DigitisingThoughts » அனுபவம்

போடுங்கம்மா ஓட்டு…
Tweet

இந்த  நாட்டு ஓட்டர்களில் சரி பாதி, பெண்கள் ஆவர். அவர்களிலே 100-க்கு  95-பேர்கள் தற்குறிகள். இவர்களுக்கு யாருக்கு ஓட்டுப் போடுகின்றோம் என்பது  தெரியாது. யாருக்கு ஓட்டு என்றால், மரத்துக்கு, மாட்டுக்கு, குதிரைக்கு,  பூவுக்கு, வெங்காயத்துக்கு என்று இப்படித்தான் கூறுவார்களே தவிர,  இன்னாருக்கு ஓட்டுப் போடுகின்றேன், அவர் இப்படிப்பட்டவர், அவர் கொடிவழி  பட்டியல் இன்னது என்று தெரியாது.  – பெரியார் (நன்றி: தமிழச்சி, ஃபேஸ்புக்)

பார்வைக்கு பெண்ணினத்தை மட்டமாக சொன்னது போல தோன்றும் பெரியாரின் கூற்று, 100க்கு 95 சதவீதம் என்கிற விகிதாசாரத்தை தவிர்த்து, அவர் சொன்ன காலக்கட்டத்தில் மட்டுமல்ல, இன்றும் சரியாகவே இருக்கிறது.

நம் இன்றைய தலைவர்கள் பெரியாரின் சிந்தனையை நன்றாகத்தான் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

அதனால் தான், தொலைக்காட்சி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி என்று பெண்களை வசீகரித்து, மாட்டுக்கும், குதிரைக்கும், இலைக்கும், முரசுக்கும், (வெறும்) கைக்கும், சூரியனுக்கும் சுலபமாக ஓட்டு வாங்குகிறார்கள்.

சந்தேகமிருந்தால் யாருக்கு ஓட்டுப் போட போகிறீர்கள் என்று கேட்டு பாருங்கள்.

பாரம்பரியமாக எங்கள் வீட்டில் சூரியஇலை என்று கை தாமரை காட்டுவார்கள்.

Tweet

Readers also liked

தமிழக தேர்தல் எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் (4)

நல்லவேளை ரஜினி தேர்தல் பிரசாரத்துக்கு போகல… (6)

உலகநாயகனுக்கே இந்த கதியா? (12)

பாரதியார் (1)

லெவன் காஜஸ்
Tweet

முப்பது வயதை தாண்டி கொஞ்சம் குடும்பப் பொறுப்பு வந்து விட்டாலே, பழைய கதைகளை அசை போடுவது வாழ்க்கையின் தின நியதிகளில் ஒன்றாகிவிடுகிறது.

இந்த அசைபோடல் எந்த சமயத்திலும் நிகழ்கிறது.  பேப்பர் படிக்கும் பொழுதோ, காலை காஃபி குடிக்கும் பொழுதோ, குடும்பத்தினருடம் பேசும் பொழுதோ, கார் ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுதோ, விளையாடும் பொழுதோ திடீர் திடீர் என மூளை பழைய நினைவுகளை வெளிக்கொணர்ந்து அசை போட வைத்துவிடுகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் குவைத்தில் என் ஃப்ளாட் வாசலில் பக்கத்து ஃப்ளாட்டு பையன்கள் கிரிக்கெட் விளையாடினார்கள்.  வேடிக்கை பார்த்த என்னையும் ”வாங்க அங்கிள்” என்று சேர்த்துக் கொண்டார்கள்.  அவர்களோடு கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடியதில் என் சின்ன வயதில் விளையாடிய கிரிக்கெட்டும், குறிப்பாக லெவன் காஜஸும் நினைவுக்கு வந்தது.

எழுபது, எண்பதுகளில் சென்னை கிரிக்கெட் விளையாடிய எவருக்கும் “காஜி” என்கிற வார்த்தை ரொம்ப பழக்கமான ஒன்றாக இருக்கும்.  காஜி இன்னும் பழக்கத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.  ஆனால் எழுபதுகளில் எங்கள் தினசரி பேச்சில் காஜி வராமல் இருக்காது.

எந்த மொழியில் இருந்து சென்னை தமிழுக்கு வந்தது என்று அடுத்த செம்மொழி மாநாட்டில் கலைஞர் தலைமையில் வெளிநாட்டு அறிஞர் யாராவது ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்க தகுதியான பதம் இது. விக்கிபீடியாவில் சென்னைத் தமிழுக்கென ஒரு பக்கம் இருக்கிறது.  பல சென்னை பதங்களை அறிவிக்கும் இந்த பக்கத்தில் காஜி இல்லை.  மற்ற வார்த்தைகள் இருந்தாலும் காஜி இல்லாமல் இருப்பது விவேக்குக்கு கொடுத்தாலும் நாகேஷுக்கு கொடுக்காமல் விட்டுவிட்ட ”பத்மஸ்ரீ” பட்டத்துக்கு ஒப்பானது.

காஜி என்பது என்ன?

தெரு, பீச் கிரிக்கெட்டில் பேட்டிங் ஆடுவதே காஜி.  ரொம்ப நேரம் அவுட்டாகாமல் பேட்டிங் ஆடியவன் ஆடி முடித்ததும் கக்க வியர்வையுடன் “செம்ம காஜி” என்பான்.  அவன் அதிக நேரம் ஆடினான் என்ற செய்தியை மற்ற நண்பர்கள் மூலம் அறிந்தவன் அவனை பார்த்ததும் முதலில் கேட்கும் கேள்வி “என்ன மச்சி, இன்னிக்கு செம்ம காஜியா?” என்பதே.

