Home » Chennai, Humor, TV Programs, Tamil-தமிழ், நகைச்சுவை

ரப்பர் சிங்கர் 2008

30 April 2009 595 views 6 Comments
ஹாய்! Hi! you have been here atleast 3 times before; don't you think we have started liking each other? Stay updated when I update this site by subscribing to the site feed. Thanks! நன்றி

Enter your email address: Delivered by FeedBurner


இது சத்தியமா ஒரு நகைச்சுவை பார்வைங்க.

இது மூலமா, யாரோட மனசையும் நோகடிக்கறதோ இல்ல வெந்த புண்ணுல வேலயத்தத்தனமா வேலப் பாச்சறதோ இல்ல. சொன்னாக்க நம்பணும். (ஏண்டா அதான் யார் மனசாவது நோகும்னு தெரியும்ல, ஏண்டா அப்புறம் அது மாறி எழுதற அப்படின்னு நான் மத்தவங்களப் பாத்து மனசுக்குள்ளயே சத்தமா கத்திட்டு வேலயப்பாத்தது போல நீங்களும் பண்ணிடுங்க).

சூப்பர் சிங்கர் கிட்டத்தட்ட 12 மாசம் முன்னால ஆரம்பிச்சாங்க. தோ முடியும், இப்போ முடியும்னு நெனக்கறப்போ எப்பவாச்சும் வெளில போன ஒரு நாலு பேர புடிச்சு இழுத்துட்டு வந்து பாடுங்க மறுபடியும் அப்படின்னு கொஞ்சநாள் பொறு தலைவா(வி) என்று பாட வச்சாங்க.

இது ”வளரும் சிங்கர்” ப்ரோக்ராமா, இல்ல, ”வளரும்” – சிங்கர் ப்ரோக்ராமான்னு சந்தேகம் வராப்ல சும்மா வளந்துகிட்டே போச்சு.

ஒரு கட்டத்துல, தினத்தந்தி கன்னித்தீவு, சன் டிவி கோலங்கள் இதுகூட விஜய் டிவி சூப்பர் சிங்கர் 2008 சேக்கணுமான்னு கூட நெனச்சேன். உண்மையில சாட்டாடும்போது இடி தாங்க முடியாட்டாலும், என் கடி தாங்கி வாழும் என் ஃப்ரெண்டுகிட்ட “இந்த ப்ரோக்ராம் பேரு ”சூப்பர் சிங்கரா? இல்ல ரப்பர் சிங்கரா?”” அப்டின்னு கேட்டேன்.

அவன் அதுக்கு என்ன பதில் சொன்னான் தெரியுமா?

என்ன பதில் சொல்லுவான்? உலக சாட்டர்கள் ஒரு கேள்விக்கு பதில் சொல்லமுடியாட்டா என்ன சொல்லுவாங்க, அத தான் சொன்னான். இன்னுமா தெரியல? “hahahahaha”. சரி இவன்கிட்டதான் பதில் கெடைக்கல அப்படின்னு, ஓடு ப்ரெண்ட் ஓட உறு ப்ரெண்ட் வர வாடியிருக்கும் சாட்டனா காத்திருந்து இன்னொரு ப்ரெண்ட் லாக் இன் செஞ்சதுமே பழைய ப்ரெண்ட் சாட் விண்டோவில இருந்து கண்ட்ரோல் சி போட்டு கையிலய வச்சிருந்த “இந்த ப்ரோக்ராம் பேரு ”சூப்பர் சிங்கரா? இல்ல ரப்பர் சிங்கரா?”” ன்னு கண்ட்ரோல் வி போட்டேன்.

குட் மார்னிங், ஹலோ ஹவ் ஆர் யு, இத சொல்லிட்டு உடனே மேல சொன்ன கண்ட்ரோல் வி போட்டதுல யூசுப் பத்தான் சிக்சர் ஃபோர் சகிதம் வேகமா ரன்னடிச்சதுக்கு ஒப்ப்பா என் டைப்பிங் தெறமய சிலாகிச்சு ”டேய்! நீ ரொம்ப ஃபாஸ்டா டைப் பண்றடா”ன்னான்.

அத வுடு, இப்ப நான் கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லுன்னு (கவனமா, கண்ட்ரோல் சி போட்டு வச்ச கைலருந்து அது அழியாம) இன்னொரு கேள்வி போட்டேன். இவன் பழைய நண்பனுக்கு கொஞ்சமும் கொறஞ்சவன் இல்ல. இவன் என்ன பதில் சொன்னான் தெரியுமா? “hehehehehe”. மறுபடியும் வேற கேள்வி அடிச்சா பதிலே இல்ல.

ஒரு மணி நேரம் நானும் அவசரமான ஆபீஸ் வேலயெல்லாம் செய்யறாப்ல பாவ்லா காட்டிக்கிட்டே, “I am extremely busy today, lots of phone calls, emails, boss has given urgent work” அப்படின்னு ரூமுக்கு வரவங்கக்கிட்டல்லாம் சொல்லிக்கிட்டே, அப்பப்போ சாட் விண்டோவ தொறந்து பாத்துக்கிட்டே இருந்தா, கொஞ்ச நேரம் பொறுத்து வந்து “சாரி மச்சி, ஒரு மீட்டிங்” அப்படின்னு புளுகறான்.

