Home » Headline, Music, Tamil-தமிழ், அனுபவம், தமிழ் திரை இசை

அறுபதுகளின் அனுகூலம்

25 January 2010 664 views 7 Comments
ஹாய்! Hi! you have been here atleast 3 times before; don't you think we have started liking each other? Stay updated when I update this site by subscribing to the site feed. Thanks! நன்றி

Enter your email address: Delivered by FeedBurner


T P Anand, Chartered Accountant

T P Anand

நான் அறுபதுகளில் பிறந்தவன்.

அறுபதில் பிறந்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று சொல்லவேண்டும்.  திரைப்படப்பாடல்கள் கேட்பது எனக்கு மிகவும் பிடித்தது.  நல்ல இசை  – செந்தமிழோ, சுந்தர தெலுங்கோ, தேசிய மொழியாகத் துடித்துக் கொண்டிருக்கும் ஹிந்தியோ -  எந்த மொழியும் சொந்த மொழி போல பாடல் கேட்க பிடிக்கும்.

சிறு வயதில் டி.எம்.எஸ்., பி.பி.எஸ்., ஏசுதாஸ், பி.சுசீலா, ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி பாடிய பாடல்கள் வானொலியில் கேட்டுக்கொண்டே வளர்ந்து பெரியவனாகியபோது மேலே குறிப்பிட்டவர்களோடு  எஸ்.பி.பி., மலேசியா வாசுதேவன், மனோ, சித்ராவும் சேர்ந்து கொண்டார்கள்.

இளையராஜா வருவதற்கு முந்திய தமிழிந்தியாவில் ரஃபி, கிஷோர்குமார், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே பாட்டு கேட்டவர்களில் நானும் ஒருவன்.  ஆனால், “ஐ ஒன்லி ஹியர் ஹிந்தி சாங்ஸ்” ஆளில்லை நான்.

திரைப்பட பாடல்கள் கேட்பவர்கள், எல்லா காலங்களிலுமே பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என்று வகைபடுத்திக் கொண்டேயிருப்பார்கள்.  என்னுடைய இளம் வயதில், டி.எம்.எஸ்., பி.பி.எஸ். குரல்களில் கேட்ட பாடல்கள் புதிய பாடல்கள்; 1940, 1950 களில் வந்த பாடல்கள் பழைய பாடல்கள்.

டேப் ரிகார்டர் எல்லாம் அப்போது கிடையாது. வானொலியில் ”உங்கள் விருப்பம்” என்று சொல்லி, சிலருடைய வானொலியில் பெயர் கேட்கும் விருப்பத்தை பூர்த்தி செய்து ஒலிபரப்பான இரு காலத்திய பாடல்களையும் நான் மிகவும் அனுபவித்து கேட்பேன்.  நடு எழுபதுகள் வரை வானொலிதான்.

70களின் இறுதியில் ஒரே ஒரு சானலுடன் டி.வி. அறிமுகமாகி  இன்னும் அதிகமாக பாடல்கள் கேட்க வாய்ப்பு கிடைத்தது.  80களுக்கு வரும்போது, பாடல்கள் இன்னொரு பிரிவு பெற்று, மிகப்பழைய பாடல்கள் (தியாகராஜ பாகவதர், டி.ஆர். மகாலிங்கம், எம்.எஸ்.), பழைய பாடல்கள் (டி.எம்.எஸ்., பி.பி.எஸ்., சுசீலா, ஜானகி, வாணி ஜெயராம்), புதிய பாடல்கள் (எஸ்.பி.பி., மலேசியா வாசுதேவன், தீபன் சக்கரவர்த்தி, ஜென்ஸி, உமா ரமணன்) என்றானது.

