படித்ததும், பிடித்ததும் – 0002 – பாட்டி கூட பணம் எடுக்கும் ஏடிஎம்
ஒரு வேண்டுகோள்:
இந்த பதிவு பிடித்தவர்கள் தயவு செய்து இங்கே க்ளிக் செய்து இந்த பதிவை பிரபலமாக்குங்கள் – இது தேர்தல் நேரம், ஓட்டு கேட்டாலும், போட்டாலும் தப்பில்லை
(படித்தது – நான் படித்ததும்; பிடித்தது – எனக்கு எழுதப் பிடித்ததும்)
அதெல்லாம் தனியார் வங்கிகள் அதிகம் இல்லாத காலம். (1969 முதல், நரசிம்மராவ் வரை).
கொஞ்சம் நன்றாக நடக்கும் வங்கி என்றால், காங்-கை அரசு காக்கை போல கொத்தி தேசியமயமாக்கி விடும். அத்துடன் வாடிக்கையாளர் சேவையும். அந்த காலகஷ்டத்தில், வங்கியில் கணக்கு என்றால் பெரும்பாலோருக்கு தேசியமாயமாக்கப்பட்ட வங்கிகள்தான்.
பணம் போட வேண்டுமோ, எடுக்க வேண்டுமோ, எப்போது வங்கி திறக்கும் என்று காத்திருந்து, வரிசையில் நின்று காசாளர் (Cashier) டீ குடிக்கவோ, புகைக்கவோ போகாமல் இருக்கும் போது வேலையை முடிக்க வேண்டும். (”இவனுங்க எப்பவுமே இப்படிதான் சார், கவர்மண்ட் சம்பள மதர்ப்பு” – என் பின்னால் நிற்பவர்)
அதுவும் பணம் எடுக்க வேண்டுமானால் மறக்காமல் Passbook, வரைவோலை (Withdrawal Slip) அல்லது காசோலை (Cheque) எடுத்துக் கொண்டு போக வேண்டியது அவசியம். முதலில் ஒரு கணக்கரிடம் சென்று காசோலை அல்லது வரைவோலையைக் கொடுத்து, வங்கிக் கணக்குப் புத்தகத்திலும், நம் பாஸ் புத்தகத்திலும் பதிவித்த பின்னால், பித்தளையில் பழையகால தொண்டி காலணா போல இருக்கும் டோக்கன் வாங்கிக் கொண்டு காத்திருக்க வேண்டும்.
நம் எண் வரும்போது சென்று பணம் வாங்கிக் கொள்ளலாம். நம் எண் வருவது என்பது, பின் புலத்தில் நம்முடைய கா.வ. எவ்வளவு விரைவாக மேஜை தாவுகின்றன என்பது பொறுத்துத்தான். சில சமயங்களில் அடுத்த மேஜைகூட ஐந்து நிமிடம் ஆகக்கூடும்.
நம்முடைய அதிர்ஷ்டம் வங்கியிலும் விளையாடும். நம் முறை வரும்போதுதான் காசாளர் டீ குடிக்க எழுந்து போவார் அல்லது யாராவது நண்பருடன் பேச. அப்போதெல்லாம், சுஜாதாவின் “தியேட்டரில் எனக்கு முன்னால் நிற்பவன்தான் குடம் குடமாய் மூ. பே.வான் என்பது நினைவுக்கு வரும்”
அந்த நாட்களிலேயே வெளிநாட்டு வங்கிகளான Citi, Standard Chartered, ANZ Grindlays ஆகியவற்றில் கணக்கு வைத்திருப்பார்களுக்கு ATM சேவை இருந்தது. அது எனக்கு தெரிந்தது முதன் முதலில் எனக்கு கடன் அட்டை கிடைத்தபோதுதான்.
1990-92ல் நான் சிங்கப்பூர், தாய்லாந்து் சென்றிருந்தபோது, பட்டித்தொட்டியெல்லாம் அங்கே ஏடிஎம் இருப்பதை பார்த்து எப்போது நம் நாட்டுக்கு வரும் என்று ஏங்கியதுண்டு. நான் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இந்த நாடுகளில் இருந்தபோது வங்கிக்குள் சென்றது நான்கைந்து முறைதான், அதில் ஒன்று கணக்குத் துவக்க, ஒன்று முடிக்க என்று நினைவிருக்கிறது. மற்றபடி பணம் போட்டதோ, எடுத்ததோ தெருவோரம்தான்.
இந்திய வங்கிகளில் ஏடிஎம் சேவை மெதுவாகத்தான் ஆரம்பமானது. தொடங்கியது தனியார் வங்கிகளில்தான். Global Trust, IndusInd, Vysya Bank ஆகியவைதான் முதலில் தொடங்கின என்று நினைக்கிறேன். அதற்கு பிறகு ஒன்று, இரண்டு என்று ஆரம்பித்த நம் முன்னாள் தேசிய வங்கிகள், இப்போது ஏடிஎம் எங்கும் நிறைந்த பரம்பொருள் ஆகிவிட்டது.
