ஜெயா டிவி 10 வருடங்கள்
இன்றுடன் (22/8/2009) ஜெயா டிவி பத்து வருடங்களை முடித்து பதினொராவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது.
இன்று காலை முதல் இந்த சாதனை சார்ந்த விளம்பரங்களும், பிரபலமானவர்களின் (சோ, சச்சு, இந்து முன்னணி ராம கோபாலன், மூ.மு.க. சேதுராமன், Y.Gee. மஹேந்திரா, அதிமுகவை ஆதரிக்கும் முஸ்லீம் லீக் பிரிவின் தலைவர்) வாழ்த்துக்கள் ஆகியவை நிகழ்ச்சிகளுக்கிடையே காணக்கிடைத்தது.
உண்மையில் இது பெரிய சாதனையா? கொஞ்சம் யோசித்து பார்த்தேன். ஜெயா தொடங்கி பத்து வருடங்கள் என்றால், 1999 தொடங்கப்பட்டது.
என்ன சொல்லி சப்பை கட்டினாலும், ஜெயா ஒரு கட்சி சார்ந்த ஊடகமாகவே இருந்து வந்திருக்கிறது. அதனால் ஜெயா டிவிக்கு கட்சிக்காரர்களிடம் வரவேற்பு இருந்தாலும் ஒரு நிறுவனமாக பார்க்கும் போது கட்சி முத்திரை என்பது பின்னடைவுதான் தரும்.
பத்து வருடங்களில், பத்துக்கு பத்து மத்தியில் சாதகமான ஆட்சி இல்லாததும், பத்தில் ஐந்து மாநிலத்தில் எதிர்கட்சி என்பதும், கட்சி சார்ந்த ஒரு ஊடகத்துக்கு சாதகமானதில்லை.
மக்கள் தொலைக்காட்சியையும், தமிழ் செய்தி தொலைக்காட்சி சேனல்களையும் நீக்கி விட்டு பார்த்தால் அனைத்து தமிழ் சேனல்களும் 75% சினிமா சார்ந்தே செயல்படுகின்றன.
சினிமா சார்ந்து செயல்படுகையில், பிரபல நடிகர், நடிகைகளின் ஆதரவு, அவர்களின் படங்கள் ஆகியவை இல்லாமல் தொலைக்காட்சியை நடத்துவது கடினம்.
பிரபல நடிகர்களில் பலரும் திமுக சார்பாக இருப்பதாலும், சிலர் அதிமுக சாயம் படாமல் இருக்க நினைப்பதாலும், மேலும் சிலர் திமுக குடும்பம் / சன் பலம் வாய்ந்த சன் குழுமத்தை பகைத்துக் கொள்ளாமல் இருக்க நினைப்பதாலும் அதிமுக சாயம் கொண்ட ஜெயாவுக்கு அவர்களின் ஆதரவு என்பது மிகக் குறைவுதான். அரசியல் சார்பில்லாததால் இந்த பிரச்சினை விஜய், ராஜ் போன்றவற்றுக்கு இல்லை. மிக அதிக அரசியல் சார்பும், அதிகார பலமும் இருப்பதால் கலைஞர் தொலைக்காட்சிக்கும் இந்த பிரச்சினை இல்லை.
ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், வடிவேலு, விவேக் போன்றவர்கள் ஜெயா நிகழ்ச்சியில் காணக்கிடைப்பது மிகவும் அபூர்வம். எனக்கு தெரிந்து இவர்கள் ஜெயாவில் தோன்றியது வீரப்பன், வீராணம், வீசிடி குறித்து ஜெயலலிதாவுக்கு நடந்த பாராட்டுவிழா ஒளிபரப்பில்தான். அதிலும் சத்யராஜ் தோன்றவில்லை என்று நினைக்கிறேன்.
இது தவிர, சன் தன் பணபலம் கொண்டு சிறப்பான வியாபார யுக்தியாக 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பிரபல படங்களை “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறைக்காக” வாங்கிவிடுவதால் அது போன்ற படங்களை திரையிட்டு பார்வையாளர்களை ஜெயாவால் ஈர்க்க முடிந்ததில்லை. சன்னே ”இந்தப் படம் தொலைக்காட்சிக்குக்கூட லாயக்கில்லை” என்று ஒதுக்கிய படங்கள்தான் ஜெயாவை அடைந்திருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு நிலையில், ஜெயா நிர்வாகம் மிகத் திறமையாக செயல்பட்டு, திட்டமிட்டு தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டது.
பிரபல நடிகர் நடிகைகளோ, படங்களோ கிடைக்காது என்ற நிலையில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள், பாடல் கட்சிகளை வைத்துக்கொண்டும், பெரும்பாலும் பிரபல நடிகர், நடிகைகள் தேவையில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளை அமைத்துக்கொண்டும், பலதரப்பட்டவரையும் கவரும் ஜனரஞ்சகமான, சினிமா சாராத நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியும் ஜெயா வெற்றி கண்டிருக்கிறது என்று சொல்லலாம்.
