விசா கிடைச்சாச்சு
”உடனே கிளம்பணுமா’
“ஆமாம். ரொம்ப சமயம் கிடையாது. இதுவே லேட்”
”இவ்வளவு சீக்கிரம் எப்படி? இன்னும் கொஞ்சம் நாளாகும்னு நெனச்சேன்”
“எங்களுக்குக் கூட தெரியாது. தகவல் வந்தது. உடனே உங்கள பார்க்க வந்துவிட்டேன்”. “பெரியவருக்கு எல்லாம் பக்காவா நடக்கணும். கொஞ்சம் லேட்டானாலும் பிடிக்காது”
“அப்போ இதுவரைக்கும் ஒரு முறைகூட தவறினதில்லயா?”
“ம்ஹூம். கிடையாது. அதுதான் சொன்னேனே பெரியவருக்கு பிடிக்காதுன்னு”. “விசா கிடைக்கறதுக்கு மட்டும்தான் வெயிட் பண்ணலாம்”.
“விசாவுக்கு அதிக கூட்டமோ?”
“முன்னல்லாம் அதிகம் இல்ல. இந்தியாவும், சீனாவும் தலையெடுக்க ஆரம்ப்பிச்ச பிற்கு ரொம்ப கூட்டம்”. “சில சமயம் தமிழ்நாட்டுக்காக மட்டும் 25,000 அப்ளிக்கேஷன் வரும். ஒரு விசேஷம் என்னன்னா யாருக்கும் விசா ரிஜக்ட் பண்றதில்ல. எந்த ஊர்க்காரன்னு பாக்கறதில்ல”
”ஓ! விசா கிடைச்சதும் ஒடனே கூப்பிட்டுடுவாங்களா. டைம் கொடுக்க மாட்டாங்களா?”
“அதிக டைம் கிடைக்காது. விசா கிடைச்சாச்சுன்னா, பெரியவர் கூப்பிட சொல்லிடுவார்” “ஆனா ஹெல்த் க்ளியரன்ஸ் கிடைக்கணும்”
”கொஞ்சம் பேருக்கு ரொம்ப சுலபமா கிளியர் ஆயிடும். அதிகம் தொந்தரவு இருக்காது. சிலது ரொம்ப இழுத்தடிச்சு, மருந்து, மாத்திரை, ஊசின்னு போயி க்ளியரன்ஸ் எப்படான்னு ஆயிடும்” “விசா எக்ஸ்பைரிக்கு முன்னால இதோ அதோன்னு இழுத்து, கடைசியில பெரியவர்கிட்ட கொண்டு போய் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்க வேண்டியதாகிடும்”
“இவ்வளவு சீக்கிரம் கிளம்ப சொல்றீங்களே. பையன காலேஜ் சேக்கணும், பொண்ணு கல்யாணத்துக்கு பாத்துண்டு இருக்கோம். விசா வரதுக்குள்ள இதல்லாம் பிக்ஸ் பண்ணிடலாம்னு நெனச்சேன். லீவாவது கொடுப்பாளா?”
“மாசா மாசம் கூட வரலாம். அலவ் பண்றா. ஆனா செலவு ஜாஸ்தி ஆகும். ஏன்னா இதுக்குன்னு ஒரு நாள்தான் தருவா. சில சமயம் சேந்தாப்ல ஒண்ணு ரெண்டு நாள் வர முடியும். பெரும்பாலும் எல்லாருக்கும் வருஷத்துக்கு ஒரு வாட்டிதான் லீவு கிடைக்கும்” “ஆனா இப்பல்லாம் வருஷத்துக்கு ஒருதரம் வரதுக்குக் கூட அவசியம் இல்லாம போயிண்டு இருக்கு”.
”நம்ம ஊர்க்காரா நெறய இருக்காளா?”
