Home » Chennai, Tamil-தமிழ், நகைச்சுவை

பகலை இரவாக்கும் விளக்குகள்

7 April 2009 884 views 7 Comments

சென்ற வருடம் தமிழ்நாட்டில் மின்சாரத்திற்கு எந்த அளவுக்கு தட்டுப்பாடு, கட்டுப்பாடு என்று நம்மில் பலருக்கு தெரியும்.

இன்னும் “கண்கள் பனித்து, இதயம் இனிக்காத” சன் டிவியும், திமுக ஆட்சியில் எதையுமே தாங்க முடியாத இதயம் படைத்த அண்ணா திமுகவின் ஜெயா தொலைக்காட்சியும், மின்சாரம் இல்லை, யாரும் பார்க்க முடியாது என்று இருக்கும் போது கூட, தட்டுப்பாட்டை இரவு, பகலாக வெளிச்சம் (!) போட்டுக் காட்டினார்கள்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமியை நாடு கடத்தாத குறைதான்.

தொழிற்சாலைகளில் மின்சாரம் இல்லாமல் உற்பத்தி தடைபட, கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி கண்ட நேரத்தில் வரும் மின்சாரத்துக்காக கண் விழித்துக் காத்திருக்க, வியர்வை ஆற்றால் தூக்கமே வராமல் பொதுஜனம் தூங்க ஏங்க – இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு பக்கம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னாட்சி செய்த மின் உற்பத்தியை பட்டியலிட்டு, உற்பத்தியாகும் மின்சாரத்தை எல்லாம் கலைஞர் வீட்டில் மறைத்து விட்டது போல் குற்றம் சாட்டுவார், இன்னொரு பக்கம் இந்த கதை எல்லாம் என்னிடம் செல்லாது; மின்சார உற்பத்தி ஏதாவது அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் அது திமுக காலத்தில் போட்ட திட்டத்தினால்தான் என்று கலைஞர் புதுக்கதை புனைவார்.  இவர்களின் பாட்டுக்கேற்ப இவர்கள் அணியில் இருப்பவர்கள் கோரஸ் பாடுவார்கள்.

மின்வெட்டோடு சேர்த்து இந்த கழுத்தறுப்பைத்தான் தமிழ்நாட்டு மக்கள் தினமும் அனுபவித்தார்கள் (?).

ஆனால், இப்போது? காலம் மாறிப் போய் விட்டது.  தேர்தல் நேரம் வந்துவிட்டது.  தடையில்லாத மின்சாரம் காலத்தின் கட்டாயம்.

மின்சாரத் தடைக்கு தடை வந்துவிட்டது.

அதனால் பாருங்கள் மகா ஜனங்களே.  பகலை இரவாக்கும் சோடியம் விளக்குகளை பாருங்கள். எடுக்கப்பட்ட இடம் இன்னும் விசேஷம்.  மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத திருவலலிக்கேணி பறக்கும் ரயில்நிலையம் அருகில் உள்ள தெரு இது.  நேரம், பகல் 2.30 மணி.

27032009144

27032009141

அட இது ரொம்ப நல்லா இருக்கே! (கிளிக் பண்ணிதான் பாப்பமே – சிவகுமார் குரல்ல)

Readers also liked

7 Comments »

  • T.P.Anand said:

    We are facing a global recession and it is extremely important for Governments and Corporates to ensure total avoidance of wastage. On one hand we have acute shortage of power and on the other we end up wasting power by having lights on during day time.

    It is high time we got into community living so that each street there will be a few volunteers for the “whistle blowing” on civic and other issues.

    -T.P.Anand

  • triplicani (author) said:

    Dear Anand,

    Fantastic suggestion. Exnora type of organizations should probably lead the way!

  • Ram N said:

    I guess “we are the community” and exnora’s are formed by us & for us, we should be whistle blowing about these issues.

  • triplicani (author) said:

    Ram,

    I cannot agree more with your “man in the mirror” comment!

  • Sampathkumar S said:

    பகலாவது இரவாவது ! தேர்தல் வந்தால் தன்மான தமிழனுக்கு எல்லாம் மறந்து போகும். குட்டி தலைவர்களது அரசியல் பிரசார மேடைகளுக்கு கூட கம்பி மின்சாரம் பாயும்.

  • Vijayasarathy R said:

    சத்தியமூர்த்தி,

    எங்க தெருவுல கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. முக்கால்வாசி இரவுகள்ள எரியாது அதற்கு பதிலா பல சமயம் பகல்ல எரிஞ்சுகிட்டு இருக்கும்.

    இதத்தவிர நான் ஒண்ணு சொல்ல விரும்பறேன். இந்த இரவு பகல் விஷயத்த நாம நம்ம வீட்லயும் கடைபிடிக்கணும். அதுவும் கூட ஆனந்த் சொல்லறா மாதிரி இப்ப இருக்குற நிலைமையில மின்சாரத்த சேமிக்க ரொம்ப உதவும்.

    இதுவும் கூட கிட்டத்தட்ட நாமளே நமக்கு விசில் அடிச்சிக்கறா மாதிரிதானே. ஆனா தப்பித் தவறி வாசல்ல நின்னு விசில் அடிக்கப் போய் அப்போன்னு பார்த்து அந்த பக்கமா ஒரு லேடீஸ் (இது நம்ம ஊரு பாஷை) போக…நமக்கு வொயர் தொடாமலயே ஷாக் அடிச்சிடும். அதனால பார்த்து உஷார் இல்லன்னா பேஜார்.

  • triplicani (author) said:

    @சம்பத்குமார்,

    தன்மான தமிழர்கள் அப்படி இல்லை. நீங்களும், நானும், நம் போல் எண்ணம் கொண்ட பலரும் இருப்பது உண்மைதானே? அதை நினைக்கும் போது, எனக்கு “கண்கள் பனிக்கிறது, இதயம் இனிக்கிறது”.

    @விஜயசாரதி,

    விஷயமான பதிவ, விசிலடிச்சு விவகாரமா ஆக்கிடாதீங்கப்பு.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.