நாங்கள் பீச், தெரு கிரிக்கெட் என்று விளையாடும் காலங்களில், எங்கள் வட்டத்தில் இருந்து அடுத்த பெரிய வட்டமான லீக் கிரிக்கெட், பள்ளி கிரிக்கெட் என்று தாவியவர்கள் எங்களுக்கு பிரபலங்கள்.  அப்படிப்பட்ட பிரபலங்கள் எஸ்.ஆர். சம்பத் (அவனுக்க்கு இப்போது ஐம்பது வயசாகியிருக்கும் என்று யோசிக்கவே முடியவில்லை), அவனுடைய அண்ணன் எஸ்.ஆர். சீனிவாசன், டெக்னிக்கலாக விளையாடுவதில் சுனீல் காவஸ்கருக்கு அருகே எங்களால் வைக்கப்பட்ட சி.பி. ஸ்ரீதர் ஆகியோர் காஜியடிக்க சும்மாவே நாங்களெல்லாம் வியர்க்க விறுவிறுக்க பந்து வீசுவோம்.

“இன்னிக்கு ரெண்டு பந்து எஸ்.ஆர். சம்பத் வெல் போல் சொன்னாண்டா” என்பது மேன் ஆஃப் த மேட்ச்சுக்கு ஒப்பானது.  அந்த பாராட்டுக்காக திருவல்லிக்கேணி குளத்தங்கரையில் அவனுக்கு நாள் முழுக்க பந்து வீசுவோம்.  எங்கள் நண்பர்களில் கொஞ்சம் சாமர்த்தியமானவர்கள் சம்பத் ரொம்ப நேரம் காஜிக்காகவே அடிக்கடி அப்படி சொல்வான் என்று சொல்வதுண்டு.  ஆனால் மேன் ஆஃப் த மேட்ச் குறிக்கோளில் இருந்த என் போன்றவர்கள் அதை சட்டை செய்யமாட்டோம்.  பல மணி நேரங்கள் ஆளுக்கு ஒரு பந்து என்று கையில் வைத்துக்கொண்டு சம்பத்துக்கும், சீனிவாசனுக்கும் காஜி கொடுப்போம்.

பீச் கிரிக்கெட்டில் ஐபிஎல் போல பிரபலமானது கோடை விடுமுறைகளில் நடக்கும் “ட்ராஃபி”.  ட்ராபி என்பதை பெரும்பாலும் நடத்தியது அப்போது திருவல்லிக்கேணி பகுதியில் தாதாவான எங்கள் பள்ளி சூப்பர் சீனியர் மாணவர் (மறைந்த) தமிழ்மணி.  ட்ராபியை நடத்தினாலும், அப்போதே லலித்மோடி போல தனக்கெனவும் தமிழ்மணி ஒரு டீம் வைத்திருந்தார்.  அந்த டீமின் முக்கிய பௌலர் இந்த பதிவின் கெஸ்ட் பதிவாளர் திருவாளர் ஆனந்த்.  ட்ராபிக்களில் விளையாடிய இன்னொரு நண்பர் மஸ்கட்டில் என்னுடன் பணிபுரிந்த லஷ்மண். இவர் நல்லதம்பி தெரு டீமுக்கு விளையாடியிருக்கிறார்.   நான் விளையாடியது குளத்தங்கரை, ஹனுமந்தராயன் கோவில் தெரு, வெங்கட்ரங்கம் பிள்ளை தெரு ஆகியவை.

விளம்பரமே இல்லாமல், வாய்மொழியாகவே தமிழ்மணி ட்ராபி தொடங்குவது எங்களுக்கு தெரியவரும்.  உடனே நாங்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு ட்ராபி எண்ட்ரி கப்பம் கட்டுவோம். வீட்டில் பணம் கொடுக்க மாட்டார்கள்; அதற்கு நாங்கள் கையாண்ட உத்தி ஹிந்து பேப்பரின் வெள்ளி, ஞாயிறு சப்ளிமெண்டுகளை உருவிவைத்து அதை மட்டுமே பழைய பேப்பர் கடையில் போட்டு சேகரிக்கும் பணம்.  அப்போதெல்லாம் பேப்பர் கனமாகவே இருக்கும், ஞாயிறு சப்ளிமெண்ட் மற்ற நாளின் முழு பேப்பர் அளவுக்கு கனம் இருக்கும்.  ஒரு மாத சப்ளிமெண்ட் நான்கைந்து நண்பர்கள் சேகரித்தால் கணிசமான பணம் கிடைக்கும்.

பணம் சேகரித்து டீமை சேர்ப்பதற்கு முன் டீமுக்கு பெயர் விவாதிப்போம்.  குளத்தங்கரை, வெ.ர.பி. தெரு டீம்களுக்கு வைத்த பெயர்கள் நினைவில் இல்லை.  ஆனால் ஹ.ரா. கோவில் தெரு டீமுக்கு புல்லட் சி.சி. என்று பெயர் வைத்தது நினைவில் இருக்கிறது.

பல மாட்சுகள் விளையாடினாலும், தமிழ்மணி டீமுக்கு எதிராக மற்ற வலிமை குறைந்த டீம்கள் விளையாடிய மாட்ச்களுக்கு என்று ஒரு தனி விதி உண்டு.  அதில் டாஸ் கிடையாது.  ஒரு உடன்படிக்கை போல முதலிலேயே “டேய் நாங்கதான் பேட்டிங், நாங்க ஒரு இன்னிங்ஸ் ஆடிவிட்டு நீங்க ரெண்டு இன்னிங்ஸ் காஜடிச்சுக்கோங்க” என்று விடுவார்கள்.  அவர்களிடம் வேறு ரூல்ஸ் பேச முடியாததால், முதல் இன்னிங்ஸ் தமிழ்மணி டீம் விளையாடி போலிங் சிறுவர்களுக்கு தண்ணி காட்டுவார்கள். மூன்று நாள் இரண்டு இன்னிங்ஸ் என்ற கணக்கில் விளையாடிய இந்த மாட்சுகளில் ஒரு நாள் முழுக்க தமிழ்மணி டீம் விளையாடி ஒரு இன்னிங்ஸ்லேயே நல்ல காஜி அடிப்பார்கள்.  பின்னர் ஒரு முக்கால் மணி நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் போல புயல் வேக பந்து வீசி, ஷார்ட் லெக், ஸ்லிப் எல்லாம் வைத்து எங்களை இரண்டு இன்னிங்ஸும் சுருட்டுவார்கள் ஒன்றரை நாளுக்கும் குறைவாகவே மாட்ச் முடிந்துவிடும்.

