Home » Chennai, Headline, Tamil-தமிழ், நகைச்சுவை

சன் டிவி மூன் டிவியான கதை

14 April 2009 2,069 views 8 Comments

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் என் ரகசியமான, “கண்கள் பனித்து, இதயம் இனித்து, தை கடந்தும், மெய் கடக்காத” தமிழ் புத்தாண்டு விரோதி் வருடம் பிறப்பதையும், தமிழ் வருடமான விரோதி வருடத்தின் முதல் நாள் என்பதைத் தவிர வேறு எதுவும் என் பகுத்தறிவுக்கு எட்டாத சித்திரைத் திருநாள், சித்திரைத் திங்கள், சித்திரை திருவிழா நாள், சித்திரை விழா நாள் வாழ்த்துக்கள். (இந்த நாளை ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் எப்படி அழைழவைக்கிறார்கள்  என்பது புரிகிறதா?)

கலைஞர் தொலைக்காட்சியில், இன்று விசேஷ தினம். சித்திரைத் திங்கள் கொண்டாடுகிறார்கள்.

இன்று சித்திரை செவ்வாய் என்பதை மறந்துவிட்டு, சித்திரை திங்கள் என்று எப்படி அறிவித்தார்கள்? கலைஞர் போன்ற தமிழ் மூதறிஞர் வழிகாட்டும் தொலைக்காட்சியில் இப்படி ஒரு இமாலய தவறு நேரலாமா?

14

ஒரு வேளை தினப்பெயர்களையும் மாற்றிவிட்டதா தமிழக அரசு? அப்படியானால் இனிமேல் ஞாயிறு என்று வரும்? செவ்வாய் திங்கள் ஆகிவிட்டது; மற்ற நாட்கள் அனைத்தும் ஒரு நாள் முன்னால் தள்ளினால், ஞாயிறு – சனியாகி, திங்கள் ஞாயிறு ஆகிவிடும்.

அப்படியானால் இனிமேல் சன் டிவி, மூன் டிவியா?

ஓ இப்படித்தான் சரித்திரம் படைக்கிறார்கள் போல இருக்கிறது.

இதற்காக இனிமேல் யாரும் தை தை என்று குதிக்கக் கூடாது! ஆமாம், சொல்லிவிட்டேன்.

Readers also liked

8 Comments »

  • Kanda said:

    is it very very important message?

  • triplicani (author) said:

    கந்தா!

    எந்தா கோபமோ?

  • Maximum India said:

    Really superb.

    நான் கூட இன்று காலையில் யோசித்தேன். மிகவும் குழப்பமாகவே இருந்தது. பொதுவாகவே சித்திரை முதல் நாளில் இந்நேரம் கோயிலுக்குப் போய் திரும்பி இருப்போம். இன்று இது வரை போக வில்லை. ஏதோ ஒன்றை இழந்தது போல உள்ளது.

    ஒரு வேளை, இருநூறு ஆண்டுகளாக மட்டுமே பழைய தமிழ் ஆண்டு முறையை கொண்டாடுகிறோம், முற்காலத்தில் தை திங்களேதான் வருட பிறப்பாக இருந்தது என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். இருநூறு ஆண்டுகள் நீண்ட நெடிய தமிழர் வரலாற்றில் ஒரு சிறிய காலகட்டமாக இருக்கலாம். ஆனால், நம்மைப் போன்றவர்களுக்கு? இந்த காலக் கட்டம் கிட்டத் தட்ட ஆறு தலைமுறை அல்லவா? எப்படி திடீரென்று கூட்டணி மாறுவது போல புத்தாண்டு கொண்டாட்டங்களையும் மாற்றிக் கொள்ள முடியும்?

    நன்றி.

  • triplicani (author) said:

    மாக்சிமம் இந்தியா,

    அடுத்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழ் புத்தாண்டு தையிலிருந்து ஃபாஸ்ட் பார்வர்ட் ஆகி மீண்டும் சித்திரைக்கு வரலாம்.

    தமிழ் புத்தாண்டை மாற்றியவர்கள் ஏன் வருடங்களுக்கு புதுப் பெயர் வைக்காமல் விட்டார்கள். அடடா! அத்தனை ஜாதித் தலைவர்களுக்கும் ஒரு வருடத்தை ஒதுக்கியிருந்தால் இந்த தேர்தலில் கூட்டணி இல்லாமலேயே வெற்றி பார்த்திருக்கலாமே! (ஒருவேளை அதை அடுத்த சட்டமன்ற தேர்தலுக்காக வங்கியில் வைத்திருக்கிறார்களோ?).

  • Vijayasarathy R said:

    சத்தியமூர்த்தி,

    ஒன்று சொல்லுங்கள் எனக்கு. திங்கள் என்றால் மாதத்தை குறிப்பிடாதா? இருந்தாலும் செவ்வாய் அன்று திங்கள் என்று கூறுவதாக வைத்து நீங்கள் எழுதியிருப்பது நன்றாக இருக்கிறது.

    ஒரு வேளை நான் நினைத்தது போல திங்கள் என்றால் மாதம் என்றில்லாவிட்டால், சன்னை போல பார்க்காமல் சன்னைப் போல பாவித்து என்னை சன்னியுங்கள்….ச்ச்சீ…மன்னியுங்கள்.

    அவர் ஆட்சிக்கு மீண்டும் வந்தால்…தினப்பெயர்களென்ன, கிரகங்களுக்கு கூட அதே கதிதான்.

  • LEMINAR said:

    மொத்தத்தில் ஒரே விசு(ஷு)வேஷமாய் இருக்குது ஹைய்யா !

  • Raju said:

    \\இன்று சித்திரை செவ்வாய் என்பதை மறந்துவிட்டு, சித்திரை திங்கள் என்று எப்படி அறிவித்தார்கள்?//

    சித்திரை திங்கள் என்பது சித்திரை மாதம் என்று பொருள் (இங்கு திங்கள் என்பது கிழமையை குறிக்கவில்லை )

  • triplicani (author) said:

    ராஜூ

    வாங்க வணக்கம்.

    திங்கள் – மாதம் என்றும் குறிக்கும் எனத் தெரியும்.

    இது நான் முயன்ற நையாண்டி. வெற்றி பெறவில்லை என்று நினைக்கிறேன்.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.