பாரதியார்
11 December 2011
968 views
One Comment
இன்று பாரதியார் பிறந்தநாளாம், நாட்டுப்பற்று மிக்க நல்ல நண்பர் திரு ஜி கே ஆர், பாரதியின் நினைவிழந்த தமிழரை எண்ணி விசனக்கட்டுரை இணைந்த மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அவருக்கு என்னுடைய பதில்:
அன்புள்ள அய்யா,
இது என்ன ரஜினி பிறந்தநாளா
சிறப்பாக கொண்டாட,
நினைவு கொள்ள?
இந்தியராக இருக்க பழகுங்கள்.
உங்களுக்கு ஏன் இந்த கொலவெறி?
எங்களுக்கு காந்தி என்றால் சோனியா
கவிஞர் என்றால் வைரமுத்து
தியாகி என்றால் கனிமொழி
கர்மவீரர் என்றால் கருணாநிதி
எங்களிடம் போய் பாரதி! யார்?









சுதந்திர தாகம்
———————-
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கை விடலாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
Leave your response!