DigitisingThoughts » படித்ததும், பிடித்ததும்

புதிய பாதை போடும் சாதனை நாயகன்
Tweet

கமலுக்கு இன்று பிறந்தநாள்.

அவர் என் குடும்ப உறுப்பினர் இல்லையாதலால் இன்று காலை காப்பி குடித்தபடி என்.டி.டி.வி. பார்க்கும் போது கீழே ஓடிய ஸ்க்ரோல் மெசேஜ் மூலமாகத்தான் இன்று ஐம்பத்தைந்து வயதை புரட்டுகிறார் என்று தெரிந்து் கொண்டேன்.  ஐம்பத்தைந்தா என்று நம்பமுடியாத இளமையில் ஜொலிக்கும் கமலுடைய பல்லாயிரம் கமல் ரசிகர்களில் நானும் ஒருவன்.

”அம்மாவும் நீயே , அப்பாவும் நீயே” என்று தமிழ் கடவுள் முருகனை நோக்கி பாடி தன் திரைப்பட வாழ்க்கையை துவங்கிய கமல் இன்று ”கடவுள் இல்லைன்னு சொல்லல, கடவுள் இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லறேன்” என்று சிந்தனையை தூண்டும் வசனங்களை எழுதும் தூரத்துக்கு வளர்ந்து விட்டார். அவர் திரைவாழ்க்கை ஐம்பதை தாண்டிவிட்டது என்று எல்லோருக்கும் தெரியும்.

எனக்கு நினைவு தெரிந்து, கமல் என்று தெரிந்து நான் அவரை பார்க்க ஆரம்பித்து ஒரு 35 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

திருவல்லிக்கேணி ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் அவர் படித்திருக்கிறார் என்பதால் என்னைப்போல அதே பள்ளியில் படித்தவர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும்  ”எங்க ஸ்கூல்லதான் படிச்சான்” என்ற ஒரு சின்ன மார்பு உயர்த்தல், இறுமாப்பு எப்போதும் உண்டு.

1975லிருந்து 1980 வரை கமல் என்றால் எங்கள் தெருவில் இருந்த இளம்பெண்கள் நினைவுக்கு வருகிறார்கள்.  அப்போது அவர்களுக்கு இப்போதைய சாக்லேட் பாய்களான மாதவன், ஹ்ருதிக் ரோஷன் போன்றவர் கமல்.  கமல் பாடல்கள், படங்கள் தொலைக்காட்சியிலும், பட ஸ்டில்கள் பத்திரிகைகளிலும் பார்க்கும் போது அவர்கள் ஒரு மிதப்பான காதல் பார்வையில் கண்சிமிட்டினால் கமல் காணாமல் போய்விடுவோரோ என்று பார்த்துக் கொண்டிருந்தது நினைவில் நிற்கிறது. திருமணம் என்றால் கமலுடன் மட்டுமே என்று சூட்டிய மாலையுடன் காத்திருந்த திருப்பாவைகள் எங்கள் தெரு முழுக்க இருந்தார்கள்.

அவர்கள் பார்க்கும் பத்திரிகை படங்களில் (பெரும்பாலும் தினத்தந்தி வெள்ளித்திரை அல்லது ஜெமினி சினிமா) கமல் பட்டை பெல்டும், கால் பாதம் தாண்டி தரையை தேய்க்கும் பெல் பாட்டம் பேண்டும், நாய் காலர் சட்டையும் அணிந்தபடி சீனாக்கார தொங்கு மீசையும், படிக்கட்டிங் தலையுமாக ஒரு கையில் ஸ்ரீதேவியும், இன்னொரு கையில் சிகரெட் அல்லது கோப்பையுடன் காதல் பார்வை பார்த்துக் கொண்டிருப்பார்.

“என்னடி மீனாட்சி, சொன்னது என்னாச்சி” என்று அவர் தன்னைப்பார்த்துதான் கேட்கிறார் என்று எண்ணிய மீனாட்சிகள் கண்டிப்பாக தமிழகம் முழுக்க அந்த நாட்களில் இருந்திருக்கிறார்கள்.  கமல் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டபோது மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள சில இளம் பெண்கள் முயன்றதாக தினத்தந்தியில் செய்தி படித்திருக்கிறேன்.

