Home » Headline, Movies, Tamil-தமிழ், அனுபவம்

சுறா – ஒரு சதி

21 May 2010 1,681 views 13 Comments

விஜய் இருக்கும் (நடித்த என்று எழுதினால், சும்மாச்சி எழுதாதே என்று உம்மாச்சி கோச்சுப்பார்) சுறா வெளி வந்து வெற்றிகரமான சில நாட்கள் ஆகின்றன. வெற்றிகரமான! என்று ஆச்சரியக்குறி தலைக்கு மேல் போட்டுக்கொண்டு கேட்பவர்களுக்கு: ”நான் படத்தின் வெற்றியை பற்றி சொல்லவில்லை, படம் பார்க்காமல் சில நாட்கள் கழிந்ததையே வெற்றிகரம் என்கிறேன்.

வழக்கம்போல நெட் நெடுக சுறாவை கிழித்து கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள்.

ஓரளவு திறமையும், நிறைய வாய்ப்பும், ஏராளமான ரசிகர் கூட்டமும் இருக்கும் விஜய் ஏன் அலுப்புத்தட்டும் படியாக ஒரே மாதிரியான படங்களில் நடிக்கிறார் என்பது எனக்கும், இன்னும் பல தமிழ் சினிமா பார்வலர்களுக்கும் புரியாத புதிர்.

அவரது ஆரம்ப காலங்களில், விஜய் ஓரளவு நல்ல கதை கொண்ட படங்களிலேயே நடித்தார். காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, ஃப்ரெண்ட்ஸ் போன்ற படங்கள் விஜயின் சினிமா வாழ்க்கையின் மைல் கற்கள். அவையே அவருக்கு இத்தனை நாட்கள் சினிமா உலகில் நிலைத்து நிற்பதற்கான பலமான அஸ்திவாரத்தை போட்டவை.

திரையில் கொஞ்சமாவது வெற்றி பெற்ற கதாநாயகர்கள் எவரும், ஏ ப்ள்ஸ் பி ஹோல் ஸ்கையர் ஈக்வல்ஸ் டு ஏ ஸ்கொயர் ப்ளஸ் ப்ளஸ் டூ ஏபி ப்ளஸ் பி ஸ்கொயர் என்று ஒரே ஃபார்முலாவை வைத்துக்கொண்டு  நடித்ததில்லை.  பசு நேசன், கேப்டன் போன்றவர்கள் கூட, குறைந்தபட்சம் ஏ,பிக்கு பதிலாக எக்ஸ், ஒய் என்று மாற்றி நடித்தார்கள்.  அது அவர்களுக்கு தொடர்ச்சியான தோல்வி வராமல் தவிர்க்க உதவியது.

ஒரு பத்து படங்களுக்கு முன், சில விஜய் படங்கள் தொடர்ந்து விழுந்தன.  அவ்வளவுதான், விஜய் க்ளோஸ் என்பது போன்ற நிலையில் வெளிவந்த படம் திருமலை. திருமலை பெற்ற வெற்றி யாரும் எதிர்பாராதது என்பது என் கணிப்பு. அதுவரை சண்டை, காதல், நகைச்சுவை என்று மாறி மாறி நடித்துவந்த விஜயை ரஜினி நடைக்கு மாற்றியது திருமலை. அவர் முதன் முதலில் காமிராவை பார்த்து பஞ்சடிக்க ஆரம்பித்தது திருமலையில்தான் (”யார்ரா தல இங்க?”).

திருமலைக்கு பின் வந்த படங்களில் விறுவிறுப்பான கதை சொல்லலால் கில்லி வென்றது. அதிரடி பாடல், பா. காட்சியமைப்பால் (என்னை பொறுத்தவரை) திருப்பாச்சி வென்றது.

இந்த வெற்றிகளால் கிடைத்த உயரத்தை வைத்துக்கொண்டு விஜய் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேடி தன்னை இன்னும் உயர்த்திக் கொண்டிருக்கலாம்.  ஆனால்,  புலியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனை போல, தன்னை சின்ன ரஜினியாக நினைத்துக் கொண்டு கேமிராவை பார்த்து சொல்லும் வசனங்கள், தற்புகழ்ச்சிப் பாடல்கள், போடா, வாடா என்று மரியாதையில்லாத வார்த்தைகளுடன் ஊருக்கு உபதேச வேகநடை பாடல்கள் என்று ஒரு மசாலா நெடியனாக்கிக் கொண்டார்.

எண்டர்டெயினிங் ஹீரோ என்பதற்கும் மசாலா ஹீரோ என்பதற்கும் வித்தியாசம் என்ன என்பதை ரஜினியிடமிருந்து கற்கவில்லை என்பது உ.கை.நெ.க.

நம் போன்ற பார்வையாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும் தெரிந்தது, இதையே தொழிலாக கொண்ட விஜய் போன்றவர்களுக்கு தெரியாமலா இருக்கும்? கண்டிப்பாக தெரி்ந்திருக்கும்.