ஆனாலும், என்னால் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை எம்.எஸ்.வி., இளையராஜா ஆகியோரின் புதிய இசையில் கேட்கும் அதே உற்சாகத்துடன் எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர். மகாலிங்கம், எம்.எஸ்., பாடல்களையும் கேட்கப்பிடித்தது.  பாலசுப்ரமணியத்தின் குரல் தரும் மயக்கத்தை பாலமுரளியின் குரல் அதிகரிக்கவே செய்தது. ஒரு நாளும் ”இது பழைய பாட்டு” என்று அலுப்பு தந்ததில்லை.

இப்போது இன்னும் காலம் ஓடி 2010க்கு வந்தாகிவிட்டது. இளையராஜாவை தொடர்ந்து  தேவா, ரஹ்மான், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன், ஸ்ரீகாந்த் தேவா, விஜய் ஆண்டனி, தேவி ஸ்ரீப்ரசாத், பரத்வாஜ் என்று புதிய இசையமைப்பாளர்கள் புதுப்புது இசையை தந்து கொண்டிருக்கிறார்கள்.

இசையின் சந்தமும், சத்தமும் மாறிவிட்டது.  திரைப்படங்களும், இசைக்கும் தொழில் நுட்பமும், இசையை பதிக்கும் தொழில்நுட்பமும், அதை கேட்கும் தொழில் நுட்பமும் பன்மடங்கு முன்னேறிவிட்டது.

கொஞ்சம் யோசித்து பார்த்தால், இப்போதும் என்னால் 1940 முதல் 2010 வரையான எல்லா திரை இசையையும் ரசிக்க முடிகிறது.

என் அப்பா 1920களில் பிறந்தவர்.  அம்மா 1930களில். அவர்களால் 1940லிருந்து, 1970வரை வந்த இசையை மட்டுமே ரசிக்க முடிகிறது.  அதற்கு பிறகு வந்த இசையை “சத்தம்” என்று நினைக்கிறார்கள். அவர்கள் கொஞ்சம் தயக்கத்துடனேயே இளையராஜாவின் பாடல்களை கேட்பார்கள், யுவன் வரை போவதற்கு அவசியமே இல்லை.

60களில் பிறந்த என்னால், என் முந்தைய தலைமுறையிலிருந்தும் (பெற்றோர்), பிந்தைய தலைமுறையிலிருந்தும் (மகன்கள்)  வித்தியாசப்பட்டு எழுபது வருட இசையை கேட்டு ரசிக்க முடிகிறது. ”சொப்பன வாழ்வில் மகிழ்ந்தேன்” என்று எம்.கே.டி.யையும், “நான் அடிச்சா தாங்க மாட்டே” என்று விஜய் ஆண்டனியையும் கூட சேர்ந்து பாடிக்கொண்டே, உதட்டால் விசில் மீட்டிக்கொண்டே உற்சாகத்துடன் ரசிக்க முடிகிறது.

சிவாஜி கணேசனின் “எங்கே நிம்மதி”யும், விஜயின் “புலி உருறுமுது”வும் கேட்டு மகிழ முடிகிறது.

மிகவும் இதய வருடலாக ”தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே”என்ற சுசீலாவையும், ”சித்திரப்பூ போலே சிதறும் மத்தாப்பு, தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு” என்று தீபாவளி கொண்டாடிய ஜிக்கியையும், ”சிங்கார வேலனே தேவா” என்று எது நாதஸ்வரம் எது மனிதக்குரல் என்று இனம்பிரிக்க முடியாத இனிய குரலில் இசைத்த ஜானகியையும் கேட்டு மகிழ்ந்தது போலவே சித்ரா, மஹதி, அனுராதா ஸ்ரீராம், ஷ்ரேயா கோஷல், மாலதிகளை கேட்டு மகிழ முடிகிறது.

சமீபத்தில் சென்னை சென்றபோது, நடிகர் ஒய்.ஜி. மகேந்திரா தொகுத்து வழங்கிய ”Tribute to Sivaji Ganesan” இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்.  நடிகர் திலகத்தின் திரைப்படங்களிலிருந்து இனிமையான பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன். அடுத்த நாள், வேட்டைக்காரன் படம் பார்க்கும்போது அதன் பாடல்கள் அனைத்தையும் ரசித்தேன்.

