Home » greetings, Tamil-தமிழ்

குடியரசு தின வாழ்த்துக்கள்

26 January 2010 991 views One Comment

இந்திய குடிமகன்களான நம்மை முடிமகன்களாக்கி எல்லோரும் இன்னாட்டு மன்னரே என்று ஆக்கிய தினம் இது. குடியரசாக்கியபோது, வாரிசு அரசாங்கம் வேறு ரூபத்தில் தொடரும் என்று அம்பேத்கர் நினைத்திருக்க மாட்டார்.

இருந்தாலும், ஐந்து வருடத்துக்கு ஒரு முறை இந்தியாவுக்கும், தத்தமது மாநிலத்துக்கும் விருப்பத்துடனோ, விரும்பாமலோ, அரசரையும், வாரிசையும் தேர்ந்தெடுக்கும் அளவான அதிகாரத்தை நமக்கு கொடுத்த இந்திய அரசியல் சட்டத்துக்கு நன்றியுடன், கொண்டாடுவோம் இந்த குடியரசு தினத்தினை.

இன்றைய இந்திய குடியரசு நாளுக்காக கூகுள் போட்ட டூடுல்.

நன்றி: கூகுள்

Firefox-ல் www.google.com.kw என்று குவைத்துக்கான கூகுள் தளத்தை தட்டிப்பார்த்தேன் இந்திய குடியரசுநாளுக்காக போட்ட டூடுல் எல்லா நாட்டு தளங்களிலும் தெரிகிறதா, இந்தியாவுக்கு முக்கியத்துவம் உண்டா என்று பார்ப்பதற்காக. ஆச்சரியமாக, கீழ்கண்ட டூடுல் கிடைத்தது. இன்றுதான் குவைத் தேசிய தினம் என்று இந்த டூடுல் சொல்கிறது.

என் அலுவலகத்துக்கு வந்த ஒரு குவைத்து குடிமகனை கேட்டதில், தேசியதினம் இன்றல்ல பிப்ரவரியில்தான் என்றார். அவரை அருகே அழைத்து அரபி மொழியில் எழுதியிருந்ததை படிக்க சொன்னேன்.

படித்துவிட்டு பின்னர் “கூகுளில் போட்டால் தப்பாக இருக்காது. இன்றுதான் தேசிய தினம் போல இருக்கு, ஆனால் விடுமுறையும், கொண்டாட்டமும் பிப்ரவரியில்தான் செய்வோம்” என்றார். விக்கிபீடியாவில் போய் தேடினால், குவைத் தேசியதினம் பிப்ரவரியில்தான் என்று சத்தியம் செய்கிறது. (http://en.wikipedia.org/wiki/Kuwait).

மீண்டும் நன்றி கூகுளுக்கு

(மீண்டும் நன்றி கூகுளுக்கு)

Most Commented Posts

One Comment »

  • Vijayasarathy R said:

    நாம் முடிமகன்களாகி ஆகிறது வருடங்கள் கிட்டத்தட்ட 60க்கு மேல்.

    //இருந்தாலும், ஐந்து வருடத்துக்கு ஒரு முறை இந்தியாவுக்கும், தத்தமது மாநிலத்துக்கும் விருப்பத்துடனோ, விரும்பாமலோ, அரசரையும், வாரிசையும் தேர்ந்தெடுக்கும் அளவான அதிகாரத்தை நமக்கு கொடுத்த இந்திய அரசியல் சட்டத்துக்கு// நச்சு….

    வாரிசை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இயற்றப்பட்டதே இ.அ.ச.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.