Home » Chennai, Headline, Interesting, Tamil-தமிழ், TV Programs

எனக்குப் பிடித்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

17 February 2009 1,667 views 7 Comments

வலைப்பயணிகள் கவனத்துக்கு:

இந்த பதிவில் நான் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

நான் கல்லூரியில் படித்த காலத்தில் (1981-84) ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணென்று தூர்தர்ஷன் தமிழ் மட்டும் தான்.  அதில் ஒலியும், ஒளியும் பார்க்க மாலைக்கல்லூரி்யில் வெள்ளிக்கிழமை கடைசி வகுப்பை கட் செய்து  விட்டு வீடு நோக்கி ஓடியது நினைவுக்கு வருகிறது.  எவ்வளவு முயன்றாலும் இரண்டு பாட்டு லேட்டாகத்தான் வீட்டுக்கு போய் சேருவேன்.  பார்க்காத இரண்டு பாட்டு நல்ல பாடல்களாக இருந்து, டிவி காரர்களுக்கும் எங்கள் கல்லூரிக்கும் உடன் படிக்கை போல நான் பார்க்க கிடைக்கும் 4 பாடல்களும் கண்டிப்பாக டி வி நிலைய இயக்குநர் உலகை வெறுத்த நிலையில் தேர்வு செய்தது போல் பாடா(?)வதியாக இருக்கும்.  (ஒலியும் ஒளியும் முடிவில் அந்த வாரம் ஞாயிறு என்ன தமிழ் திரைப்படம் என்றும் சொல்வார்கள் – அனைவரையும் பாடாவதி பாடலானாலும் பார்க்கவைக்கும் யுக்தியோ என்று தோன்றுகிறது).

தமிழில் தற்போது அலைபாயும் செயற்கைக் கோள் தொலைக்காட்சி சானல்கள் பல.  எனக்கு தெரிந்த பட்டியல் இதோ:

வரிசை எண் சேனல் பெயர் நடத்துபவர்
1 பொதிகை அரசு
2 சன் டிவி சன் குழுமம்
3 சன் செய்திகள் சன் குழுமம்
4 கே டிவி சன் குழுமம்
5 சன் ம்யுசிக் சன் குழுமம்
6 சுட்டி சன் குழுமம்
7 ஆதித்யா சன் குழுமம்
8 ஜெயா டிவி தினகரன்
9 ஜெயா ப்ளஸ் தினகரன்
10 ஸ்டார் விஜய் ஸ்டார் குழுமம்
11 ராஜ் டிவி ராஜ் நெட்வொர்க்
12 ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் ராஜ் நெட்வொர்க்
13 ராஜ் செய்திகள ராஜ் நெட்வொர்க்
14 ராஜ் ம்யுசிக் ராஜ் நெட்வொர்க்
15 விண் டிவி தெரியாது
16 மக்கள் டிவி பா ம க
17 மெகா டிவி தங்கபாலு
18 வசந்த் டிவி வசந்த்
19 கலைஞர் கலைஞர் கருணாநிதி
20 கலைஞர் செய்திகள் கலைஞர் கருணாநிதி
21 இசையருவி கலைஞர் கருணாநிதி
22 சிரிப்பொலி கலைஞர் கருணாநிதி
23 Zee (இதை தமிழில் எப்படி எழுதுவது?) தமிழ் Zee குழுமம்

தமிழ் மொழியில் மட்டும் இத்தனை சானல்களா என்று மலைப்பாக இருக்கிறது.

இத்தனை சானல் இருந்தாலும், எல்லாவற்றையும் எல்லோரும் பார்ப்பதில்லை.  சில சானல்களை முற்றிலும் பார்ப்பதே இல்லை.

நான் ஓரளவு பார்க்கும் சானல்கள்:

சன் குழும சானல்கள் (சுட்டி நீங்கலாக), விஜய், ஜெயா, எப்போதாவது மெகா,  Zee தமிழ்.

இவற்றில் எனக்கு பிடித்த, கிட்டத்தட்ட என் கல்லூரி நாட்களி்ன் ஒலியும் ஒளியுமுக்கு நிகராக  நான் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகள் இவை:

