Home » Chennai, Humor, India Politics, Tamil-தமிழ், நகைச்சுவை

யார் பிரதமர்? உங்கள் ஓட்டு யாருக்கு?

8 April 2009 799 views 2 Comments

சற்று முன், NDTV தொலைக்காட்சியில், ஒரு சி.ம.சே. (சிறு மடல் சேவை – எஸ்.எம்.எஸ்.) போட்டி பற்றி சொன்னார்கள்.

யார் அடுத்த பிரதமராக வருவார் என்று நினைக்கிறீர்கள்? என்பது கேள்வி. அதற்கான பதிலை NEXT என்று டைப் செய்து, நீங்கள் யார் பிரதமராக வருவார் என்று நினைக்கிறீர்களோ அவர் பெயரை எழுதி 56388 என்கிற எண்ணுக்கு சி.ம.சே. செய்யலாம்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது, நீங்கள் யார் வருவார் என்று சிமசே செய்யவேண்டும். யார் வரவேண்டும் என்றல்ல. நீங்கள் தேர்வு செய்த தலைவர் பிரதமராக வந்துவிட்டால் – உங்களுக்கு ஒரு Skoda Car பரிசாக கிடைக்கும் – உங்களுக்கும், நீங்கள் தேர்வு செய்த தலைவருக்கும் அந்த அதிர்ஷ்டம் இருந்தால்!

இதுவரை வந்த சிமசேக்களின்படி அதிக ஓட்டு வாங்கியிருப்பவர், மன்மோகன் சிங் அவர்கள். அடுத்த இடத்தில் அத்வானி அவர்கள். சரத்பவார், மாயாவதி, சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு கிடைத்த வாக்குகள் இரண்டு சதவீதமே.

ஆச்சரியமாக ஜெயலலிதாவுக்கு 5% ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.

எப்படி அத்தனை ஓட்டுக்கள் ஜெயலலிதாவுக்கு?

பல அதிமுக வட்ட, மாவட்டங்கள் சிமசே செய்திருக்கவேண்டும். சட்டமன்ற தேர்தலின் போது அவர் எந்த தொகுதியில் நிற்க வேண்டும் என்று பலர் அதிமுகவில் பணம் கட்டுவதுபோல், இந்த சிமசேவும் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

என் பரிந்துரை – யார் பிரதமராக வரக்கூடாது என்று நினைக்கிறீர்களோ அவர் பெயரை தேர்வு செய்து வாக்கு அனுப்புங்கள். அப்படி அந்த நபர் பிரதமராகிவிட்டால், உங்களுக்கு Skoda Car கிடைத்துவிடும், துக்கத்தை கார் பரிசு குறைக்கும். அப்படி நீங்கள் தேர்வு செய்யாதவர் பிரதமராகிவிட்டால், உங்களுக்கு பிடிக்காதவர் பிரதமராகத மகிழ்ச்சி இருக்கும்.

இன்னொரு ஆச்சரியம், அரசியல்.காம் என்கிற என்னுடைய இன்னொரு வலைத்தளத்தில். அங்கு நானும் யார் பிரதமர் என்று ஒரு தேர்தல் (online poll) போட்டிருக்கிறேன். யார் அதிக ஓட்டு வாங்கியிருக்கிறார்கள் என்று போய் பாருங்கள். உங்கள் ஓட்டை போடுங்கள் – விரலுக்கு மை கிடையாது, கம்ப்யூடரில் குக்கி மட்டுமே.

Readers also liked

2 Comments »

  • Vijayasarathy R said:

    நல்ல யோசனைதான். ஆனால் NDTVயில் மன்மோகன் அதிக வாக்கு பெற்றிருப்பது எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை. அது எதிர்பார்த்ததுதான். ஜெயா 5% எதிர்பார்க்காதது.

    அப்புறம் உங்க அரசியல்.காம் இல் வோட்டு போட்டு அவர் பிரதமராக வந்தால் என்ன பரிசு வராவிட்டால் என்ன பரிசு…? அதை கொஞ்சம் தெளிவாகச் சொன்னால், குக்கி போட வசதியாக இருக்கும்.

  • triplicani (author) said:

    விஜயசாரதி,
    //அப்புறம் உங்க அரசியல்.காம் இல் வோட்டு போட்டு அவர் பிரதமராக வந்தால் என்ன பரிசு வராவிட்டால் என்ன பரிசு…? அதை கொஞ்சம் தெளிவாகச் சொன்னால், குக்கி போட வசதியாக இருக்கும்.//

    இப்படி கொக்கி போடறீங்களே.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.