Home » Headline, Tamil-தமிழ், greetings, அனுபவம்

இன்று…

9 January 2010 867 views 6 Comments
ஹாய்! Hi! you have been here atleast 3 times before; don't you think we have started liking each other? Stay updated when I update this site by subscribing to the site feed. Thanks! நன்றி

Enter your email address: Delivered by FeedBurner


கூகுள் டாட் காம் வலையேறி பார்த்தேன். விசேஷமான டூடுல் வொர்க் எதுவும் இல்லை. அவர்கள் சிலாகிக்கும்படி உலகை பாதித்த எந்த நிகழ்வும், காலண்டர் தொடங்கிய நாளில் இருந்து,9 ஜனவரியில் நடக்கவில்லை என்று தெரிகிறது.

காலண்டர் பிறப்பதற்கு முன்னால் நடந்திருக்கலாம். காலண்டரை சீரமைக்கும்போது 9 ஜனவரியில் நடந்த உலகை புரட்டிய நிகழ்வுகள்  வேறு ஏதாவது நாளுக்கு மாறியிருக்கலாம். சரித்திரம் தெரியாததால், உலகை அத்தனை பாதிக்காத 9 ஜனவரி நடப்புகள் என்னென்ன என்று கொஞ்சம் தேடினேன்.  (இதில் கொடுத்திருக்கும் உரல்களை இடித்தால், உங்களுக்கும் அறிவு விரிவடையும்).

இன்று, முதன்முதலில் வருடம் அமைத்து ஒன்பதாவதாக வைத்த நாள்.

இன்று, ஹரியானா ஹரிகேன் கபில்தேவ் பிறந்த மூன்றாம் நாள்.

இன்று, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பிறந்த இரண்டாம் நாள்.

இன்று, ஹாரிஸ் ஜெயராஜ் (அடைமொழி இல்லையா?) பிறந்த அடுத்தநாள்.

இன்று, 1816ம் ஆண்டு, சர் ஹம்ப்ரி டேவி, சுரங்கத்தொழிலாளர்களுக்காக டேவி விளக்கு போட்டுப் பார்த்த நாள்.

இன்று, 1793-ல், ஜேன் பியரி ப்ளான்சார்ட், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் முன்னிலையில், முதல் அமெரிக்க பலூன் பயணம் நடத்திக்காட்டிய நாள்.

இன்று, “மேரி தேஷ் கி தர்தி” என்ற மிகப் பிரபலமான தேசபக்தி பாடலுடன் 25,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய மகேந்திர கபூர் பிறந்தநாள்.

இன்று, பேட் (bat) இருந்தும், பாடாலேயே (pad) ஆடி பாடுபடுத்திய, இந்திய கிரிக்கெட் விசிறிகளால் “பாடாம்ஸ்” என்று அறியப்பட்ட மேற்கிந்திய முன்னாள் கேப்டன் ஜிம்மி ஆடம்ஸ் பிறந்தநாள்.

இன்று, கர்நாடக இசை ரசிகர்களை தன் மிருதங்கத்தால் கவர்ந்த கலைமாமணி பாலக்காடு ஆர். ரகு பிறந்தநாள் (மறைவு ஜூன் 2, 2009)

இன்று, ”வாட்டர் கேட்” நிகழ்வால் பாதியில் பதவியை துறந்த ரிச்சர்ட் நிக்சன் (37வது அமெரிக்க அதிபர்) பிறந்த நாள்.

இன்று, நான் ”பிறந்தநாள், பிறந்தநாள், பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்தநாள், ஹாப்பி பர்த்டே டு யூ….” என்று அம்மம்மா, அப்பப்பா, அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகள், நண்பர்கள் எல்லாம் சிலோன் ரேடியோவில் வாழ்த்தக் கேட்க விரும்பும் என் பிறந்த நாள்.

இன்று, “வயதாகி வந்Wife's birthday wishதாலும் காதல், என்ன வயதாகிப்போனாலும் காதல்” என்று எனக்கு கண்ணதாசன் வரிகளை நினைவூட்டி,  இன்றைக்காக பதினைந்து நாட்களுக்கும் முன்பே யோசித்து, பல மணிநேரம் செலவழித்து அருமையான வாசகங்கள் அடங்கிய வாழ்த்துமடல் தேர்ந்தெடுத்து, தன் சொந்த கற்பனையில் இன்னும் சில வார்த்தைகள் எழுதி மடலை இன்னும் மெருகூட்டி, என் மூன்று மகன்களையும் அதில் கையெழுத்திட வைத்து, நான் அணிய காலுறை முதல் ஃபர்ஃப்யூம் வரை அத்தனையும் புதிதாக வாங்கி அளவில்லா காதலுடன் என் பெண்டாட்டி கொண்டாட்டிய நாள்.