அந்த திருமணத்துக்கு முன்பு எங்கள் திருவல்லிக்கேணி என்.கே.டி. பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவி ஒருவர் கமலுக்கு காதல் கடிதம் எழுதினார் என்றும் அதை படித்து கமல் அந்த பெண்ணை கூப்பிட்டு அறிவுரை கொடுத்தார் என்றும் உண்மையா வதந்தியா என்று தெரியாத ஒரு செய்தி கேள்விப்பட்டிருக்கிறேன்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கமல் ஸ்டைல்தான் பெண்களை தம்பக்கம் திரும்ப வைக்கும் உத்தரவாதம்.

ரஜினிக்கு முன்பே வந்துவிட்டாலும், ரஜினி விடு விடுவென்று வேகமாக தன் தனி விரைப்பு ஸ்டைலால் பெரும்பகுதி இளைஞர்களை கவர்ந்து விட்டாலும், பெண்கள் ஓட்டு கமலுக்குதான் அப்போது.  எங்களுக்கு வகுப்புகள் இல்லாத போது  முடிவில்லாமல் தொடர்ந்த நடுவர் இல்லா பட்டிமன்றம் கமலா, ரஜினியா என்பதுதான்.

அபூர்வ ராகங்கள் படம் காண்பித்த தினத்தில் அவர் நடிப்பை பார்க்க நாங்கள் ஐம்பது பைசா டிக்கெட் வாங்கி தீவுத்திடலில் கூவம், மூத்திர வாசனைகளை பொருட்படுத்தாமல் திறந்த திரையரங்கில் புழுதியில் அமர்ந்து படம் பார்க்க சென்றிருக்கிறோம்.  அதேபோல் நிழல் நிஜமாகிறது, நினைத்தாலே இனிக்கும் (இசை, நடனம், நகைச்சுவை, இவற்றுக்கு மேலாக ரஜினி மற்றும் சுஜாதா).

கமல் பாடிய பாடல்கள் அவருடைய இன்னொரு பரிமாணம்.  இப்போதும் நான் கேட்க நினைக்கும் பாடல்கள் கமல் தன் இளமையான குரலில் பாடிய “ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்”, “பன்னீர் புஷ்பங்களே” ஆகியவை.

ஒரு காலத்தில் வருடத்துக்கும் நான்கு ஐந்து படங்கள் கூட நடித்துக்கொண்டிருந்த கமல், காதல் இளவரசனாகவே காலம் தள்ளுவதற்கு பதிலாக தன் பாதையை மாற்றி இலக்கை இலக்கங்களிலிருந்து மாற்றிக் கொண்டது நாயகன் படத்துக்கு பின்னரே.

அப்படி அவர் மாற்றிக்கொண்டது தமிழ் சினிமாவுக்கு நல்லகாலம் என்று சொல்லவேண்டும்.  தன் பாதையை மாற்றிக் கொண்டதால், புதிது புதிதாக ரசிகர்களுக்கு கொடுக்க அவருடைய தேடல் தொடங்கியது.  அந்த தேடலின் விளைவால் தமிழ் சினிமாவுக்கு புதிய கதை சொல்லும் உத்திகளும், புதிய தொழில் நுட்பங்களுக்கு அறிமுகமும் கிடைத்தன என்பது மறுக்க முடியாத உண்மை.

* DTS அறிமுகமானது கமலுடைய பாசவலை படத்துக்கு பின்னரே

* தமிழ் படங்களில் க்ராபிக்ஸ் உபயோகப் படுத்தப்பட்டது விக்ரம் படத்தில்

* லைவ் சவுண்ட் எனப்படும் டப்பிங் இல்லாமல் ஒலி உபயோகித்தது ஹேராம் படத்தில்

* ஒப்பனையில் புதிய உத்திகள் “இந்தியன்”, “அவ்வை சண்முகி”

