Home » Chennai, Cricket, Headline, Tamil-தமிழ்

வாங்க ஐ பி எல் ஆடலாம்

18 April 2009 747 views No Comment

ஆச்சு;  ஐ பி எல் என்கிற வேடிக்கை வினோத விளையாட்டு துவங்க இன்னும் சில மணி நேரம்தான் இருக்கு.

உங்களை சோஃபா உருளைக் கிழங்காக இன்னும் ஒரு மண்டலம் கட்டிப் போடப் போகிறது ஐ பி எல்.  பல பேர் வீட்டில் இரண்டாவது டிவியும், இரண்டாவது கேபிள் கனெக்‌ஷனும் வாங்கவேண்டி வரலாம்.  (கலைஞர் தந்த டிவி இருந்தால் ஒவ்வொருவர் வீட்டிலும் இப்போதே மூன்று நான்கு டிவி கூட இருக்கலாம்).

ஒரே ஒரு டிவி இருக்கும் பாக்கியசாலியாக இருந்தால், மெகா சீரியல்களில் இருந்து தற்காலிகமாக விடுதலை கிடைக்கலாம். (எது சரி? தாற்காலிகம் அல்லது தற்காலிகம்?)

தற்காலிகமாக, மானாட மயிலாடவும், பாய்ஸ் வர்ஸஸ் கேர்ள்ஸும் இல்லாமல், சீயர் கேர்ள்ஸ் ஆடுவதையும், தென்னாப்பிரிக்க நங்கையர் குளியல் உடையில் பார்பிக்யூ புகை நடுவே ஆப்பிள் கன்னத்துடனும், பியர் கிண்ணங்களுடனும் (!) சிக்ஸர், ஃபோருக்கு குதிப்பதை பார்க்கலாம்.

கூடவே, ஷாருக் கான், கன்னம் குழியாள் ப்ரிதி ஜின் -  தா, டோனி கேர்ள் ப்ரெண்ட் லஷ்மி ராய், டோனிக்கா – யுவராஜுக்கா என்று (இன்னும்) மர்மமாக இருக்கும் தீபிகா படுகோன், ”சும்மா டெரர் இல்ல” என்று சொல்லவல்ல டி.என்.சேஷனுக்கே பிடித்த ஷில்பா ஷெட்டி (அம்மா சும்மா இல்ல, ராஜஸ்தான் ராயலையே வாங்கி போட்டுட்டாங்க) எல்லோரும் அடிக்கடி டிவியில் வருவார்கள்;  நன்றாக விளையாடும் வீரர்களுக்கு இந்த திரைப் பதுமைகளின் வசூல் ராஜா ஸ்டைல் கட்டிப்பிடி வைத்தியமும் கிடைக்கும்!

என்னதான் எனக்கு மோடி மேல் கோபம் இருந்தாலும், ஐ பி எல் சுத்த கிரிக்கெட் இல்லாத வெறும் சத்த கிரிக்கெட் என்று நினைத்தாலும், அபியின் கோலங்களை விட இந்த ஐ பி எல் கோலங்கள் பரவாயில்லை.

இந்த சித்திரை திருவிழாவில் பல போட்டிகளும் உண்டு.  தினமும் உங்களை கை வலிக்க வலிக்க சிமசே செய்யத் தூண்டுவார்கள்.

நானும் அப்படி ஒரு விளையாட்டில் சேர்ந்துள்ளேன்.  வாங்களேன், சேர்ந்து விளையாடலாம்! நாமும் ஐபிஎல் வீரர்களை ஏலத்தில் எடுக்க கற்பனையாக ரூ. 20 கோடி தருகிறார்கள்.  பதினொரு வீரர்களை தேர்வு செய்யலாம், தினமும் மேட்சுக்கு ஒரு மணி நேரம் முன்புவரை ஆளை மாற்றலாம் – சில பல விதிகளுக்கு உட்பட்டு.

இங்கே க்ளிக் செய்து உங்கள் டீமை தேர்தல் செய்யுங்கள்


இங்கே க்ளிக் செய்து உங்கள் அபிமான அணிக்கு ஓட்டு போடுங்கள் (இது தேர்தல் சமயம், ஓட்டு போட்டு பழகிக் கொண்டது போலவும் இருக்கும். :)

Readers also liked

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.