இது போன்ற மாட்சுகளில் அதிகம் காஜி கிடைக்காது என்பதால், நன்றாக காஜடிக்க என்று நானும் என் தம்பி முரளியும் வடிவமைத்த கிரிக்கெட்தான் “லெவன் காஜஸ்”.  இந்த லெவன் காஜஸ் நானும் அவனும் மட்டுமே விளையாடுவோம்.

ஆட்டக்களம் எங்கள் வீட்டின் நடை.  மிக நீளமாக இருந்த வீட்டுக்கு இரண்டு நுழைவாயில்கள் இருந்தன.  அதன் சவுகரியத்தால் நாங்கள் ஒரு நுழைவாயிலை முழுவதும் அடைத்து சாக்பீஸ் கொண்டு கதவில் ”போல்டு” வரைந்து விளையாடுவோம்.  பேட்ஸ்மனுக்கு அருகில் சுவரின் மூலையில் ஒரு ஸ்டுல் வைத்து அதில் ஸ்கோர் புத்தகம்.

லெவன் காஜஸ் இரண்டு டீம்களுக்கு இடையே நடக்கும். நான் ஒரு டீமும் என் தம்பி ஒரு டீமும் எடுத்துக்கொள்வோம். இதில் ரஞ்சி டீம்கள், டெஸ்ட் டீம்கள் தவிர போர்ட் ப்ரெசிடண்ட் லெவன் என்று எது வேண்டுமானாலும் இருக்கும்.  தமிழ்நாடு – கர்நாடகா, வெஸ்ட் இன்டீஸ் – இந்தியா, இங்கிலாந்து – இந்தியா, வட மண்டலம் – தென் மண்டலம் என்று சீசனுக்கு தகுந்த மாதிரி ஆடுவோம்.

இருவரும் டீம் செலக்ட் செய்யும் போது தற்போதைய ஆட்டக்காரர்கள் – டீம் என்று பார்க்காமல் பிடித்த ஆட்டக்காரர்கள் என்று தேர்வு செய்வோம்.  அதிலும் இந்திய டீம் செலக்ட் செய்யும்போது தாய் மண் பாசத்தால், செலக்‌ஷன் கமிட்டி அதிகம் பாராமுகம் காட்டிய தமிழ்நாடு வீரர்களை தேர்வு செய்து விடுவோம்.  ஸ்ரீகாந்த், வெங்கட்ராகவன், பரத் ரெட்டி, எஸ்.வாசுதேவன், எம். செந்தில்நாதன் போன்ற தமிழக வீரர்கள் எங்கள் இந்திய அணியில் எப்போதும் இருப்பார்கள்.

மாட்சுக்கு டாஸ் போட்டு பேட்டிங் ஆடும் பொழுது எங்களுக்கென்றே பிரத்யேகமான் ரூல்களும் போட்டுக்கொள்ளுவோம்.  பவுலிங் திருவல்லிக்கேணியில் மிகவும் பிரபலமான “அண்டர் ஆர்ம்ஸ்”.  லெவன் காஜஸ் பற்றி மேலே தொடர்வதற்கு முன்னால் இந்த அண்டர் ஆர்ம்ஸ் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.

எந்த இடத்திலும் சுலபமாக ஆடவே “அண்டர் ஆர்ம்ஸ்” கண்டுபிடிக்கப்பட்டது.  வாசல்கால் இடிக்கும், குதித்து போடவேண்டும் போன்ற சிரமங்கள் இல்லாத பவுலிங் முறை அண்டர் ஆர்ம்ஸ்.

போடும் பந்து முட்டிக்கு மேல் எழ வாய்ப்பு குறைவு என்பதால் எத்தனை சிறிய இடத்திலும் அண்டர் ஆர்ம்ஸ் போட்டு விளையாட முடியும்.  ஓடி வந்து போட வேண்டிய அவசியம் இல்லை என்பதும் ஒரு சிறப்பு.  இருந்த இடத்தில் இருந்தே கையையும், விரல்களையும் மட்டுமே உபயோகித்து வேகப்பந்து, பம்பர், லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின், கூக்ளி எல்லாம் போட்டுவிடலாம்.   எங்கள் அனுபவத்தில் நாலடி நீளமே இருந்த இருந்த இடத்தில் ஒரு பக்கெட்டை போல்டாக வைத்து நானும் என் தம்பி முரளியும் விளையாடியிருக்கிறோம்.

இந்த அண்டர் ஆர்ம்ஸ் பந்து வீச்சில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் திருவல்லிக்கேணியில் இருந்தார்கள்.  இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர் எங்கள் குழுவின் நிரந்தர உறுப்பினர் TAS என்று செல்லமாக அறியப்படும் டி.ஏ. சத்தியநாராயணன். என்னுடைய ஏறக்குறைய பதினைந்து வருட அண்டர் ஆர்ம்ஸ் கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு கொஞ்சம் கூட பிடிபடாத பவுலர் TAS. வருவது லெக் ஸ்பின்னா, ஆஃப் ஸ்பின்னா, ஸ்ட்ரைட் பாலா என்று கொஞ்சம்கூட கண்டுபிடிக்க முடியாதபடி கிட்டத்தட்ட இப்போதைய அஜந்தா மெண்டிஸ் போல பந்து வீசுவார். இருந்த இடத்திலேயே நடனமாடுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.  பலமுறை அவருடைய உத்திகளை கற்றுக்கொள்ள அவரிடம் கேட்டும் “ஈசிடா” என்று சொல்வாரே தவிர சொல்லித்தர மாட்டார். (இன்றுவரை அவருடைய பவுலிங் டெக்னிக் மர்மமே! இதை படித்த பிறகாவது நான் விடுமுறைக்கு சென்னை சென்றால் சொல்லித்தருவாரா என்கிற எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது)

மீண்டும் லெவன் காஜஸ்.