* க்ராபிக்ஸில் புதிய உத்திகள், தொழில் நுட்பம் ஆளவந்தான்

* இசையில் வெளிநாட்டு சிம்பனி கலைஞர்களை உபயோகித்தது ஹேராம்

* எல்லோரும் ஆச்சரியப்படும் வண்ணம் ஒப்பனையை நாடாமல் புத்திசாலித்தனமான உத்திகளை மட்டுமே கையாண்டு நான்கு வேடங்களை போட்டுக்காட்டியது “மைக்கேல் மதன் காமராஜன்” (ஒரு காட்சியில் மதனும், ராஜுவும் பேசிக்கொண்டிருக்க அலமாரியின் கண்ணாடியிலும் இவர்களின் இரு உருவமும் தெரியும்)

* இன்று கூட பலரையும் எப்படி என்று யோசிக்கவைக்கும் “அபூர்வ சகோதரர்கள்” குள்ள கமல் வேடம்.  இதற்கான வெள்ளோட்டம் நடந்தது புன்னகை மன்னன் படத்தில் (சூப்பர் மார்க்கெட்டில் ஒரு குழந்தையின் அழுகை நிறுத்த சூட்கேசுகளிடையே உயரமான சாப்ளின் கமல் நடந்து குள்ளமாகிக்கொண்டே போவார்).

* எந்த ஹீரோவும் செய்யத்துணியாத கதாநாயகன் கடைசிவரை தோற்கும் மகாநதி

* விருமாண்டியில் இருவர் கோணத்தில் ஒரு கதை

* மும்பை எக்ஸ்ப்ரஸ் இந்தியாவின் முதல் முழு டிஜிடல் வீடியோ கேமிராவில் எடுக்கப்பட்ட படம்

* உன்னைப்போல் ஒருவன் – முழுப்படமும் மும்பை எக்ஸ்ப்ரஸில் உபயோகிக்கப்பட்டதைவிட தேர்ந்த ரெட் ஒன் டிஜிடல் கேமிரா – தொழில் நுட்பம் முதன் முதலில் இந்தியாவில் அறிமுகம் உ.போ.ஒ.வில்.

எனக்கு தெரிந்து, நான் கேள்விப்பட்டவரை தான் சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே அதிக பட்சம் முதலீடு செய்யும் தமிழ் நடிகர்கள் கமல், பிரகாஷ் ராஜ், பார்த்திபன் ஆகியோர் மட்டுமே.

எல்லோரும் போகும் பாதையை தேர்ந்தெடுக்காமல் புதிய பாதையை போட நிறைய ஆர்வமும், தோல்வியைக் கண்டு துவளாத எக்கச்சக்கமான மன உறுதியும் வேண்டும்.  அது கமலிடம் நிறையவே இருக்கிறது.

கமல் இன்னும் சாதிக்க வேண்டியவை பல இருக்கின்றன.  அவருடைய பிறந்த நாளில் அவர் நம்பாத, நான் நம்பும் இறைவனிடம் அவருக்கு நீண்ட ஆயுளையும், மேலும் மேலும் வெற்றியையும் தர பிரார்த்திக்கிறேன்.

பதிவு பி்டித்திருந்தால் இங்கே க்ளிக்கி தமிழிஸ் தளத்தில் பிரபலமாக்குங்கள்

Tweet

Readers also liked

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் (2)

ராஜாவா, ரஹ்மானா? ராஜாவை வென்ற ரஹ்மான் (1)

சுறா – ஒரு சதி (13)

தனிமையின் கடுமை – அது ஒரு கொடுமை (4)

ராஜாவா, ரஹ்மானா? ராஜாவை வென்ற ரஹ்மான்
Tweet

ராஜாவா, ரஹ்மானா என்று இருவருடைய விசிறிகளும் விவாதித்துக் கொண்டிருக்கும் போது, ரஹ்மான் ரசிகர்களுக்கு லட்டு மாதிரி கிடைத்திருக்கிறது ரஹ்மான் பெற்றிருக்கும் ஒரு புது விருது.

இளையராஜாவின் பாடல்களோடு போட்டியிட்டு ரஹ்மானின் பாடல்கள் ஆஸ்கர் நாயகனுக்கு ஒரு புது வெற்றியை தந்திருக்கின்றன.