பிடித்த நிகழ்ச்சிகள் காரணம் சேனல் பெயர்
செய்திகள் நடுநிலை பொதிகை
டாப் டென் மூவிஸ் புதுப்படக் காட்சித்துளிகள் சன் டிவி
கோலங்கள் மாட்டிக்கிட்டேன் சன் டிவி
மருத்துவர்களுடன் நேரடி நோய்களை பற்றி அறிவு பெற சன் செய்திகள்
சூப்பர் சிங்கர் புதுக்குரல்கள், பாடல்கள் ஸ்டார் விஜய்
என்னோடுப் பாட்டு பாடுங்கள் எஸ் பி பி, பாடலை பற்றி அவர் தரும் சுவையான பிண்ணணி விவரங்கள் ஜெயா டிவி
எங்கே பிராமணன்? விளக்கங்கள், சோ ஜெயா டிவி
காஃபி வித் அனு அனுஹாசன் ஸ்டார் விஜய்
சந்தித்த வேளையில் ரமேஷ் ப்ரபாவின் கேள்விகள், சந்திக்கப்படும் நபர், அவர் மூலம் தெரியவரும் அவர் துறை சார்ந்த விஷயங்கள் (அதிகம் சினிமா சார்ந்தவர்களே வந்தாலும், வருகிறவர்களில் பெரும்பாலோர் கலைஞர் புகழ் ஒரு பாட்டம் கண்டிப்பாக பாடினாலும்) கலைஞர் டிவி
தேனும் பாலும் மிகச் சிறந்த, மற்ற சானல்களில் ஒளிபரப்பாகாத பாடல் காட்சிகள். (Must see ரகம்) கலைஞர் டிவி
அரட்டை அரங்கம் விசு நடத்தும் விதம் (ஆமாம் சார், அது என்ன இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பேசுகிறவர்கள் – சாஆஆஆர் என்று நீட்டி அழைக்கிறார்கள்? எப்படி எங்கு நிகழ்ச்சி நடந்தாலும் குறைந்த பட்சம் ஒருவரேனும் திருநெல்வேலி தமிழில் பேசுகிறவராக இருக்கிறார்? அது ஏன் பேசுகிறவர்கள் அனைவருமே ஒரு பொதுவான “அரட்டை அரங்க ராகத்தில் பேசுகிறார்கள்?) ஜெயா டிவி
ஹாசினி பேசும் படம் சிறந்த திரை விமர்சனம் (சில சமயம் விஜய் படங்களை பட்டும் படாமல் விமரிசித்தாலும்) ஜெயா டிவி
லொள்ளு சபா நகைச்சுவை & மொக்கை ஸ்டார் விஜய்
நகைச்சுவைக் காட்சிகள் சிரிக்கத்தான், வேறென்ன? எல்லா டிவியும்
நீயா நானா விவாதத் தலைப்புகள், விவாதங்கள் ஸ்டார் விஜய்
குற்றம், நடந்தது என்ன? குற்றத்தின் பின்னணி தேடும் ஆர்வம் ஸ்டார் விஜய்

உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகள் என்ன?

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

Readers also liked

7 Comments »

  • Ullasam said:

    What ever you have listed are really the best one to watch.. I think u r missing Arasi – will say it is somewhat better than the kolangal.

    One More program – I know who are working will miss this

    in Jaya TV and Mega TV (Amudha Ganam) these two are telecasted again for the purpose of office goers in the night 11.00 PM -12.00PM.

    Jack pot of Kushboo :)

    Excellent to watch – ofcourse samayathil arupaanga…

    only program in this which i miss is CHo’s – just started watching it.

  • Ram N said:

    You’ve missed AMN Tv by Daily Thanthi, Imayam TV – No idea who runs it …

    Like your reason for watching Kolangal … :)
    Also when & what time is “Thenum Paalum” in Kalaignar TV?

  • triplicani (author) said:

    Ram,

    Oh; I have not seen or heard of those. Thanks for pointing out. They might now be happy that there is atleast one person who knows about these channels ;-) (and now two).

    Thenum Paalum comes at 9 AM IST. But is a must watch. If you have TATA Plus, you can record the program and watch later. Remember that nice advertisement of Amir Khan. :)

  • triplicani (author) said:

    Ullasam,

    I do not watch Arasi. Just note that even Kolangal I am watching because I got sucked into it. So I consciously avoid watching Arasi. Further, Radaan TV disappointed me big time with Chithi. With so many interesting things built up over many episodes they ended the serial abruptly leaving many questions unanswered.

    Amudha Ganam I have watched some times. Also “Then KiNNam” and “Sokkuthey Manam” are good programs on Jaya TV but I do not watch them very often.

    Jackpot is also an interesting show and I should have included in my list. I don’t know how I left it out. Every week I tune into the program to hear Kushbu say, “moooney moon kelvithaan irku”, “randey randu option irku” :P

  • Vijay said:

    Seems like you have also missed couple more tamil channels

    Jaya Max (Only Music & no VJ’s, telephone calls)
    Tamizhan (http://www.tamilantelevision.com/aboutus.php)

  • triplicani (author) said:

    Vijay,

    Welcome to my blog. Thanks for pointing out. I will update the table soon.

  • Vijayasarathy R said:

    Lots and lots of Tamil Channels. Think you have missed one more….okay okay….I am stopping here.

    My Favorites:

    Jaya TV
    mooney moon kelvi, sariyaana option kudtha ninga vilaadamudiyum jackpot
    Ninaiththaale inikkum
    Sokkuthey Manam
    Where is Brahman

    Vijay TV
    Super Singer HE…HE…HE…
    Madurai (1o mins before Super Singer Starts). A much better serial when compared to any other serials.
    Lolle..ha..Lolle…Lollu Saba
    Kodambakkam iskool
    Youva Meeya

    Kalaigner TV
    Day end – some comedy clips

    Sun TV
    Asatha Povathu Yaaru (till Madhura Muthu Finishes)
    Sollvi saari Arisi
    Day End – Comedu Clips

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.