ஆட்டக்காரர்கள் தேர்வு சொன்னேன் இல்லையா? டாஸ் போட்டு மேட்ச் துவங்கியபின் நாங்கள் அமைத்த ரூல் படி, முதல் எட்டு ஓவர்கள் வேக பந்து வீச்சு அனுமதி உண்டு. அதற்கு பிறகு ஸ்பின் பவுலிங் மட்டுமே.  பவுலிங் யார் போடுகிறார்கள் என்று முன்னமே சொல்லிவிட வேண்டும்.  ஆறு பந்துகளுக்கு பிறகு வேறு பவுலர்.  யார் போடுகிறார்கள் என்று சொல்லுகிறோமோ அவருடைய திறமைக்கேற்றபடி பவுலிங் செய்யவேண்டும்.  உதாரணத்துக்கு பிஷன் சிங் பேடி பவுலிங் செய்கிறார் என்றால் மெதுவான இடதுகை சுழல் பந்த வேண்டும்.  ரோஜர் பின்னி என்றால் மித வேகம்.  அதேபோல், பேட்டிங் செய்பவர் ரன்னுக்கேற்றபடி ஆள் மாற வேண்டும்.  கிரினீட்ஜ் விளையாடி ஒரு ரன் எடுத்தபின் பந்தை எதிர்நோக்க லாயிட் வந்தால் இடதுகை ஆட்டக்காரராக ஆட வேண்டும்.

ஆட்டக்காரர் திறமைக்கேற்பவும் விளையாட்டு நுட்பத்தை மாற்ற வேண்டும்.  கபில்தேவ், ஸ்ரீகாந்த் என்றால் ஒட்டி (டிஃபென்ஸ்) ஆடக்கூடாது. காவஸ்கர் ஆடலாம்.  நீளமான நடையில் போல்டு செய்த கதவு தவிர இன்னும் இரண்டு வாயில் கதவுகள் இருந்தன.  ஒவ்வொன்றை தாண்டினாலும் ஒரு ரன் கணக்கு.  அதை தாண்டி ஒரு மாடிப்படி இருக்கும். அதன் கைப்பிடியை தாண்டினால் நான்கு.  முழுதாக தாண்டினால் ஆறு.  ஆனால் நாலும், ஆறும் முதலில் பவுலரை பந்து தாண்டினாலே சாத்தியம் ஆகும். ஆறு அடிக்க பவுலரின் தலைக்கு அடிக்காவிட்டால் பவுலரிடமே கேட்ச் அவுட் ஆகிவிட வேண்டியதுதான்.  ஒவ்வொரு ரன்னுக்கு பிறகும் பேட்ஸ்மேனே திரும்பி ஸ்டுல் மேல் வைக்கப்பட்ட ஸ்கோர் புத்தகத்தில் ரன்னை பதிவு செய்ய வேண்டும்.

எந்த மேட்சுக்கும் நேரமோ, ஓவரோ வரையரை கிடையாது.  மேட்ச் முடியும்வரை விளையாடுவோம்.  சில மாட்சுகள் வார இறுதியில் மட்டும் விளையாடி, விட்ட இடத்தில் துவக்கி ஒரு மாதம் கூட விளையாடியிருக்கிறோம்.  சில மாட்சுகள் இடையில் அபாண்ட சண்டை வந்து அபாண்டன் ஆகியிருக்கின்றன.  சில அபாண்டன் ஆன மேட்சுகளை சமாதான உடன்படிக்கைக்கு பின் திரும்பவும் தொடர்ந்து ஆடியிருக்கிறோம்.

இந்த மாட்சுகளில், எங்களுக்கு பிடித்த ஆட்டக்காரர்கள் ஆடுகையில் தனிக் கவனம் கொண்டு விக்கெட் கொடுக்காமல் ஆடி ரன் குவித்திருக்கிறோம். இப்படி ஆடியதில் வெங்கட், ஸ்ரீகாந்த், கபில்தேவ் போன்றவர்களை சென்சுரி, டபிள் சென்சுரியும் அடிக்க வைத்திருக்கிறோம்.

சில சமயம் நாங்கள் அடித்த ஃபோர்களும், சிக்சர்களும், சண்டை நேரங்களில் பேட்டாக பயன்பெற்ற பரீட்சை அட்டைகளும் குடித்தனக்காரர்களை தாக்கியிருக்கின்றன.  ஆனாலும், நட்பு, சகஜ பாவத்தால் அவர்கள் அதை பெரிதாக்கியதில்லை.

இப்பொதைய ஃப்ளாட் கல்சரில், அசோசியேஷன் கட்டுப்பாடுகளில் வீட்டுக்குள் கிரிக்கெட் வழக்கொழிந்து விட்டது.  தெருக்களிலும், பீச்சிலும், பெரிய க்ரவுண்டில் இரண்டு பக்கம் விக்கெட், பாதுகாப்பு கவசங்களுடன் வெள்ளை சீருடை அணிந்து பல மேட்சுகள் ஆடியிருந்தாலும் இந்த லெவன் காஜஸ் கொடுத்த சந்தோஷத்துக்கு இணையில்லை.

