படித்ததும், பிடித்ததும் – 0001 – தொடக்கம்
எனக்கு தெரிந்த சில பதிவர்கள், நான்கே வரிகளில் கூட பதிவிடுகிறார்கள். அதை விரும்பிப் படிக்கவும் பலர் இருக்கிறார்கள். அந்த வகை பதிவுகள் நாட்குறிப்பு போல இருக்கின்றன.
அதை பலர் விரும்பி படிக்கக் காரணம், அடுத்தவர் வீட்டு சன்னல் வழியே எட்டிப் பார்க்கும் ஆசைதான் என்று தோன்றுகிறது. பதிவர் நண்பராக இருப்பது, அவருடைய முந்தைய பதிவுகளால் வந்த ஈர்ப்பு இவைகூட இந்த சிறிய பதிவுகளுக்கு வரவேற்பு கிடைப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.
எனக்கும் கூட சின்ன சின்ன சிந்தனைகள் தோன்றுகின்றன. ஓரளவு பெரிய பதிவாக எழுதும் அளவுக்கு விஷயமிருக்காது. ஆனால், பதிக்க ஆவலாக இருக்கும். என்ன செய்யலாம் என்று யோசித்ததன் விளைவுதான் இந்தத் கட்டுரைத் தொடர் உபாயம்.
தொடக்கம்
நான் இந்த தொடரைத் துவங்குவதற்கு முன்னால், என்ன பெயர் இடலாம் என்று ரொம்ப யோசித்தேன். மிக அழகாக “கற்றதும், பெற்றதும்” என்று சுஜாதா தன் கட்டுரைத் தொடருக்கு பெயர் வைத்தது போல் ” படித்ததும், பிடித்ததும்” என்று என் தொடருக்கு பெயர் வைத்துவிட்டேன். (பெயர் சாயலுக்காக சுஜாதாவுக்கு நன்றி)
ஆகவே மகாவலை ஜனங்களே, இந்த தொடரில் நான் எழுதப்போவது நான் படித்தவைகளையும், எனக்குப் பிடித்தவைகளையும், நான் எங்கிருந்தாவது பிடித்தவைகளையும்தான்.
அடிக்கடி வாங்க, ஆதரவு தாங்க.
தலைப்பை சரியாக கவனித்தீர்களா? “படித்ததும், பிடித்ததும்” என்று போட்டு நான்கு இலக்கத்தில் தொடங்கியிருக்கிறேன். 9999 பதிவுகள் வரை இது தாங்கும். ஒரு நாளைக்கு ஒரு பதிவு என்று கொண்டால் கூட, இருபத்தேழு வருடங்கள் எழுதலாம். ரொம்பதான் ஆசை எனக்கு. “எல்லாம் இறைவன் செயல்” என்று கொள்ளுங்கள். ஏனென்றால், என் வயது இப்போது நாற்பத்து ஐந்து. இருபத்தேழு வருடம் என்றால் என் 72 வயது வரை – விடமாட்டேன் உங்களை.
சரி உள்ளே போகலாமா?
பிரசவ வேதனை
ஆ!
காலில் பட்டது
கல்லா?
தாயே!
பிரசவ வலி
எப்படிப் பொறுத்தாய்?
இது நான் ரொம்ப வருடங்களுக்கு முன் படித்த, என் உள்ளத்தில் ஒட்டிக்கொண்ட கவிதை. யார் எழுதியது, எங்கே படித்தேன் என்று மறந்து போய், சில நேரங்களில் நானே எழுதியதோ என்று கூட சந்தேகம் வருகிறது.
கிட்டத்தட்ட 30 வருடம் ஆகிவிட்டது இந்த கவிதையுடன் என் அறிமுகம் ஆகி. நான் தான் எழுதினேன் என்றால் யாராவது மறுக்கவா போகிறார்கள்?
முதலில் இதை எழுதியவர் (நான் இதை எழுதியிராத பட்சத்தில்) இன்னும் உயிருடன் இருக்க வேண்டும். அவர் இணையம் உபயோகிக்கிறவராக இருக்க வேண்டும். அதிலும் ப்ளாக் என்னும் பெரும்பாலும் மொக்கை, சிறும்பாலும் இழுவைகளை படிப்பவராக இருக்க வேண்டும்.
