கூடா நட்பின் முடிவு
4 June 2011
1,047 views
One Comment
கூடா நட்பு குடியை கெடுக்கும் என்பது பழமொழி. கூடா நட்பின் கேட்டை தன் பிறந்ததின செய்தியாக தொண்டர்களுக்கு கலைஞர் கொடுத்திருக்கிறார்.
கூடா நட்பு என்று அவர் சொன்னது தொண்டர்களுக்கு மட்டுமா? தன் குடும்பத்தினருக்கா? கூடா நட்பு என்று அவர் கருதியது காங்கிரசுடனான உறவையா?
தற்பொழுது உள்ள நிலைமையில், கூடா என்பதற்கு ”அதிகமாகாத” என்று பொழிப்புரைதான் கொள்ள வேண்டும்.
எலக்ஷனில் சீட் கூடாத, மத்திய அமைச்சரவையில் அதிகாரம் கூடாத, பொதுமக்களிடம் மதிப்பு கூடாத, காங்கிரஸ் தலைமையிடம் செல்வாக்கு கூடாத நட்பு கூடாது என்கிறார் என்று கொள்ளலாமா?
இப்படி எதுவும் கூடாத நட்பை யார் முறிக்க வேண்டும்? தொண்டர்களா? இது பாசி பிடித்த தரையை விட வழவழப்பாக இருக்கிறது.
******
எதையும் தலைல தூக்கி வெச்சுண்டு ஆடக்கூடாது! விழுந்துடும்!










ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்….
Leave your response!