Home » Chennai, Humor, Tamil-தமிழ், நகைச்சுவை

அப்பிடி போடு அருவாள – தமிழ் பேராமுல்ல

7 November 2009 1,822 views 3 Comments

போதும்  போதும் எனும் அளவுக்கு பட்டப்பெயர்கள் கொடுத்தாகி விட்டது. புரட்சித் தலைவர், புரட்சி தலைவி, கலைஞர், தளபதி, அஞ்சாநெஞ்சன், நடிகர் திலகம், காதல் மன்னன், மக்கள் கலைஞர், சூப்பர் ஸ்டார், கலைஞானி, ஆக்‌ஷன் கிங், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், புரட்சி நடிகர், புரட்சித் தமிழன், புரட்சிக் கலைஞர், லிட்டில் சூப்பர் ஸ்டார், வைகைப்புயல், சின்னக் கலைவாணர், புன்னகை அரசி, புன்னகை இளவரசி, கன்னடத்துப் பைங்கிளி, நாட்டிய பேரொளி, நடிகையர் திலகம், மெல்லிசை மன்னர், இசைஞானி, இசைப்புயல், கவியரசு, கவிப்பேரரசு, என்று தமிழகத்தில் அடைமொழிகள் ஆயிரம்.

வட இந்தியாவில் அடைமொழிகள் இருப்பதாக கேட்டதில்லை.  அவர்களுக்கும் அடைமொழிகள் தமிழர்கள்தான் கொடுக்கிறார்கள்.  உ-ம். அன்னை இந்திரா, மாமா நேரு, அன்னை சோனியா என்று குறிப்பாக அரசியல் தலைவர்களுக்கு நாம் கொடுத்திருக்கிறோம்.

குடும்பத் தொழில்களை வைத்து பார்சிக்கள் பெயர் உண்டு.  ரோனி ஸ்க்ரூவாலா, நானி பால்கிவாலா, பிஜேன் தாருவாலா (ஏன் ரத்தன் ஸ்டீல்வாலா என்று இல்லை என்று தெரியவில்லை) என்று பார்சி பெயர்கள்.

இதைப் பார்த்து யாரோ குசும்பர் ஒருவர் தமிழர்களுக்கு தொழிலை வைத்து பெயர்கள் பரிந்துரைத்திருக்கிறார். இது என் கற்பனையல்ல.  மெயிலில் வந்ததை பகிர்ந்து கொள்கிறேன் (அடைப்புக்குறி குசும்புகள் என்னுடையவை):

