்சி சினிமாவுக்காகக் கட்டடித்தால், படம் முடியவே பத்து ஆகிவிடும்.  பத்து மணிக்கு பிறகு பேருந்து வருகையும் குறைந்துவிடுவதால், படம் விட்டு, பேருந்து பிடித்து வீடு  வந்து சேர பதினொன்று அல்லது பதினொன்றரை மணிவரை கூட ஆகிவிடும்.

இத்தனை தாமதமாக வீடு திரும்பினால் வீட்டில் கவலை கொள்வார்கள்.  தவிர, கை செலவுக்கு வீட்டில் கொடுக்கும் பணம் சினிமா டிக்கட் வாங்க போதாது  (தினமும் பணம் தர மாட்டார்கள்).   ஒரு மாதம் வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி சேமித்தால், ஒருநாள் சினிமா டிக்கட்டுக்கு பணம் சேர்ந்திருக்கும்.

இந்தத் தொல்லைகளால், சினிமாவுக்காக கட்டடித்தது மிகக் குறைவு.

1982ன் பின்பகுதி என்று நினைக்கிறேன்.  அப்போது நான் படித்துக் கொண்டிருந்தது இளங்கலை வணிகம் (B.Com.,) இரண்டாம் வருடம்.

தினமும் என் நண்பன் ஆனந்துடன் 27B பஸ் படித்து, திருவல்லிக்கேணியிலிருந்து அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரி போவது வழக்கம்.

வண்டி அரும்பாக்கம் போகும் முன் குறுக்கிடும் திரையரங்குகள் ஈகா, அமைந்தக்கரை லட்சுமி (இப்போ இருக்கா?).

ஈகாவில் பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படங்களையே திரையிடுவார்கள்.  அமைந்தக்கரை லட்சுமியில், ஏற்கனவே பெரிய திரையரங்குகளில் ஓடி ஓய்ந்த படங்களையும், இரண்டாம் வரிசை நடிகர்கள், இயக்குனர்களின் புதிய படங்களையும் திரையிடுவார்கள்.

27பி பேருந்து அவ்வளவு வசதியாக ஈகா அருகில் நிற்காது.  ஆனால், லட்சுமி திரையரங்குக்கு நேர் எதிரே நிற்கும்.   லட்சுமி திரையரங்கக் கட்டணமும் ஈகாவை விட குறைவு.  எனக்கும், என் நண்பனுக்கும் மிகவும் பிடித்த விசு, மௌலி படங்கள் லட்சுமி திரையரங்கிலேயே அதிகம் திரையிடுவார்கள்.

அதனால், லட்சுமி திரையரங்கை தாண்டும்போதெல்லாம் என்ன படம் போட்டிருக்கிறார்கள் என்று நோட்டம் விடத் தவர மாட்டோம். அன்று, மௌலியின் “ஒரு வாரிசு உருவாகிறது” படம் திரையிட்டிருந்ததை பார்த்ததும், இருவர் மனதிலும் ஒரே எண்ணம்.

“போலாமா?” என்றான் ஆனந்த்.

”பணம் இல்லடா” -  நான்.

ஆனந்த் அப்போதெல்லாம் பகல் நேரத்தில்  “ஜாப் டைப்பிங்”  செய்து கொண்டிருந்தான்.அதனால், அவனிடம் பண நடமாட்டம் சற்று அதிகமாக இருக்கும். பணப்புழக்கம் அதிகம் இருக்கும்போது ஆனந்த் ஒரே சமயத்தில் குபேரனாகவும், கர்ணனாகவும் காட்சியளிப்பான்.  கண்ண பரமாத்மாவையொத்த மந்தகாச புன்னகையுடன் “பாத்துக்கலாம், வா!” என்றான்.