Headline photo courtesy http://chennaidailyfoto.wordpress.com – please do check out the original photo post

Tweet

Readers also liked

கிடைக்காத நூறு (4)

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் (2)

ஹையா…என் பொண்டாட்டி வலையில விழுந்துட்டா… (1)

புதிய பாதை போடும் சாதனை நாயகன் (9)

சந்தோஷம் பிறந்த நாள்
Tweet

அது 1981-ஆம் வருடம்.  கூட்டல் இரண்டு முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்திருந்தேன்.  அப்போது கூட மதிப்பில்லாத 810 எண்களே கூ.இ.யில் பெற்றிருந்ததால், மிகவும் பிரயத்தனத்துக்கு பிறகு பி.காம். படிக்க மாலைக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்திருந்தது.

மாலை 6 முதல் 8.30 வரை கல்லூரி. புதிய பேண்ட், சட்டை போட்டுக் கொண்டு கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் பயம், கலக்கம், தயக்கம் இவற்றையும் சுமந்து கொண்டு, “ரேகிங் இருக்குமோ?” என்ற கேள்வியும் ”ஈவினிங் காலேஜ் ஆச்சே, வயசானவங்க, ஆபீஸ் போறவங்கதான் வருவாங்க, அவுங்க ரேகிங் செய்ய மாட்டாங்க” என்ற சமாதான பதிலும் மனதுக்குள்ளேயே கேட்டுக்கொண்டு மெதுவாக நடந்து இன்னும் பாரதி பெயர் வைக்கப்படாத பைக்கிராப்ட்ஸ் சாலையில் இருந்த 27பி பஸ் ஸ்டாப் வந்தேன்.

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வந்த 27பி பஸ்ஸில் என்னுடன் ஒல்லியாக, ஒடிந்து விழுவான் போல இன்னொரு பையனும் (எங்கேயோ பார்த்திருக்கிறேனே?) ஏறினான்.  நான் கல்லூரி ஸ்டாப்பில் இறங்கியபோது அந்த ஒல்லி பையனும் இறங்கி எனக்கு முன்னால் விடு விடென்று நெடுக நீண்டு உள்ளே போன கல்லூரி சாலையில் எனக்கு முன்னால் வேகமாக நடந்து போனான்.

அடுத்த நாள் பஸ் ஸ்டாப்பில் போய் நின்றபோது அவனும் நின்று கொண்டிருந்தான்.  அவனுடன் இன்னும் இருவர் (கல்லூரி திறந்த அன்று மட்டம் போட்டிருப்பார்களோ?) நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும் போல தோன்றியது, ஆனால் தயக்கம்.

அடுத்த நாளும் அதே கதை. அவர்களும் இன்னும் என்னை ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்ள தயாராகவில்லை போல தோன்றியது. ஆனால் ஒரு இரண்டு அடி தள்ளி அவர்கள் நிற்கும் இடத்துக்கு கொஞ்சம் அருகில் சென்று அவர்கள் சிரித்து பேசுவதை கேட்டேன்.

நான்காவது நாள் எல்லோருமே ஏதோ தீர்மானித்துவிட்டு வந்ததுபோல் ஒருவரை பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டோம். “27பி போய்டுச்சா?”, “இல்லம்மா, இன்னும் வரல”.  இப்போது அவர்களுக்கு மிக அருகில் சென்றுவிட்டேன்.  அதற்கு பிறகு ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டு, ஒல்லி பையன் இரண்டாம் வருடம் படிப்பவன், அவனுடன் பேசிக்கொண்டிருந்தவன் கல்லூரியில் படித்தாலும் படிக்காதவன் எல்லாம் தெரிந்து கொண்டு, தினமும் பஸ்ஸில் அருகருகே உட்கார்ந்து கொண்டு, ஒன்றாக காலேஜ் கட் செய்து அமைந்தக்கரை லட்சுமி, ஈகா, பழனியப்பாவில் ஈவினிங் ஷோ பார்த்துக் கொண்டு கல்லூரி கழித்தாலும், ஒல்லிப்பையன் மட்டும் கொஞ்சம் வித்தியாசமானவனாக இருந்தான்.

கூடிய சீக்கிரமே அவன் காலேஜ் படிப்பது தவிர ஜாப் டைப்பிங்கும் செய்கிறான் என்று தெரிந்து கொண்டேன். அடுத்த சில நாட்களில் அவன் சி.ஏ. படிப்பதற்கு நுழைவு தேர்வுக்கும் படிக்கிறான் என்று தெரிந்து கொண்டேன்.  எனக்கும் சி.ஏ. ஆசை இருந்ததால், நுழைவு தேர்வு நுணுக்கங்கள், கோச்சிங் க்ளாஸ் விவரங்களை கேட்கப்போக ”அதெல்லாம் வேணாம், நான் ஒனக்கு சொல்லித்தரேன், நான் கோச்சிங் க்ளாஸ் போய் ஃபெயில் ஆகி சொந்தமா படிச்சு பாஸ் பண்ணியிருக்கேன்” என்றான்.

”லாஜிக்கும், மேத்ஸும் நான் சொல்லித்தரேன், இங்கிலீஷ், அக்கவுண்ட்ஸ், எகனாமிக்ஸ் நீ படிச்சுக்கலாம்.  லாஜிக் புக் எங்கிட்ட இருக்கு, மத்த புஸ்தகம் பாரகன்ல வாங்கிக்கோ” என்று மளமளவென்று புது சி.ஏ. புகுவிழா நடத்திவிட்டான்.

ஓரிரு நாட்களிலேயே அவன் வீட்டில் எனக்கு வகுப்பு துவங்கியது.  அதிகமாக புத்தகத்தை பார்க்காமல், எனக்கு அவன் சொல்லிக்கொடுத்த லாஜிக்குக்கு நன்றி சொல்லாவிட்டால் நான் இன்று எக்சல்லில் எழுதும் நெஸ்டட் இஃப் தென் எல்ஸ் ஸ்டேட்மண்ட்கள் பலிக்காமல் போய் விடும்.

