Home » Guest Column, Headline, Tamil-தமிழ், அனுபவம்

தனிமையின் கடுமை – அது ஒரு கொடுமை

12 May 2010 1,186 views 4 Comments

CA. T P Anand

பழைய திரைப்பட பாடல் ஒன்று நினைவிற்கு வந்தது -

”தனிமையிலே இனிமை காண முடியுமா நள் இரவினிலே சூரியனும் தெரியுமா?”

என் அனுபவத்தில் இவை இரண்டுமே நடந்து விட்டது

நான் 1992ல் ரஷ்யா சென்றபோது ஜூலை மாதம் இரவு 12 மணிவரை சூரிய வெளிச்சத்தை பார்த்து வியந்தேன்.

வாழ்க்கையில் சில நேரங்களில் தனிமை எனக்கு இனிமை கொடுத்திருக்கிறது.

ஆக சில சமயங்களில் தனிமையிலே இனிமை காண முடியும் அதே போல சில நகரங்களில் சில சமயங்களில் நள்ளிரவிலும் சூரியன் தெரியும்.

பொதுவாக நான் தனிமையை விரும்பாதவன்.

ஆனாலும், சில சமயங்களில் தனிமை சிந்திக்க/சிந்தனைகளை விரிவாக்க உதவும். அந்த வகையிலே தனிமை எனக்கு பிடிக்கும்.

தனிமை ஒரு கடுமையான நிலை – அந்த நிலையை தினமும் அனுபவிப்பது மிகவும் கொடுமை

தனிமையின் வாட்டத்தில் வளைகுடா நாடுகளில் வசிக்கும் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களில் நானும் ஒருவன்.

இந்த கொடுமையில் இருந்து மீளுவதற்கு பல யுத்திகளை முயற்சித்து வருகிறேன்……தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பது; ஷாப்பிங் மால்களில் சுற்றுவது; காரில் நீண்டதூரம் செல்வது; டேப்/சீடி போட்டு பாட்டு கேட்பது;….. என் நிழலை நானே துரத்தும் கதையாக முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது…..விடை கிடைக்கவில்லை….

தி.பா. ஆன்ந்த்
துபாய்
ஏப்ரல் பதினோறாம் நாள், இரண்டாயிரத்து பத்து

(ஏப்ரல் 12 முதல் என்னுடைய தனிமையை தகர்த்து என் குடும்பம் இங்கே குவைத்தில் இருப்பதால், தனிமையும், தனிமையின் கொடுமையையும் மட்டுமில்லாமல், ஆனந்துடைய ஆர்டிகிளையும் மறந்ததற்கு வருந்தும்…

இரா. சத்தியமூர்த்தி
வீட்டின் எல்லா அறைகளிலும் தனிமை இல்லாத
குவைத் நாள் 12 மே 2010)

Readers also liked

4 Comments »

  • madurai saravanan said:

    ur not alone. v r with u .ur writing brings u near with us. so be happy.good sharing.

  • triplicane vaasi said:

    துபாயில் நான்….

