Home » Economy, Headline, Interesting, Stock Markets, Tamil-தமிழ்

பொருளாதாரத் தேக்கம் – நடந்தது என்ன?

19 March 2009 1,391 views One Comment

சமீப காலத்தில், உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தட்டுப்பாடு, தடுமாற்றம், தேக்கம், சரிவு பற்றி மின்னஞ்சல்கள், கட்டுரைகள் படித்திருக்கிறோம்.

நம்மில் பலருக்கு இந்த பிரச்சினையின் ஆதாரம் இன்னும்கூட தெளிவாகாத ஒன்றே.

இந்த சமாசாரத்தில் அதிகம் கேட்கப்படும் சொற்கள் – “housing market collapse”, “sub-prime loans”, “credit crunch”, “AIG”, “Lehman Brothers”, “mortgage crisis” என்பன போன்ற பல.

இந்த பொருளாதாரத் தேக்க நிலை பற்றி பல பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன, பல உரைகள் கேட்கப்பட்டுவிட்டன. ஆனாலும், பலர் மனதில் இந்த பொருளாதார புதிரை பற்றிய ஆதார சந்தேகங்கள் முழுக்க நீங்கவில்லை.

1930களில் அமெரிக்காவில ஏற்பட்ட தேக்கநிலையோடு இதை ஒப்பிட்டாலும், இப்போது ஏற்பட்டுள்ளது அதைவிட அளவிலும், உலகளாவிய வீச்சிலும் மிகப்பெரியது. பல வங்கிகள் நஷ்ட மாடிகள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். “Citi Never Sleeps” என்று விளம்பரப்படுத்தும் Citibank Group, மீளாத்துயிலுக்கு மிக அருகே சென்று திரும்பியிருக்கிறது.

இன்னும் பல அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகள் உயிர் ஊசலாட்டத்துடனே இருக்கின்றன. இந்திய வங்கிகள் ரிசர்வ் வங்கியின் திறமையான ஆளுமையால் அதிகம் பாதிக்கப்படவில்லை என்பது மிகவும் பெருமை கொள்ள வேண்டிய ஒன்று.

பல நாட்டு மத்திய வங்கிகளும், அரசாங்களும் இந்த சிக்கலை சமாளிக்க வழுக்கையர்களின் உதவியோடு மண்டையை பிய்த்துக்கொண்டும், மண்டை காய்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் இந்த மகா மெகா பொருளாதார சிக்கலின் ஆரம்பம் அமெரிக்கா என்பது மறுக்க முடியாத உண்மை.

எப்படி நடந்தது, எதனால் நடந்தது என்பதை எளிமையாக கிராஃபிக் அனி்மெஷன் மூலம் ஜொனாதன் ஜார்விஸ் என்பவர் புரியவைத்திருக்கிறார். சுமார் 11 நிமிடம் ஓடும் இந்த அனிமேஷன் முடிவில் பிரச்சினை குறித்த உங்கள் அறிவு விரிவாவது நிச்சயம்.


The Crisis of Credit Visualized from Jonathan Jarvis on Vimeo.

Readers also liked

One Comment »

  • Vijayasarathy R said:

    பொருளாதார தேக்க நிலையை புரியவைத்ததற்கு ஜோனதனுக்கும் அதை தேடி அலையும் சிரமத்தை இல்லாமல் செய்ததற்கு உங்களுக்கும் நன்றி.

    நாங்கள் தூங்குவதே கிடையாது என்று சொல்லிக் கொள்ளும் சிடிவங்கி, கூடிய விரைவில் நிரந்தரமாக (தொ)(தூ)ங்கும் நிதி நிலையை நோக்கி போய்க்கொண்டிருப்பது நமக்கொன்றும் நற்செய்தியல்ல.

    அமெரிக்காவில் சுமார் 800 வங்கிகள் மூடப்படும் நிலையில் உள்ளதாக தெரியவந்த செய்தி கணிப்பொறி துறையில் வேலை செய்யும் என்னைப் போன்ற இந்தியர்களுக்கு மிக பயங்கரமான ஒன்று.

    ”இதுவும் கடந்து போகும்” என்று நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஆரக்கிள் நிதி ஆலோசகன்.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.