மெகா சீரியல் இலக்கணம்
மெகா சீரியல் என்றால் எல்லாமே மெதுவா செய்யணும்.
இப்போ ஒருத்தர் தன் நண்பர் வீட்டுக்கு போவதா காட்சின்னு வைங்க. காட்சிய துவக்குவது இவர் வீட்டுலருந்து ஆரம்பிக்கணும். இவர் பனியன், வேட்டியோட இருப்பார். மெதுவா போய் துணி வைக்கிற பீரோவ தொறந்து ஒரு மேல் சட்டைய எடுப்பார். (டீ ஷர்ட் போடலாம், ஆனா அது சீக்கிரம் முடிஞ்சிடும். சாதா சட்டைன்னா 3 பட்டன் போடணும் அதுல மூணு பட்டன் போட்டதும், மிச்ச பட்டன போட்டாறா இல்லயான்னு தெரியறதுக்குள்ள விளம்பர இடைவேளை விட்டுறலாம்)
விளம்பர இடைவேளைலருந்து வந்தீங்களா? இப்போ இவர் மிச்சம் ரெண்டு பட்டன் போடுவாரு. பின்னாடி, மெல்ல நடந்து கண்ணாடிகிட்ட போய் தல சீவுவாரு (வழுக்கையரா இருக்காம இருந்தா மெகா சீரியலுக்கு நல்லது). அப்போ அந்த கண்ணாடியில அவரோட மனைவி முகம் தெரியும்.
மெகா சீரியல்ல மனைவி சோகமா இருக்கறது முக்கியம். இவர் தலைசீவிக் கொண்டிருக்கும்போது அவர் சோகமாக இவர் எங்கே போகிறார் என்று விசாரிக்க வேண்டும்.
இவர் போகும் இடத்தை சொன்னதும், மனைவி, அங்கே ஏன் போகறீங்க என்று அவர் போகும் இடத்தில் இருப்பவர்களின் பிரதாபங்களை சொல்லுவார். இவரோ மனைவியிடம் தான் போவது எப்படி அவசியம் என்று விளக்குவார். அதற்குள் இவர்களின் மகளோ, மகனோ, மருமகளோ (மருமகள், கோபக்காரியாக இருந்தால் விசேஷம்) வந்து இந்த சர்ச்சையில் பங்கு கொள்ளவேண்டும்.
பிறகு ஒருவழியாக, இவர் அனைவரையும் சமாதான படுத்திவிட்டு, மாடிப்படிகளில் இறங்கி, மெதுவாக தெருவுக்கு வருவார். ஆட்டோ பிடிப்பார். முதல் ஆட்டோ திட்டிவிட்டு போய்விடுவார். இரண்டாவது ஆட்டோவுடன் பேரம். அதற்குள் இவர் எங்கோ போவதை இவர்களுக்கு விரோதமான பக்கத்து வீட்டு மாமி பார்த்துவிட்டு அதை பற்றி தன் கணவர் அல்லது பெண்ணுடன் பேசுவார். அதே சமயம், ஆட்டோ போகும் வழி, ட்ராபிக் ஜாம் உள்பட நமக்கு, விளம்பர இடைவேளையோடு காட்டுவார்கள்.
இது போல எல்லாமே மெகா சீரியலில் மெதுவாகத்தான் நடக்கும் என்பதை சோ, எங்கே பிராமணன் தொடரில் நகைச்சுவையாக சொல்வது கீழே ஒளிப்படத்தில்.









good one
Nalla Pathivu…
ஓட்டுப் போட்டாச்சு…கமெண்ட் நாளைக்குதான்….ஏன்னா இது மெகா சீரியல் பத்தி பதிவு அதனால…எதையுமே மெதுவாத்தான் செய்யணும்.
மிக அருமையான பதிவு. ஒரு சீரியல் காட்சி பார்த்த உணர்வு. இத மாதிரி நிறைய போடுங்க…ஆனா என்ன மாதிரி மெகா சீரியல் பதிவு அதனால லேட்டாகும்னு சொல்லக்கூடாது.
Yennakku mega serial sattire pathi pesache, vivekoda “Dhil” comedy thaan nyabagam varuthu.
Dialogue from the movie:
Director: Oru serial pannaum. Oru ponnu poranthu, vazhanthu, poo poothu, kalyanam aagi, kozhantha pethu, pillaigalukku kalyanam panni, peran pethi yeduthu, padayara varaikkum..
Vivek : Surukkama MEGA serial yedukkanummnu sollungalean..
ப்ரசன்னா,
ரொம்ப பேரு மெகா சீரியல் கிண்டல் அடிச்சுட்டாங்க. நம்ம பேரு சரித்திரத்துல விட்டு போயிடக் கூடாதுன்னுதான் இந்த பதிவு.
வருங்கால சரித்திரத்துல, உங்க பேரு கண்டிப்பா இடம் பெரும்
ப்ரசன்னா அய்யா,
ரொம்ப நன்றி.
Tamilnatukku, oru “aiyya” pothum.. thaangathu
Leave your response!
Thats me
I am just 5 ft 7 inches; so I cannot and do not make any "tall" claims :-)
Archives
Blogroll
Subscribe
Interesting stuff
Recent Posts
Recent Comments
Lucky click! (Click on a word and see what comes up)
Most Commented
Most Viewed