Home » Cricket, Tamil-தமிழ்

சச்சினாலா தோற்றோம்?

6 November 2009 1,610 views 15 Comments
ஹாய்! Hi! you have been here atleast 3 times before; don't you think we have started liking each other? Stay updated when I update this site by subscribing to the site feed. Thanks! நன்றி

Enter your email address: Delivered by FeedBurner


இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு சவால் விட்டு நிர்ணயித்த இலக்கு 351.

50 ஓவர்களில் 351 ரன்கள் என்பது மிகவும் கடுமையான, ஒரு ஓவருக்கு சராசரியாக 7.50 ரன்கள் எடுத்தால் மட்டுமே அடையக்கூடிய இலக்கு. என்னதான் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தாலும் தொடர்ந்து வேகமாக விளையாடினால் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும்.

அதுவும் பீல்டிங்கில் கேட்ச் விடாகண்டர்களும், போலிங்கில் ரன் கொடாகண்டர்களும் நிரம்பிய ஆஸ்திரேலியா போன்ற எதிரியை சமாளித்து இத்தனை ரன்கள் எடுப்பது என்பது 50 ஓவர்களில் 450 ரன்கள் எடுப்பதற்கு சமம்.

சாதாரணமாக விளையாடுவதை விட இரண்டு மடங்கு சிறப்பாகவும், சாமர்த்தியமாகவும் விளையாட வேண்டியது அவசியம். நல்ல அஸ்திரங்கள் இல்லாமல் ஆஸ்திரேலியர்களை வெல்ல முடியாது.

நம்முடைய அஸ்திரங்கள் ஷேவாக், கம்பீர், யுவராஜ், தோனி, ரய்னா இவர்களுடன் ப்ரம்மாஸ்திரமாக சச்சின். ஷேவாக் வழக்கமான பாணியில் தீபாவளி 1000 வாலா போல விளையாடிவிட்டு போனாலும் பின்னே வந்த கம்பீர், யுவராஜ், தோனி ஆகிய அஸ்திரங்கள் இன்று 160 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே பொய்த்தன. 162க்கு நாலு மாட்டிக்கொண்டிருந்த இந்தியாவுக்கு இன்னும் வெற்றி பெறலாம் என்று நம்பிக்கை இருந்தது, காரணம் சச்சின் என்கிற ப்ரம்மாஸ்திரம் ஆஸ்திரேலியர்களை பந்தாடிக் கொண்டிருந்ததுதான்.

எல்லோரும் பெவிலியனுக்கு நடையை கட்டிய பின்னும் 7 அடித்தவுடன் 17 ஆயிரம் தொட்ட சச்சின் ரய்னாவை சரியான வழியில் நடத்தி புது நிறுவனம் கண்டு இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அருகே ஓட்டி வந்து விட்டார். ”சச்சின் அடிச்சா இந்தியா ஜெயிக்காது” என்று சச்சின் பழிப்போரில் முதல் வரிசையில் நிற்கும் நான் கூட ”சரிதான் இன்னிக்கு மனுஷன் நம்ப முகத்துல கரி பூசப்போறார்” என்று நினைத்துக் கொண்டு ஒரு மன்னிப்பு பதிவு போட வேண்டும் என்று மனதிற்குள் பதிவுக்கான வார்த்தைகளை தேட துவங்கிவிட்டேன். அப்படி இருந்தது சச்சினின் சூறாவளி ஆட்டம்.

ரய்னா வெளியேறவும் கொஞ்சம் பயம் கவ்வியது. இருப்பினும் ஜடேஜாவுக்கும் வழிகாட்டி சச்சின் நம்மை வெற்றி இலக்குக்கு 19 ரன்கள் மட்டுமே தேவை என்று கொண்டு வந்து விட்டார். அவ்வளவுதான் இன்னும் ஓரிரு ஓவரில் வெற்றி என்று நினைக்கும்போது சச்சின் மெக்கேயிடமிருந்து ஒரு பவுண்டரி சம்பாதிக்க நினைத்து தூக்கியதில் வாட்சன் கையில் பந்து விழுந்தது, நம் கண்ணில் மண் விழுந்தது.