“நம்ம ஊர்க்காரான்னு கேட்கவே வேண்டாம். பல பேர் அங்க தலைமுறையா இருக்கா. சில பேர் குடும்பத்துலதான் ஒண்ணு ரெண்டு பேர் இன்னும் பொறந்த நாட்டுலயே இருக்கா. அவாளாலதான் கொஞ்சம் பேரு வருஷத்துக்கு ஒருதரம் வரது. இவாளும் அங்க வந்துட்டா வருஷா வருஷம் செலவு மிஞ்சும்”.
“சரிதான். ரொம்ப பெரிய ஊருதான் போலயிருக்கு!” “கேக்க மறந்துட்டேன். வேல பளு ரொம்ப அதிகமா? நான் பேசிப்பாத்ததுல ரொம்ப பேர் ரொம்ப கஷ்டப்படறான்னு கேள்விப்பட்டேன். இன்ஃபாக்ட் நரகம்னே சொல்றா”
“அப்படி சொல்ல முடியாது. எல்லாம் இங்க உங்களோட அனுபவம் பொறுத்தது. ரொம்ப சில பேர் இங்கருந்து நல்ல அனுபவத்தோட வந்து அங்க சொர்க்கத்த அனுபவிக்கறா. மத்தவங்களுக்கெல்லாம் இங்க அனுபவம் எப்படின்னு பாத்து அங்க வேல கொடுப்பா. கொஞ்ச நாள் வாட்டி எடுத்துடுவாங்கறது உண்மைதான். இங்கந்து அனுபவம் இல்லாட்டி கூட சர்டிபிகேட் எடுத்துண்டு வந்துட்டா கொஞ்சம் தப்பிக்கலாம்”.
“அப்போ என்னன்ன சர்டிபிகேட்டுன்னு சொல்லுங்கோ, ஏற்பாடு பண்ணிடறேன்”
“அதுக்கல்லாம் நேரம் இல்ல. இப்போ கடைசி நேரத்துல இதல்லாம் பண்ண முடியாது. உங்க கன்சல்டண்ட் யாரு? வெங்கடேசன் தானே? அவர் எல்லாத்தயும் உங்க ஆத்துல விவரமா சொல்லி ஏற்பாடு பண்ணுவார். அவா அதெல்லாம் சரியா பண்ணினா போதும்”
“பெரியவர் ரொம்ப பவர்ஃபுல்னு சொன்னீங்களே. அவருக்கு இந்த ”ஏற்பாடு பண்ண” சர்டிபிக்கேட் பத்தி தெரியாதா?”
”ஹா! ஹா! அவருக்கு தெரியாமயா? கண்டிப்பா தெரியும். ஆனா அவர் இந்த முயற்சிக்காக மன்னிச்சுடறார். நெறய பேர் இந்த முயற்சி கூட எடுக்கறதில்ல”
“அங்கந்து யாரும் திரும்பி வரதில்லையா?”
“ஓ! நிறைய பேர் அனுபவம் குறைவா வந்து, ட்ரைனிங்குக்கு அப்புறம் இங்க வரா. ஆனா போஸ்டிங் பெரியவர் கம்பெனிலதான். எங்க போடுவார்னு தெரியாது. அதுவும் அனுபவம் வச்சுத்தான். சில பேர் திரும்ப வந்து நாய் படாத பாடு படறா. புழு, பூச்சி மாதிரி அனுபவம் கிடைக்கும். அதுக்குத்தான் நல்ல சர்டி்ஃபிகேட் வாங்கறது. அது இருந்தா இங்க மறுபடி வர தொந்தரவு இல்ல”
”ஓகே, அப்ப இருங்கோ பேக்கிங் பண்ணிண்டு ஆத்துல சொல்லிட்டு வந்துடறேன்”
“பேக்கிங்கா? அதுக்கெல்லாம் நேரம் இல்ல சார். ஏற்கனவே ரொம்ப நேரமா பேசிண்டு இருந்தாச்சு. விமானம் வேற வந்துடும். எல்லாம் அங்க கிடைக்கிறது. கிடைக்காத வஸ்து இல்ல.”
என்ன சார் இது. இப்படி அவசர படுத்தறளே. கட்டின வேஷ்டியோட வர சொல்லுவேள் போல இருக்கே!”
