மலேசியா வீட்டு மருமகள் இப்படி செய்யலாமா?
ஸ்டார் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 2008 (STAR TV Super Singer 2008) நிகழ்ச்சியின் தொகுப்பாளரில் திடீர் மாற்றம். சின்மயிக்கு பதில் யுகேந்திரன் (மதிப்புக்குரிய திரு மலேசியா வாசுதேவனின் மகன்) மற்றும் அவர் மலேசிய மருமகள் ஹேமமாலினி ஜோடி தொகுக்கிறார்கள்.
மாலினி தான் ஒரு பிரபலமான நிகழ்ச்சியை தொகுப்பதையே மறந்துவிட்டாற்போல் இருந்தது. அவர் வீட்டில் இருப்பதாக நினைத்துக்கொண்டாரா தெரியவில்லை, யுகியை பேசவேவிடவில்லை. தானே பேசிக்கொண்டிருந்தார்.
SPB ஜெயா டிவி நிகழ்ச்சியில் மலேசியா வாசுதேவன் அவர்களை பற்றி குறிப்பிடும்போது, “அவர் வாயில்லா பூச்சி என்றார்”. மகன் தந்தையை போல இருக்கிறார் போலும். மனைவி பேசிக்கொண்டே போக, இவர் பரிதாபமாக நின்றிருந்தார்.
இதில், மாலினியின் கோர தமிழ் வேறு. முன்பு, விஜய் டிவியில், கிராண்ட் மாஸ்டர் என்று ஒரு நிகழ்ச்சி வரும். அதன் தொகுப்பாளினியாக, திரைத் தாரகை காயத்ரி ஜெயராம் இப்படித்தான், நுனி நாக்கில் தமிழை ஆங்கிலம் போல் பேசி கடுப்பேற்றினார். இன்னொரு பெண் தொகுப்பாளினி இப்போதுகூட Star Vijay MayaJal நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அவரும் இதே வழிதான். (இதற்கு முன் அவர்கூட GrandMaster நிகழ்ச்சியி்ல் தமிழ் கடித்தவர்தான்).
மலேசியா வீட்டு மருமகள், குடும்பப்பெயருக்காகவேனும், தமிழை தமிழாக பேசினால் நல்லது.
எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது என்னவென்றால், ஏ ஆர் ரஹ்மானுக்கு புகழாஞ்ஜலியாக தொகுத்த நிகழ்ச்சியில் அவருக்கு நினைவுப் பரிசாக ஒரு Guitarஐ கொடுக்க, பிரபல பாடகர்களும், சூப்பர் சிங்கர் நடுவர்களும், இறுதிச்சுற்றில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் ஆறுவரும், ஏன் மாலினியும், யுகெந்திரனும்கூட கையொப்பமிட்டார்கள். அதில்கூட சின்மயியை சேர்த்துக் கொள்ளவில்லை.
இது, இந்த விஷயத்தில், ஏதோ அரசியல் (internal politics in STAR Vijay TV) இருப்பதாக என்னை நினைக்க வைத்தது.
கடைசியாக:
இந்த சிறப்புச் சுற்றில் என்னை பொறுத்த வரையில் மிக உற்சாகமாகவும், அழகாகவும் பாடியது, “கண்ணைக் கட்டிக் கொள்ளாதே” என்ற இருவர் பட பாடலை பாடிய, பிரசன்னா தான். ஆனால், OSCAR பெற இருக்கும், இசைப்புயல் கையெழுத்திட்ட guitar பரிசை வென்றவர் அஜிஷ்தான். அவர் பாடிய பாடல் “வெள்ளைப்பூக்கள்” கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலிருந்து ரஹ்மானே பாடியது. அவர் மட்டும்தான் ரஹ்மானே பாடிய பாடல் பாடினார். அதனால்தான் அவருக்கு பரிசு கிடைத்ததா தெரியவில்லை.
நிகழ்ச்சி முடியும் முன்னர், ஆறு இறுதிப் போட்டியாளர்களும் இணைந்து, OSCAR பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பாடலான “ஜெய் ஹோ” பாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.









//இசைப்புயல் கையெழுத்திட்ட guitar பரிசை வென்றவர் அஜிஷ்தான். அவர் பாடிய பாடல் “வெள்ளைப்பூக்கள்” கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலிருந்து ரஹ்மானே பாடியது. அவர் மட்டும்தான் ரஹ்மானே பாடிய பாடல் பாடினார். அதனால்தான் அவருக்கு பரிசு கிடைத்ததா தெரியவில்லை.//
பரவாயில்லை சத்யா நீங்க நல்லாத்தான் கவனிச்சிருக்கீங்க. எனக்கென்னவோ இதுல இன்னொரு உள்குத்து (சுஜாதா) இருந்திருக்குமோன்னு ஒரு மீடியம் சந்தேகம்.
இருந்தாலும் உண்மைய சொல்லணும்னா, அஜீஷ் நல்லாவே பாடினார்.
ஏ.ஆர்.ஆர் ஆஸ்கர் பரிசு பெற எல்லாம் வல்ல அந்த இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.