எனக்கு தெரியாதா? என்ன மீட்டிங்னு? பாம்பின் கால் பாம்பறியும்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க?

இவனும் அந்த நேரத்துல பல்பு ஆட்டிக்கிட்டு, சாட் விண்டோவுலருந்து நான் ஆஃப்லைன் போவனான்னுதானே பாத்துக்கிட்டிருந்திருப்பான் இல்ல இன்னொரு ப்ரெண்ட சாட்ல புடிச்சு “டேய் சத்தியமூர்த்தி இன்னொரு லைன்ல இருக்கான்; செம கடி போடுவாண்டா” அப்படின்னு என் பேண்ட எனக்கு தெரியாம அவுத்துக்கிட்டிருந்திருப்பான்.

அவன் அப்படி அடிச்சா நாம ஒடனே பதிலடிப்பமா? நாம என்ன ஆளு? இதுல பழந்தின்னு கொட்டையும் தின்னவன்ல? ஒரு பத்து நிமிஷம் ஒண்ணுமே பதில் தராம கேப் வுட்டு, “just came back” அப்படின்னு ஒரு போடு போடுவோம்ல.

சூப்பர் சிங்கர்ல ஆரம்பிச்சு எங்கியோ போய்ட்டனா? இந்த வாக்கியத்த சூப்பர் சிங்கர்னு ஆரம்பிச்சதால திரியும் சப்ஜெக்ட்ல வந்து சேந்துட்டோம்ல?

ரப்பர் சிங்கர்னு சொல்றது மெய்யாலுமே பொருந்தும்.

இந்த ரவுண்டு, அந்த ரவுண்டு, மார்க்கெட் போன பாடகர் பாடகிங்கள கூப்டு ரவுண்டு கட்டி அவங்களோட ஒரு ரவுண்டு, பசங்கள எலிமினேட் பண்ண சில ரவுண்டு, எலிமினேட் ஆனவங்களுக்கு இன்னொரு ரவுண்டு, அதுல ஒரு நாலு பேர வைட் லிஸ்டுன்னு போட்டு அதுக்கு ஒரு ரவுண்டு. சூப்பர் சிக்ஸ், சூப்பர் டென், சூப்பர் எய்ட், இதில்லாம அவரு வாரம், இவரு வாரம், ட்ரிப்யூட் டு இவரு, அவரு, எவரு, கருப்பு வெள்ளை, கலர், 70ல வந்த பாட்டு மட்டும், வெஸ்டர்ன் மட்டும், கர்னாடிக் மட்டும்னு, போடு குத்துன்னு விதவிதமா ரவுண்டு கட்டி விளம்பரக்காரங்கள ”மவனே வுட மாட்டேன் ஒன்ன”ன்னு அவங்க பாக்கெட்ல இருக்கற கடைசி பைசாவ உறிஞ்சற வரைக்கும் இழுத்துட்டாங்க.

இதுல வெறுத்து போயிதான் சின்மயி “ஐய்யா, எனக்கு பாடறதுக்கெல்லாம் சான்ஸ் வருது, அவார்டெல்லாம் வாங்கணும், தயவு பண்ணி வுட்ருங்க”ன்னு ஓடிட்டாங்கன்னு நெனக்கறன். அப்புறம் யாருடா வேல இல்லாம இருக்காங்கன்னு தேடி யுகேந்திரனையும், அவரோட பொண்ஜாதியையும் கூட்டிட்டு வந்து, அவங்க ரெண்டு பேரும் செய்யற கூத்து, பாட்டுக்கு நடுவுல விளம்பர இடைவேளயே தேவலாம்னு சொல்றா மாதிரி ஆயிடிச்சு.

இவ்ளோ இழுத்து ஒரு வழியா ஆறு பேருக்கு வந்து நின்னாங்க. நின்னது மட்டுமில்ல, சூப்பர் சிங்கர் பைனலிஸ்ட்டுன்னாங்க. சரிதான், தோ முடிய போவுதுன்னு நெனச்சா “முட்டியப் பேத்துருவேன்” அப்படின்னு இந்த ஆற சும்மா பிழிஞ்சு அவங்க தொண்டைலருந்து ரத்தம் வரவரைக்கும் பாடவச்சு பின்னால “இந்தா புடி – சூப்பர் பைனலிஸ்ட் மூணு”ன்னாங்க.

சரிதான் முடியப்போவுதுன்னு நெனச்சா அடுத்தவாரம் இந்த மூணு பேரோட வீடு, ஆபீஸ், பாத்ரூம், சமையல் கட்டு, அவுங்க ப்ரெண்ட்ஸ் வீடு அது இதுன்னு ஒரு மூணு நாள் செட்டப் அட்டகாசம் செஞ்சு அடுத்தவாரம் மறுபடி முன்னால கழுத்த புடிச்சு வெளில தள்ளினவங்க ஒரு மூணு பேர புடிச்சு அவங்களோட முன்னால பைனலிஸ்ட்டுன்னு சொல்லி கீழ தள்ளின ரெண்டு பேர சேத்து “இந்தா புடி காட்டு அட்டை, காட்டு பாட்டை”ன்னுட்டாங்க.