இருந்தும், மீண்டும் மீண்டும் குருவி, வேட்டைக்காரன், சுறா என்று விஜய் குப்பை போடுவதில் ஏதோ சதி இருப்பதாக தோன்றுகிறது.

கொஞ்ச காலமாக விஜய் அரசியலுக்கு வருவது போன்ற ஒரு பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறார். விஜய் அரசியலுக்கு வருவதை – ஒரு தளபதியால் இன்னொரு தளபதியின் எதிர்காலத்துக்கு பாதிப்பு என்பதால்- திமுக விரும்பவில்லை என்று கொள்ளலாம்.

ஆக விஜய் தொடர்ந்து படங்களில் குப்பை கொட்டுவது, அவர் அரசியலில் குப்பை கொட்டுவதைவிட நல்லது என்று திமுக நினைக்கலாம்.  விஜய்யை தொடர்ந்து குப்பை படங்களில் நடிக்க வைத்தால் அவருடைய ஆதரவு வங்கியையும் குறைக்க முடியும் என்பது கூடுதல் நன்மை.

விஜய் அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிக்காவிட்டாலும், தமிழகம் முழுக்க பார்த்தால் ஒரு 10 லட்சம் வாக்குகளாவது வாங்க முடியும் என்று தோன்றுகிறது. இப்போது ஓட்டு விற்கும் விலையில், இந்த பத்து லட்சம் வாக்குகளை வாங்க ஒரு தேர்தலுக்கு குறைந்த பட்சம் ரூ.250 கோடி செலவாகக்கூடும். அதற்கு மேலாக அவர் எதிர்கட்சிகளோடு கூட்டு சேர்ந்து குடியை கெடுக்கும் வாய்ப்பும் உண்டு.

இந்த சேதத்தை லாபகரமாக தவிர்க்கும் வழி இவருடைய படங்களை ஏகபோகமாக தயாரித்தோ வெளியிட்டோ அவர் மேலும் மேலும் இது போன்ற படங்களையே நம்ப வைப்பது. ஒரு படம் தயாரிக்க பத்து முதல்  பதினைந்து கோடி வரை செலவு ஆகலாம் என்று வைத்துக் கொள்ளலாம்.  விஜய்யின் அரசியல் வருகையின் ஆபத்தை தவிர்க்க நினைப்பவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமே இல்லை.  பத்து படம் எடுத்து வெளியிட ஒரு படத்துக்கு ஆறு மாதம் என்று கொண்டாலும் ஆறு வருடங்கள் ஆகும்.  பட விற்பனையால் கொஞ்சம் பணமும் திரும்ப கிடைக்கும்.  ஒரே சமயத்தில் 250 கோடி ரூபாயை ஓட்டு வாங்க கொட்டுவதைவிட விஜயை தொடர்ந்து  கேவலமான படங்களில் நடிக்க வைப்பது “காஸ்ட் எஃபெக்டிவ்” என்று மீடியாவின் பலத்தை நன்றாக தெரிந்து வைத்திருக்கும் திமுகவின் திட்டமாக இருக்கக்கூடும் என்று நம்புகிறேன்.

ஆகவே ஜனங்களே, சுறாவுக்காக விஜயை குற்றம் சொல்ல வேண்டாம். இது ஒரு சதி என்பதே என் எண்ணம்.

Readers also liked

13 Comments »

  • pradeep said:

    “”ஒரே சமயத்தில் 250 கோடி ரூபாயை ஓட்டு வாங்க கொட்டுவதைவிட விஜயை தொடர்ந்து கேவலமான படங்களில் நடிக்க வைப்பது “காஸ்ட் எஃபெக்டிவ்” என்று மீடியாவின் பலத்தை நன்றாக தெரிந்து வைத்திருக்கும் திமுகவின் திட்டமாக இருக்கக்கூடும் என்று நம்புகிறேன்”".

    epadee than ipadee ellam josekerengalo ?????

  • triplicani (author) said:

    pradeep,

    நான் எழுதறதுக்கு முன்னால ந்ந்ந்ந்ந்நூறு த்தடவ யோசிப்பன், எழுதினதுக்கு பின்னால ஒர்ர்ரு த்தடவ யோசிக்க கூட முடியாது”ன்னு தெரிஞ்சவன். எல்லாம் அறிஞ்சவன். பச்ச, மஞ்ச, செகப்பு தமிழன் நான்!

  • Siva said:

    சுறா படத்தை பார்த்து விட்டு தானே ஸ்டாலின் மீனவர்களுக்கு கான்கீரிட் வீடூ கட்டி தரப்படும் என்று அறிவித்திருக்கிறார். அப்புறம் இது எப்படி விஜய்யை கவிழ்க்கும் சதியாகும்.ஆமா நீங்க எந்த விஜய்யை பற்றி எழுதியிருக்கிறீர்கள்.