ஜடேஜா மடத்தனமாக ஓடியும், அவருக்கு பின் வந்தவர்கள் பிட்சில் ஓடியோ ஓடாமலோ ஆடி அவுட்டாகி பெவிலியனை நோக்கி ஓடுவதிலேயே குறியாக இருக்க வெறும் மூன்று ரன்களில் இந்தியா தோற்றதில் ஆஸ்திரேலியா இந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மூன்றுக்கு இரண்டு என்று முன்னேறிவிட்டனர்.

சச்சின் அவுட்டான பின் நமக்கு தேவையாக இருந்தது பத்தொன்பதே ரன்கள். அதை மற்ற 4 பேரும் சேர்ந்து அடித்திருந்தால் சச்சினை பாராட்ட நாடே புறப்பட்டிருக்கும்.

அது நடக்காததால் நான் உள்பட அத்தனை சச்சின் துவேஷிகளும் மேட்ச் தோல்வியான கோபத்தில் சச்சின் தனியாக ஆஸ்திரேலிய பந்தர்களை அற்ப பதர்களாக்கி பந்தாடி 175 (141 பந்துகள், 19 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) அடிக்க மற்ற பத்து தின்னபோத்து தடிராமன்களும் எக்ஸ்ட்ரா துணையுடன் 172 மட்டுமே அடித்திருப்பதை ரொம்ப கன்வினியண்டாக மறந்து இந்த தோல்வி சச்சினால் மட்டுமே ஆனது போல் ”சச்சின் எப்பவுமே இப்படித்தான், He never finishes”, ”இன்னும் 20 ரன்தானே தள்ளி தள்ளி அடிச்சிருக்கலாமே”, “சரியான சமயத்துல தூக்கி குடுத்துட்டான்” என்று சச்சிநிந்தனை செய்ய ஆரம்பித்து விடுகிறோம்.

இன்று கூட மேட்ச் முடிந்ததும் எழுத்தாளரும், நண்பருமான  சொக்கன் சாட்டில் வந்து வருத்தத்துடன், ஒரு பாட்டம் நம் தோல்வியை பற்றி பேச வந்தார். நான் சச்சின்தான் காரணம் என்று கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல் சாட்ட, “யூ டூ ப்ரூட்டஸ்” என்று சொல்லாத குறையாக அழுகையுடன் சாட்டில் பதில் கூட சொல்லாமல் மூடு இன்னும் ஆஃப் ஆனதில் ஆஃப்லைனாகி காணாமல் போனார்.

அதற்கு பிறகுதான் கொஞ்சம் யோசித்து பார்த்தேன்.

உண்மை என்ன? சச்சினாலா நாம் தோற்றோம்? சச்சின் நன்றாக ஆடியதால் மட்டுமே நாம் 150, 160 என்று எல்லா ஆளும் அவுட்டாகாமல், கிட்டத்தட்ட வெற்றிபோல கொண்டாடப்படவேண்டிய வெறும் 3 ரன் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறோம்.

சச்சின் எப்படி அவுட் ஆனார்? இளம் வீரர் மற்றும் டென்ஷன் பேர்வழியான ஜடேஜாவை டென்ஷனில் இருந்து காப்பாற்ற மீதமுள்ள ரன்களை தானே எடுத்து விடலாம் என்ற முயற்சியில்தானே? அவர் விரட்டிய பந்து வாட்சன் கையில் விழாமல் பவுண்டரிக்கு போயிருந்தால் (ஓரிரு மீட்டர்தான் வித்தியாசம், இன்னும் சரியாக தட்டியிருந்தால் பவுண்டரிக்குதான் பந்து போயிருக்கும்) ”சூப்பர் ஷாட்” என்று அவரை கொண்டாடியிருக்க மாட்டோம் நாம்?