இது அறுபதுகளில் பிறந்ததினால் கிடைத்த வாய்ப்பு என்று நினைக்கிறேன்.  நான் வளர வளர திரை இசையும் தொழில் நுட்பமும் வளர்ந்ததால் என்னால் 70 வருட இசையை ரசிக்கமுடிகிறது.  இசை ஒரேயடியாக புதிதாக இல்லாமல், பல வருட இசையின்  மாற்றம் அது மெதுவாக உருவாக உருவாக என் காதுகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகமானதால், பழகிவிட்டது என்று நினைக்கிறேன்.

என்னுடைய பிள்ளைகள் 1990ல் பிறந்தவர்கள். அவர்களுக்கு நடு எண்பதுகளிலிருந்து இப்போது வரையான இசையை கேட்க பிடிக்கிறது. அதற்கு முன்பு வந்த பாடல்களை போட்டால், காதில் ஐபாட் மாட்டிக்கொண்டு நகர்ந்துவிடுவார்கள்.  எல்.ஆர். ஈஸ்வரி  ”பட்டத்து ராஹ்ணி பாஆஆர்க்கும் பார்வை, வெற்றிக்குத்தான் என எண்ணவேண்டும்” என்ற கணீர் நடுக்கக்குரலின் வித்தையும், “எலந்த பயம், எலந்தபயம்” என்ற கூவலின் குதூகலமும் அவர்களுக்கு புரிவதில்லை.

எம்.கே.டி., பி.யு. சின்னப்பா, மன்னா டே, மகேந்திர கபூர் பெயர் சொன்னால் “உன்னோட சி.ஏ. படிச்சாளா” என்று கேட்பார்கள்.

******

டி.பி.ஆனந்த், துபாய் (T P Anand, Dubai, UAE)

******

”இந்த பதிவு பிடித்திருக்கிறது” என்ற வாக்கியத்திற்கு நீங்கள் ”இசை”ந்தால், ஓட்டுப்பெட்டிக்கு இங்கே அழுத்துங்கள்.

Bookmark and Share

Readers also liked

7 Comments »

  • Ramalingam said:

    MUSIC….IS ALWAYS A SWEET EXPERIENCE… WHETHER TO HEAR OR TO REMEMBER BETWEEN THE OLD AND NEW…. ITS ALWAYS PLEASURE… TO REDUCE YOUR PRESSURE… THE YOUNGER TEEN GENERATION MAY BE SHOWING THEIR INTEREST IN HEARING “EAR BURSTING SOUND TECHNOLOGIES…” BUT STILL… WE CANT DENY THAT REMIX SONGS ARE A GREAT HIT NOWADAYS AMONG TEENS…. FOR EXAMPLE… PAMBARA KANNALE… KADHAL SANGADHI SONNALE…FROM THE MOVIE KANDHASAMY. THE YOUNGER GENERATION HAS GOT THE OPPORTUNITY TO HEAR THE MUSIC WITH ADVANCED TECHNOLOGIES… BUT STILL OLD IS GOLD… FOR EXAMPLE… L.R. ESWARI’S KAADHODU DHAAN NAAN PADUVEN… P.B.S’S KALANGALIL AVAL VASANDHAM… OR A.M. RAJA’S OHO ENDHAN BABIE…
    SO… WHETHER IT IS 60′S, OR 70′S OR 80′S OR MILLENNIUM OR IT IS THE NEXT DECADE…. MUSIC IS GOING TO BE THE BEST WAY OF RELAXING….AND ENJOYING…MELODY OR KUTHU SONGS OR PATHOS SONGS… DOESN’T MATTER… LET’S RESPECT THE GENIUS MUSICIANS AND WELCOME MORE NEWCOMERS TO GIVE US MORE ENTERTAINMENT…

    RAMALINGAM.
    DUBAI.