என்னடா வெளில போனவங்க மேல இவ்ளோ கரிசனமான்னு நெனச்சா, அப்டி இல்லியாம். காட்டு அட்டை சுத்துனா, ஆடியன்ஸ் ஓட்டுன்னு வெச்சு ”மவன ஒன்ன எஸ் எம் எஸ் பண்ணவச்சு ஒன் பாக்கெட்ல இருக்கற காச ஏர்டெல்லோட பங்கு போடமுடியும்ல”

போனவாரம் காட்டு அட்டை முடிஞ்சு சரி மூண நாலாக்கிட்டு உட்ருவாங்கன்னு பாத்தா, இந்த வாரம் போட்டாங்களே ஒரு போடு. மச்சி! காட்டு அட்டைல காட்டு காட்டுன்னு காட்டினது யாருன்னு தெரியறதுக்கு முன்னால, நம்ம நீதி-பதி, பத்னிங்கல்லாம் சேந்து அஞ்சாவதா ஒத்தர இறுதியா இறுதிக்கு அனுப்பப் போறாங்கன்னு. இது ஒரு ரெண்டு நாள்.

சரி மூணாவது நாள் காட்டு அட்டை ரிசல்ட் சொல்லுவாங்கன்னு பாத்தா, மொதல்ல பைனல்ஸ் போனவங்கள கூட்டிட்டு வந்து பாடுங்கன்னாங்களே பாக்கணும். நானும் அடடா ஆரம்பிச்சுட்டாய்ங்கடா. இப்ப முழு அரை இறுதிச்சுற்றுன்னு ஏதாவது இழுக்கப் போறாங்களோனு நெனச்சேன். நல்லவேளையா ஹரிஹரன கூப்பிட்டு யார மக்கள் தேர்ந்தெடுத்துட்டாங்கன்னு சொல்ல வச்சிட்டு, நீதிகள் மூவரும் மார்க் போட்டு ஒருத்தர செலக்ட் பண்ணிட்டாங்க. ஆக, மறுபடியும் இப்போ அஞ்சு பேர் இறுதிப்போட்டிக்கு.

இன்னும் என்ன என்ன இருக்கோ தெரியல. ரப்பர் எவ்வளவு தூரம் இழுக்க முடியுதுன்னு பாக்கலாம்.

Bookmark and Share

Readers also liked

6 Comments »

  • Sameer said:

    Correctly said. To make money they are really testing your patience. I liked the slang in this post. This is the first post I am reading in your blog. So I hope I will enjoy all posts here. I was keeping on laughing by reading this post. Superb…..

  • triplicani (author) said:

    சமீர்,

    மிக்க நன்றி. சீரியசாகவும் எழுதுவேன். அதையும் படிக்க வாங்க!

  • thomasruban said:

    நான் சொல்ல நெனச்சத நீங்க சொல்லிட்டீங்க. ரப்பர் சூப்பர் சிங்கர் என்றும் சொல்லலாம். ஜவ்வு சூப்பர் சிங்கர் என்றும் சொல்லலாம். அதுல கொடுமை என்னன்னா 2009 வந்தும் இன்னும் 2008 சூப்பர் சிங்கர் லேயே ரொம்ப advance ஆக இருக்கறாங்க.

  • Vijayasarathy R said:

    பிரமாதம். செம காமெடி. காமெடி தோரணம் கட்டியிருக்கீங்க. படிக்க படிக்க சிரிப்ப அடக்கமுடியல.

    இவ்ளோ இழுத்து ஒரு வழியா ஆறு பேருக்கு வந்து நின்னாங்க. நின்னது மட்டுமில்ல, சூப்பர் சிங்கர் பைனலிஸ்ட்டுன்னாங்க. சரிதான், தோ முடிய போவுதுன்னு நெனச்சா “முட்டியப் பேத்துருவேன்” அப்படின்னு இந்த ஆற சும்மா பிழியுஞ்சு அவங்க தொண்டைலருந்து ரத்தம் வரவரைக்கும் பாடவச்சு பின்னால “இந்தா புடி – சூப்பர் பைனலிஸ்ட் நாலு”ன்னாங்க. – உண்மை.

    இந்த ரவுண்டு, அந்த ரவுண்டு – பின்னி பெடலெடுத்துட்ட நைனா.

  • T.P.Anand said:

    ரவுண்டு கட்டி அடிக்கறது – இதுதான்

    தர்ம அடி அடிக்கிறாங்கய்யா – Audienceஅ மட்டுமில்ல Singers ஐயும் சேர்த்து

    - தி.பா.ஆனந்த்

  • guruprasad said:

    true sir! too much of reality tv…vaanthithaan varuthu

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.