இன்று வழக்கம்போலத்தான் எழுந்தேன். வழக்கம்போல என்றால், அதிகாலை நாலே முக்கால் மணிக்கு அலைபேசியில் அலாரம் வைத்து, பலமுறை ஸ்னூஸ் செய்து, வழக்கம்போல ஐந்தரை மணிக்கு எழுந்து, வழக்கம்போல வாக்கிங் செய்ய நினைத்து, இமெயில் பார்த்ததும் வாக்கலாம் என்று தள்ளிப்போட்டு…