  • triplicani (author) said:

    Ramalingam,

    Thank you for your comments. You have SOUNDLY made your point about music.

  • Vijayasarathy R said:

    ஆனந்த்,

    நானும் கூட இந்த அறுபதுகளில் பிறந்தவர்கள் அதிருஷ்டசாலிகள் என்றே கருதுகிறேன். நான் எழுபதுகளில் பிறந்தவன். 10 வருட இடைவெளிதான் என்றாலும், பியுவையும்,எம்கேடியையும் அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை.

    இருந்தாலும் என் பார்வையில், இசை இப்படி ரசிகர்களை பிரித்துவிடுவதில்லை என்று கருதுகிறேன். உங்கள் வரிசையில் உள்ள மஹதியுமே கூட அந்தக் கால பாடல்களை கேட்பவர் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

    நீங்கள் சொன்ன காரணமும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவேபடுகிறது. எல்லா வீட்டிலும் இசை ரசிகர்கள் (பெரியவர்கள்) இருப்பதென்பது எதிர்பார்க்க முடியாது. அது போன்ற வீடுகளில் வளரும் குழந்தைகள் 60,70 பாடல்களை கேட்க வாய்ப்பு கிடைப்பதில்லை.

    என் விஷயத்தில் நான் 60,70,80,90,2000,2010 வரை பாடல்களை கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.

    நான் பழைய பாடல் சிடியை போட்டவுடன் என் மகன் தற்செயலாக “நான் அடிச்சா தாங்க மாட்டேன் நாலு மாசம் தூங்க மாட்டேன்” என்று பாடுகிறான்.

    நல்ல பதிவு. வித்தியாசமான சிந்தனை.

  • Uma said:

    Anand,

    Excellent Article, really great way to differentiate the era of Tamil music….

    I agree with Sarathy, Even I cant hear MKT and his era… Occasionally one or two songs from the old Movies…

    U missed MS in the list… Katrinilea Varum Geetham Kettal -Manadhil Edavadhu Kavallai Irundaal andha Kattrodu Parandhu vidum….

    Your way of approach in posting this article is excellent

  • triplicani (author) said:

    உமா,

    எம்.எஸ். பெயரை ஆனந்த் சொல்லாமல் விடவில்லை. இருந்தாலும், 70 வருட இசை சரித்திரத்தை பார்த்தால், எல்லோர் பெயரையும் சொல்ல ஒரு தனி வெப்சைட் ரிஜிஸ்டர் செய்யவேண்டும். மாமா மகாதேவன், சலீல் சவுத்தரி, கங்கை அமரன் தொடங்கி சில பாடல்கள் பாடிய இப்போ யங், ஓல்ட் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவையும், ஒரே ஒரு பாடல் பேசிய ரியல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தம் என்று பலர் பெயரை சொல்ல இடம் இல்லை.

  • triplicane vaasi said:

    Dear Anand,
    Good one. Beautifully narrated the nuances in music of different generations (or is it genre ?). No wonder it is coming from you as you once even appreciated ” Dheko ma Thees per dho (route no. 32) aathi, — Attha chodu ithha sunnu”

  • Jawahar said:

    நானும் உங்களை மாதிரியே ஒரு versatile இசை ரசிகன். என் தேர்வில் கசல்களும் அடங்கும். எழுபதுகளில் ஹிந்தி பாடல்களை வெறி பிடித்த மாதிரி கேட்டவர்களில் நானும் ஒருவன். இன்றைக்கும் என் மொபைலில் ஆர்.டி.பர்மனின் ஆப் கி கசம், கேரவான், தீஸ்ரி மன்சில், அப்னா தேஷ் எல்லாம் வைத்துக் கொண்டு கேட்கிறேன். தமிழ் சினிமாவில் மறுபடி மெலடி அழிந்து வருகிறது. இன்றைய தேதியில் வித்யாசாகர்தான் காப்பாற்ற வேண்டும்!!

    http://kgjawarlal.wordpress.com

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.