Dear Murthy.
This is not a response to your article. But thought of sharing what I shared with my group on “Padma Awards”. Pl read on …………………………..
Every Nation should honour its brave and gallant heroes. Even in our puranas, the merit of dying as a martyr in the cause of Dharma is all along appreciated and any kind of death on battlefield was considered glorious. The highest gallantry award is Param Vir Chakra whilst Ashok Chakra is the country’s highest peacetime gallantry award.
Ashok Chakra was conferred posthumously on 11 police and defence personnel who laid down their lives fighting the terrorists. The awardees included ATS chief Hemant Karkare, additional commissioner Ashok Kamte, inspector Vijay Salaskar and assistant sub-inspector Tukaram Omble, NSG commandos Major Sandeep Unnikrishnan and Havildar Gajender Singh. Inspector Mohan Chand Sharma of Delhi Police who was killed in an encounter at Jamia Nagar in Delhi last year during an operation against Indian Mujahideen terrorists was also awarded.
Alongside there was another news item – which read “ A galaxy of personalities from Tamil Nadu including eminent writer Jayakanthan, popular film comedian Vivek and ……….. who have carved a niche for themselves in their chosen fields have bagged the prestigious Padma awards”. To understand and appreciate, please read the following :
The system of honouring was first established under the auspices of the British East India Company. Immediately on proclamation of Indian Republic all british awarded honours became obsolete, but were instituted in 1954. Presently, the National Awards of Honour are :
1) Bharat Ratna – Gem of Bharat
2) Padma Vibushan
3) Padma Bhushan
4) Padma Shri.
Padma Shri is an award given by the Government of India generally to Indian citizens to recognize their distinguished contribution in various spheres of activity including the Arts, Education, Industry, Literature, Science, Sports, Social Service and public life. (The word “Padma” (Sanskrit) means “Lotus”.)
This year’s list shows 20 eminent persons – Three sportspersons – Pankaj Advani, Dhoni and Harbhajan. One from Trade and Industry. Six from Literature and Education and a whopping 10 from Arts (read as Cinema) – you have Aishwarya Rai Bachan, Akshay Kumar, Kalamandalam Gopi, Thilakan and comedian Vivek rubbing shoulders with those who have served the nation in any exceptional manner.
But there is no place for Olympic Bronze medalist Sushil Kumar and boxer Vijender Singh, who won the country’s maiden medal in boxing. Whist this should hurt even a commoner, the medalist is reported to have said that their job is to perform and win laurels for the country and it is for the Govt. and rest to take notice.
There are always messages to be read everywhere.
With regards
S Sampathkumar.
“OSCAR பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பாடலான “ஜெய் ஹோ” பாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.”
இந்தப் பாடலின் மெட்டு ஏற்கனவே பரிச்சயமானது போல் தோன்றுகிறது. ரஹ்மானின் புகழ் பாடுவது அனைத்து மீடியாக்களிலும் கொஞ்சம் ஓவர். பத்துக்கு ஒன்று கூட காலம் கடந்து நிலைப்பதில்லை. இசை என்பதில் சத்தம் அதிகமாக, பாடலாசிரியனின் வரிகளை மறைப்பதாக… என்னவோ போங்கள்..சில விஷயங்கள் புலன்களுக்கு புலப்படமாட்டேன் என்கிறது. வெளி நாட்டவனுக்குப் புரிந்தால் சரி..
//இறுதிச்சுற்றில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் ஆறுவரும், ஏன் மாலினியும், யுகெந்திரனும்கூட கையொப்பமிட்டார்கள். அதில்கூட சின்மயியை சேர்த்துக் கொள்ளவில்லை.
இது, இந்த விஷயத்தில், ஏதோ அரசியல் (internal politics in STAR Vijay TV) இருப்பதாக என்னை நினைக்க வைத்தது.//
நானும் இதை யோசித்தேன்.
இத்தனைக்கும் ரஹ்மானின் அநேகமான படங்களில் சின்மயி பாடியுள்ளார்.
எல்லாவற்றையும் விட பெரிய நகைச்சுவை ஒன்று நடந்ததை கவனைத்தீர்களா?
சுஜாதா, உன்னி என்று எல்லோருமே ரஹ்மான் sir என்று மரியாதையுடன் அழைக்க
மாலினி மட்டும் அடிக்கொரு தடவை ரஹ்மான் என்று ஏதோ கூட இருக்கிற friendஐ அழைப்பது போல்
மரியாதை இல்லாமல் நடந்தது பிடிக்கவே இல்லை.
என்ன இருந்தாலும் சின்மயி இடத்துக்கு இவர்கள் இல்லை.
உள்குத்து விவகாரம் சின்னத்திரைக்கும் வந்தாச்சா?
மாலினி மாற்றப்பட வேண்டியவர்.. யுகென் எனது நல்ல நண்பர்..
ஆனால் பாவம் டிவியில் அதிகம் பேசுகிறாரில்லை..