நான்கு எண்கள், ஒரு அட்டை, கணக்கில் பணம் இருந்தால் போதும்; எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்க முடியும். மூடாத வங்கிகள், தீராத சேவை. ஏடிஎம் வந்தபின் ஜேப்படி திருடர்களின் வியாபாரம்(?) படுத்துவிட்டாதா என்று யாராவது ஆராய்ச்சி செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. எங்களுக்கு தெரிந்த ஒரு போலீஸ் மாமாவை – நிஜமாகவே மாமாதான்; அய்யங்கார் மாமா – கேட்டுப் பார்க்க வேண்டும். (அப்படி குறைந்திருந்தால், ஜேப்படி திருடர்கள் வீடு புகுந்து கொள்ளையிடுபவர்களாகவோ, பாராளுமன்ற வேட்பாளர்களாகவோ பதவி உயர்வு பெற்றிருப்பார்கள்)
மெனு (Menu) தமிழிலும் இருப்பதால், ஏடிஎம்மில் பணம் எடுப்பது என் பாட்டிக்கும், என் மகனுடைய பாட்டிக்கும் கூட கை(!) வந்த கலையாகிவிட்டது.
ஒரே பிரச்சினை, ஒரு வங்கியின் ஏடிஎம் விட்டுஇன்னொரு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது இணைப்புத்தடை வந்து எடுக்காத பணம் கணக்கில் இருந்து கழிவதால் வரும் தூக்கம் வரா இரவுகள்.
கடைசியாக நான் அருகில் இருக்கிறதென்று, இன்னொரு வங்கி பரம்பொருளில் பணம் எடுக்கப்போய், பணம் கக்குவதற்கு பதில், நக்கி விட்டது. அது துப்பிய காகிதத்தை கையில் வைத்துக் கொண்டு எனது வங்கியின் தொல்லை நீக்கும் பிரிவுக்கு தொலைபேசி், பணம் என்னுடைய கணக்குக்கு திரும்பக் கிடைக்க பத்து நாட்கள் ஆயிற்று.
இந்த அனுபவம் எனக்கும், உங்களுக்கும் வந்தால் பரவாயில்லை. டென்ஷன் இல்லாமல் பென்ஷன் தள்ளிக் கொண்டிருக்கும் தள்ளாத பாட்டிக்கும், தாத்தாவுக்கும் வந்தால்? வாடகைக்காகவோ, பள்ளிக் கட்டணத்துக்காகவோ, கடனுக்கான தவணைக்காகவோ வைத்திருக்கும் தொகை இப்படி மாட்டிக் கொண்டால், திண்டாட்டம்தான்.
இன்னொரு பிரச்சினை, நான்கே எண்கள் இருந்தாலும், அதை மறந்து விடுவது. (மண நாள், பிறந்தநாள் வைக்கக்கூடாது. செக்யூரிட்டிக்காக இல்லை. மண நாள் பணம் எடுக்கும் போதெல்லாம் மனையாளை ஞாபகம் ”படுத்தும்”; பிறந்த நாள் பாழாய் போன வயதை). சரியாக எண் அழுத்தாமல் அட்டை மாட்டிக்கொள்வது மற்றொரு துயரம்.
அதனால்(தான்), பழங்கால பாட்டிகள், ஏடிஎம் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை (நிகழ்கால பாட்டிகள் 20 வருடம் முன்பு கல்லூரியில் படிச்சுஃபை, நுனிநாக்கு ஆங்கிலம் பேசிஃபை என்பதை நினைவில் கொள்க).
ஏடிஎம் துயரங்கள் நம்மை ஆட்டிவைக்கும் போது, மனம் தொண்டி காலணா டோக்கனை நினைப்பதை தடுக்க முடியவில்லை.
சுஜாதாவின் நடை
சமீபத்தில் திருவல்லிக்கேணி பாரதி சாலையில் புத்தகக் கடைக்கு சென்றிருந்தேன். நோக்கம் நான் இதுவரை, தவறி படிக்காமல் விட்ட சுஜாதா புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க. சுஜாதா புத்தகங்கள், இன்றைய கல்லூரி மாணவர்களிடமும் மிகப் பிரபலம் என்பது கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்ததில் கிடைத்த மகிழ்ச்சியான தகவல்.
அருகிலேயே மாநிலக் கல்லூரி இருப்பதால், கல்லூரி விடுமுறை இல்லாத நாட்களில் இந்த கடையில் பல சுஜாதா புத்தகங்கள் இருப்பில் வைத்திருப்பார்கள்.