    *இருப்பை எல்லம் விட்டுவிட்டு**
    **விருப்பை மட்டும் மூட்டை கட்டி**
    **மறுப்பை சொல்ல வழியில்லாமல்**
    **பொறுப்பை ஏற்று புறப்பட்டேன் நான்**…**
    **அன்னை மண்ணில்**
    **வேரறுபட்டதும்**,**
    **அன்னிய மண்ணில்- நான்**
    **வேர்ப்பட்டதும்**,**
    **விமானம் ஏற‌**
    **தீர்மானம் செய்ததால்**…**
    **அன்று அரும்பாக இருக்கையிலே**
    **ஆகாய பார்வையிலே**
    **அலைபாய்ந்த ஆசையிலே**
    **அழகாக தோன்றிய‌**
    **ஆகாய ஊர்தியும்**,**
    **அரங்கேறி போகையிலே**
    **ஆனந்த்தம் இல்லாத‌**
    **அனுபவம் ஆனது.**
    **அதில் அலங்காரம் செய்துதான்**
    **ஆகாரம் வந்தது**,**
    **ஆசைபட்டு தீர்த்திடாமல்**
    **அசை போட்டு தீர்த்துவிட்டேன்**…**
    **இறங்கும் நேரம் வந்து விட‍- அன்று**
    **இருக்கை இருந்து பார்த்தபோது- இங்கு**
    **இயற்கை என்று ஒன்றும் இல்லை**…**
    **மணல் நகரின் அனல் காட்சி**
    **இங்கு மக்கள் அல்ல மன்னர் ஆட்சி**…**
    **அன்று நிவார‌ண‌ம் தேடி வந்த‌ ந‌க‌ர‌ம்**
    **இன்று நிரந்த‌ர‌ம் ஆகிப்போன‌ ந‌க‌ர‌ம்**,**
    **நாள் ‍ விடிந்தாலும் முடிந்தாலும்**
    **ஒரே போல‌ இருக்கும்**, **
    **அட‌ அறைக்குள்ளே சிறைவைத்தால்**
    **வேறென்ன‌ இருக்கும்**…**
    **உற‌வோடு உற‌வாட‌**
    **தொலைபேசி என‌க்கு**,**
    **அதில் போன‌ காசுக்கு**
    **இங்கேது க‌ண‌க்கு**…**
    **இங்கே ம‌னைவியோடு உற‌வாடி**
    **பிள்ளை பெற‌முடியாம‌ல்**,**
    **பில்லை பெற்ற‌வ‌ர் ஆயிர‌ம்**…**
    **இள‌மையும் வேலைக்கு**
    **இரையாகி போச்சு**,**
    **கால‌மும் காசுக்கு**
    **க‌ரியாகி போச்சு**,**
    **த‌லையெல்லாம் அத‌ற்குள்ளே**
    **ந‌ரையாகி போச்சு**,**
    **காசாவ‌து மீந்த‌தா**
    **செல‌வாகி போச்சு**…**
    **வ‌ருமான‌ம் வ‌ருமுன்னே**
    **செல‌வு வ‌ந்து சேர்ந்திடும்**,**
    **வெறுமாக‌ ஊர் சென்றால்**
    **உற‌வு வ‌ந்து சேருமா**?**
    **காசுக் க‌ண‌க்குக‌ள்**
    **க‌வ‌லை த‌ருகிற‌து**,**
    **க‌ட‌ந்த‌ கால‌ம்தான்**
    **க‌ண்ணில் வ‌ருகிற‌து**…**
    **இனி இஷ்ட்ட‌ப்ப‌ட்டாலும்**,**
    **க‌ஷ்ட்ட‌ப்ப‌ட்டாலும்**,**
    **ந‌ஷ்ட்ட‌ப்ப‌ட்ட‌து திரும்பாது**…**
    **எந்நாடு சென்றாலும்**
    **என் நாடு ஆகாது**,**
    **சொர்க‌மே த‌ந்தாலும் ‍ ம‌ன‌தில்**
    **தாய் நாடு சாகாது**…*

    __,_._,___

  • T.P.Anand said:

    மிகவும் அருமையான கவிதை. உங்கள் பெயர் தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறேன்…..

  • அருணா சத்தியமூர்த்தி said:

    தனிமையை தகர்க்க இன்னும் சில யோசனைகள், உங்களுக்கு தனிமை அதிகம் தெரிவது அலுவலகம் இல்லாத நாட்களில் தான் இருக்கும். அந்த நாட்களில் உங்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கை மேம்படுத்த பயன்படுத்தலாமே. அதாவது இசை, படம் வரைதல், எழுதுவது, விளையாட்டு, உடற்பயிற்சி என்று விருப்பமான குழுமங்களில் சேர்ந்து அந்த திறமையை அதிகப்படுத்திக் கொள்வதின் மூலம் தன்னம்பிக்கையும் கூடும், தனிமையும் மறையும்.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.