//மலேசியா வாசுதேவன் அவர்களை பற்றி குறிப்பிடும்போது, “அவர் வாயில்லா பூச்சி என்றார்.//
எதைப் பற்றி சொன்னாரோ தெரியவில்லை..
அஜீசுக்குக் கொடுத்து எனக்கும் திருப்தி இல்லை.. அவரது உச்சரிப்புப் பற்றி அடிக்கடி ஸ்ரீநிவாஸ் குறைப்படும் இடத்தில் தொடர்ந்தும் சுற்றில் அவர் இருப்பது ஏன்?
Tsr-ன் கருத்துக்களுடன் உடன்படவில்லை.. ஒரு பெரிய விருதுக்கு உரியவராக ரஹ்மான் மாறியிருக்கும் வேளையில் அவர் புகழ் பாடுவது சரியே.. இல்லாவிட்டால் மெல்லிசை மன்னருக்கு தேசிய விருது கிடைக்காது போலத் தான் ஆகும்..
அத்துடன் ரஹ்மானின் பல பாடல்கள் காலம் கடந்தும் நிற்பது நண்பருக்கு தெரியாதா? ரோஜா,காதலன்,பாம்பே பாடல்கள் இன்னும் ரசிக்கப் படுகின்றனவே..
இதையெல்லாம் சொன்னதால் நான் ரஹ்மான் ரசிகன் என்று நினைக்கவேண்டாம்..
நான் இசைஞானி(களில்), இப்போது வித்யாசாகர் ரசிகன்..
லோஷன்,
நான் ரஹ்மானுக்கு கிடைக்கும் விருது பற்றி ஆயிரம் கோடி மடங்கு மிக சந்தோஷப்படுகிறேன். என் பதிவில் நான் அவரை எங்குமே தாழ்த்தவில்லையே? அவர் இசை எனக்கு மிக மிக பிடித்த ஒன்று. துன்பம் நேர்கையில் நான் கேட்கும் யாழ் அவர் இசை
சத்யா,
லோஷன் குறிப்பிடுவது TSRஇன் கருத்து என்று நினைக்கிறேன். நானும் TSRல் பாதியும், லோஷனில் பாதியும் ஒத்துக்கொள்கிறேன்.
சடாரென்று சில நாட்கள் முன்பு புதியமுகம் கேட்டேன். என்னை மறந்தேன் (லோஷனில் பாதி).
அதற்காக காதலன், காதல் தேசம் போன்ற படங்களின் பாடல்கள் (என்னவளே தவிர) அப்படியொன்றும் நிலைத்து நின்று நினைத்து பார்த்து ரசிக்க கூடியதாக கூறமுடியாது (TSRல் பாதி).
மொத்தத்தில் எனக்கும் ரஹ்மான் பிடிக்கும் அவரது இசை அவ்வப்போது ஈர்க்கும்.
அய்யா விஜய் அவர்களே,
காதல் தேசம் படத்தில்தானே ரஹ்மானின் முஸ்தஃபா? அது அரபுநாடுகளிலும் பிரபலமான ஒரு மெட்டு. இந்த காலத்தில் எந்த இசையமப்பாளரின் எவ்வளவு சிறந்த இசையும் ரொம்ப நாட்களுக்கு ஒலிப்பதில்லை. முக்கியமான கேள்வி என்னவென்றால், எத்தனை முறை கேட்டபின்னும், எத்தனை நாள் கழிந்தபின்னும், மீண்டும் ஒரு பாடலை கேட்கும்போது, பரவசம் வருகிறதா, என்பதே.
என் தாழ்மையான கருத்துப்படி, ரஹ்மானின் பல பாடல்கள் மேற்சொன்ன கேள்விக்கு ”ஆம்” என்று பதில் கூற வைக்கின்றன.
ஒரு உதாரணம், “சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது”, “ஓ மரியா” போன்ற பாடல்கள்.
என் இனியவன் அவர்களே!
வணக்கம்.
நகைக்க வைத்துவிட்டீர்கள் என்னை. உண்மையில், என் பதிவில் நான் நீங்கள் குறிப்பிட்ட விஷயத்தை எழுதி பின் அழித்து விட்டேன். அவர் ரஹ்மான் என்று கூட அழைக்கவில்லை – “ரகிமான்” என்பது போல் உச்சரித்தார்.
Sathya … check Chinmayi’s blog (chinmayisripada.blogspot.com)… she denies any such politics in Star TV super Singer about her ….
hey if I’m not mistaken malini is not a malaysian
she is a singaporean…get it right dude
Kanesh,
Welcome to my blog.
Thank you for your correction la. Readers, please read this line மலேசிய மருமகள் ஹேமமாலினி as சிங்கப்பூரிய மருமகள் ஹேமமாலினி.
Kanesh, I do not like me being called “dude”. Besides, I am past that dudan age.
Leave your response!
Subscribe
Archives
Thats me
I am just 5 ft 7 inches; so I cannot and do not make any "tall" claims :-)
Recent Posts
Blogroll
Recent Comments
Lucky click! (Click on a word and see what comes up)
Most Commented
Most Viewed
Switch to our mobile site