முன்பே சில கட்டுரைகளை படித்திருந்தாலும், தொகுப்பாக கிடைத்ததால் நான் வாங்கியது “21ம் விளிம்பு”. அவரின் பழைய கட்டுரைகளை படிக்கும்போது, அந்த காலகட்டத்துக்கு நம்மை அழைத்துச் செல்வது சு.வின் சிறப்பு. அவரது பல கட்டுரைகளை நான் திரும்பத் திரும்ப படிப்பது, எழுத்து நடைக்கும், எப்போதும் ஊடாடும் மெலிதான நகைச்சுவைக்கும், சிந்திக்க வைப்பதாலும்.
புத்தகத்திலிருந்து ஒரு பாரா, சுஜாதா அடாத மழையின் இம்சையை வர்ணிக்கிறார்:
“போன மாதம்தான் தண்ணீர் கஷ்டத்தில் வருண ஜபங்களையும், ஐயோடைடு விதைகளையும் முயன்று கொண்டிருந்த சென்னையில் மாதம் மும்மாரிக்குப் பதில் முப்பது மாரி பொழிந்து, “த்தா இவ்ளவ் மய யாருக்குடா வேணும்.” என்று ஜனங்கள் தத்தம் சூப்பர் மார்கெட் பாலித்தீன் பைக்குல்லாய்களில் புகார் செய்ய, வெளிப்புறப் பாக்க வாசிகள் “அமைதியான நதியினிலே ஓடம்” என்று பாடிக்கொண்டே ஆபிசுக்கு வர, சென்னை ரோடுகள் அனைத்துக்கும் அம்மை போட்டு, கொஞ்சுண்டு நீலவானம் இப்போதுதான் தெரிகிறது”
அசர வைக்கும் வார்த்தை பிரயோகம்: “மும்மாரிக்குப் பதில் முப்பது மாரி”, ”சூப்பர் மார்கெட் பாலித்தீன் பைக்குல்லாய்”, ”வெளிப்புறப் பாக்க வாசிகள்”. நான்கு வரிகளில் இத்தனையா? சுஜாதா அதனால்தான் எழுத்து தாதா.
இதுபோல எழுத முடியும் என்றால் என் கட்டைவிரலை வெட்டித்தர தயாராக இருக்கிறேன். ஆள்காட்டி விரலால் ஸ்பேஸ் பார் தட்ட பழகிக்கொண்டு









First my sincere apologies for posting my “for the time being” comment in English.
The content of the article is the major reason why I rushed to post my comment even if it was in English.
Post is excellent.
“ஒரே பிரச்சினை, ஒரு வங்கியின் ஏடிஎம் விட்டுஇன்னொரு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது இணைப்புத்தடை வந்து எடுக்காத பணம் கணக்கில் இருந்து கழிவதால் வரும் தூக்கம் வரா இரவுகள்.” – These days people don’t show much care about these charges. Also I think from April 1, 2009 there is no charges if you withdraw money from some other ATM.
“ஏடிஎம் துயரங்கள் நம்மை ஆட்டிவைக்கும் போது, மனம் தொண்டி காலணா டோக்கனை நினைப்பதை தடுக்க முடியவில்லை.” – Nisandhaanga…
Sujatha would have defly noticed that it rained for full month. That’s why Muppadhu Maari…
Mun maathiri illaamal indha dhadavai Mummaari maathiri muppathu maari maari maari pozhinjuthu..this is my thought of expressing. How is it?
He is great.
நம்ம காசோலையோ அல்லது தொ.கா. வோ மேசை விட்டு மேசை நகர அந்த மேசையை சார்ந்த நபரால் தாமதிக்கப்படும் போது ஒரு கோவம் வரும் பாருங்க….நல்ல கமெண்ட் எழுதி சம்மிட் பட்டன அமுக்கினா “பேஜ் கேனாட் பி ஃபௌண்ட்”னு வரும் போது வரும் கோவத்தோட 10 மடங்கு வரும் மூர்த்தி.
சுஜாதாவ பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியது ஒண்ணும் இல்ல..அவரு அவருதான்.
//“ஒரே பிரச்சினை, ஒரு வங்கியின் ஏடிஎம் விட்டுஇன்னொரு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது இணைப்புத்தடை வந்து எடுக்காத பணம் கணக்கில் இருந்து கழிவதால் வரும் தூக்கம் வரா இரவுகள்.” – These days people don’t show much care about these charges. Also I think from April 1, 2009 there is no charges if you withdraw money from some other ATM.//
நான் எழுதியது எடுக்க நினைத்த பணத்தை ஏடிஎம் துப்பாது தப்புவதையும், அந்த தப்பினால் நாம் படும் வதைகளையும் பற்றி!
Leave your response!
Thats me
I am just 5 ft 7 inches; so I cannot and do not make any "tall" claims :-)
Archives
Blogroll
Subscribe
Interesting stuff
Recent Posts
Recent Comments
Lucky click! (Click on a word and see what comes up)
Most Commented
Most Viewed