ஆமாம்.

ஏ.ஆர். ரஹ்மான் அமெரிக்காவில் நடத்தப்பட்ட “Grassroot Grammy” என்னும் விருதை வென்றிருக்கிறார் என்கிறது ஐ பி என் லைவ்.

ரஹ்மான் வென்றது தல அஜித் நடித்து வெற்றிகரமாக ஓடிய “காட் ஃபாதர்” படத்தின் இசைக்காக – சிறந்த இந்திய பாடல் தொகுப்பு பரிசு.   இந்த விருதுக்கான போட்டியில் இசைஞானி இளைய ராஜாவின் பாடல்களும் இருந்தன என்கிறது ஐ பி என் லைவ்.

காட் ஃபாதர் பட இசைக்காக விருது வென்ற ரஹ்மானின் ‘இன்னிசை அளபெடையே” மற்றும் “இளமை (ரீமிக்ஸ்)”  ஆகிய காட் ஃபாதர் படப் பாடல்கள் முறையே மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடங்களையும் பிடித்திருக்கின்றன.

இளையராஜாவின் ”இசைப்பயணம் – லைவ் இன் இத்தாலி” சிறந்த பாடல் தொகுப்புக்கான மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

இந்த செய்தியை படிக்க – இங்கே சுட்டுங்கள்

தமிழிஸில் ஓட்டுப்போட இங்கே அழுத்துங்கள்

Tweet

Readers also liked

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் (2)

புதிய பாதை போடும் சாதனை நாயகன் (9)

தனிமையின் கடுமை – அது ஒரு கொடுமை (4)

இனிமை பொங்க வாழ்த்துக்கள் (7)

படித்ததும், பிடித்ததும் – 0002 – பாட்டி கூட பணம் எடுக்கும் ஏடிஎம்
Tweet

ஒரு வேண்டுகோள்:

இந்த பதிவு பிடித்தவர்கள் தயவு செய்து இங்கே க்ளிக் செய்து இந்த பதிவை பிரபலமாக்குங்கள் – இது தேர்தல் நேரம், ஓட்டு கேட்டாலும், போட்டாலும் தப்பில்லை

(படித்தது – நான் படித்ததும்; பிடித்தது – எனக்கு எழுதப் பிடித்ததும்)

அதெல்லாம் தனியார் வங்கிகள் அதிகம் இல்லாத காலம்.  (1969 முதல், நரசிம்மராவ் வரை).

கொஞ்சம் நன்றாக நடக்கும் வங்கி என்றால், காங்-கை அரசு காக்கை போல கொத்தி தேசியமயமாக்கி விடும்.  அத்துடன் வாடிக்கையாளர் சேவையும். அந்த காலகஷ்டத்தில், வங்கியில் கணக்கு என்றால் பெரும்பாலோருக்கு தேசியமாயமாக்கப்பட்ட வங்கிகள்தான்.

பணம் போட வேண்டுமோ, எடுக்க வேண்டுமோ, எப்போது வங்கி திறக்கும் என்று  காத்திருந்து, வரிசையில் நின்று காசாளர் (Cashier) டீ  குடிக்கவோ, புகைக்கவோ போகாமல் இருக்கும் போது வேலையை முடிக்க வேண்டும். (”இவனுங்க எப்பவுமே இப்படிதான் சார், கவர்மண்ட் சம்பள மதர்ப்பு” – என் பின்னால் நிற்பவர்)

அதுவும் பணம் எடுக்க வேண்டுமானால் மறக்காமல் Passbook, வரைவோலை (Withdrawal Slip) அல்லது காசோலை (Cheque) எடுத்துக் கொண்டு போக வேண்டியது அவசியம். முதலில் ஒரு கணக்கரிடம் சென்று காசோலை அல்லது வரைவோலையைக் கொடுத்து, வங்கிக் கணக்குப் புத்தகத்திலும், நம் பாஸ் புத்தகத்திலும் பதிவித்த பின்னால், பித்தளையில் பழையகால தொண்டி காலணா போல இருக்கும் டோக்கன் வாங்கிக் கொண்டு காத்திருக்க வேண்டும்.