சச்சின் டென்டுல்கர் என்ன சாதாரண கிரிக்கெட் வீரரா?

* இந்த மேதை ஆட்டக்காரர்தான் கடைசி ஓவரில் 4 எடுத்தால் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி என்ற நிலையில் பந்தை பிடுங்கி தானே அந்த ஓவரை போட்டு இந்தியாவுக்கு ஹீரோ கப் வாங்கித்தந்தவர்

* இவர்தான் 1999-ல் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் நடந்தபோது தன் தந்தை மரணம் அடைந்த துக்கம் தீருவதற்குள் ஈமக்கிரியைகள் முடிந்தவுடன் மீண்டும் நாட்டுக்காக விளையாட விமானம் ஏறியவர்

* இவர்தான் தன்னந்தனி சேனையாக ஷார்ஜாவில் ஆஸ்திரேலியர்களை கதிகலங்க அடித்தவர்

* இவர்தான் யாருமே பெறாத அளவுக்கு ஆட்டநாயகன் விருதுகளை பெற்றவர் (ஆட்டத்தின் வெற்றியில் முக்கிய பங்கு இல்லையென்றால் ஆட்ட நாயகன் விருது எப்படி கிடைக்கும்?)

* கிட்டத்தட்ட 159 டெஸ்ட் மேட்ச்சுகள், 435 ஒருநாள் பந்தயங்கள் என்று விளையாடி தன் வாழ்நாளில் 1000க்கும் மேற்பட்ட நாட்களை நம் மிகவும் விரும்பும் விளையாட்டுக்கு அளித்தவர்

அவருடைய சிறப்பான ஆட்டத்தை பாராட்டாமல் அவர் அவுட்டானதுதான் நம் தோல்விக்கு காரணம் என்று நான் சொன்னதில் கொஞ்சமும் நியாயம் கிடையாது. தோல்வி தந்த கோபத்தில் நான் அப்படி அநியாயமாக சச்சினுக்கு எதிராக பலமுறை நினைத்தும், பேசியும் இருக்கிறேன். இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

இன்று மேட்ச் முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் சச்சின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அவர் முகத்தில் ஆட்டநாயகன் விருது பெற்ற மகிழ்ச்சி இல்லை. அவருக்கு தான் எடுத்த 175 பெரிதாக தெரியவில்லை, எடுக்காத மூன்றுதான் முகமெங்கும் இருந்தது.

***********

இந்த பதிவை தமிழிஸ் தளத்தில் ஓட்டுப் போட்டு பிரபலமாக்க இங்கே அமுக்குங்கள்

இதுவும் உங்களுக்கு பிடிக்கலாம் (நம்பிக்கையில் தானே வாழ்க்கை?)

Bookmark and Share

Readers also liked

15 Comments »

  • Vijayasarathy R said:

    //அவருக்கு தான் எடுத்த 175 பெரிதாக தெரியவில்லை, எடுக்காத மூன்றுதான் முகமெங்கும் இருந்தது.// அப்பட்டமான உண்மை.

    சச்சின் நெவர் ஃபினிஷஸ் என்று நேற்று நீங்கள் சாட்டியபோது நான் சொல்ல நினைத்த வார்த்தைகள். இருந்தும் ஒரு உண்மை உண்மையாகவே இருக்கிறது. தலைகீழாக நிறு தண்ணி குடித்திருந்தாலும், டம்ளரில் உள்ள தண்ணியை முழுமையாக குடித்து முடிக்கவில்லை என்பதை தலைகீழாக என்பதனால் மாற்றமுடியுமா?

    நான் அவரின் பரம விசிறியாக இருந்தாலும், இது போன்ற தருணத்தில்தான் நான் அவரின் 20 வருட அனுபவத்தை நினைத்து பார்க்க வேண்டியுள்ளது.