அவர் எப்படியோ என் தளத்திற்கு வரவேண்டும். இந்த பதிவை படிக்க வேண்டும். பெரும்பாலோர் போலில்லாமல் இந்த வரிவரை படிக்க வேண்டும். பிறகு கவிதை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாட வேண்டும். அதற்கு என்னுடன் மடலாடவோ அல்லது பின்னூட்டமோ போடவேண்டும்.
அப்படி நடந்தால் நடக்கட்டும் என்று அதை சமாளிக்க தைரியமாக, இது என்னுடைய கவிதைதான் என்று சொல்லி விடுகிறேன். அப்படி அவர் வந்து சொந்தமும் கொண்டாடிவிட்டால்?
அவர் மடலாடினார் என்றால், இந்த அற்புதக் கவிதைக்காக அவரை பாராட்டி விடுகிறேன்.
அவர் பின்னூட்டம் போட்டாரென்றால், அப்படியாவது ஒரு பின்னூட்டம் வந்ததே என்ற மகிழ்ச்சியோடு அவருக்கு கவிதையை விட்டுக் கொடுத்துவிடுகிறேன்.
சரிதானே? கவிதைக்கு கீழே என் பெயரை போட்டுக்கொள்ளுங்கள். உண்மையான கவிஞர் வரும்வரை, பின்னூட்டத்தில் என்னையே பாராட்டுங்கள். (அதை பிற்பாடு கர்ணன் போல் அவருக்கு தானம் தந்துவிடுகிறேன்).









நண்பா உனது எழுத்து ஆர்வத்தை பாராட்டுகிறேன்.
கவிதை எனது என்று சொந்தம் கொண்டாடும் அளவிற்கு நன்றாக இருப்பதாக எனக்கு படவில்லை.
உனது முயற்சி மேலும் மக்களை சென்றடைய எனது வாழ்த்துக்கள்.
அன்புடன் சம்பத்குமார்
சத்திய மூர்த்தி உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். நீங்கள் உங்களின் 72 வரை எங்களை கொடுமைபடுத்த வேண்டும் என்றிருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது…ஐநா போனாலும்…உங்கள் பேனா மை தீர்ந்து போனாலும்.
கவிதை யதார்த்தம், அழுத்தம், பாசம் என்று மூன்று கோணங்களை காட்டுகிறது.
சம்பத்குமார் நண்பா,
நன்றி!
எந்த எழுத்தையும், எந்தன் எழுத்தையும் பாராட்டும் உன் ஆர்வத்தை பாராட்டுகிறேன். கவிதை உனக்கு அவ்வளவு நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டாய். அப்படியானால், உண்மையாகவே நான்தான் எழுதியிருக்கவேண்டும்.
விஜயசாரதி,
வாழ்த்துக்களுக்கு நன்றி. ஐநா, பேனா என்று சொல்லாடுகிறீர்கள்!
Dear Murthy,
First, please teach me to write in Tamil using my Laptop.
This is a great beginning and an excellent initiative. Once i learn how to type in Tamil i shall start contributing to this initiative as i have also written a few four liners and i have read a lot of four liners.
Regards,
Anand T.P.
Dear Anand,
Go to http://software.nhm.in and download their software and install it in your Laptop. Restart the Laptop.
You will notice a bell like gray icon on your system tray (at the bottom right of your screen). You are now set for writing in Tamil.
Whenever you want to write in Tamil, press ALT+2 and the aforesaid icon will turn yellow and you can type in Tamil.
Typing in Tamil is same as in English – to type அம்மா – you have to type a m maa (a will be அ, m will be ம், ma will be ம, maa will be மா).
Hope this helps.
27 more years …. oh oh …..
Leave your response!
Subscribe
Archives
Thats me
I am just 5 ft 7 inches; so I cannot and do not make any "tall" claims :-)
Recent Posts
Blogroll
Recent Comments
Lucky click! (Click on a word and see what comes up)
Most Commented
Most Viewed
Switch to our mobile site