அவன் கொடுத்த ஊக்கத்தில் சி.ஏ. எண்ட்ரென்ஸ் எழுதி அவன் சொல்லிக்கொடுத்த பாடங்களில் நன்றாக மதிப்பெண்கள் வாங்கினாலும், பாழாய்போனா பொருளாதாரத்தால் மொத்த மதிப்பெண்கள் பாஸ் மதிப்புக்கு குறைவாக வந்து என் சி.ஏ. கனவை ஆறு மாதம் தள்ளிப்போட்டது; ஆனால் எங்கள் நட்பு இறுகிப்போனது.

அதற்கு பிறகு அவன் சி.ஏ.வுக்கு ட்ரெயினிங் எடுத்த அதே ஆடிட்டர் ஆபீசில் நானும் சேர்ந்ததும் இன்னும் நட்பு கூடி எங்கள் வீட்டில் நான் இருப்பதைவிட அவன் வீட்டில் அதிகம் இருப்பதாக ஆனது. அந்த நாட்களில் அவனிடம் இருந்தது ஒரு சைக்கிள் மட்டுமே.  அதிலேயே என்னை பின்னால் ஏற்றி அந்த ஒல்லி உடம்பில் இத்தனை சக்தியா என்று ஆச்சரியப்படவைத்து ஆபீஸ் முதல் கடலை போட, சாப்பிட பீச் வரை கூட்டிப்போவான்.  அந்த சைக்கிளுடைய பின்னஞ்சீட்டு நான் உட்காராத போது காதல் தோல்வி போல் உணர்ந்திருக்கும் என்று தோன்றுகிறது.

அவன் வீட்டுக்கு போகும்போதெல்லாம் அவனுடைய சுத்தமும், எதையும் தேட வேண்டிய அவசியம் எப்போதுமே ஏற்படாமல் நேர்த்தியாக அவனுடைய புத்தகங்களையும், இதர பொருட்களையும் வைத்திருந்ததும் என்னை பிரமிக்க வைக்கும்.

இந்த நல்ல நட்பினூடே சண்டையும் வந்து கொஞ்ச காலம் பேசாமல் இருந்திருக்கிறோம். ஆனாலும், அந்த சமயங்களிலும், நான் அவன் வீட்டுக்கு செல்வதை, அங்கே படிப்பதை நிறுத்தவில்லை.  அவனும் வராதே என்று சொன்னதில்லை.

நகைச்சுவையாக பேசுவதிலும், எந்த ஒரு விஷயத்தையும் மிக அழகாக விவ்ரிப்பதிலும் அவனுக்கு நிகர் அவனே.

நான் அவனுக்கு கொஞ்சம் பின்னால் சி.ஏ. சேர்ந்தாலும் இருவரும் ஒரே சமயத்திலேயே சி.ஏ. முடித்தோம்.  நான் சி.ஏ. முடித்ததில் அவனுக்கு பெரும் பங்கு இருக்கிறது.  இறுதித் தேர்வின் போது ஒவ்வொரு தேர்வுக்கும் முன்னால் என்னை தேர்வுக்கு தயார் செய்தது அவன்தான்.  அதிகம் படிக்க நேரம் இல்லாத நிலையில் இருந்த எனக்கு, இரண்டு மூன்று வருடங்களின் கேள்வித்தாள்களை வைத்துக் கொண்டு மிக முக்கியமாக படித்துக் கொண்டு போகவேண்டியதை எடுத்துக்காட்டி என்னை தேர்வில் “எதிர்பாராத வெற்றி” பெற வைத்தவன் அவனே.

எனக்கும் அவனுக்கும் ஒரே வருடத்தில் (இரண்டு மாத வித்தியாசத்தில்) திருமணம் நடந்தது.  எனக்கும் அவனுக்கும் ஒரே மாதத்தில் குழந்தைகள் (ஏழுநாள், ஒரு குழந்தை வித்தியாசத்தில்) பிறந்தன; அவனுக்கு இரட்டை!

எனக்கும் அவனுக்கும் இருக்கும் நட்புக்கு இப்போது இருபத்தைந்து வயதுக்கும் மேலாகிறது.  அவனிடம் அப்போதும் இப்போதும் நான் வியப்பது உண்மையாகவே “உடுக்கை இழந்தவன் கை போலே இடுக்கண் களைய” நிற்கும் அவன் குணம்.

விருந்தோம்பலிலும் அவனுக்கு நிகர் அவனே.  நண்பர்களை உபசரிப்பதை பார்த்திருப்பீர்கள்.  நண்பனின் நண்பனை? நண்பனின் நண்பனின் நண்பனை? கேட்டாலும் உதவுபவர்கள் இல்லாத லோகத்தில் கேட்காமலே உதவும் தனிப்பிறவி அவன்.

அவன் வேறு யாருமில்லை; என்னுடைய உயிர் நண்பன் என்று நான் என்றும் பெருமையாக சொல்ல விரும்பும், என் இரண்டாவது மகனின் பெயரில் பாதியாக நான் வைத்திருக்கும், அலுவலகத்திலும், நண்பர் வட்டாரத்திலும் டி.பி. என்று அறியப்படும், இந்த வலையில் நான் எழுதாதபோது எழுதி, வராதவர்களையும் வலைக்கு இழுத்து வரும், எங்கள் நண்பி மாயாவால் ”சந்தோஷம்” என்று செல்லமாக அறியப்படும்,  என் நண்பன் டி.பி. ஆனந்த்.

இன்று பிறந்தநாள் கொண்டாடுவது கலைஞர் மட்டுமில்லை, இந்த வலைஞரும்தான்.

