Home » A R Rahman, Illaya Raja, Music, Tamil-தமிழ், படித்ததும், பிடித்ததும்

ராஜாவா, ரஹ்மானா? ராஜாவை வென்ற ரஹ்மான்

3 September 2009 2,287 views One Comment

ராஜாவா, ரஹ்மானா என்று இருவருடைய விசிறிகளும் விவாதித்துக் கொண்டிருக்கும் போது, ரஹ்மான் ரசிகர்களுக்கு லட்டு மாதிரி கிடைத்திருக்கிறது ரஹ்மான் பெற்றிருக்கும் ஒரு புது விருது.

இளையராஜாவின் பாடல்களோடு போட்டியிட்டு ரஹ்மானின் பாடல்கள் ஆஸ்கர் நாயகனுக்கு ஒரு புது வெற்றியை தந்திருக்கின்றன.

ஆமாம்.

ஏ.ஆர். ரஹ்மான் அமெரிக்காவில் நடத்தப்பட்ட “Grassroot Grammy” என்னும் விருதை வென்றிருக்கிறார் என்கிறது ஐ பி என் லைவ்.

ரஹ்மான் வென்றது தல அஜித் நடித்து வெற்றிகரமாக ஓடிய “காட் ஃபாதர்” படத்தின் இசைக்காக – சிறந்த இந்திய பாடல் தொகுப்பு பரிசு.   இந்த விருதுக்கான போட்டியில் இசைஞானி இளைய ராஜாவின் பாடல்களும் இருந்தன என்கிறது ஐ பி என் லைவ்.

காட் ஃபாதர் பட இசைக்காக விருது வென்ற ரஹ்மானின் ‘இன்னிசை அளபெடையே” மற்றும் “இளமை (ரீமிக்ஸ்)”  ஆகிய காட் ஃபாதர் படப் பாடல்கள் முறையே மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடங்களையும் பிடித்திருக்கின்றன.

இளையராஜாவின் ”இசைப்பயணம் – லைவ் இன் இத்தாலி” சிறந்த பாடல் தொகுப்புக்கான மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

இந்த செய்தியை படிக்க – இங்கே சுட்டுங்கள்

தமிழிஸில் ஓட்டுப்போட இங்கே அழுத்துங்கள்

Readers also liked

One Comment »

  • Vijayasarathy R said:

    ரஹ்மான் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் இளையராஜாவும் ரஹ்மானும். இதில் யார் வெற்றி பெற்றால் என்ன? அவர்களே ஒருவரை ஒருவர் புகழ்ந்து மதித்து கொண்டிருக்கும் போது நாம் இன்னும் கூட இது போன்று இவர் ஜெயித்தார் அவர் தோற்றார் என்று சொல்லிக்கொண்டிருப்பது சரியன்று.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.