என் நினைவில் நின்ற/ நிற்கும் ஜெயா நிகழ்ச்சிகள்:
1. வீட்டுக்கு வீடு லூட்டி (’தமிழ் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக” சிறப்பான நகைச்சுவை தொடர். என் பள்ளி நண்பன் (சுதேசி ஐயர் சூப்பர் ஹிட் மேடை நாடகம் எழுதிய) சித்ராலயா ஸ்ரீராம் சில தினங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறான் என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி)
2. சஹானா
3. சவால்
4. கிச்சு கிச்சு டாட் காம்
5. கோலிவுட் கோர்ட் (அபிஷேக்கு சபாஷ்)
6. இதயம் வெல்த் 20/20
7. ஜாக்பாட்
8. சிம்ரன் திரை
9. ஹாசினி பேசும்படம்
10. SPB – என்னோடு பாட்டு பாடுங்கள்
11. திரும்பிப் பார்க்கிறேன் (போன வாரம் 1-ல் குறிப்பிட்ட என் நண்பனின் அப்பா சித்ராலயா கோபு ஆர்பாட்டமில்லாமல், அடக்கமாக திரும்பிப் பார்த்தார்)
12. சொக்குதே மனம்
13. தேன்கிண்ணம் / சிறப்பு தேன்கிண்ணம்
14. நேர்முகம் (ரபி பென்னார்ட்)
15. எங்கே பிராமணன்
16. மார்கழி மகோத்ஸ்வம்
17. சுப்ரபாதம் (தினமும் விடிகாலையில்)
18. ஜெயா செய்திகள் – எதிர்க்கட்சி நிலையில் இருந்து அரசியல் செய்திகளுக்காக
19. செல்லமே, செல்லம்
ஏதேனும் விட்டிருந்தால் பின்னூட்டத்தில் சேர்த்துவிடுங்கள்.









என்னைப் பொறுத்தவரை தாடி வைக்காத டாடிக்கும் சன்னைவிட பிரகாசமாக (மத்திய அரசில்) இருக்கும் சன்னுக்கும் இடையே இந்த பத்தாண்டு என்பதே பெரிய சாதனைதான்.
ஜெஜெ டிவியை நாம் யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது சன்னை விட மதரே நன்றாக ஜொலித்திருந்தார். பிறகு நடந்தது நான் அனைவருக்குமே தெரியும்.
விட்டுப்போன சீரியலில் ஏதோ ஒரு “கதை நேரம்” ஒன்று நினைவில் வருகிறது. “அண்ணி” யும் கூட நல்ல சீரியலே. “கல்கி”யும் ஒன்று.
இதில் பெரிய வேடிக்கை நான் இந்த நிகழ்ச்சி எதையுமே முழுவதும் பார்த்தது கிடையாது.
கோவில்கள் எல்லாம் சுட்ரி வலம் வருவதில் ஜெயா ரியலி Great.
…. விஜய் டிவி வழியில் அல்லது வியாபார வழியாவது கை கூடியிருக்க வேண்டும் …… எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போகிறார் என்ற போக்கு மாற வேண்டும் ….
ராம்,
அது சரி! மார்கழி மாசம் சாயந்தரம் கச்சேரி பண்றாங்களே! பார்த்ததில்லையா?
சன், கலைஞர் தவிர மற்றவர்கள் அனைவரும் இரவு பதினொரு மணிக்கு பின் எக்ஸர்சைஸ் மெஷின், வெஜிடபிள் கட்டர், ஹனுமான் யந்திரம், நியுமராலஜி, சித்த வைத்தியம் விளம்பர நிகழ்ச்சி செய்வதேனோ?
நான்கூட சத்தியமூர்த்தி.காம் விளம்பரம் செய்யலாமா என்று பார்க்கிறேன்!
நீங்க எப்படி ஒல்லியாவது அல்லது குண்டாவது என்பது பற்றி சத்யமுர்த்தி . காமில் சொல்லி தருவதாக விளம்பரம் செய்வீர்களா ?
ராம்,
வலைப்பயிற்சி எப்படி செய்வது என்று
நல்ல தொகுப்பு – யோசித்துப்பார்த்தால் ஜெயா டிவி எந்தப் பெரிய ‘பல’மும் இல்லாமல் இவ்வளவு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளைத் தந்திருப்பது ஆச்சர்யமே – ’திரும்பிப் பார்’த்தமைக்கு நன்றி
)
- என். சொக்கன்,
பெங்களூர்.
தனி மனிதர்களின் துணை இன்றி – இது சாதனையே ! ! !
அண்ணி – மாளவிகாவை மறக்க முடியுமா?
சன் டிவியின் -பக்க பலமான நம்ம சித்தியின் அண்ணாமலை – நாங்கள் மற்ந்தது அண்ணி
ஜெயா வின் அட்டகாசங்களை அடுக்கியதற்கு உங்களுக்கு தனி சபாஷ்….
தங்களது 20.எங்கிருந்தோ வந்தாள்….. பாலசந்தரின் கை வண்ணம்….
Please write something about KB
உமா,
புதுசா எழுத டாபிக் கொடுத்ததற்கு நன்றி.
அவர் ஒரு தொடர்கதை – எழுதுகிறேன்
உமா,
அண்ணி மாளவிகாவை மறக்க முடியாது. எனக்கு பிடித்ததால் என் மனைவிக்கு பிடிக்காமல் போனவர்.
Leave your response!
Subscribe
Archives
Thats me
I am just 5 ft 7 inches; so I cannot and do not make any "tall" claims :-)
Recent Posts
Blogroll
Recent Comments
Lucky click! (Click on a word and see what comes up)
Most Commented
Most Viewed
Switch to our mobile site