உடனே பேருந்தில் இருந்து இறங்கி சாலையை கடந்து எதிர் பக்கமுள்ள திரையரங்குக்கு சென்றோம்.  டிக்கெட் கொடுக்கும் இடத்தில் அத்தனைக் கூட்டம் இருக்கவில்லை.  ஐந்து ரூபாய் என்று நினைக்கிறேன், கொடுத்து இரண்டு டிக்கெட் வாங்கினான்.

”படம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருக்கேடா.  போய் ஏதாவது டிபன் சாப்பிடலாமா?” என்றான்.

தியேட்டரை ஒட்டினாற்போல் கௌரி ஷங்கர் என்கிற ஒரு ஹோட்டல்  (இப்போது இருக்கிறதா  தெரியாது) போய் வயிறு நிறைய சாப்பிட்டோம்.   பிறகு தியேட்டருக்கு போய் படம்.

கட்டடித்து விட்டு படத்துக்கு வந்துவிட்டாலும், எனக்கு உள்ளுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது.  எத்தனை நம்பிக்கையுடன் கல்லூரிக்கு அனுப்பியிருக்கிறார்கள்,  இப்படி தியேட்டருக்கு வந்து விட்டோமே என்று.

என் மன நிலைக்கேற்றார்போல், படத்தின் கதையும்.

மிகவும் கஷ்டப்பட்டு, பிரதாப் போத்தனும், ஸ்ரீப்ரியாவும் தங்கள் ஒரே மகனை படிக்க வைக்கிறார்கள்.  மகன் வளர்ந்த பின்னால் அப்பா அம்மாவின் தியாகங்களை புரிந்து கொள்வதில்லை என்பது போல் அந்த கதை செல்லும்.  அப்பா பிரதாப் மகனுக்கு பள்ளியில், கல்லூரியில் சீட் வாங்க ரொம்ப சிரமப்படுவார் என்பது போல காட்சிகள் வரும்போது கட்டடித்து அந்தப் படம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ரொம்பவும் உறுத்தல்.  ஆனால், பாதியில் எழுந்து போகாமல் முழுப்படத்தையும் பார்த்து விட்டுதான் வந்தேன்.

படம் முடிந்தாலும் மனதில் ஒரு பாரம்.  படத்தின் தாக்கத்தால், இனிமேல் கல்லூரிக்கு கட்டடிக்க கூடாதென்று மனதில் எண்ணிக்கொண்டு, பேருந்து பிடித்து வீட்டுக்கு அருகே வரும் போது மணி கிட்டத்தட்ட பதினொன்றரை ஆகி விட்டது.  தெரு திருப்பத்திலேயே, என் அம்மாவும், பாட்டியும், பக்கத்து வீட்டு மாமியும் கவலையுடன் என்னை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார்கள்.

அம்மா என்னை பார்த்து “ஏண்டா கண்ணா இவ்வளோ லேட்” என்றாள்.

ஒரு வாரிசு உருவாகிறது புகட்டிய பாடத்தால், உண்மையை சொல்லிவிடலாம் என்று “காலேஜ் கட் பண்ணிட்டு ஆனந்தோட சினிமா போயிட்டு வரேம்மா” என்றேன்.

என் அம்மா, பக்கத்து வீட்டு மாமியிடம் “ஏன் லேட்னு கேக்கறமாம்; அதுக்கு எத்தன கோவம் பாருங்கோ.  சினிமாவுக்கு போயிட்டு வரேன்னு கிண்டலா சொல்றான்”.

“நீ வாடா, சாதம்லாம் ஆறி அவலா போறது” என்றாள்.

அட இது ரொம்ப நல்லா இருக்கே! (கிளிக் பண்ணிதான் பாப்பமே – சிவகுமார் குரல்ல)

Tweet

Readers also liked

விசா கிடைச்சாச்சு (9)

ஒரு சாமானிய பிரபலம் (5)

ஹங்கேரியில் ஒரு அக்ரஹாரம் (8)

விஜய் டிவியின் சூப்பர் சுயவிளம்பரம் (0)