விஜய் டிவி ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 – இறுதி சுற்று
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நான் “ரப்பர் சிங்கர்” என்று வர்ணித்திருந்ததை விஜய் டிவி படித்தார்களா என்று தெரியாது (high hopes?). இந்த வாரம் திங்கள் முதல் புதன் வரை இறுதியோ இறுதியாக இறுதி சுற்று செய்து விட்டார்கள்.
நான் முன்பே சொன்னது போலவே இறுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தீர்மானம் செய்வதை ரசிகர்களிடம் விட்டு விட்டது போல தெரிகிறது. இருக்கும் ஐவரில் (ரவி, ரஞ்சனி, ரேணு, அஜீஷ், பிரசன்னா) யார் முதல்வர் என்று சிமசே செய்தோ அல்லது http://vijay.indya.com சென்று வாக்கு பதித்தோ முடிவெடுக்கலாம். ”ரசிகர்களிடம் விட்டு விட்டது போல தெரிகிறது” என்று சொல்லக் காரணம் – சேனல் விரும்பாதவர் தேர்ந்துவிட்டால், ”நடுவர் மதிப்பெண்கள்/ சிறப்பு விருந்தினர் மதிப்பெண்கள்” என்று ஏதாவது கொண்டு வந்து ரசிகர் முடிவை மாற்றலாம்.
இறுதி சுற்று முழுக்க முடிந்து விட்டது. முதல் நாள் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனும், கடைசி நாள் ”பட்டு அழகி” சுதா ரகுநாதனும் சிறப்பு விருந்தினார்கள். இவர்கள் முன்னால் ஐவரும் பாடினார்கள்.
இதுவரை நடந்த சுற்றுகளில் கிட்டத்தட்ட முழு இசையுடன் பாடிய பாடகர்களை, இறுதி சுற்றில் unplugged என்று இசைக்கருவிகள் அதிகம் இல்லாமல் (பியானோ, கிதார், மிருதங்கம்) இவற்றோடு மட்டுமே இசைந்து பாடவைத்து சோதித்தார்கள். குரல் வளத்துடன், சுருதி சுத்தமாக பாடத்தெரிந்தால் மட்டுமே இந்த unplugged முறையில் பாடமுடியும்.
இருந்தாலும், “Old is Gold” என்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த மிகச்சிறப்பான பாடல்களையும், திரையில் வந்த கர்நாடக இசை பாடல்களையும், பியானோ வைத்து பாடவைத்தது அந்த பாடல்களை இழிவு படுத்துவது போல இருந்தது. நல்லவேளையாக எம்.எஸ்.வி. கடைசிநாள் போட்டியில் விருந்தவில்லை. இருந்திருந்தால், வாணி ஜெயராம் அபாரமாக பாடிய “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்” என்கிற அபூர்வ ராகம் பாடலை பியானோ சகிதம் ரேப் செய்ததை பொறுக்கமுடியாமல் கண்ணீர் விட்டிருப்பார். (மிருதங்கம் மட்டுமே மிக ஆறுதல் தந்தது).
அதேபோல் கற்பழிக்கப்பட்ட மற்றொரு பாடல் “பாட்டும் நானே, பாவமும் நானே”. “அசையும் பொருளில் இசையும் நானே, என் இசை நின்றால் அடங்கும் உலகே, நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே” என்று தமிழ் உலகை அசைத்த பாடலை இனிமையான வீணை, புல்லாங்குழல் இல்லாமல் கொடுமை படுத்தினார்கள். ஒரே ஆறுதல் அஜீஷ் அந்த பாடலை சிறப்பாக பாடியது மட்டுமே. (அவரும் பாமர விறகு வெட்டியிலிருந்து தெய்வக்குரலுக்கு படிப்படியாக மாற்றிய பாடல் ஆரம்ப வித்தையை சரியாக செய்யவில்லை).
மூன்று நாளும் ஐந்து போட்டியாளர்களும் பாடினார்கள். சுழற்சி முறையில் சிலரை முதலாகவும், சிலரை கடைசியாகவும் பாட வைத்தார்கள்.