நம் எண் வரும்போது சென்று பணம் வாங்கிக் கொள்ளலாம்.  நம் எண் வருவது என்பது, பின் புலத்தில் நம்முடைய கா.வ. எவ்வளவு விரைவாக மேஜை தாவுகின்றன என்பது பொறுத்துத்தான்.  சில சமயங்களில் அடுத்த மேஜைகூட ஐந்து நிமிடம் ஆகக்கூடும்.

நம்முடைய அதிர்ஷ்டம் வங்கியிலும் விளையாடும்.  நம் முறை வரும்போதுதான் காசாளர் டீ குடிக்க எழுந்து போவார் அல்லது யாராவது நண்பருடன் பேச.  அப்போதெல்லாம், சுஜாதாவின் “தியேட்டரில் எனக்கு முன்னால் நிற்பவன்தான் குடம் குடமாய் மூ. பே.வான் என்பது நினைவுக்கு வரும்”

அந்த நாட்களிலேயே வெளிநாட்டு வங்கிகளான Citi, Standard Chartered, ANZ Grindlays ஆகியவற்றில் கணக்கு வைத்திருப்பார்களுக்கு ATM சேவை இருந்தது.  அது எனக்கு தெரிந்தது முதன் முதலில் எனக்கு கடன் அட்டை கிடைத்தபோதுதான்.

1990-92ல் நான் சிங்கப்பூர், தாய்லாந்து் சென்றிருந்தபோது, பட்டித்தொட்டியெல்லாம் அங்கே ஏடிஎம் இருப்பதை பார்த்து எப்போது நம் நாட்டுக்கு வரும் என்று ஏங்கியதுண்டு.  நான் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இந்த நாடுகளில் இருந்தபோது வங்கிக்குள் சென்றது நான்கைந்து முறைதான், அதில் ஒன்று கணக்குத் துவக்க, ஒன்று முடிக்க என்று நினைவிருக்கிறது.  மற்றபடி பணம் போட்டதோ, எடுத்ததோ தெருவோரம்தான்.

இந்திய வங்கிகளில் ஏடிஎம் சேவை மெதுவாகத்தான் ஆரம்பமானது.  தொடங்கியது தனியார் வங்கிகளில்தான்.  Global Trust, IndusInd, Vysya Bank ஆகியவைதான் முதலில் தொடங்கின என்று நினைக்கிறேன். அதற்கு பிறகு ஒன்று, இரண்டு என்று ஆரம்பித்த நம் முன்னாள் தேசிய வங்கிகள், இப்போது ஏடிஎம் எங்கும் நிறைந்த பரம்பொருள் ஆகிவிட்டது.

நான்கு எண்கள், ஒரு அட்டை, கணக்கில் பணம் இருந்தால் போதும்; எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்க முடியும்.  மூடாத வங்கிகள், தீராத சேவை.  ஏடிஎம் வந்தபின் ஜேப்படி திருடர்களின் வியாபாரம்(?) படுத்துவிட்டாதா என்று யாராவது ஆராய்ச்சி செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.  எங்களுக்கு தெரிந்த ஒரு போலீஸ் மாமாவை – நிஜமாகவே மாமாதான்; அய்யங்கார் மாமா – கேட்டுப் பார்க்க வேண்டும். (அப்படி குறைந்திருந்தால், ஜேப்படி திருடர்கள் வீடு புகுந்து கொள்ளையிடுபவர்களாகவோ, பாராளுமன்ற வேட்பாளர்களாகவோ பதவி உயர்வு பெற்றிருப்பார்கள்)

மெனு (Menu) தமிழிலும் இருப்பதால், ஏடிஎம்மில் பணம் எடுப்பது என் பாட்டிக்கும், என் மகனுடைய பாட்டிக்கும் கூட கை(!) வந்த கலையாகிவிட்டது.

ஒரே பிரச்சினை, ஒரு வங்கியின் ஏடிஎம் விட்டுஇன்னொரு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது  இணைப்புத்தடை வந்து எடுக்காத பணம் கணக்கில் இருந்து கழிவதால் வரும் தூக்கம் வரா இரவுகள்.

