Home » Headline, Tamil-தமிழ்

தா தா தா

27 February 2010 1,541 views 15 Comments

இலக்கண அறிவு தா!

சிந்தனை வளம் தா!

நகைச்சுவை உணர்ச்சி தா!

சொல்லாட்சி தா!

கற்பனை தா!

விரிந்த அறிவு தா!

நிறைய படிக்க தாகம் தா!

ரசிப்பு தா!

கவனம் தா!

ஆர்வம் தா!

இரந்தாலும் படிக்கின்ற நிலை தா!

இறந்தாலும், இருக்கின்ற நிலை தா!

சுஜாதா


Readers also liked

15 Comments »

  • TechShankar @ டெக்‌ஷங்கர் said:

    பகிர்வுக்கு நன்றி.

    உங்கள் இந்த பதிவை
    இங்கேஇணைத்துள்ளேன்.

    நன்றியுடன் ஒரு சுஜாதாரசிகன்

  • Vijayasarathy R said:

    கவிதை வடிவில் சுஜாதாவைப் போலவே எளிதான வார்த்தைகளை போட்டு எழுத்துலக ஆசானுக்கு நினைவஞ்சலி அருமை.

    சுஜாதா இன்னும் இறக்கவில்லை இறக்கப்போவதுமில்லை. என்றும் நம் நினைவலைகளில் நம் நினைவை பதிக்கும் வலைகளில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்.

  • TechShankar said:

    தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

    East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

    Have a look at here too..

    Sachin Tendulkar’s Rare Photos, Sachin’s Kids pictures, Videos

  • T.P.Anand said:

    இது ஒரு நல்ல பதிவு.

    எழுத்துலக சக்ரவர்த்தி சுஜாதா, எனக்கு உன்னைபோல் எழுத வரம் தா.

  • inventsekar said:

    sirji, you are another சுஜாதா !!!

    nice post….

  • inventsekar said:

    Sirji, do you remember me? some few months i have come here and commented too… i came here thru RAM’s chennaidaily photoblog.
    very interesting website you are maintaining boss…

  • triplicane vaasi said:

    ‘லீவுக்கு வந்த ரிஷி மாதிரி இருக்கியே…’ – எந்திரனில் சுஜாதாவின் நகைச்சுவை! …..

    அமரர் சுஜாதாவின் இரண்டாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் சிறப்புக் கூட்டம் ஒன்றை உயிர்மை பதிப்பகமும் மற்றும்
    சுஜாதா அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்தக் கூட்டத்தில் இயக்குனர்கள் ஷங்கர், வசந்த், ராஜீவ்மேனன், நடிகர்
    பார்த்திபன், ஏ. நடராஜன், மதன், இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன்,
    மனுஷ்யபுத்திரன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

    எந்திரனில் சுஜாதா எழுதி இடம்பெற்ற ஒரு நகைச்சுவை வசனத்தை அவரது நினைவஞ்சலிக் கூட்டத்தில் சொல்லி நினைவு கூர்ந்தார் இயக்குநர் ஷங்கர்.

    விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசுகையில், “சினிமாவில் சுஜாதாவின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் வசனத்தை சுருக்கமாக அதே நேரம் அழுத்தமாக இருக்கும்படி மாற்றியவர் சுஜாதாதான். அவர் பாதிப்பு இல்லாமல் இன்றைக்கு யாராலும் எழுத முடியாது.

    இந்தியன் படத்தில்தான் அவருடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தேன். அதன் பிறகு எனக்கு அவர்தான் அனைத்துப் படங்களிலும் வசனம் எழுதினார். எனக்கு அவர் எழுதிய வசனங்கள் அனைத்துமே சிறப்பானவை.

    குறிப்பாக இந்தியனில் ‘பக்கத்துல இருக்கிற குட்டி குட்டி நாடெல்லாம் எங்கேயோ போயிடுச்சி. ஆனா இந்தியா இன்னும் அப்படியே இருக்கு.. ஏன்? ஏன்னா அங்கெல்லாம் கடமையை மீறுவதற்குதான் லஞ்சம். இங்க மட்டும்தான் கடமையைச் செய்வதற்கே லஞ்சம்…’ என்று எழுதியிருப்பார். அது ரொம்பப் பிடிச்சிருந்தது எனக்கு.

    அந்நியனில் அவர் எழுதிய பல வசனங்கள் மிகச் சிறப்பானவை. ட்ரெயின்ல அம்பி கேரக்டர் பேசுறது, ரெமோ கேரக்டருக்கு ஹீரோயின் கையில முத்தம் கொடுக்கறப்போ என்ன போப்பாண்டவர் மாதிரி தர்றே’னு கேட்கிற அந்த நுணுக்கமான நகைச்சுவை… இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

    அவர் எழுதின எல்லா வசனங்களுமே அற்புதமானவை. சிவாஜி படத்துல ரஜினி சார் அமெரிக்காவுல இருந்து வர்ற காட்சியில, சென்னையின் முன்னேற்றத்தைப் பார்த்து வியப்பார். அப்போ, சிக்னல்ல ஒரு பிச்சைக்காரப் பெண் கார் கதவைத் தட்டும்போது, ‘எல்லாம் வந்துடுச்சி.. ஆனா இது (வறுமை) இன்னும் போகலை’ என்பார்.