  • Abraham said:

    ur very correct its well planed by Political parties, ofcourse DMK & Co.
    Vijay is mass hero and very good dancer.

  • triplicani (author) said:

    Siva,

    அப்போ அடுத்த திமுக பட்ஜெட் அடுத்த விஜய் படத்துக்கு அப்புறம் தானா?

    எந்த விஜயா?

    சிவ, சிவா… விடிய விடிய கதை கேட்டு விட்டு சீதைக்கு ராமன் சித்தப்பாங்கிற கதையாயில்ல இருக்கு?

  • Gouthaman Karunakaran said:

    அருமையான கட்டுரை.

    எனக்கு சச்சின் படம் வரை புடித்த நடிகர் என்றல் கமலையும், விஜயையும் தான் குறி இருப்பேன்.
    வேட்டைக்காரன் படத்துக்கு சென்ற பிறகு எனக்கு, டிக்கெட் வாங்கிய பணத்தை ஏழை குழந்தைகளுக்கு கொடுத்திருந்தால் புண்ணியமாவது இருந்திருக்கும் என தோன்றியது.

  • Vijayasarathy R said:

    சத்தியமூர்த்தி,

    என் யூகம் சரியென்றால், உங்களுக்கு இப்போது டாபிக் தட்டுப்பாடு அதனால் இதை போன்ற போஸ்ட் போட்டிருக்கிறீர்கள். இல்லையென்றால் உங்கள் திறமைக்கும், உங்களின் மற்ற போஸ்ட்களை பார்க்கையில், இது போன்ற ஒன்றை எழுத உங்கள் கணினி கூட ஒத்துக்கொள்ளாது.

    இருந்தும் உங்களின் எழுத்தாற்றால் வழக்கம்போல சொல்லாடலில் ஆங்காங்கே சென்னையின் மேகமூட்டம் போல.

    விஜயை இப்படி பாவம் என்றெல்லாம் சொல்லி விட்டுவிட முடியாது. இத்தனை சம்பாதித்தும் சன் கொடுப்பதை டன் டன்னாக வாங்கிப் போட்டுக்கொண்டு, விஜய் விஜய் என்று வரும் ரசிகர்களை அநியாயத்துக்கு ஏமாற்றும், தவறான நம்பிக்கைக்களை அள்ளிதெளிக்கும் விஜய்க்கு என்னை பொறுத்தவரை ஒரே நல்ல பெயர், “நம்பியவரை (சன்னை அல்ல, அட..அவர் சன்னையும் அல்ல) ஏமாற்றும் த்ரோகி”.

  • Vijayasarathy R said:

    சுயசிந்தனை இல்லாதவரா விஜய்?

    இந்தத் தளபதிக்கு பயப்படுபவர் அல்ல அந்தத் தளபதி.

  • Vijayasarathy R said:

    காதல் படங்கள் வெற்றி பெற்றபோது காதல் படங்களாகவே கொடுத்தவர். ஒரு ஃபார்முலா ஒர்க் அவுட் ஆனால, அது தன் தலையை அடித்து நொறுக்கும் வரைக்கும் விஜய் அந்த குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டுபவர் என்பது என் கருத்து.

  • Sivachezhiyan said:

    Author sir,

    Vijay Moviea parthu 100 times yosicha neenga, DMK budgetkum konjam yosichu avangalukum idea sollunga… It is easy to Advice and fortunately or unfortunately it is free boss………

    Why wait for Vijay’s next, when you are here….

    Keep writing, keep on writing like this……

    u will be blessed….

    Sivachezhiyan

  • triplicani (author) said:

    Sivachezhiyan,

    I do not know if you are a Vijay fan. But, I know for sure that you have no sense of humor.

    In any case, it is also transparent that you strongly believe that DMK makes public welfare projects after watching (of all the people) Vijay movies.

    I will surely be blessed, for I do not watch and support crap. It is unfortunate that you are not so much blessed.

  • triplicani (author) said:

    Vijayasarathy,

    உங்கள் ஊகம் தவறு. டாபிக்கலாக எழுதியிருக்கிறேனே தவிர டாபிக்கில்லாமல் எழுதவில்லை. நான் ரொம்ப நாளாக எழுதவில்லை என்பது ஒரு டாபிக் ஆஃப் கன்வர்சேஷன் ஆகக்கூடாது என்பதால், கன்வர்சேஷன் டாபிக்காக இருக்கட்டுமே என்று விஜயை வம்புக்கிழுத்திருக்கிறேன்.

  • Sundar said:

    Hi Murthy:

    I already thought this fellow Vijay is a waste. If his old movies were successful, they were all because of the directors and the story lines. When he tested his own skills (again copied ones) he is failing miserably. I think his father is the brain behind his fall. SAC is the one trying to build a political image for him and giving loose talks to media etc. He dreams that his son will make it big in politics, what Rajni has missed to. I think Ajit has huge & very strong fan base than Vijay.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.