மருத்துவர் – வைத்தியநாதன்
பல் மருத்துவர் – பல்லவன்
வழக்கறிஞர் – கேசவன் (ஏன்?)
நிதி நிறுவனர் – தன சேகரன்
இதய மருத்துவர் – இருதயராஜ்
குழந்தை மருத்துவர் – குழந்தைசாமி
மன நல மருத்துவர் – மனோ
”அந்த” மருத்துவர் – காம தேவன்
கல்யாண தரகர் – கல்யாண சுந்தரம்
கண் மருத்துவர் – கண்ணாயிரம்
காது, மூக்கு, தொண்டை – நீலகண்டன்
சர்க்கரை வியாதிக்கு – சக்ரபாணி
சத்துணவு அதிகாரி – ஆரோக்கியசாமி
ஹிப்னாடிச நிபுணர் – சொக்கலிங்கம்
பேயோட்டுபவர் – மாத்ரூபூதம் (நமக்கு தெரிந்த லார்டு லபக்குதாஸ் மாத்ரூ பூதம் ஓட்டிய பேய் வேறு)
மாஜிக் நிபுணர் – மாயாண்டி
கட்டிடக்கலை வல்லுநர் – செங்கல்வராயன்
ஓவியர் – சித்திரகுப்தன்
வானிலை நிபுணர் – கார்மேகம்
உழவர் – பச்சையப்பன்
பூ வியாபாரி – புஷ்பவனம்
சிகை அலங்காரர் – கொண்டையப்பன்
பிச்சைக்காரர் – பிச்சை (ரொம்ப யோசிக்க வேண்டாத பெயர்)
ஒயின் ஷாப் – மதுசூதனன்
குடிகாரர் – கள்ளபிரான் (அப்ப நமக்கெல்லாம் இந்த பேரு தானா?)
கதாசிரியர் – நாவலன்
மேக்கப் நிபுணர் – சிங்காரம் (அசோகனுக்கு பிடிச்ச பெயர், “வைரமும் வரல, பணமும் வரல”)
பால்காரர் – பால்ராஜ்
பால் பண்ணைக்காரர் – பசுபதி
நாய் வளர்ப்பவர் – நாயகன் (அட போங்கப்பா)
பாம்பு பிடிப்பவர் – நாகப்பன் (பல படத்துல நம்பியார் பேரு இல்ல இது?)
மலை ஏறுபவர் – ஏழுமலை (நாங்கள்ளாம் மலை ஏறுவது மதுசூதனன் தயவுல)
ஈட்டி எறிபவர் – வேலாயுதம்
உயரம் தாண்டுபவர் – தாண்டவராயன்
பளு தூக்குபவர் – பலராமன்
சுமோ மல்யுத்த வீரர் – குண்டுராவ்
கராத்தே வீரர் – கைலாசம் (எனக்கு தெரிந்த கைலாசம் பெண்டாட்டி வீசும் கரண்டியைத்தான் பிடிப்பார்)
கிக் பாக்சர் – எத்திராஜ்
பவுலர் – பாலாஜி
ஸ்பின் பவுலர் – திருப்பதி
ஓட்டுநர் – சாரதி
நாடகம் போடுபவர் – சபாபதி
டான்ஸ் மாஸ்டர் – நடன சபாபதி
*******

இவ்வளவு பேரு வச்சீங்களே எல்லாமே ஆண்கள் பெயராவே இருக்கே. தமிழ் பெண்களுக்கு பெயர் வேண்டாமா? அடுத்த ஃபார்வர்டுல அதையும் அனுப்பிடுங்க. கூடவே பெண்டாட்டிதாசர் (மனைவிகிட்ட கேட்டு வைக்கணுமோ?), ஆடிட்டர் (எனக்கு பேர் வேண்டாமா?), அரசியல்வாதி (பட்டமே போதும்கிறீங்களா)

இன்னுமொரு சந்தேகம், இப்படி தொழில்முறையில பேரு வைக்கணும்னா அவுங்க படிச்சு, முடிச்சு துறையை தேர்ந்த பின்னால்தான் வைக்க முடியும் போல இருக்கே. அப்போ ஸ்கூல் அப்ளிகேஷன்ல என்ன பெயர் எழுதறது?

*****
இந்த அறுப்பு பிடித்திருந்தால், இங்கே அமுக்கி தமிழிஸ் தளத்தில் ஓட்டு போட்டு நீங்கள் பெற்ற பேரு தமிழ் வையகம் பெற வையுங்கள்.

Readers also liked

3 Comments »

  • Vijayasarathy R said:

    நல்லா போட்டிங்க பேரு….

    எல்லா சரிதான் எதுக்கு தெய்வமேன்னு கெடக்கற என்பேர இழுத்து விட்டுட்டீங்க தொர?

    நடிகர் பசுபதி பால் பண்ணை வெச்சிருக்காரா? சந்தடி சாக்குல லைட்டா ஒரு கிசுகிசுவ போட்டு அசத்திட்டீங்களே.

    ஃபார்வார்டுனாலும், அதுல உங்க கைவண்ணத்த (கை கழுவினீங்க தானே) பூசி அசத்தியிருக்கீங்க.

    அந்த நம்பியாரு, அசோகனும் நல்ல டமாஸ்.

  • சங்கர் said:

    “வழக்கறிஞர் – கேசவன் (ஏன்?)?

    ஏன்னா அது ‘கேஸ்’ + அவன்

  • triplicani (author) said:

    சங்கர்,

    என் கேஸ தீர்த்து வைத்தவன்(ர்) நீங்கள்!

    நன்றி!

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.