ஹையா…என் பொண்டாட்டி வலையில விழுந்துட்டா…
அக்னி நட்சத்திர ஹேங்க் ஓவரில் மேலே தொடருபவர்களுக்கு: இது எனக்கு ரொம்பத் தெரிந்த திருமுகத்தின் புதுமுகத்தை அறிமுகப் படுத்தும் பதிவு. ஜனகராஜ் மேட்டரெல்லாம் இல்லை.
நான் எழுதி எழுதி படி, படியென்று படுத்தியதில், கரண்டியை கீழே போட்டுவிட்டு என் ஹொவ்ஸ் வைஃப் (ஆபீஸ்ல வேற இருக்கான்னு கேக்காதீங்க) மௌவ்ஸ் பிடித்து உனக்கு மட்டும் தான் எழுதத் தெரியுமா? சவால் விட்டு வளையோசையுடன் வலையோசை போட ஆரம்பித்துவிட்டாள்.
மனையாளின் வலைமனை படம் கீழே (படத்தின் மேல் தட்டினால் வலையில் விழுவீர்கள்):
என்னுடைய வலைமனைக்கு, நான் எழுதியிட்டாலும், எழுதாவிட்டாலும் கொடுத்துவரும் பேராதரவை என் மனைவியின் வலைமனைக்கும் கொடுத்து இருபது வருடம் கடந்த எங்கள் திருமண வாழ்வு அறுபது வருடம் காணவைக்க வேண்டுகிறேன்.
அதே சமயம், கமெண்ட் என்ற பெயரில் பற்றவைக்காமலும் இருக்க வேண்டுகிறேன்.










அசத்தபோவது யாரு ! ! !
இதுவரை அசத்தப் போவது யாருனு ஒரு போட்டியின்றி களித்து வந்தீர்கள் ! !
இனி அசத்தப்போவது வளையோசை தானோ ! ! !
ஆரம்பமே அமர்க்களமாய் ஸ்ரீராமன் துனையோடு ஆரம்பித்து பித்து பிடிக்க வைத்துவிட்டார் ! ! !
எங்களின் ஆதரவு எப்போதும் பெண்களுக்கே ! ! !
Leave your response!