ஆனந்த்! உன்னுடன் பழகும் எல்லோர் மனதையும் மகிழ்விக்கும் உனக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Tweet

Readers also liked

அறுபதுகளின் அனுகூலம் (7)

கணினியில் இந்திய ரூபாய் எழுத்துரு உபயோகிக்க… (5)

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் (2)

சுறா – ஒரு சதி (13)

சுறா – ஒரு சதி
Tweet

விஜய் இருக்கும் (நடித்த என்று எழுதினால், சும்மாச்சி எழுதாதே என்று உம்மாச்சி கோச்சுப்பார்) சுறா வெளி வந்து வெற்றிகரமான சில நாட்கள் ஆகின்றன. வெற்றிகரமான! என்று ஆச்சரியக்குறி தலைக்கு மேல் போட்டுக்கொண்டு கேட்பவர்களுக்கு: ”நான் படத்தின் வெற்றியை பற்றி சொல்லவில்லை, படம் பார்க்காமல் சில நாட்கள் கழிந்ததையே வெற்றிகரம் என்கிறேன்.

வழக்கம்போல நெட் நெடுக சுறாவை கிழித்து கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள்.

ஓரளவு திறமையும், நிறைய வாய்ப்பும், ஏராளமான ரசிகர் கூட்டமும் இருக்கும் விஜய் ஏன்  அலுப்புத்தட்டும் படியாக ஒரே மாதிரியான படங்களில் நடிக்கிறார் என்பது எனக்கும், இன்னும் பல தமிழ் சினிமா பார்வலர்களுக்கும் புரியாத புதிர்.

அவரது ஆரம்ப காலங்களில், விஜய் ஓரளவு நல்ல கதை கொண்ட படங்களிலேயே நடித்தார்.  காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, ஃப்ரெண்ட்ஸ் போன்ற படங்கள் விஜயின் சினிமா வாழ்க்கையின் மைல் கற்கள்.  அவையே அவருக்கு இத்தனை நாட்கள் சினிமா உலகில் நிலைத்து நிற்பதற்கான பலமான அஸ்திவாரத்தை போட்டவை.

திரையில் கொஞ்சமாவது வெற்றி பெற்ற கதாநாயகர்கள் எவரும், ஏ ப்ள்ஸ் பி ஹோல் ஸ்கையர் ஈக்வல்ஸ் டு ஏ ஸ்கொயர் ப்ளஸ் ப்ளஸ் டூ ஏபி ப்ளஸ் பி ஸ்கொயர் என்று ஒரே ஃபார்முலாவை வைத்துக்கொண்டு  நடித்ததில்லை.  பசு நேசன், கேப்டன் போன்றவர்கள் கூட, குறைந்தபட்சம் ஏ,பிக்கு பதிலாக எக்ஸ், ஒய் என்று மாற்றி நடித்தார்கள்.  அது அவர்களுக்கு தொடர்ச்சியான தோல்வி வராமல் தவிர்க்க உதவியது.

ஒரு பத்து படங்களுக்கு முன், சில விஜய் படங்கள் தொடர்ந்து விழுந்தன.  அவ்வளவுதான், விஜய் க்ளோஸ் என்பது போன்ற நிலையில் வெளிவந்த படம் திருமலை.  திருமலை பெற்ற வெற்றி யாரும் எதிர்பாராதது என்பது என் கணிப்பு.  அதுவரை சண்டை, காதல், நகைச்சுவை என்று மாறி மாறி நடித்துவந்த விஜயை ரஜினி நடைக்கு மாற்றியது திருமலை.  அவர் முதன் முதலில் காமிராவை பார்த்து பஞ்சடிக்க ஆரம்பித்தது திருமலையில்தான் (”யார்ரா தல இங்க?”).

திருமலைக்கு பின் வந்த படங்களில் விறுவிறுப்பான கதை சொல்லலால் கில்லி வென்றது.  அதிரடி பாடல், பா. காட்சியமைப்பால் (என்னை பொறுத்தவரை) திருப்பாச்சி வென்றது.

இந்த வெற்றிகளால் கிடைத்த உயரத்தை வைத்துக்கொண்டு விஜய் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேடி தன்னை இன்னும் உயர்த்திக் கொண்டிருக்கலாம்.  ஆனால்,  புலியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனை போல, தன்னை சின்ன ரஜினியாக நினைத்துக் கொண்டு கேமிராவை பார்த்து சொல்லும் வசனங்கள், தற்புகழ்ச்சிப் பாடல்கள், போடா, வாடா என்று மரியாதையில்லாத வார்த்தைகளுடன் ஊருக்கு உபதேச வேகநடை பாடல்கள் என்று ஒரு மசாலா நெடியனாக்கிக் கொண்டார்.

எண்டர்டெயினிங் ஹீரோ என்பதற்கும் மசாலா ஹீரோ என்பதற்கும் வித்தியாசம் என்ன என்பதை ரஜினியிடமிருந்து கற்கவில்லை என்பது உ.கை.நெ.க.

நம் போன்ற பார்வையாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும் தெரிந்தது, இதையே தொழிலாக கொண்ட விஜய் போன்றவர்களுக்கு தெரியாமலா இருக்கும்? கண்டிப்பாக தெரி்ந்திருக்கும்.

இருந்தும், மீண்டும் மீண்டும் குருவி, வேட்டைக்காரன், சுறா என்று விஜய் குப்பை போடுவதில் ஏதோ சதி இருப்பதாக தோன்றுகிறது.

கொஞ்ச காலமாக விஜய் அரசியலுக்கு வருவது போன்ற ஒரு பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறார். விஜய் அரசியலுக்கு வருவதை – ஒரு தளபதியால் இன்னொரு தளபதியின் எதிர்காலத்துக்கு பாதிப்பு என்பதால்- திமுக விரும்பவில்லை என்று கொள்ளலாம்.

