ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
என்னுடைய வழக்கமான வாசகர்களுக்கும். வழிதவறி வந்து பின் வருகையை வழக்கமாக்கிக் கொண்டவர்களுக்கும், சும்மா நின்னு போனவர்களுக்கும், படித்து, பாராட்டி, சீராட்டி வளர்த்து விட்டவர்களுக்கும் என் கண்கள் பனித்து இதயம் இனித்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புதிய வருடத்தில் உங்களுக்கு எல்லா நலமும், வளமும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் அமைய வாழ்த்துகிறேன்.
தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகளும், திரையில் நல்ல படங்களும், வலையில் நல்ல பதிவுகளும் உங்களுக்குக் காணக் கிடைக்க வாழ்த்துகிறேன்.
உங்கள் பிள்ளைகளுக்கு பள்ளி/ கல்லூரிகளில் நோட்டு செலவில்லாமல் சீட்டு கிடைக்க வாழ்த்துகிறேன். அலுவலகத்தில் சம்பளம் கட்டு இல்லாமல் கிட்ட வாழ்த்துகிறேன்.
மாணவர்களுக்கு தேர்வில் படிக்காத பாடத்திலிருந்து கேள்வி வராமலிருக்கவும், படிப்பு முடித்தவருக்கு வேலையும், காதலியும் கிடைக்கவும் வாழ்த்துகிறேன்.
இந்த புதிய வருடத்தில் உங்கள் தொகுதியில் ஒரு இடைத்தேர்தல் வந்து சாலையின் குண்டும், குழியும் குறையவும், வீட்டுக் கதவில் நோட்டுக்கட்டுகள் நிறையவும் வாழ்த்துகிறேன்.
உங்கள் ஈமெயிலில் ஸ்பேமும், மொபைல் போனின் பில்லும் குறைய வாழ்த்துகிறேன்.
சாதா டிவி இருப்பவருக்கு எல்.சி.டி.யும், எல்.சி.டி. இருப்பவர்களுக்கு எல்.ஈ.டி.யும், அனைவருக்கும் கலைஞர் டிவியும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
நாட்டு பட்ஜெட்டில் வரியும், வீட்டு பட்ஜெட்டில் செலவும் குறைய வாழ்த்துகிறேன்.
கோடையில் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கவும், ஆடையில் சம்சாரம் அதிகம் செலவழிக்காமல் இருக்கவும் வாழ்த்துகிறேன்.
அவசர அலுவலகம் கிளம்புகையில் காற்றிறங்கிய வாகன டயர் உங்களை சந்திக்காமல் இருக்க வாழ்த்துகிறேன்.
அலுவலகம் போகும் பேருந்து நிறுத்தத்தில் நிற்கவும், நின்ற பேருந்தில் உடனே உட்கார இடம் கிடைக்கவும், பேருந்தில் நடத்துனர் வாய் எச்சில் படாத டிக்கெட்டும், கொடுத்த காசுக்கு மீதமும் உடனே கிடைக்கவும் வாழ்த்துகிறேன்.
இல்லத்தரசிகளுக்கு வேலைக்காரி ஒரு நாளும் மட்டம் போடாமல் வருவதற்கும், அட்வான்ஸ் கேட்காமல் இருப்பதற்கும், அவர்களுக்கு பொங்கல், தீபாவளிக்கு வாங்கித்தரும் புடவை பிடிக்கவும் வாழ்த்துகிறேன்.
என் போன்ற பதிவர்களுக்கு, நிறைய பார்வையாளர்களும் (படிப்பவர்களும்தான்) வரவும், நிறைய மறுமொழிகள் கிட்டவும் தமிழிஸ் தளத்தில் ஓட்டு மழை பெய்யவும் வாழ்த்துகிறேன்.
கலைஞருக்கு கலைஞரே கொடுத்துக் கொள்ளும் புது விருது கண்டுபிடிக்கப்பட வணங்குகிறேன் (அவரை வாழ்த்த வயதில்லை).
தமிழக எதிர்கட்சிகளுக்கு, ஒரு தொகுதியிலாவது “தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பு செய்து” அதனால் வெற்றி கிடைத்துவிட்டது போல் கனவு வர வாழ்த்துக்கள்.
புரட்சிக்கலைஞர் கட்சிக்கு ஏதாவது ஒரு தேர்தலில், ஏதாவது ஒரு தொகுதியில் டெபாசிட் கிடைக்க வாழ்த்துகிறேன்.
உலகில் பன்றிக்காய்ச்சல் குன்றி நன்றிக் காய்ச்சல் பரவ வாழ்த்துகிறேன்.
இந்த பதிவுக்கு தமிழிஸில் இங்கே அமுக்கி நீங்கள் ஓட்டுப்போட என்னை நானே வாழ்த்திக்கொள்கிறேன்.









நல்ல நகைச்சுவையுள்ள வாழ்த்து. தாங்களுக்கும் அவ்வாறே வாழ்த்துக்கள்.
Ravi Suga,
உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி. ரவிசுகா.ப்ளாக்ஸ்பாட்.காம் பதிவுக்கு மிக நிறைய பார்வையாளர்கள் வர உங்களை வாழ்த்துகிறேன்.
//மாணவர்களுக்கு தேர்வில் படிக்காத பாடத்திலிருந்து கேள்வி வராமலிருக்கவும், படிப்பு முடித்தவருக்கு வேலையும், காதலியும் கிடைக்கவும் வாழ்த்துகிறேன்// மாணவர்களுக்குக் கூடுதலாக ஒரு வாழ்த்து. அவுட் ஆஃப் சிலபஸிலிருந்து கேள்விகள் வர வாழ்த்திவிடுங்கள்.
//கோடையில் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கவும், ஆடையில் சம்சாரம் அதிகம் செலவழிக்காமல் இருக்கவும் வாழ்த்துகிறேன்// நச்சுங்கோவ்வ்வ்வ்வ்வ்.
//இல்லத்தரசிகளுக்கு வேலைக்காரி ஒரு நாளும் மட்டம் போடாமல் வருவதற்கும், அட்வான்ஸ் கேட்காமல் இருப்பதற்கும், அவர்களுக்கு பொங்கல், தீபாவளிக்கு வாங்கித்தரும் புடவை பிடிக்கவும் வாழ்த்துகிறேன்// இது கனவில் கூட சாத்தியமில்லை சத்தியமூர்த்தி. வேண்டுமானால் உங்கள் வீட்டு உள்துறை அமைச்சரை கேட்டுப் பாருங்கள்.
உங்கள் கடைசி வாழ்த்து நிறைவேற்றிவிட்டேன் (என் பங்குக்கு).
இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்…!
Happy New Year
@Vijayasarathy R,
மாணவர்களுக்கான (மார்க்) கூடுதல் வாழ்த்து நல்லாயிருக்கு.
மறந்து போன இன்னொரு வாழ்த்து இளைய தளபதி விஜய்க்கு “ஏய், ஏய்ன்னு தொடையை தட்டி கத்தாமல், கேமிராவை பார்த்து பஞ்ச் வசனம் பேசாமல் ஒரு படம் அமைய வாழ்த்துக்கள்”.
வசந்த், uvaraj,
வந்ததற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
ரொம்பவே நல்லாயிருக்கு
வாழ்த்துக்கள்!
Leave your response!
Subscribe
Archives
Thats me
I am just 5 ft 7 inches; so I cannot and do not make any "tall" claims :-)
Recent Posts
Blogroll
Recent Comments
Lucky click! (Click on a word and see what comes up)
Most Commented
Most Viewed
Switch to our mobile site