    எல்லாத்தையும் இழந்த பிறகு, வக்கீலிடம் ரஜினி சார் பேசும், ‘நான் நடக்கப்பழகிக்கறேன் சார்’ என்ற ஒரு வரி வசனத்தில் எல்லாத்தையும் சொல்லிவிடுவார் சுஜாதா சார். பக்கம் பக்கமா பேச வேண்டிய அவசியமில்லாம, பளிச்சின்னு ரெண்டே வரியில, முடிஞ்சா ரெண்டு வார்த்தையில் சொல்லிடணும் என்பது அவர் கற்றுக் கொடுத்த பாடம்தான்.

    எந்திரன் படத்தில அவரது வசனங்கள் பல இடங்களில் என்னை வியக்க வைத்தவை. நகைச்சுவையை அவரளவுக்கு வேறு யாராலும் வெளிப்படுத்த முடியாத அளவுக்கு அத்தனை சிறப்பாக இருக்கும். உதாரணத்துக்கு இந்தப் படத்துல ஒரு காட்சி…

    நீண்ட நாள் கழிச்சு ஹீரோ ரஜினி சார், வீடு திரும்புகிறார், தாடி மீசையோட… கதவைத் திறந்ததும், அவரது அம்மா, அவரது நீளமான முடியையும், தாடியையும் பார்த்து பேசும் வசனம் இது.

    ‘என்னப்பா, லீவுக்கு வந்த ரிஷி மாதிரி இருக்க!’.

    எனக்கு இந்த சின்ன வசனமும், அதில் இருக்கிற நகைச்சுவையும் பிரமிப்பாக இருந்தது.
    நீங்கள் படம் பார்க்கும்போது இதுபோன்ற நிறைய வசனங்களை உணர முடியும். இப்படி ஒரு படைப்பாளி இல்லையேன்னு வருத்தப்படுவீங்க

    *மதன் கோரிக்கை…*

    கார்டூனிஸ்ட் மதன் பேசுகையில், “தலைமுறைகளைத் தாண்டி இன்றும் பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்பவர் சுஜாதா. கோட்டூர்புரத்தில் புதிதாக அமையும் அரசு நூலகத்தில் சுஜாதாவுக்கென்று தனி பகுதி அமைய வேண்டும். அதில் அவர் வசனம் எழுதிய
    படங்களின் கிளிப்பிங்குகளைப் போட்டுக் காட்டலாம். அவரது கையெழுத்துப் பிரதிகள், புத்தகங்கள், ஓவியங்கள், நிகழ்வுகள் இப்படி பல விஷயங்களை சேகரித்து வைக்கலாம்.
    அரசுக்கு இதை என் வேண்டுகோளாகவே வைக்கிறேன்” என்றார்.

    எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, சுஜாதாவுக்கும் தனக்குமான உணர்வுப்பூர்வமான நட்பைப் பகிர்ந்து கொண்டார்.

    சுஜாதாவின் ரசிகனாக வசந்த் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட விதம், சுஜாதா மீதான அவரது காதலைச் சொல்வதாக இருந்தது.

    பார்த்திபன், சுஜாதாவின் சகோதரர் திருமலை, எழுத்தாளர் தேவி மைந்தன் ஆகியோரும் பேசினர்.

    எழுத்தாளர் ஞானக்கூத்தன், தான் வந்திருப்பது ஒரு மாபெரும் எழுத்தாளரை நினைவு கூர்வதற்கான கூட்டம் என்பதை மறந்து, தன்னை முன்னிலைப்படுத்துவதிலேயே குறியாக இருந்தது சிறப்பாக நடந்த இந்த கூட்டத்துக்கு சின்ன கரும்புள்ளியாக அமைந்தது.

    இத்தனைக்கும் தான் உயிரோடு இருந்தவரை ஞானக்கூத்தனின் கவிதைகளைக் கொண்டாடியவர்
    சுஜாதா!

  • T.P.Anand said:

    இந்த நிகழ்ச்சியை நேரில் நின்று கேட்ட சுகத்தை triplicane vaasi தந்து விட்டார் – மிக்க நன்றி

  • triplicani (author) said:

    Triplicane Vaasi,

    Copy & Paste Thaaney!

  • triplican vaasi said:

    Yes sir, Copy and paste only. I thought this is relevant to your blog, hence did that.

  • அருணா சத்தியமூர்த்தி said:

    சுஜாதா சார் கதைகள் சிறுகதை/நாவல் என்னுடைய பள்ளி நாட்களிலிருந்து படித்து வருகிறேன். முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை மிகவும் சுவாரசியமாக இருக்கும். கையில் எடுத்தால் கீழே வைக்க மனமிருக்காது. நாளை மகளிர் தினம். அவருடைய புகழ் அனைத்தும் அவருடைய மனைவி பெயரில் வரலாற்றில் பதிவு செய்தமைக்கு நன்றியுடன் என் அஞ்சலி.

  • triplicani (author) said:

    அருணா,

    யாருமே நினைக்காத கோணத்தில் சுஜாதாவை பார்த்து வியக்க வைத்து விட்டாய்!

    அப்போ நானும்….

  • venkatesan said:

    Writer Genius Sujatha’s sense of comedy and thought provoking dialogues
    in Tamil movies will stay long for years to come, in the minds of His
    readers. Felt very much & my eyes automatically filled with tears and
    I could not but to control myself from shedding more tears and stopped
    weaping. Let his Noble soul which is resting in peace, should continue to do so.

    Venkat

  • triplicani (author) said:

    @Venkatesan,

    Thank you. Yes. Right now I am reading Sujatha’s Sorga Theevu after many years and I could not but wonder how he was able to see into the future in that fantastic story. Several technology things that he has mentioned in that story are a reality today.

  • Gouthaman said:

    Very nice. I’d like to thank you for writing something on my favorite author.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.