“அது கூட வேணாம்”
“சரி. இப்போ என்ன பண்ணணும் சொல்லுங்கோ”
“ஒண்ணும் வேணாம்! ஜஸ்ட் கண்ண மூடுங்கோ. போதும்”
அவன் கண்ணை மூடிக் கொண்டான்.
டாக்டர் வந்து பல்ஸ் பார்த்து, கண்ணில் டார்ச் அடித்து பார்த்து “சாரி மேடம்! காப்பாத்த முடியல” என்றார்.
அவளும், மகனும், மகளும் அழத் தொடங்கினார்கள்.









நிஜமாகவே நான் ஏமாந்துட்டேன், “எனக்கு இந்த கதை இப்படிதான் முடியும்” என்ற எல்லாம் தெரிந்த மிதப்பு இருந்தது, ஆனால் சத்யா “நீர் ஏமாற்றிவிட்டீர்” அருமையான , எதிர்பாராத முடிவு . . . . நல்ல சிறுகதை சார் . . . .
Very good short story with excellent “double meaning” conversation.
Keep it up.
என்ன ஸ்வாமி, எதையோ நினைச்சுப் படிச்சா எப்படியோ முடிச்சு அசத்திட்டீங்களே
கதை நல்லா அழகா வந்திருக்கு – முடிஞ்சப்புறம் திரும்ப இன்னொருமுறை படிச்சு ரசிக்கவைக்குது, பாராட்டுகள்!
- என். சொக்கன்,
பெங்களூர்.
Nice correlation.
Good, makes one to read again
LEMINAR SOURCE
” y o u r f o r c e”
சத்தியமூர்த்தி,
உங்க வர்ணனைக்கு ஒரு ஷொட்டு. மேலே போறதுக்கும் வேலை போறதுக்கும் முடிச்சு பார்த்திருக்கிறது நல்லா இருக்கு.
எனக்கு ”முன்னல்லாம் அதிகம் இல்ல. இந்தியாவும், சீனாவும் தலையெடுக்க ஆரம்ப்பிச்ச பிற்கு ரொம்ப கூட்டம்”. “சில சமயம் தமிழ்நாட்டுக்காக மட்டும் 25,000 அப்ளிக்கேஷன் வரும். ஒரு விசேஷம் என்னன்னா யாருக்கும் விசா ரிஜக்ட் பண்றதில்ல. எந்த ஊர்க்காரன்னு பாக்கறதில்ல” – இங்க ஒரு டவுட் வந்தது.
அப்புறம் “”கொஞ்சம் பேருக்கு ரொம்ப சுலபமா கிளியர் ஆயிடும். அதிகம் தொந்தரவு இருக்காது. சிலது ரொம்ப இழுத்தடிச்சு, மருந்து, மாத்திரை, ஊசின்னு போயி க்ளியரன்ஸ் எப்படான்னு ஆயிடும்” “விசா எக்ஸ்பைரிக்கு முன்னால இதோ அதோன்னு இழுத்து, கடைசியில பெரியவர்கிட்ட கொண்டு போய் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்க வேண்டியதாகிடும்” – இங்க க்ளியராயிடுச்சி. இருந்தாலும் மேலே படிக்க சுவாரஸ்யமா இருந்ததை ஒத்துக்கிட்டே ஆகணும்.
நண்பர் மேலே சொன்னது போல, கதை முடிவு முன்னரே யூகிக்க கூடியதாக இருந்தது. இருந்தாலும் கதை சுவாரஸ்யமாகவே இருந்தது. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு.
நன்றி
.
Maximum India,
Thank you for the encouraging words.
Very nice. Keeping the readers thinking with doubts over the country, age, happening period and a different ending. Hope you are a fan of Sujatha. Regards,Karthik
Leave your response!
Thats me
I am just 5 ft 7 inches; so I cannot and do not make any "tall" claims :-)
Archives
Blogroll
Subscribe
Interesting stuff
Recent Posts
Recent Comments
Lucky click! (Click on a word and see what comes up)
Most Commented
Most Viewed