Home » A R Rahman, India Politics, Tamil-தமிழ்

ரஹ்மானின் விருதும் கலைஞரின் தப்புத் தாளமும்

23 February 2009 1,220 views 3 Comments

ஒரு இசை மேதையின் மாபெரும் சாதனையை நாம் எல்லோரும் ஆனந்தக் கூத்தாடி கொண்டாடும் போது, கலைஞரின் அபஸ்வர குரல் வேதனை தருகிறது.

அப்படி என்னதான் அவர் சொல்லிவிட்டார்?

“6 கோடி தமிழர்கள் ரஹ்மானின் இந்த ஹிமாலய சாதனையால் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்து இருக்கிறார்கள். 100 கோடி இந்தியர்களுடன் நானும் சேர்ந்து இந்த மைனாரிட்டி சமூகத்தை சேர்ந்த சிங்கத்துக்கு புகழாரம் சூட்டுகிறேன்.”

இப்போது இந்த சாதனையிலும் ஓட்டு வேட்டை, பிரித்தாளும் எண்ணம் பிரதிபலிக்கும் வார்த்தைகள் தேவைதானா?

இசைப்புயல் ஆஸ்கர் வென்றதும் சொன்னது என்ன? “வாழ்க்கையில் அன்பு, வெறுப்பு இரண்டில் நான் அன்பை தேர்ந்தெடுத்தேன், அது என்னை இதுவரை (ஆஸ்கர் வரை) கொண்டுவந்து விட்டது” என்றார். அதில் ஏதேனும், மத உணர்வோ, ஜாதீயமோ தெரிகிறதா? அவர், அல்லாவுக்கு நன்றி என்றா சொன்னார்? “எல்லா புகழும் இறைவனுக்கே” என்றல்லவா சொன்னார்?

இசைக்கு, சாதியும், மதமும் கிடையாது. இசையமைப்பாளர் எவரும் மதம் பிடித்து ஆடுவதில்லை, மதம் பிடிக்க ஆட்டுவதில்லை. அவர்கள் பேசும் மொழி இசை; அவர்கள் சேர்ந்த மதம் இசை, அவர்கள் பரப்பும் மதம் அன்பு.

ரஹ்மானின் பிறப்பு மதம் இருக்கலாம், அவர் இருக்கும் மதம் இஸ்லாமாக இருக்கலாம், அவர் (ரசிகர்களை) சேர்க்கும் மதம், ஒன்றுதான், அது, இசை என்ற அன்பு மதம். அவர் அனைவருக்கும், அனைத்து மததினருக்கும் சொந்தக்காரர். “தாய் மண்ணே வணக்கம்” என்று பாடும்போது, எம்மதமும் சம்மதம் என்றுதான் உணர்த்தினார்.

இதில் கூட ஓட்டு வேட்டையாடும், முதல்வரின் பேச்சு, வருத்தம் தருகிறது.


Readers also liked

3 Comments »

  • Rama Sethu said:

    Good One!!!Regards….Rama

  • Joe said:

    Some men are natural born incorrigble …s!

  • triplicani (author) said:

    Joe,
    :)

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.