    ஆனால் இந்தியா தோற்றதைவிட, சச்சின் அந்த 19 ரன்களை முடிக்காமல் போனதைவிட, சச்சின் 200 தொட்டு, 17000த்தோடு இதையும் சேர்த்து இன்னொரு சாதனை புரிவார் என்று எதிர்பார்த்தேன். அப்படி எதிர்பார்த்ததினாலேயே மேட்சை (அதிருஷ்டம் காரணமாக) விட்டுவிட்டு பார்த்தேன்.

    நல்ல ஆய்வு செய்துள்ளீர்கள். இதுபோல கொஞ்ச வருடங்களுக்கு முன்பு இந்தியா டுடேயிலேயோ அவுட்லுக் பத்திரிகையிலெயோ இது போன்ற ஒரு ஆர்ட்டிக்ள் வந்ததாக நினைவு. அதைவிட இது அருமை (தமிழ் என்பதால்).

  • RANJITH said:

    உண்மையில் சச்சின் மட்டும் இல்லையென்றால் இந்தியா மொத்தமாக எத்தனை ரன்கள் எடுத்திருக்கும் ஒரு 170-180 அவ்வளவுதான் ஏனென்னறால் ஆட்டத்தை பார்த்தவர்களுக்கு தெரியும் அணித்தலைவர் எவ்வளவு நிதானமாக பொறுமையாக லாவகமாக அடித்து அடித்து ஆடினார்???(என்ன புதுக்கதை) பின்ன 350ல 6ரன் அடிப்பதென்றால் சும்மாவா? சச்சின் என்ன செய்வாரு இதில?

  • RANJITH said:

    உண்மையா கவலையா இருந்ததப்பா சச்சின் அப்படி ஆடியும் இப்படி சொதப்பிட்டாங்களே

  • manthiram said:

    Anyhow it was a wonderful game for India to fight with.

    We cannot blame anybody.

    Hope we will do fine in the next 2 games.

  • கனககோபி said:

    சச்சின் என்பவர் மாபெரும் மேதை…
    எனக்கு இந்திய அணியைப் பிடிக்காது தான்…
    ஆனால் சச்சின், ட்ராவிட் போன்ற ஜாம்பவலான்களை நிறையவே பிடிக்கும்.

    சச்சின் இந்தளவுக்கு போட்டியைக் கொண்டு செல்வார் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை.

    சச்சின் நெவர் பினிஷஷ் என்பது பிழை…
    சச்சினின் 45 சதங்களுள் 12 அல்லது 13 சதங்கள் தான் தோற்ற போட்டிகளில் (நேற்றைய போட்டி போல தனியே நின்று போராடியவை) பெற்றவை…
    ஏனைய 33 அல்லது 32 சதங்கள் அணிக்கு வெற்றியையெ பெற்றுத் தந்துள்ளன.

    யார் என்ன சொன்னாலும் சச்சின் என்பவர் கிறிக்கெற் உலகம் தந்த மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவர்.

  • triplicani (author) said:

    @கனககோபி,

    உங்கள் தமிழ் ரொம்ப பிடித்திருக்கிறது. “துடுப்பாட்ட வீரர்” அடுத்த முறை உபயோகிக்கிறேன். சச்சினை பற்றிய உங்கள் கூற்று மிகவும் உண்மை. இந்திய கிரிக்கெட்டின் முகம் உலகில் உயர்ந்திருப்பதற்கும், கோடிக்கணக்கில் ரசிகர்கள் கிரிக்கெட் ஆட்டம் பார்க்க குவிவதற்கும் சச்சின் முக்கிய காரணம்.

  • கிஷோர் said:

    சூப்பர் பதிவுங்க. கடைசி பாயிண்ட்டுகளை படிக்கும்போது புல்லரித்தது.