இனி போட்டியாளர்கள் பாடிய பாடல்கள்:
இந்த இறுதி போட்டியில் நல்ல பாடல்களை தேர்வு செய்தது மட்டும் அல்லாமல், மூன்று நாட்களும் திறமையை consistent-ஆக வெளிப்படுத்தியவர்கள் ரவி, ரஞ்சனி மற்றும் ரேணு அஜீஷ். மக்களின் பாடகராக விளங்கும் ரவி பிரசன்னா, இவர்கள் மூவருடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் மாற்று குறைவுதான். அவர் சிறப்பான பாடல்களை தேர்வு செய்து மிகத் திறமையாகவே பாடியிருந்த போதிலும், மற்ற மூவரும் ஒரு புயல் போல பாடி ரசிகர் மனங்களை ஆடவைத்து விட்டார்கள். எழுத்தாளர் சுஜாதாவின் என்றும் இளமையான நாயகன் வசந்த் வார்த்தையில் சொல்வதானால் “Boss! I sway”.
இறுதி போட்டியை துவக்கி வைத்து பாடிய ரேணு, நல்ல குரல் வளம் இருந்தாலும், பாடும் திறமையில் ரவி, ரஞ்சனி அருகில் நிற்க முடியாது. அவர் சுசீலாவின் தேசிய விருது பாடலான “நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா” தேர்ந்ததும் தவறு என்று நினைக்கிறேன். பயம் காரணமாக இந்த பாடலை அவ்வளவு சிறப்பாக பாடவில்லை என்று அவரே ஒத்துக் கொண்டார். நடுவர்கள் இவரை எப்படியேனும் வெல்ல வைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பதாக தோன்றியது. இரண்டாம் நாள் அவரை கொஞ்சம் எமோஷனலாக காட்டி அதன் மூலம் அரசியலில் போல ரசிகர்களிடம் “அழுகை ஓட்டு” வாங்கும் முயற்சி நடந்தது. அதே போல், மூன்றாம் நாள் பாடலாக, வாணி ஜெயராமின் ஏழுஸ்வரங்கள் பாடியதற்கு பதில் “பாடறியேன் படிப்பறியேன்” பாடியிருந்தால் அவருடைய குரலுக்கு பொருத்தமாக இருந்திருக்கும்.
இதில் சீனிவாஸ் “இது சிறந்த குரலுக்கான தேர்வு” என்று எண்டார்ஸ்மெண்ட் வேறு. அப்போது எதுக்கய்யா பாட வைக்கணும்? சும்மா எல்லோரையும் கூப்பிட்டு கத்தவிடலாமே? சுருதி, ஸ்வரம் என்ற பேச்சுக்கள் எதற்கு?
அவருக்குப் பிறகு பாடியவர் ”மக்களின் பாடகர்” என்று இப்பொழுதே பட்டம் வாங்கிவிட்ட, முறையாக சங்கீதம் பயின்றவர்கள் முறைத்துப் பார்க்கும், பிரசன்னா. அவர் பாடிய பாடல் “முத்துக்களோ கண்கள்” என்கிற டி.எம்.எஸ். க்ளாசிக் பாடல். எம்.எஸ்.வி. “நல்லா பாடினீங்க” என்றார். வாக்குகள் ரசிகர்கள் போட்டாலும், வாக்குகளை பிரித்தாளும் கொள்கை கொண்டவர்கள் போல் தென்படும் நடுவர்களில் ஒருவரான சீனிவாஸ் “எஸ்.பி.பி. மாதிரி பாட ட்ரை பண்ணிங்களா?” என்றார். உன்னி கிருஷ்ணன், நடுநிலை தவறாத கேரள மன்னனாக “ஒரு நல்ல ரீ மிக்ஸ் கேட்டா மாதிரி இருந்தது” என்றார். என்னை பொறுத்தவரை, பிரசன்னா ரொம்ப அடக்கி வாசிக்க முயன்றதாக தோன்றியது. கடைசி நாள், கர்நாடக இசை சார்ந்த திரைப்பாடலாக, “வந்தாள் மகாலஷ்மியே” பாடியது என்னை பொறுத்த வரையில் சரிதான். நடுவர்கள் ஏனோ இதை மட்டம் தட்டினார்கள். அது இளையராஜாவையே அவமானம் செய்ததற்கு சமம் என்று நினைக்கிறேன்.
இறுதி போட்டியின் நிஜ போட்டியாளர்கள் – ரவி, அஜீஷ், ரஞ்சனி தான். அஜீஷ் “உன்னிடம் மயங்குகிறேன்” என்று தேன் சிந்துதே வானம் படத்திலிருந்து பாடினால், பதிலாக ரவி பொண்ணுக்கு தங்கமனசு படத்திலிருந்து “தேன் சிந்துதே வானம்” என்று பாடினார்.