கடைசியாக நான் அருகில் இருக்கிறதென்று, இன்னொரு வங்கி பரம்பொருளில் பணம் எடுக்கப்போய், பணம் கக்குவதற்கு பதில், நக்கி விட்டது.  அது துப்பிய காகிதத்தை கையில் வைத்துக் கொண்டு எனது வங்கியின் தொல்லை நீக்கும் பிரிவுக்கு தொலைபேசி், பணம் என்னுடைய கணக்குக்கு திரும்பக் கிடைக்க பத்து நாட்கள் ஆயிற்று.

இந்த அனுபவம் எனக்கும், உங்களுக்கும் வந்தால் பரவாயில்லை. டென்ஷன் இல்லாமல் பென்ஷன் தள்ளிக் கொண்டிருக்கும் தள்ளாத பாட்டிக்கும், தாத்தாவுக்கும் வந்தால்?  வாடகைக்காகவோ, பள்ளிக் கட்டணத்துக்காகவோ, கடனுக்கான தவணைக்காகவோ வைத்திருக்கும் தொகை இப்படி மாட்டிக் கொண்டால், திண்டாட்டம்தான்.

இன்னொரு பிரச்சினை, நான்கே எண்கள் இருந்தாலும், அதை  மறந்து விடுவது.  (மண நாள், பிறந்தநாள் வைக்கக்கூடாது.  செக்யூரிட்டிக்காக இல்லை.  மண நாள் பணம் எடுக்கும் போதெல்லாம் மனையாளை ஞாபகம் ”படுத்தும்”;  பிறந்த நாள் பாழாய் போன வயதை).  சரியாக எண் அழுத்தாமல் அட்டை மாட்டிக்கொள்வது மற்றொரு துயரம்.

அதனால்(தான்), பழங்கால பாட்டிகள், ஏடிஎம் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை  (நிகழ்கால பாட்டிகள்  20 வருடம் முன்பு கல்லூரியில் படிச்சுஃபை, நுனிநாக்கு ஆங்கிலம் பேசிஃபை என்பதை நினைவில் கொள்க).

ஏடிஎம் துயரங்கள் நம்மை ஆட்டிவைக்கும் போது, மனம் தொண்டி காலணா டோக்கனை நினைப்பதை தடுக்க முடியவில்லை.

சுஜாதாவின் நடை

சமீபத்தில் திருவல்லிக்கேணி பாரதி சாலையில் புத்தகக் கடைக்கு சென்றிருந்தேன்.  நோக்கம் நான் இதுவரை, தவறி படிக்காமல் விட்ட சுஜாதா புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க.  சுஜாதா புத்தகங்கள், இன்றைய கல்லூரி மாணவர்களிடமும் மிகப் பிரபலம் என்பது கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்ததில் கிடைத்த மகிழ்ச்சியான தகவல்.

அருகிலேயே மாநிலக் கல்லூரி இருப்பதால், கல்லூரி விடுமுறை இல்லாத நாட்களில் இந்த கடையில் பல சுஜாதா புத்தகங்கள் இருப்பில் வைத்திருப்பார்கள்.

முன்பே சில கட்டுரைகளை படித்திருந்தாலும், தொகுப்பாக கிடைத்ததால் நான் வாங்கியது “21ம் விளிம்பு”.  அவரின் பழைய கட்டுரைகளை படிக்கும்போது, அந்த காலகட்டத்துக்கு நம்மை அழைத்துச் செல்வது சு.வின் சிறப்பு.  அவரது பல கட்டுரைகளை நான் திரும்பத் திரும்ப படிப்பது, எழுத்து நடைக்கும், எப்போதும் ஊடாடும் மெலிதான நகைச்சுவைக்கும், சிந்திக்க வைப்பதாலும்.