    சச்சினை குறை சொல்பவர்களின் வாதம் எப்படி இருந்தாலும், நேற்றைய ஆட்டத்தில் அவரை(மட்டும்) குறைசொல்வது மடத்தனம்

  • T.P.ANAND said:

    Sachin is a great. He has always played well for India and the re ords speak for his contribution.

  • நிலாரசிகன் said:

    சச்சின் பற்றிய என் பகிர்வு இங்கே:

    http://www.nilaraseeganonline.com/2009/11/blog-post_06.html

  • anand said:

    உண்மையிலேயே சச்சினலதான் இந்திய தோற்றது.

    உயிரை பிடுசிட்டு நேத்து மேட்ச் பாத்தேன்.

    சச்சின் 200 runs + இந்தியா வெற்றி .

    நினைக்கவே எப்படி இருக்கும் ?

    ஆனா எல்லாம் போச்சே!

    மேட்ச் மட்டும் வென்றிருந்தால்

    எல்லோருக்கும் e-mail அனுப்பலாம் என்று நினைத்திருந்தேன்

    “சிங்கம் ஒன்று புறப்பட்டதே ”

    இனி எப்ப சச்சினுக்கு வாய்ப்பு கிடைக்கும் இந்த மாதிரி?

    சச்சினை குற்றம் சொல்ல அல்ல இது. சச்சின் மீது உள்ள அசைக்க முடியா நம்பிக்கை.

    வேற யார்கிட்டயும் நாங்க எதிர்பாக்கல.

    தலைவர் சூப்பர் ஸ்டார் படம் என்றால் அது கண்டிப்பாக பட்டய கிளப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாதிரி தான் இதுவும்.

    வருத்ததுடன்
    ஆனந்த்

  • triplicani (author) said:

    ஆனந்த்,

    வாங்க, வணக்கம். நானும் கூட சச்சின் 200 ரொம்ப எதிர்பார்த்தேன். என்னோடு உட்கார்ந்து மேட்ச் பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு பையனுடன் சேர்ந்து அவருடைய அதிகபட்ச ஸ்கோரான 186க்கு இன்னும் எத்தனை ரன்கள் என்று கவுண்டவுன் செய்து கொண்டிருந்தேன். சச்சின் 200 நாட் அவுட் ஆஸ்திரேலியா நாக் அவுட் மற்றும் பாண்டிங் நாக்கு அவுட் என்று மனக்கோட்டை கட்டினேன். கோட்டையை இடித்தவர் சச்சின் அல்ல கோட்டை கோட்டை விட்ட ஜடேஜாதான் என்பதே உண்மை.

  • Chandrasekaran said:

    தோற்றத்துக்கு ஜடேஜா ஒரு முக்கிய காரணம். போன மேட்ச்லதான் தேவையே இல்லாத ரன் அவுட். இப்பவுமா???

    சச்சினுக்ககவாவது வெல்லனும்னு ஒரு வெறி வேண்டாம்???

  • Thirumalai Kandasami said:

    பிரவீன் குமார் ஒரு சிக்ஸர் போட்டதும் , எழுந்து உட்கார்ந்தேன் .ஆனால்?,
    ஜடேஜா கடுப்ப கெளப்பி விட்டுட்டார்.இறுதி வரை இந்தியாவிற்கு வாய்ப்பு இருந்தது.