அதே போல், கடைசி நாள் போட்டியில், அஜீஷ் திருவிளையாடல் படத்தில் விறகு வெட்டியாக வந்து சிவ பெருமான் பாடும் ”பாட்டும் நானே” பாடலை பாடினார். இந்த பாடல் பாண பத்தரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து சிவ பெருமான் பாடியதாக படத்தில் வருகிறது. சிவ பெருமானையே அழைத்துவந்த பாடல் எது? “இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை” என்கிற பாண பத்தரின் பாடல். அதை பாடியது ரவி. படத்தில் சிவபெருமான் பாட்டும் நானே என்று பாடியது பாண பத்தர் தோற்காமல் இருக்க. இங்கு, அஜீஷ் பாடியது, ரவி தோற்கவா, ஜெயிக்கவா?
கடைசி நாள் போட்டியில் கட்ட கடைசியாக பாடிய ரஞ்சனியின் “மன்னவன் வந்தானடி” ஒரு பெரும்புயல் போல இருந்ததது. மிகச்சிறப்பான, வேகமான நாட்டியப்பாடலை தேர்ந்து எடுத்தது ரஞ்சனியின் சாமர்த்தியம். பாடிய விதம் மிக அருமை. Selection நச். பாடியது சூப்பர் டச்.
சரி ஜெயிக்க போவது யாரு? நான் ஒரு பாமர இசை ரசிகனாக, விருப்பு, வெறுப்பு தவிர்த்து, என் மனைவியை கலந்தாலோசித்து மதிப்பெண் கொடுத்து பார்த்தேன். கீழே, அந்த அட்டவணை.
இறுதி் சுற்று வீடியோக்கள் பார்க்க:











I am watching this program from last quarter of 2008. Anyway this program comes to an end. That is good news. In the initial days,
Prasanna sang well (even now). But day by day we can see over confidence in his speech and behaviour. He dint take this as competition.He is taking this as his life (may be its true) achievement to get that 5 Lakhs cash award. But i like very much the ilaiyaraja’s song “venkatachala” in front of Sudha Ragunaathan.
Apart from others Ravi is real best singer and showing his professionalism in each song.
For judges side,Unni is best to analyse the mistakes. Srinivas is OK. Sujatha is irritating.
For Vijay TV, this is nice program to bring the new talents. Hearty wishes to finish this program before 2010.
ஏதோ நமக்கும் கொஞ்சம் இசை தெரியும்னு இதை எழுதினேன். தவறு இருந்தால் மன்னிக்கவும் .
திறமையை consistent-ஆக வெளிப்படுத்தியவர்கள் ரவி, ரஞ்சனி மற்றும் ரேணு. மக்களின் பாடகராக விளங்கும் ரவி, இவர்கள் மூவருடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் மாற்று குறைவுதான். Some mIshtake?
veetu Judge seems to be fair in her ratings ….
ராம்,
ஆமாம். தவறுதான். சரி செய்துவிட்டேன்.
நன்றி.
i fully agree with your marks. It was a very good performance by Ravi, Ranjani and Ajeesh. In my opinion it was Ravi all the way because of his consistency and extraordinary singing.
I think Ravi should be voted as the Super Singer.
ரவிதான் வருவார் என்று நான் நினைக்கிறேன். நூலிழையில் கிடைக்கப்போகும் வெற்றி என்றும் நினைக்கிறேன். ரஞ்சனி “மன்னவன் வந்தானடி” மிக பிரமாதமாக பாடினார்.
OH thank god, at last this programe coming to an end, started in way back Feb 2008.
I stopped watching after Raginishri’s elimination.
I am sure that this time also the mallu only will win (ajeesh).
By the way what happened to the earlier winner 2006 Joseph or john, a mallu guy. I have not heard his song in cinema at all.
You Are Posting Really Great Articles… Keep It Up…
We recently have launched a website called “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…
தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.
நன்றிகள் பல…
- நம் குரல்
Mathew is the last winner. I have seen him perform on stage in some of the programmes in Chennai including SPB Night. I do not know if he is singing in films.
30 years back there were very few singers. Today there are more than 3 dozen singers (both male and female) so it is difficult to get chance…..
hai iam watching this program from the beging i love ajeesh and ravi voice but rajani has a gracefull voice than everyone .its very bad to sent rajani out .i don’t think prasanna has good voice. i hate prasanna to be in final
Leave your response!
Thats me
I am just 5 ft 7 inches; so I cannot and do not make any "tall" claims :-)
Archives
Blogroll
Subscribe
Interesting stuff
Recent Posts
Recent Comments
Lucky click! (Click on a word and see what comes up)
Most Commented
Most Viewed