வீடு வரை உறவு – ரீமிக்ஸ் கலாட்டா
பாதகாணிக்கை (வருடம் 1962 ) என்ற படத்தில் வரும் காலத்தால் அழிக்க முடியாத கவியரசு கண்ணதாசன் பாடல் வரிகள்:
ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன…?வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)
கவியரசரின் இந்த பாடலை, நான் கல்லூரியில் படிக்கும்போது “உல்டா” செய்தேன். இன்று பழைய நோட்டுகளை நோட்டம் விட்ட போது கிடைத்தது.
வலையில் ஏற்றி அழியாப் புகழ் பெற இதோ நான் இயற்றிய அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சமூக நலன் கொண்ட பாடல்:
வாங்கிய பிராண்ட் என்ன? சொல்லிய கடன் என்ன?
திருட்டு தம் அடித்ததென்ன? திட்டுதான் வாங்கியதென்ன?
வாய்விட்டு புகை போனால், கூடவே வருவதென்ன?வீடுவரை பீடி
வீதி வரை சிகரெட்
காடு வரை சுருட்டு
கடைசி வரை கேன்சர் (வீடு)போடும் வரை பீரு
போதை ஏறும் பாரு
ஊதித் தள்ளும் ஸ்மோக்கு
நாத்த சட்டை ஆக்கும்
நாத்த சட்டை ஆக்கும் (வீடு)விஸ்கிக்கு சைட் டிஷ்
வறுத்து வச்ச கடலை
ஊத்திக்கினு படுத்தா
போத்திக்கவே வேணாம்
போத்திக்கவே வேணாம் (வீடு)சென்றவனை கேட்டால்
பீடி பிடி என்பான்
வந்தவனை கேட்டால்
காஃபி குடி என்பான்
காஃபி குடி என்பான் (வீடு)விட்டு விடும் புகை
சுட்டு விடும் நெருப்பு
ஃபில்டர் வந்த பின்னே
தூக்கி போட்டு நசுக்கு
தூக்கி போட்டு நசுக்கு (வீடு)
இதெப்டி இருக்கு?









- என். சொக்கன்,
பெங்களூர்.
சூப்பருங்கண்ணா……
”வாங்கிய பிராண்ட் என்ன? சொல்லிய கடன் என்ன?
திருட்டு தம் அடித்ததென்ன? திட்டுதான் வாங்கியதென்ன?
வாய்விட்டு புகை போனால், கூடவே வருவதென்ன?” ஆரம்பமே அசத்தல்…
“சென்றவனை கேட்டால்
பீடி பிடி என்பான்
வந்தவனை கேட்டால்
காஃபி குடி என்பான்
காஃபி குடி என்பான் (வீடு)” – காஃபிக்கு பதிலாக ”ரம்மை குடி” என்றிருந்தால்?
நீங்கள் யுவனை சந்தித்தால், இதை முழு ரீமிக்ஸ் ஆக்கிவிடுவார்.
விஜயசாரதி,
//காஃபிக்கு பதிலாக ”ரம்மை குடி” என்றிருந்தால்?//
பாட்டு “ரம்”மயமா இருக்கும்.
//நீங்கள் யுவனை சந்தித்தால், இதை முழு ரீமிக்ஸ் ஆக்கிவிடுவார்.//
ஆமாம். நடுவுல ராப் சத்தத்தோட. அதுவே ரஹ்மானிடம் விட்டா, புது இசையோட பழைய டி எம் எஸ் பாட்டையும் பொன்மகள போல ஒட்டி மனசுல தொட்டு பூ மலர வச்சிடுவார்.
@சொக்கன்
பாட்டு ரீமிக்ஸ் பண்ணி முடித்த பிறகு புதுவரிகள் தோணுது. சிகரெட்ட பத்தி பாட வந்துட்டு ஃபிகர்களையும், ரஜினியையும் விட்டுட்டமேன்னு தோணுது.
kalakkal sir. paatu mattum alla, tamizh blog kooda. – uvaraj
I have added your blog to my blogroll at http://www.laksframes.com – hope you won’t mind. Let me know otherwise.
@Uvaraj,
Thank you. Wish you all the best.
Nalla irrukku… nalla time pass aagum … padicha..
keep writing
Leave your response!
Subscribe
Archives
Thats me
I am just 5 ft 7 inches; so I cannot and do not make any "tall" claims :-)
Recent Posts
Blogroll
Recent Comments
Lucky click! (Click on a word and see what comes up)
Most Commented
Most Viewed
Switch to our mobile site