Home » Headline, Tamil-தமிழ், greetings

இனிமை பொங்க வாழ்த்துக்கள்

14 January 2010 565 views 7 Comments
ஹாய்! Hi! you have been here atleast 3 times before; don't you think we have started liking each other? Stay updated when I update this site by subscribing to the site feed. Thanks! நன்றி

Enter your email address: Delivered by FeedBurner


அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் உண்மையான சமத்துவ திருநாளாம் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் மறக்காமல் இன்சுலின் சர்க்கரை கரைக்கும் மாத்திரைகளின் பாதுகாப்பில் பொங்கல் உண்டு களிக்க வாழ்த்துக்கள்.

இந்த மனதிற்கு,  இளம் வயதில் மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்நாட்களில், பசுஞ்சாணம் கலந்த நீரில் தெளித்த வாசலில் கண்ட அகல கோலத்தையும், அதன் நடுவில் மீண்டும்  பசுஞ்சாண சிறு கோபுரத்தில் நட்டுவைத்த மஞ்சள் பூசணி பூக்களையும், அதிகாலை குளிர் விறகு அடுப்புகளையும், சுருதிப் பெட்டியுடன் பாடி வந்த பஜனைக்கூட்டங்களையும் நினைவு படுத்திக் கொண்டு இனிமையை கூட்டிக்கொள்ளுங்கள்.

அடுக்கு மாடி குடியிருப்புக்கு மாறிவிட்ட நம் வாழ்க்கையில் அங்கம் கொண்டுவிட்ட தொலைக்காட்சியில் அது தெரியாது.

மேலே சொன்ன காட்சிகளின் இனிமையான நேரடி ஒளிபரப்பு நினைக்க தெரிந்து மறக்கத் தெரியாத மனதிற்கு மட்டுமே.  தொலைக்காட்சியில் தெரியப்போவதெல்லாம், தமிழர் திருநாளில்  தொடையைத் தட்டிக் கொண்டு “ஏய், ஏய்” என்று கத்தும் சினிமாக்காட்சிகளும், பட்டிமன்றங்களும் மட்டும்தான்.

பொங்கல் என்றால் தை தோன்றி, இமெயில் தோன்றா காலத்தில் கை நிறைய சிவாஜி, எம்.ஜி.ஆர், அறிஞர் அண்ணா, ராமர், கண்ணன், மகாலட்சுமி, வெங்கடாஜலபதி, பிள்ளையார், முருகன், கரும்பு, சூரியன், பொங்கும் பானைகள் படங்கள் போட்டு கைகளில் தொட்டால் ஒட்டிக்கொள்ளும் சரிகை  ஒட்டி பளபளக்கும் வாழ்த்து அட்டைகளும், அவற்றை அனுப்பிய பாட்டி, தாத்தா, அத்தை, பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா, நண்பர்களும், வாழ்த்து அட்டைகளை கொடுத்துவிட்டு இனாமுக்கு சிரித்த தபால்காரர்களும் நினைவுக்கு வருகிறார்கள்.

இவற்றுடன் அம்மா கட்டிய மஞ்சள் தாலியுடன் வேண்டுமென்றே கிழக்கு பக்கம் சற்று சாய்த்து (அப்போதுதான் பொங்கல் கிழக்கு பார்த்து பொங்கும்) அடுப்பில் ஏற்றப்பட்ட வெங்கலப்பானையில் கொதித்து, நுரைத்து வழியும் பாலைபார்த்து குடும்பத்தோடு கூச்சமில்லாமல் நாமும், கூச்சத்துடன் புதிதாய் திருமணமாகி வந்த அண்ணியும் “பொங்கலோ பொங்கல்” என்பதும் நினைவு வருகிறது. தெருவெல்லாம் எல்லோரும் கடித்து துப்பிய கரும்பு சக்கைக்கு நிகர் தீபாவளிக்கு தெரு முழுக்க வெடித்துக்கிடக்கும் பட்டாசுகுப்பை மட்டுமே.

நான் திருப்பாவை முப்பதும் செப்பவில்லை; ஆகவே அடிவரவாக “மார்கழி,வையம், ஓங்கி, ஆழி, மாயன், புள்ளும், கீசு, கீழ்வானம், தூமணி, நோற்று, கற்று கனைத்து, புள்ளின், உங்கண், எல்லே, நாயகன், அம்பரம், ஒன்று, குத்து, முப்பது, ஏற்ற, அங்கண், மாரி, அன்று, ஒருத்தி, மாலே, கூடாரை, கறவை, சித்தம், வங்கம், தை” என்ற அழகிய தமிழ் திருப்பாவை நிமோனிக்கை வியக்கிறேன்.

சிறுவயதில் மனப்பாடம் செய்தது.  ஒவ்வொரு வார்த்தையும் திருப்பாவையின் ஒவ்வொருப்பாவின் முதல் சொல்.

Bookmark and Share

Readers also liked

7 Comments »

  • Mohan Prabhu said:

    பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  • விஜயசாரதி said:

    தமிழர் திருநாளாம் பொங்கல் நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உரித்தாகுக….அருமையான பதிவு

  • triplicani (author) said:

    Mohan Prabhu, விஜயசாரதி,

    நன்றி!

  • barthassardy said:

    anna that old days flashback in my mind and now just emailing .Happy pongal to all

  • Vijayasarathy R said:

    //தெருவெல்லாம் எல்லோரும் கடித்து துப்பிய கரும்பு சக்கைக்கு நிகர் தீபாவளிக்கு தெரு முழுக்க வெடித்துக்கிடக்கும் பட்டாசுகுப்பை மட்டுமே// இப்பொழுதெல்லாம் பட்டாசுப் பேப்பர் பொங்கல் சக்கையை மிஞ்சிவிட்டது. எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம்தான். இன்னும் கூட என் நண்பர்களுடன் ஒன் இன்னிங்ஸ் மேட்ச் விளையாடிவிட்டு அதே (கழுவாமல்) கையில் கரும்பை தின்றந்து உங்கள் பதிவை படித்த பின்பு நினைத்து சுவைக்க வைத்தது.

    //நான் திருப்பாவை முப்பதும் செப்பவில்லை// முழுவதையும் செப்பவேண்டாம்…..அந்தத் திருவின் பாவை எழுதிய திருப்பாவை எனும் போதே சக்கரைப் பொங்கல் சுவை நா முழுவதும்…

  • triplicani (author) said:

    Thank you barthassardy.

  • Sampath said:

    Dear Sathya

    Not sure why English feedback is not getting on to the blog. Very nicely written rekindling memories of the past. The generation change is so fast. The present generation girls refuse to keep ‘kannu pudi’ questioning the colour food offerings to crows !! The modern day boys are becoming couch potatoes tagged on the computer or TV not prepared to venture out and play in the hot sun. They are not at all keen on eating sugarcane as this is enormous extra work going by their general standards. They would not know that people longed to bite and chew pieces of karumbu. They would never know the various local competitions aka challenges in breaking karumbu by forcing them against leg shin, or using knife with different grips. These were happening in the city in our school days. We also had no first info. of the way it was celebrated in a village but atleast fantasied a lot.

    Nice write up once again

    REgards – Sampathkumar S

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.