    ஒன்றை மறந்து விட்டிரே நண்பரே?ஆடுவது,கிட்டதட்ட ஆஸ்திரேலியா – A அணி தான்.
    பாண்டிங் ன் தலைமையை நான் பாராட்டுகிறேன் .

    http://enathupayanangal.blogspot.com/2009/10/blog-post.html

  • triplicani (author) said:

    திருமலை கந்தசாமி,

    பிரவீன் சிக்ஸரில் நாம் மட்டுமல்ல சச்சின் கூட நம்பிக்கையாக இருந்திருப்பார். ஜடேஜாவின் கோடு தாண்டல் சீதையின் கோடுதாண்டலுக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை :)

    அது என்ன கந்தசாமி கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா, அப்ப நாங்களும் எங்க டீம் கிட்டத்தட்ட இந்தியா என்று சொல்லலாமா? அவர்கள் கழித்துவிட்டவர்கள் போன மேட்சுகளில் காலை வாரி தலையை சொறிந்து நின்றவர்கள்தானே? இந்தியா எத்தனை மேட்சுகள் சச்சின் இல்லாமல் ஆடியிருக்கிறார்கள்? ”அப்டியெல்லாம் பேசப்டாது”

  • Uma said:

    Hi,

    Sachin – No doubt he is the man of victories – professionally as well as personally but for India – we need at least 5 men to play…..

    We failed in bowling, fielding, batting and only one man who performed in that match was Sachin. 350-4 Kevalammaana Bowling….

    What happened to the next match, we lost the series too na? is it because of Sachin? Sachin scored only 10 runs, what about the other pillars of India?

    SHAME ON US ! ! ! We should boycott Cricket….

    See Saina, Sania, Gopi…. Vichu (Anand) …..

    Satyamurhty Avargalea,

    Sachin Pathi oru sarithiram ezhudhungal, India vin Tholvigal Niraiyaa varrum Varungaalathilum. Karanam Sachin-aga irukkadhu, India-vin Cricket Nambikkai Natchathiram daan Sachin…..

    Cricket Aattathin Nunnukkangallai Arivadhil Avarai Pol Vallavar Yaarenum Undaa?

    35 Vayadhil – 47 Over varai villaiyadi puyal 3 over irundu irundaal kandippaga india jeyithu irukkum, aanal 3 over thaakku pidikka kooda mudiyaadaa nammavaragallai enna solla???

    Singathin Kaalgal Pazhudu pattalum Seetram Kuraivadhillai Endra Pazhaiyaa padaal ninaivirkku varugiradhu….

    200 miss aanadhu mattum daan varuttam sir, india thottradhu thevai daan koncham midappil irukkirrargal Dhoni thalamayil-ana Team, Enda adi koncham manasila irundaal nalladhu daan…

    Sachin-in Centuriyaal India Virku Pugazh daan,
    Sachin 200 – Vandu India Thotri Irundaal Kooda Pugazh Daan.
    India-vin Vettriyaal Sachin Pugazh Perum Kaalaam Varumaa?
    Oru Kai Oosai Varadhu Enbadarkku Edai vida veru nalla saandru veru edhum Undoo?

    Sachin-aal India Thootra Matchugallai paarungaal, Mattravargal Seriyaga villayadadadaal daan Naam Thotru Poi iruppom.

    Naanum Sachin-in Theevira rasigai enbadaal sollavillai…..

    Eni Oru Sachin India-virku illai, evvalavu sogathilum than thozhillai, bayabakthiyudan seibavar daan Sachin enbadarku oru example, his century against Bangaldesh after his fathers demise in the world cup. Cricket Namakku oru pozhudhu pookku sillarkku sudattam… Sachinirkku Swasam ! ! !

    Sachin-in Aasai daan – World Cup adu oru Thavamaaga irukkum tharunathil, enda 175 knock against aussie’s, while chasing is the best from him….

    Adu World cup vaanginaal theerndu vidumaaa??? Naam Vazhum varai nammudan Veesum

    World Cup-oda Number One vaangallaam nu Dhoni ku oru siru ennamo endru thonugiradhu……

    Number one – oru nalaikku varuvom -oru nalaikku mattum daan varuvomoo???

    Suvrasiyam kuraiyaamal ungallal eppadi ezhuda mudigiradhoo! ! Pogirra pookil Ungalukkum theevira rasigai agi viduvean pola irukku ! !

    Late a Padichaalum Latest a unga rasigai list la irukkean

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.