Home » Chennai, Headline, Music, Stock Markets, Tamil-தமிழ், தமிழ் திரை இசை

குன்னக்குடி போட்ட ஆங்கிலப் பாட்டு

31 March 2009 1,403 views 8 Comments


குன்னக்குடி வைத்தியநாதனின் வயலின் திறமை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

வயலினில், கர்நாடக இசையை எளிமையாக்கி, சாமானிய மக்களிடம் அதை கொண்டு சேர்த்த பெருமை குன்னக்குடிக்கு உரியது.

கர்நாடக இசையை ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும் வகையில் அவர் இசைத்ததை, சில கர்நாடக சங்கீத கலைஞர்களும், ரசிகர்களும் ஏற்காவிட்டாலும், அதற்காக மட்டுமே அவர் பாராட்டுக்குரியவர் என்பது என் கருத்து.  சிறு வயதில் அவரின் வயலின் இசையில் ஈர்க்கப்பட்டு அதனாலேயே கர்நாடக இசையை கேட்கத் துவங்கியவர்களில் நானும் ஒருவன்.

பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், அப்போதெல்லாம், இப்போது பொதிகை என்று அறியப்படும், அரசு தமிழ்த் தொலைக்காட்சியில் குன்னக்குடி வைத்தியநாதனின் வயலின் கச்சேரி இருக்கும்.  அதை மீண்டும், மீண்டும் கேட்பதற்காக ஒலி நாடாவிலும், பார்ப்பதற்காக ஒலி-ஒளி நாடாவிலும் பதித்து வைத்ததுண்டு.

அவர் சில திரைப்படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார் என்பது இன்றைய இளைஞர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.   ஏறத்தாழ பத்து படங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கிறார்.   தெய்வம்,  அகத்தியர்,  ராஜ ராஜ சோழன், வா ராஜா வா, மேல் நாட்டு மருமகள், கண்காட்சி, தோடி ராகம் போன்றவை அதில் அடங்கும்.

இவற்றில் பல பாடல்கள் சூப்பர்ஹிட்.  தெய்வம் படத்தில் இடம்பெற்ற மருதமலை மாமணியே முருகையா என்கிற பாடல் குன்னக்குடியின் இசையாட்சிக்கும், மதுரை சோமுவின் குரல் வளத்துக்கும், கண்ணதாசனின் சொல்லாட்சிக்கும் உதாரணம்.

அதேபோல், நடிகர் திலகத்தின் நடிப்பில் மிளிர்ந்த, இந்தியாவின் உண்மையான பேரரசனான ராஜ ராஜ சோழன் படத்தில் இடம்பெற்ற, கர்நாடக இசை அடிப்படையில் அமைந்த பாடல்கள் அனைத்துமே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை. (தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே; நாதனை கண்டேனடி; ஏடு தந்தானடி தில்லையிலே; ராஜ ராஜ சோழனின் சிம்மக் குரலில் ஒலித்த “தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்)

அகத்தியர் படம் நான் மிகச் சிறுவனாக இருந்தபோது திரையரங்கில் பார்த்த படம்.  ஆனால், அந்த படத்தில் டி.கே.கலா குரலில் இடம் பெற்ற ”தாயிற் சிறந்த கோவிலும் இல்லை” என் நெஞ்சில் நீங்காத இடம் பெற்று நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்.

இப்படி பல சிறந்த கர்நாடக இசை சார்ந்த பாடல்களை கொடுத்த குன்னக்குடி, எனக்கு தெரிந்தவரை இரண்டு மிகவும் வித்தியாசமான பாடல்களையும் இசைத்தார்.  அதில் ஒன்று, அவர் தோடி ராகம் படத்தில் இசைத்து, பாடிய “கொட்டாம்பட்டி ரோட்டுல” என்ற பாடல்.  அப்போது மிகப் பிரபலமான ஜனரஞ்சக பாடல் அது.

மற்றொரு பாடல், அவர் இசை அமைத்து, மேல்நாட்டு மருமகள் (சிவகுமார், கமலஹாசன்) படத்தில் இடம் பெற்ற ”Life is a flower” என்ற ஆங்கிலப் பாடல்.  அப்போதுதான் பிரபலமாகிக் கொண்டிருந்த, எனக்கு மிகவும் பிடித்த இந்திய பாப்பிசை பாடகி உஷா உதூப் அந்த பாடலை பாடினார்.  படத்தில் இடம்பெற்ற அந்த பாடல் காட்சியிலும் அவரே பாடகியாகவும் தோன்றி நடித்தார்.  இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.  சமீபத்தில் இந்த பாடல் ஜெயா டிவியில் காணக்கிடைத்தது.

ஒருமுறை இந்தப் பாடலை கேட்டால், அதை மீண்டும் ஒருமுறை கேட்க உங்கள் மனம் விழையும் என்று உத்திரவாதத்துடன் சொல்லலாம்.

என் ஐந்து வயது மகன் அக்‌ஷையை இந்த பாடல் வெகுவாக கவர்ந்து விட்டது. விளையாடிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தேன்; பாடல் முடிந்தவுடன் வந்து “திருப்பியும் போடுப்பா” என்றான்.

யான் பெற்ற பேரு இந்த தமிழ் வையகம் பெற, அந்த பாடல் காட்சி உங்கள் பார்வைக்கு (இளவயது கமலை காணத்தவறாதீர்கள்).

Readers also liked

8 Comments »

  • Ram N said:

    Where’s the link to see that song? or am i missing it ….
    Also i heard (yday from super singer) that his son is a Cello player ….

  • triplicani (author) said:

    Ram,

    Aren’t you able to see the Video? If you are not able to then you can still see it at http://www.youtube.com/sathya9564

  • T.P.Anand said:

    Dear Sam,

    You should hear Kunnakudi play the song “Maruda malai maa maniye murugaiah”. It is really a treat to watch Kunnakudi play violin as he does it with such ease and comfort.

    Regards,
    Anand T.P.

  • triplicani (author) said:

    Anand,

    Yes. “Marudha malai maamaniye murugaiah” is a terrific song with exceptional voice, tempo, lyrics and violin!

    Hope you remember us seeing him at the coffee shop when you, me and Ravi were coming back from our “BASIC” computer class.

  • maximumindia said:

    Nice song. Thanks for sharing.

  • Vijayasarathy R said:

    குன்னக்குடி வயலின் பற்றி பேசினீர்கள், அவரின் இசைப் படைப்புக்களை பற்றி பேசினீர்கள்…அவர் வயலின் பேசுவதைப் பற்றி குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே சத்தியமூர்த்தி. நான் கூட அவரின் இசை கச்சேரிகளை பண்டிகை நாட்களில் கேட்டு இருக்கிறேன். குறிப்பாக சினிமா பாடல்களை அவர் வாசிக்கும் போது…மன்னிச்சிடுங்க…..பேசிக்கும் போது…ஆஹா..ஆஹா….

    சுந்தரி கண்ணால் ஒரு சேதி வாசிப்பை கேளுங்கள்…..வயலின் பேசும்…அந்த பாடல் போலவே.

  • ROCKKOZHI said:

    His Violin – unique one
    His Voice – unique one
    Ushaji’s Voice -also unique
    English songs in tamil film – also unique
    The story of the film is also unique
    and it scored well.

    What else I can say…as a music lover

  • triplicani (author) said:

    ராக்கோழி,

    சூப்பரா சொல்லிட்டீங்க.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.