ஒபாமா ஏன் தப்பா Oath எடுத்தாரு?
இங்கிலீஷ் வார்த்தைய (oath) தமிழ்ல அப்பிடி்யே எழுதினா கெட்ட வார்த்தை இல்லீங்கோ?
இப்பத்தான் ஒபாமா மறு உறுதி மொழி எடுத்துக்கிட்டார்னு படிச்சேன்.
அது ரெண்டே நாள்ல ரெண்டு முறை அதிபர் ஆனாப்ல தோணிச்சு எனக்கு. அது சரி, பதவியேற்பு மந்திரத்த அவரு எப்படி தப்பா சொல்லியிருப்பாரு? சில ஊகங்கள் (டமாஸுக்குதான், வேற என்ன?)
1. பதவியேற்பு வைபவத்தின் போது சத்தம் அதிகமா இருந்திருக்கும்.
2. தவிர, ஒபாமா ஆயிரந்தான் அமெரிக்க அதிபர் ஆனாலும் மனிதர்தானே? பதட்டமும் இருந்திருக்கலாம்.
3. இல்ல, ஒபாமான்னா change அப்படின்னு சொன்னத ஒருவேள பதவியேற்புலயே காட்ட நெனச்சாரோ?
4. காதுல Apple iPod மாட்டிக்கிட்டு பாட்டுக்கேட்டுக்கிட்டே பதவியேற்பு மந்திரம் சொன்னாரோ? (மேல 3வது சந்தேகத்தோட சேர்ந்து பார்த்தா – ஒரு வேள iPodல மைக்கேல் ஜாக்ஸனோட “Man in the mirror” கேட்டுக்கிட்டு இருந்திருப்பாரு)
5. பதவியேற்கும் போது மனைவி வேற பக்கத்திலயே நின்னுகிட்டு இருந்தாங்க. அழகான மனைவி பக்கத்துல இருந்தா ஆபீஸ் வேல சரியா செய்யமுடியுமா? அதுனால மிசஸ் காரணமா மிஸ் ஆகியிருக்கலாம்.
6. இன்னொரு முறை பதவியேற்புக்கு (நாலு ஆண்டுக்கு பிறகு) சந்தர்ப்பம் கிடைக்காதுன்னு நெனச்சிருக்கலாம். (அதுக்குள்ள போறபோக்குல அமெரிக்காவே Lehman Brothers ஆயிட்டா? நரி(!)ந்திர மோடி விஸா கிடைக்காத கோபத்துல இன்னொரு குஜாராத்தியான அனில் / முcash அம்பானியோட சேர்ந்து அமெரிக்காவ ஓவர்டேக்கும், டேக் ஓவரும் பண்ணிட்டா? அப்படி நடந்தா ஒண்ணு உறு்தி – அனில் IPO பண்ணிடுவாரு, நாமளும் பணம் போடுவோமில்ல! )
7. மிச்சேல் ஒபாமா, வக்கீல். பதவியேற்பு முடிஞ்சதும் ஒபாமாவ கூப்பிட்டு பீஸ் (fees இல்லீங்கோ, peace-ம் இல்லீங்கோ, piece – துண்டு) பீஸா கழட்டியுருப்பாங்க. அது்ல ஒபாமா பீஸாயுட்டிருப்பாரு போல (ஹி ஹி – இந்த பீஸ் சென்னை தமிழ் – fuseங்கோ). அமெரிக்கா அதிபர் ஆனாலும் ஆத்துக்காரிக்கு அசத்து ஆம்படையாந்தான்.
அம்மா போட்ட போடுல ஒபாமா போட்டாரு போன் -நீதிபதிக்கு.
இன்னொரு முறை உறுதிமொழி எடுத்துக்கிட்டாரு.
நல்லவேளை. இல்லன்னா பதவியேற்ப புஸ்ஸாக்கிட்டு மறுபடியும் புஷ்ஷ அதிபர் ஆக்கிட்டா?
அய்யோ, அய்யய்யோ! ஒபாமா! தவறலாமா?
நான் என் கல்யாண மந்திரங்கள யோசிச்சு பாத்தேன். நானும்தான் சரியா சொல்லல. ஆனா என்ன யாரும் மறுபடியும் சொல்ல சொல்லல. கேட்டிருந்தா சொல்லியிருப்பனா? ஒபாமாவுக்கு உறுதி மொழி மறுபடி சொன்னதும் என்ன நடந்தது? அதே அதிபர் பதவிதான் திரும்ப கிடைச்சது.
ப்ளீஸ் எனக்கு Vottu போடுங்க (எம் ஜி ஆரின் குரலில்)









அண்ணே! கொன்னுட்டிங்கண்ணே!! (செந்தில் ஸ்டைலில் படிக்கவும்).
//நல்லவேளை. இல்லன்னா பதவியேற்ப புஸ்ஸாக்கிட்டு மறுபடியும் புஷ்ஷ அதிபர் ஆக்கிட்டா?//
நல்லா கெளப்புறாங்கையா பீதிய!!!
ஒரு வேளை (இந்தியக் கலாச்சார) சாங்கியப்படி…கல்யாணத்துல முதல் கல்யாணம் நிலைக்காதுன்னு வாழமரதுக்கு முதல்ல தாலிய கட்டிட்டு அப்புறம் பொண்ணு கழுத்துல கட்டுவாங்களே(உபயம் பல தமிழ்த் திரைப்படங்கள்)..அது மாதிரி ஏதாச்சும்?
ஹே.ஹே..ஹே..
ஹே.ஹே..ஹே..
அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா!!!
Cool
Tarun,
You read Tamil? Or just cooled off here? He he he
நல்லவேளை. இல்லன்னா பதவியேற்ப புஸ்ஸாக்கிட்டு மறுபடியும் புஷ்ஷ அதிபர் ஆக்கிட்டா?//
கலக்கிட்டீங்க.. இதை அப்படியே ஆங்கிலத்தில் மாற்றி புஷ்க்கு அல்லது மக்கெயினுக்கு அனுப்பினீங்கன்னா அவங்களும் கொஞ்சம் சிரிப்பாங்க.. ஆனாலும் ஒரு சின்ன ஆலோசனை..உங்கள் தலைப்பு ஏதோ உறுத்துகிறது.. மாற்றலாமே..
லோஷன்,
தலைப்பு மாத்தியாச்சு. சரியா? மிகுந்த நன்றி.
Aiyyo Anna.. Arignar Annavukku adhuthathu neenga thaan (ithuvum MGR voicela)..
மிகவும் நகைச்சுவையா இருந்தது.
தங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
http://www.newspaanai.com/easylink.php
Leave your response!
Subscribe
Archives
Thats me
I am just 5 ft 7 inches; so I cannot and do not make any "tall" claims :-)
Recent Posts
Blogroll
Recent Comments
Lucky click! (Click on a word and see what comes up)
Most Commented
Most Viewed
Switch to our mobile site