இன்று, என் ”முதல்”-கடைசி சகோதரன் (நானும் ராமரைப்போல் ஐவரோடு அறுவர், அறுவரோடு எழுவர் என்று சேகரித்துக்கொண்டே போவதால் – மு.க.ச.) ”மணல்கயிறு” விஜயசாரதி, பிறந்தநாள் வாழ்த்தாக ஒரு கட்டுரை வலைப்பூத்திருக்கிறான். (சாரதி, பதிவின் ஆங்கில உரலில் எனக்கு ஒரு வயது குறைத்ததை சொல்லாமல் போனால் உரலாறு என்னை கோபிக்கும்)

இன்று, என்னுடைய மஸ்கட் சக ஊழியர் சர்பஜித் மொண்டல் Fwd: [Fwd:] [Fwd:] என்ற சப்ஜெக்ட்டுடன் மின்னஞ்சலர் அஞ்சும் முகவரி அறுவடை (email harvesting) விதை போடும், பாதி மெயிலில் இமெயில் முகவரி நிரம்பிய திருப்பதி வெங்கடாசலபதி புகைப்படம் அனுப்பி “இதை பெறுகிறவர், பெரும் பாக்கியசாலி” என்று அனுப்பிய மின்னஞ்சலில் என்னை கவர்ந்த வரி “Today is Tirupathi god’s birthday” (முந்தைய ஃபார்வர்டர்கள் மின்னஞ்சிய தேதியை வேண்டுமென்றே பார்க்கவில்லை).

இன்று, என்னுடைய வலைவீச்சில் சிக்கி நண்பரான ராமசாமி தன்னுடைய சென்னை தின ஃபோட்டோ வலைப்பூவில் எனக்காக டிஜிட்டல் பூக்களை தன் காமிராவில் சுட்டு, நட்டு, இன்ப அ(தி)ர்ச்சித்தார்.

இன்று, நட்ட நடு ராத்திரி 12.03க்கு நண்பர் காசிராமன்,  குறுஞ்செய்தி கூவி குடும்ப சகிதம் வாழ்த்தினார். அவருக்கும் அவர் நினைவு தப்பாமல் இருக்க செய்த அவருடைய HTC Touch Diamond அலைகணினிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

விக்கிபீடியாவில் 9-1-1865, 9-1-1765, 9-1-1665, 9-1-1565 என்று தேடினேன், சரித்திர சாதனையாளர் யாரும் பிறந்ததாக தெரியவில்லை.

நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்.  கடந்த ஐநூறு ஆண்டுகளில் 9 ஜனவரி 1965ல் பிறந்து சரித்திர சாதனை புரிந்திருக்கும் என்னுடைய பதிவை படிக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதே.

நான் பிறந்த புண்ணிய நாளான 9 ஜனவரி 1965ல் பிறந்ததால்  பிரபலமான ஒருவர் “ஓம் சாந்தி ஓம்” இயக்குநரும், பிரபல ஹிந்தி நடன இயக்குநருமான ஃபரா கான்.  இன்னும் நிறைய பேர் 9 ஜனவரி 1965ல் பிறந்ததால் பிரபலமாகியிருக்கிறார்கள்.  அனைவர் பெயரையும் நான் இங்கே சொல்லப்போவதில்லை.

”நான் ஒரு பெயர் சொன்னால்… நூறு பெயர் சொன்னா மாதிரி”

Bookmark and Share

Readers also liked

6 Comments »

  • Vijayasarathy R said:

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்….

  • Vijayasarathy R said:

    //இன்று….//

    ஜெயா டிவி செய்திகளின் தொகுப்பில் ஒரு பகுதியான “இன்று”வை நினைத்துப் பார்த்து..மனக்குரலில் அந்தக் குரலில் சொல்லிப் பார்த்தேன்…அருமை…

    ஒரு பெயர் சொன்னால் நூறு பெயர் என்று சொல்லிவிட்டு…பதிவு முழுக்க ஆங்காங்கே பெய்கிற மழை போல பெயர்களை அள்ளி வீசியிருக்கிறீர்கள்.

    டிஜிட்டல் பூ படிக்கும்போதே மணத்தது…

  • Ram N said:

    Hope you had a wonderful Birthday !!!

  • triplicani (author) said:

    Ram,

    Yes. With all those greetings, sms’ and photo posts it is one of the memorable birthdays.

  • ச்சின்னப் பையன் said:

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • triplicani (author) said:

    ச்சின்னப் பையன்

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.