புத்தகத்திலிருந்து ஒரு பாரா, சுஜாதா அடாத மழையின் இம்சையை வர்ணிக்கிறார்:

“போன மாதம்தான் தண்ணீர் கஷ்டத்தில் வருண ஜபங்களையும், ஐயோடைடு விதைகளையும் முயன்று கொண்டிருந்த சென்னையில் மாதம் மும்மாரிக்குப் பதில் முப்பது மாரி பொழிந்து, “த்தா இவ்ளவ் மய யாருக்குடா வேணும்.” என்று ஜனங்கள் தத்தம் சூப்பர் மார்கெட் பாலித்தீன் பைக்குல்லாய்களில் புகார் செய்ய, வெளிப்புறப் பாக்க வாசிகள் “அமைதியான நதியினிலே ஓடம்” என்று பாடிக்கொண்டே ஆபிசுக்கு வர, சென்னை ரோடுகள் அனைத்துக்கும் அம்மை போட்டு, கொஞ்சுண்டு நீலவானம் இப்போதுதான் தெரிகிறது”

அசர வைக்கும் வார்த்தை பிரயோகம்: “மும்மாரிக்குப் பதில் முப்பது மாரி”, ”சூப்பர் மார்கெட் பாலித்தீன் பைக்குல்லாய்”, ”வெளிப்புறப் பாக்க வாசிகள்”.  நான்கு வரிகளில் இத்தனையா? சுஜாதா அதனால்தான் எழுத்து தாதா.

இதுபோல எழுத முடியும் என்றால் என் கட்டைவிரலை வெட்டித்தர தயாராக இருக்கிறேன்.  ஆள்காட்டி விரலால் ஸ்பேஸ் பார் தட்ட பழகிக்கொண்டு

ஒரு வேண்டுகோள்:

இந்த பதிவு பிடித்தவர்கள் தயவு செய்து இங்கே க்ளிக் செய்து இந்த பதிவை பிரபலமாக்குங்கள் – இது தேர்தல் நேரம், ஓட்டு கேட்டாலும், போட்டாலும் தப்பில்லை

Tweet

Readers also liked

படித்ததும், பிடித்ததும் – 0001 – தொடக்கம் (6)

சன் டிவி மூன் டிவியான கதை (8)

பகலை இரவாக்கும் விளக்குகள் (7)

மெகா சீரியல் இலக்கணம் (9)

படித்ததும், பிடித்ததும் – 0001 – தொடக்கம்
Tweet

எனக்கு தெரிந்த சில பதிவர்கள், நான்கே வரிகளில் கூட பதிவிடுகிறார்கள்.  அதை விரும்பிப் படிக்கவும் பலர் இருக்கிறார்கள்.  அந்த வகை பதிவுகள் நாட்குறிப்பு போல இருக்கின்றன.

அதை பலர் விரும்பி படிக்கக் காரணம், அடுத்தவர் வீட்டு சன்னல் வழியே எட்டிப் பார்க்கும் ஆசைதான் என்று தோன்றுகிறது.  பதிவர் நண்பராக இருப்பது, அவருடைய முந்தைய பதிவுகளால் வந்த ஈர்ப்பு இவைகூட இந்த சிறிய பதிவுகளுக்கு வரவேற்பு கிடைப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.

எனக்கும் கூட சின்ன சின்ன சிந்தனைகள் தோன்றுகின்றன.  ஓரளவு பெரிய பதிவாக எழுதும் அளவுக்கு விஷயமிருக்காது.  ஆனால், பதிக்க ஆவலாக இருக்கும்.  என்ன செய்யலாம் என்று யோசித்ததன் விளைவுதான் இந்தத் கட்டுரைத் தொடர் உபாயம்.

தொடக்கம்

நான் இந்த தொடரைத் துவங்குவதற்கு முன்னால், என்ன பெயர் இடலாம் என்று ரொம்ப யோசித்தேன்.   மிக அழகாக “கற்றதும், பெற்றதும்” என்று சுஜாதா தன் கட்டுரைத் தொடருக்கு பெயர் வைத்தது போல் ” படித்ததும், பிடித்ததும்” என்று என் தொடருக்கு பெயர் வைத்துவிட்டேன். (பெயர் சாயலுக்காக சுஜாதாவுக்கு நன்றி)

ஆகவே மகாவலை ஜனங்களே, இந்த தொடரில் நான் எழுதப்போவது நான் படித்தவைகளையும், எனக்குப் பிடித்தவைகளையும், நான் எங்கிருந்தாவது பிடித்தவைகளையும்தான்.