ஆக விஜய் தொடர்ந்து படங்களில் குப்பை கொட்டுவது, அவர் அரசியலில் குப்பை கொட்டுவதைவிட நல்லது என்று திமுக நினைக்கலாம்.  விஜய்யை தொடர்ந்து குப்பை படங்களில் நடிக்க வைத்தால் அவருடைய ஆதரவு வங்கியையும் குறைக்க முடியும் என்பது கூடுதல் நன்மை.

விஜய் அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிக்காவிட்டாலும், தமிழகம் முழுக்க பார்த்தால் ஒரு 10 லட்சம் வாக்குகளாவது வாங்க முடியும் என்று தோன்றுகிறது. இப்போது ஓட்டு விற்கும் விலையில், இந்த பத்து லட்சம் வாக்குகளை வாங்க ஒரு தேர்தலுக்கு குறைந்த பட்சம் ரூ.250 கோடி செலவாகக்கூடும். அதற்கு மேலாக அவர் எதிர்கட்சிகளோடு கூட்டு சேர்ந்து குடியை கெடுக்கும் வாய்ப்பும் உண்டு.

இந்த சேதத்தை லாபகரமாக தவிர்க்கும் வழி இவருடைய படங்களை ஏகபோகமாக தயாரித்தோ வெளியிட்டோ அவர் மேலும் மேலும் இது போன்ற படங்களையே நம்ப வைப்பது. ஒரு படம் தயாரிக்க பத்து முதல்  பதினைந்து கோடி வரை செலவு ஆகலாம்  என்று வைத்துக் கொள்ளலாம்.  விஜய்யின் அரசியல் வருகையின் ஆபத்தை தவிர்க்க  நினைப்பவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமே இல்லை.  பத்து படம் எடுத்து வெளியிட ஒரு படத்துக்கு ஆறு மாதம் என்று கொண்டாலும் ஆறு வருடங்கள் ஆகும்.  பட விற்பனையால் கொஞ்சம் பணமும் திரும்ப கிடைக்கும்.  ஒரே சமயத்தில் 250 கோடி ரூபாயை ஓட்டு வாங்க கொட்டுவதைவிட விஜயை தொடர்ந்து  கேவலமான படங்களில் நடிக்க வைப்பது “காஸ்ட் எஃபெக்டிவ்” என்று மீடியாவின் பலத்தை நன்றாக தெரிந்து வைத்திருக்கும் திமுகவின் திட்டமாக இருக்கக்கூடும் என்று நம்புகிறேன்.

ஆகவே ஜனங்களே, சுறாவுக்காக விஜயை குற்றம் சொல்ல வேண்டாம். இது ஒரு சதி என்பதே என் எண்ணம்.

Tweet

Readers also liked

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் (2)

புதிய பாதை போடும் சாதனை நாயகன் (9)

கணினியில் இந்திய ரூபாய் எழுத்துரு உபயோகிக்க… (5)

இனிமை பொங்க வாழ்த்துக்கள் (7)

தனிமையின் கடுமை – அது ஒரு கொடுமை
Tweet

CA. T P Anand

பழைய திரைப்பட பாடல் ஒன்று நினைவிற்கு வந்தது -

”தனிமையிலே இனிமை காண முடியுமா நள் இரவினிலே சூரியனும் தெரியுமா?”

என் அனுபவத்தில் இவை இரண்டுமே நடந்து விட்டது

நான் 1992ல் ரஷ்யா சென்றபோது ஜூலை மாதம் இரவு 12 மணிவரை சூரிய வெளிச்சத்தை பார்த்து வியந்தேன்.

வாழ்க்கையில் சில நேரங்களில் தனிமை எனக்கு இனிமை கொடுத்திருக்கிறது.

ஆக சில சமயங்களில் தனிமையிலே இனிமை காண முடியும் அதே போல சில நகரங்களில் சில சமயங்களில் நள்ளிரவிலும் சூரியன் தெரியும்.

பொதுவாக நான் தனிமையை விரும்பாதவன்.

ஆனாலும், சில சமயங்களில் தனிமை சிந்திக்க/சிந்தனைகளை விரிவாக்க உதவும்.  அந்த வகையிலே தனிமை எனக்கு பிடிக்கும்.

தனிமை ஒரு கடுமையான நிலை – அந்த நிலையை தினமும் அனுபவிப்பது மிகவும் கொடுமை

தனிமையின் வாட்டத்தில் வளைகுடா நாடுகளில் வசிக்கும் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களில் நானும் ஒருவன்.

இந்த கொடுமையில் இருந்து மீளுவதற்கு பல யுத்திகளை முயற்சித்து வருகிறேன்……தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பது; ஷாப்பிங் மால்களில் சுற்றுவது; காரில் நீண்டதூரம் செல்வது; டேப்/சீடி போட்டு பாட்டு கேட்பது;….. என் நிழலை நானே துரத்தும் கதையாக முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது…..விடை கிடைக்கவில்லை….

தி.பா. ஆன்ந்த்

துபாய்

ஏப்ரல் பதினோறாம் நாள், இரண்டாயிரத்து பத்து

(ஏப்ரல் 12 முதல் என்னுடைய தனிமையை தகர்த்து என் குடும்பம் இங்கே குவைத்தில் இருப்பதால், தனிமையும், தனிமையின் கொடுமையையும் மட்டுமில்லாமல், ஆனந்துடைய ஆர்டிகிளையும் மறந்ததற்கு வருந்தும்…

இரா. சத்தியமூர்த்தி

வீட்டின் எல்லா அறைகளிலும் தனிமை இல்லாத

குவைத் நாள் 12 மே 2010)

Tweet

Readers also liked

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் (2)

இறுதிச்சுற்று (5)

புதிய பாதை போடும் சாதனை நாயகன் (9)

ராஜாவா, ரஹ்மானா? ராஜாவை வென்ற ரஹ்மான் (1)