அடிக்கடி வாங்க, ஆதரவு தாங்க.

தலைப்பை சரியாக கவனித்தீர்களா? “படித்ததும், பிடித்ததும்” என்று போட்டு நான்கு இலக்கத்தில் தொடங்கியிருக்கிறேன்.  9999 பதிவுகள் வரை இது தாங்கும்.  ஒரு நாளைக்கு ஒரு பதிவு என்று கொண்டால் கூட, இருபத்தேழு வருடங்கள் எழுதலாம்.  ரொம்பதான் ஆசை எனக்கு.  “எல்லாம் இறைவன் செயல்” என்று கொள்ளுங்கள்.  ஏனென்றால், என் வயது இப்போது நாற்பத்து ஐந்து. இருபத்தேழு வருடம் என்றால் என் 72 வயது வரை – விடமாட்டேன் உங்களை.

சரி உள்ளே போகலாமா?

பிரசவ வேதனை

ஆ!

காலில் பட்டது

கல்லா?

தாயே!

பிரசவ வலி

எப்படிப் பொறுத்தாய்?

இது நான் ரொம்ப வருடங்களுக்கு முன் படித்த, என் உள்ளத்தில் ஒட்டிக்கொண்ட கவிதை. யார் எழுதியது, எங்கே படித்தேன் என்று மறந்து போய், சில நேரங்களில் நானே எழுதியதோ என்று கூட சந்தேகம் வருகிறது.

கிட்டத்தட்ட 30 வருடம் ஆகிவிட்டது இந்த கவிதையுடன் என் அறிமுகம் ஆகி.  நான் தான் எழுதினேன் என்றால் யாராவது மறுக்கவா போகிறார்கள்?

முதலில் இதை எழுதியவர் (நான் இதை எழுதியிராத பட்சத்தில்) இன்னும் உயிருடன் இருக்க வேண்டும்.  அவர் இணையம் உபயோகிக்கிறவராக இருக்க வேண்டும்.  அதிலும் ப்ளாக் என்னும் பெரும்பாலும் மொக்கை, சிறும்பாலும் இழுவைகளை படிப்பவராக இருக்க வேண்டும்.

அவர் எப்படியோ என் தளத்திற்கு வரவேண்டும். இந்த பதிவை படிக்க வேண்டும்.  பெரும்பாலோர் போலில்லாமல் இந்த வரிவரை படிக்க வேண்டும்.  பிறகு கவிதை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாட வேண்டும்.  அதற்கு என்னுடன் மடலாடவோ அல்லது பின்னூட்டமோ போடவேண்டும்.

அப்படி நடந்தால் நடக்கட்டும் என்று அதை சமாளிக்க தைரியமாக, இது என்னுடைய கவிதைதான் என்று சொல்லி விடுகிறேன்.  அப்படி அவர் வந்து சொந்தமும் கொண்டாடிவிட்டால்?

அவர் மடலாடினார் என்றால், இந்த அற்புதக் கவிதைக்காக அவரை பாராட்டி விடுகிறேன்.

அவர் பின்னூட்டம் போட்டாரென்றால், அப்படியாவது ஒரு பின்னூட்டம் வந்ததே என்ற மகிழ்ச்சியோடு அவருக்கு கவிதையை விட்டுக் கொடுத்துவிடுகிறேன்.

சரிதானே? கவிதைக்கு கீழே என் பெயரை போட்டுக்கொள்ளுங்கள்.  உண்மையான கவிஞர் வரும்வரை, பின்னூட்டத்தில் என்னையே பாராட்டுங்கள்.  (அதை பிற்பாடு கர்ணன் போல் அவருக்கு தானம் தந்துவிடுகிறேன்).

Tweet

Readers also liked

படித்ததும், பிடித்ததும் – 0002 – பாட்டி கூட பணம் எடுக்கும் ஏடிஎம் (3)

சன் டிவி மூன் டிவியான கதை (8)

பகலை இரவாக்கும் விளக்குகள் (7)

மெகா சீரியல் இலக்கணம் (9)